மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி..!

ACCIDENT_logoமட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையின் காரணமாக, மோட்டார் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது படுகாயமடைந்த நபர் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதான கணேசபிள்ளை சண்கரன் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒரு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – இளம் பெண் கைது..!

childஅமெரிக்காவில் ஒரு வயது ஆண் குழந்தையிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்ட 25 வயது பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓஹையோவில் டே கேர் மையத்தின் பொறுப்பாளரான ஹீதர் கூன் என்ற 25வயதுப் பெண்,தனது மையத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைகளிடம் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்டு அதை வீடியோவிலும் படமாக்கியுள்ளார்.

இந்தப் பெண் மீது 2பாலியல் பலாத்கார வழக்கைப் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

மேலும் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டதை தனது வீடியோவில் அவர் பதிவு செய்து வைத்திருந்ததை அந்தப் பெண்ணின் லேப்டாப்பிலிருந்தும் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் ஒரு குழந்தையிடம் அவர் பாலியல் அசிங்கத்தில் ஈடுபட்ட காட்சி முழுமையாக பதிவாகியுள்ளதாம்.

இந்தப் பெண்ணுக்கு இத்தனைக்கும் ஒரு காதலனும் உண்டு. அந்தக் காதலரின் பெயர் ஜேம்ஸ் ஆஸ்போர்ன்.

இருவரும் சேர்ந்துதான் வசித்து வருகின்றனர். அப்படி இருந்தும் பெற்றோர்களால் தனது மையத்தில் விடப்படும் சிறார்களை சீரழித்துள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் இவரது காதலர் ஆஸ்போர்னும் ஒரு பாலியல் விவகாரத்தில் சிக்கிக் கைதானவார்.

தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சீரழிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 1 மற்றும் 2வயதுதான் ஆகிறது என்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வடக்கு அமைச்சர்கள் பதவியேற்பை ஈ.பி.ஆர்.எல்.எப் புறக்கணிப்பு..!

eprlfவடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் தமக்குரிய அமைச்சுப் பதவியினை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கவெனத் தீர்மானித்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியினால் தமது கட்சிக்கென தீர்மானித்த அமைச்சுப் பதவியினை ஐங்கரநேசனுக்கு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்தது.

இதனையடுத்து ஐங்கரநேசனுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டபோதும், அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டமை காரணமாக அவரை எங்களது கட்சியிலிருந்து விலக்கியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளோம்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னரே எமது கட்சி அமைச்சுப் பதவியினை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குவதென தீர்மானித்திருந்தது. அது தொடர்பில் தமிழரசுக் கட்சி நேற்று முன்தினம் உறுதி செய்திருந்தது. இருப்பினும் அன்றையநாள் இரவுக்குப் பின்னர் இதில் மாற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து வடமாகாண சபையின் அமைச்சரவையில் நான்கு மாவட்டங்களும் அமையும் வகையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த நான்கு மாவட்டங்களுக்கும் வழங்குவதென்ற முடிவின் அடிப்படையில் அமைச்சர் தெரிவுகள் நடைபெற்றிருந்தன.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியினால் எமது கட்சிக்குரிய அமைச்சரும் தீர்மானிக்கப்பட்டுள்ளார். எனவே அமைச்சரவை பதவியேற்றலையும் நாங்கள் புறக்கணிக்கிறோம் எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

எமது கட்சியின் அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவுக்கு அமைச்சர் ஒருவரை நியமிக்காத பட்சத்தில் இவ்வாறான முடிவினையே நாங்கள் எடுப்போம் எனவும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் போக்கு அழகல்ல – சித்தார்த்தன்!

poloteவட மாகாணசபை அமைச்சரவைப் பெயர்ப்பட்டியல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் வடமாகாண முதலமைச்சரும் இணைந்து வெளியிடப்பட்ட பட்டியலே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அந்த பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்கு வழங்கப்படுகின்ற அமைச்சர் பதவியை பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவருக்கு வழங்குமாறு தாங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குத் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு செய்யாமல் அவர்கள் தமது விருப்பத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு அதனை வழங்கியிருப்பதை தமது கட்சிக்கு வழங்கியதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெயர்ப்பட்டியல் குறித்து கருத்து வெளியிட்ட பிளாட் அமைப்பின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தேர்தல் நடந்து முடிந்ததும் நடைபெற்ற கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது கூட்டத்தில் நான்கு அமைச்சுக்களையும் சபையின் தலைவர் பதவியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்குக் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அது படிப்படியாகக் குறைவடைந்து, இரண்டு அமைச்சுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டு ஏனைய இரண்டையும் ஈபிஆர்எல்எவ், டெலோ கட்சிகளுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இது மாகாண சபையின் ஆரம்ப நடவடிக்கைக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கும் அமோகமாக வாக்களித்துள்ள நிலையில், மாகாண சபையின் முக்கிய பொறுப்புக்கள் கட்சிகளிடையே பகிர்ந்தளிப்பதன் ஊடாகத்தான் அவர்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முடியும் என்றும், பதவியைப் பெறுவது முக்கியமல்ல என்றும் தெரிவித்தார்.

டெலோ அமைப்பின் தலைமைப்பீடம் இந்த அமைச்சரவைப் பட்டியல் பற்றி கலந்தாலோசிப்பதற்காக அவசரமாகக் கூடி ஆராய்ந்த பின்பே கருத்து எதனையும் தெரிவிக்க முடியும் என்று அந்தக் சட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

இவ்விடயம் குறித்து பேச கட்சியின் தலைமைப்பீடம் கூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களை தடுத்து வைக்கப்படுவதை தடுக்க புதிய பொறிமுறை- இந்தியா..!

fisherஇலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படும் தமிழ் நாட்டு மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அமைக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அமைச்சர் அனில் கோசுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானுடன் இந்தியா கொண்டிருக்கின்ற உடன்படிக்கையை போன்று இந்த பொறிமுறையும் அமையும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் தகவல் தந்த அவர், இலங்கையில் இந்திய மீனவர்கள் அதிக காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை இந்த முறை தடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இராஜதந்திரி ஒருவர் ஐ.நா உயர் பதவிக்கு தெரிவு..!

warunaஇலங்கையின் இராஜதந்திரி ஒருவர் ஐக்கிய நாடுகளின் உயர் பதவி ஒன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட அமைச்சு ஆலோசகரான வருணஸ்ரீ தனபால ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வின் இரண்டாவது குழுவின் உதவி தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகம் இதனை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் குழு இதற்கான பரிந்துரையை மேற்கொண்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வரையில் உலகலாவிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிப்பணிகளுக்கு தனபால அங்கம் வகிக்கும் பொறுப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபால, 2011ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையில் அலுவலராக கடமையாற்றி வருகிறார்.

அடுத்த மாதம் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை..!

Presidentஅமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு விஜயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் அமைச்சர்கள் எந்தவொரு வெளிநாட்டு விஜயத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

அரச செலவு முகாமைத்துவம் மற்றும் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டு முன் ஆயத்தப்பணிகள் என்பனவற்றுக்காக இவ்வாறு வெளிநாட்டு விஜயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதன்படி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள், மேலதிக செயலாகளர்கள், திணைக்களப் பிரதானிகள் மற்றும் அரச நிறுவன பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட அனைவரினதும் அடுத்த மாத வெளிநாட்டு விஜயங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் 1ம் திகதி முதல் 30ம் திகதி வரையிலான காலத்திற்கான வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தது..!

ausஅவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது.

அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது.

அவுஸ்திரேலிய நேரப்படி நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்த படகை கொக்கோஸ் தீவு மக்கள் அவதானித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலிய கடற்படையினர் இன்னும் தகவல்களை வெளியிடவில்லை.

அண்மையில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தலின் போது படகு அகதிகளை குறைக்கும் வகையில் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதி படகுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை அமைப்புக்களின் விமர்சனங்களில் இருந்து தப்புவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு கோரிக்கை..!

y5ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு, அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

புலமைப் பரிசில் பரீட்சையை தரம் 7 அல்லது தரம் 8 ற்கு மாற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சர்வதேச சிறுவர் தினமன்று வெளியிடப்பட்ட காரணத்தினால், சிறுவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளில் பங்கேற்ற அரசாங்க அதிகாரிகள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.

புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை தரம் மூன்றிலிருந்து ஆயத்தப்படுத்துவதனால் சிறுவர்கள் உளவியல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றது தமிழரசு கட்சி – சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு..!

sureshவடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனது வீட்டில் இன்று மாலை 3 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல, தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நேற்று மாலை கூட்டம் நடைபெற்றதாகவும் அதன் பின்னரே அமைச்சர்கள் தெரிவு முடிவாகியுள்ளது என செய்தி அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

ஆனால் நேற்றைய இந்த கூட்டத்திற்கு நான் யாழ்ப்பாணத்தில் நின்ற போதிலும் எனக்கு அழைப்பு வரவில்லை. அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளான புளொட், ரெலோ போன்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை தனியே தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களே அந்த கூட்டத்தை நடத்தி முடிவெடுத்துள்ளார்கள்.

இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அமைச்சர்கள் பெயரில் எமக்கு திருப்தி இல்லை நாம் கேட்பது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சு பதவி.

ஏனெனில் அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை சிங்கள – முஸ்லிம் மக்களை சட்ட விரோதமாக குடியேற்றுதல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே அங்கு ஒரு அமைச்சு தேவைப்படுகின்றது.

வவுனியா மன்னாருக்கு ஒரு அமைச்சு இருக்கின்றது யாழ்ப்பாணத்திற்கு முதலமைச்சர் இருக்கின்றார் எனவே முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு தரவேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கை அந்த மக்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனால் நாம் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு பதவி கேட்கின்றோம்.

இவர்கள் இப்ப சொல்கின்றனர் ஈ.பி.ர்.எல்.ப் க்கு ஒரு அமைச்சு கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு பற்றி கட்சி தலைவர் என்ற ரீதியில் எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவே அவ்வாறு ஒரு அமைச்சு பதவி கொடுத்தால் அது ஒரு தனி நபருக்கு கொடுத்த அமைச்சு பதவியாகவே இருக்கும்.

அவ்வாறு எமது கட்சிக்கு ஒரு அமைச்சு பதவி கொடுப்பதாக இருந்தால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொடுக்கவே நாம் கோருகின்றோம்.

அதேவேளை தேர்தல் பிரச்சார காலங்களில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்துள்ளது. இங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், என பேசிவிட்டு அவர் முன்னிலையில் முதலமைச்சர் சத்திய பிரமாணம் எடுத்ததில் எமக்கு உடன்பாடில்லை.

எனவே தமிழரசு கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவே எமக்கு தோன்றுகின்றது.

இந்த முடிவுகள் எதிர் காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களை குழப்பும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து கிரிகட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகிறார் சச்சின்..!

sachineசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று (10) வெளியிட்டது.

இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் என்ன செய்வது என்பதை நினைக்கவே கடினமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது 17 ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய சச்சின் ஒரு சில ஆண்டுகளிலேயே உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களையும் அதிக சதங்களையும் எடுத்த சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை செய்துள்ளார்.

பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் சச்சின் சில ஆண்டுகள் இந்திய அணியின் தலைவராகவும் இருந்தார்.

கிரிக்கெட் சாதனைகளுடன் மைதானத்துக்குள்ளும், வெளியிலும் அவர் காட்டிய கண்ணியத்துக்காகவும் அவர் வெகுவாக மதிக்கப்படுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் இந்திய பாராளுமன்றத்தின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இதுவரையில் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 15,837 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில் 51 சதங்களும் 67 அரைச்சதங்களும் அடங்கும்.

டெஸ்ட் போட்டிகளில் 4,198 பந்துளை வீசியுள்ள சச்சின் 45 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் சச்சின் பெறவுள்ளார்.

ஆசிரியர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்பாட்டம்..!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் போது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம் மாணவர்களை தண்டித்த போது, ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதனால், மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்றையதினம் வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந் நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்னு உதவ வேண்டும் எனவும், பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ணழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் மாணவர்கள் பாடசாலை வளாகத்தினுள் பிரதான கேற்றை மூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலைக்கு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமாராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

vavuniya1vavuniya2vavuniya3

பேஸ்புக் மோகம் சமூதாயத்தை சீரழிக்கும் – ஜனாதிபதி..!

Presidentபேஸ்புக் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

பேஸ்புக் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பேஸ்புக் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும்.

பௌத்த சிறுமிகள் நாட்டின் எதிர்காலமாக கருதுகின்றேன். பேஸ்புக் மோகத்தில் வாழ்க்கயை வீணாக்கிவிடக் கூடாது.

நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இளைய தலைமுறை செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாணந்துரை சிறி சுமங்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் தடை..!

protestஎதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், கறுப்பு கொடிகளை இடுதல், பதாகைகளைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மூன்று வாரங்களுக்கும் இந்த தடை அமுலில் இருக்கும்.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், தாமரைத் தடாகம் அரங்கு, நாடாளுமன்ற வளாகம் ஹிக்கடுவ, காலி, கண்டி, சீகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கான பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அரச தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அவுஸ்திரேலியாவில் மாநாடு நடத்தப்பட்ட போதும் இதேவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட அலோசகர் ஹரிகுப்தா ரோஹனாதீர தெரிவித்துள்ளார்.

இதற்காக அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்கள்..!

MURDERதமிழகத்தின் தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியின் முதல்வர் சுரேஷ் மாணவர்கள் சிலரை தற்காலிக இடைநிறுத்தம் செய்திருக்கிறார்.

இதனால் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் முதல்வர் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர். இதையடுத்து இன்று காலை சுரேஷை அவர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

இது குறித்து வல்லநாடு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பிரதமர் : லிபியாவில் பரபரப்பு..!

libiaலிபியப் பிரதமர் அலி ஸீடேன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிபியாவின் ட்ரிபோலின் நகரில் உள்ள பொரிந்தியா ஹோட்டலில் அந்நாட்டு பிரதமர் அலி ஸீடேன் தங்கியிருந்தார். ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த அவரை, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் கடத்தி சென்றார்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து லிபிய அரசுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், ஒரு அரேபிய தொலைக்காட்சி, 5 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் போல வந்து பிரதமரை கடத்தி செல்வது போன்ற படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் பிரதமர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர், லிபியாவில் தீவிரவாத இயக்கங்கள் பெருகி வருவதாகவும், அவற்றை ஒழிக்க அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும் கூறியிருந்தார்.

தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடியதால், லிபிய நாட்டு பிரதமர் அலி ஸீடேனை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிபிய தலைவர் கடாபியை கொன்று, அந்நாட்டின் சில பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்க இராணுவம் ட்ரிபோலி பகுதியில் தீவிரவாதிகள் சிலரை கைது செய்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியில் அந்நாட்டு பிரதமர் கடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.