குளவித் தாக்குதல்: 4 சிறுவர்கள், 8 பெண்கள் வைத்தியசாலையில்..!

kulaviஅகுரஸ்ஸ – போரம்ப பிரதேசத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வீதியால் சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் குளவித் தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

4 சிறுவர்கள் மற்றும் 8 பெண்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அகுரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரதியமைச்சர்கள் விபரம்..!

parliment

ஒன்பது பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு:

சனத் ஜயசூரிய
லக்ஷமன் பெரேரா
சரத் வீரசேகர
வை.ஜி.பத்மசிறி
என்டனி விக்டர் பெரேரா
ஹேமால் குணசேகர
மொஹான் லால் கிரேரு
நிஷாந்த முத்துஹெட்டிகம
சரத் முத்துகுமாரன

காதலர் கருவை வயிற்றில் சுமந்ததால் டயானா கொல்லப்பட்டாரா?

princess_diana

இங்கிலாந்து இளவரசர் சால்சை திருமணம் செய்து கொண்ட டயானா 31-8-1997ம் ஆண்ட காதலர் டோடி ஃபயத்துடன் பரீஸ் நகர கார் விபத்தில் பலியானார்.

சால்சுடன் வாழ்ந்த போதே இன்னொரு நபரை காதலிப்பதாக டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத் வற்புறுத்தினார்.

இந்நிலையில் பரீஸ் நகரில் தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி சாரதிக்கு டயானா உத்தரவிட்டார். சரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா – டோடி ஃபயத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.

இங்கிலாந்தின் உளவுத் துறையின் இரகசிய ஏற்பாட்டின் படி அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடந்த மாதம் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

விபத்துக்கு பின்னர் பரீசில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் வைத்தியசாலைக்கு டயானாவை தூக்கி வந்தபோது அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த வைத்தியர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 – 10 வார கருவினை கண்டதாக வைத்தியசாலை குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர்.

அரச குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி டயானாவை இங்கிலாந்து அரண்மனை வட்டாரங்கள் கொலை செய்தது.

கர்ப்பமாக இருந்த அவரது வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் உடலை தைலத்தில் போட்டு டோடி ஃபயத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் இரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டனர் எனவும் தனது புத்தகத்தில் அலன் பவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழக்கும் தருவாயிலும் பலரின் உயிரை காத்த சாரதி!!

bus

தமிழகத்தின் ஆலந்தூர் ஆசர்கானாவில் ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்ட போது, பஸ்ஸை பத்திரமாக நிறுத்திவிட்டு சாரதி உயிரிழந்தார்.

மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் தருணத்திலும் பயணிகள் உயிரை பெரிதாக மதித்த சாரதி சம்பத்தின் செயல் பெரும் நெகிழ்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்(45). தனியார் நிறுவனத்தில் பஸ் சாரதியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்த விமானி மற்றும் விமான பணிப்பெண்களை ஏற்றிக்கொண்டு மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு பஸ்சை ஓட்டி வந்தார்.

விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு, மற்றொரு விமானத்தில் வந்த விமானி மற்றும் பணிப்பெண்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் எழும்பூரில் உள்ள ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

இந்தநிலையில் பரங்கிமலை அருகே பஸ் வந்தபோது நெஞ்சு வலிப்பதாக பஸ்சில் இருந்த கிளீனரிடம் கூறி தண்ணீர் கேட்டார். தண்ணீர் குடித்ததும் நெஞ்சு வலி குறைந்ததால் பஸ்சை மீண்டும் ஓட்டிச்சென்றார்.

பஸ் ஆலந்தூர் ஆசர்கானா அருகே வந்தபோது சம்பத் மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறினார். ஒரு கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் பஸ்சை இயக்கி சாலையோரம் நிறுத்தினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த விமானி மற்றும் பணிப்பெண்கள் ஓடி வந்து பார்த்தபோது பஸ்சின் ஸ்டியரிங்கில் மயங்கி கிடந்தார்.

உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

குட்டி யானைக்கு மதம் பிடித்ததால் ஆணும் பெண்ணும் பலி!!

ele

புசல்லாவ – மொரப்பே – கதிர்காமம் தேவாலயத்தில் இடம்பெற்ற பெரஹராவின் போது குட்டி யானை ஒன்றுக்கு மதம் பிடித்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 10.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெரஹராவை காண வந்தவர்களில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் குழப்பத்தில் ஓடி விழுந்தபோது யானைக் குட்டி அவர்களை காலால் நசுக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்பளை வைத்தியசாலையிலும் ஆணின் சடலம் கொத்மலை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

புசல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடத்தப்பட்ட இலங்கை வர்த்தகர்!!

kidnap

இந்தியாவின் தமிழ் நாட்டில் இலங்கை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இம்தியாஸ் எனப்படும் வர்த்தகரே இவ்வாறு இனந்தெரியாத குழுவால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

செவன் வோல்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வர்த்தகர் கடத்தப்பட்டதாகவும் வர்த்தகரின் மனைவியிடம் கடத்தல் காரர்கள் 1 கோடி ரூபா கப்பம் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றதால் கடத்தல் காரர்கள் வர்த்தகரை காலையில் கடத்தி மாலையில் விடுதலை செய்துள்ளனர்.

சடயப்பா வீதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்த போது நான்கு பேர் கொண்ட குழு கதவை தட்டி வர்த்தக உடன்படிக்கை குறித்து கலந்துரையாட வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றதாக மொஹமட் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

அப்போது தன்னை அவர்கள் தாக்கி பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் இலங்கை சென்றிருந்த தனது மனைவி இனுர் ரசாக்கிற்கு அழைப்பை ஏற்படுத்தி ஒரு கோடி ரூபா கப்பம் கோரியதாகவும் மொஹமட் இம்தியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அன்றைய தினம் மாலை மனைவிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மொஹமட் இம்தியாஸ் தான் விடுவிக்கப்பட்ட செய்தியை தெரிவித்து வாகனம் ஒன்றில் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசேட பொலிஸ் குழு அமைத்து விசாரணை இடம்பெறுவதாக செவன் வோல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் 26 இலங்கை மீனவர்கள் கைது!!

arrest1

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 26 பேரை தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

குமரிக்கு தென்கிழக்கே 80 மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் 26 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் 26 பேரையும் கைது செய்ததோடு, அவர்களின் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபை அமைச்சர்கள், தவிசாளர், பிரதி தவிசாளர் விபரம்!!

TNA

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை அமைச்சுப் பதவிகள் பிரச்சினைக்கு சற்று முன்னர் தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வட மாகாண அமைச்சர்கள் நியமனம் குறித்த விபரங்களை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு..

சபையின் தவிசாளர் – சி.வீ.கே.சிவஞானம்

சபையின் பிரதி தவிசாளர் – அன்ரன் ஜெயநாதன்

முதலமைச்சா – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் – பி.ஐங்கரநேசன்

கல்வி, கலாச்சார, அமைச்சர் – தி.குருகுலராஜா

சுகாதார அமைச்சர் – வைத்திய கலாநிதி.பி.சத்தியலிங்கம்

மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி – டெனீஸ்வரன்

அடிக்கடி இருளில் முழ்கும் வவுனியா நகரம் : மக்கள் விசனம்!!

power

வவுனியா நகரப் பகுதியில் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பலரும் பாதிக்கப்படுவதாக  மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நகரின் பல இடங்களுக்கு குழாய் மூலமே நீர் விநியோகிக்கப்படுகிறது. மின்சாரம் தடைப்படுவதனால் நீரை விநியோகிப்பதற்கான மோட்டரை எல்லா நேரத்திலும் பயன்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அன்றாட தோவைகளை பூர்த்தி செய்ய முடியாது மக்கள் அல்லல்படுகின்றனர்.

இது தவிர நவராத்திரி பூசை காலங்களும் திருவிழாக்களும் ஆலயங்களில் இடம்பெறுகின்ற போது முன்னறிவித்தல் இன்றி ஆலயப் பகுதிக்கான மின்சாரத்தினை நிறுத்துவதனால் ஆலய வழிபாடுகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நகரப் பகுதியில் உள்ள அரச திணைக்களங்களும் மின்தடையால் செயல் இழப்பதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக பாடசாலைகளில் தொழிற்நுட்ப பாடங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மாணவர்களின் இலத்திரனியலுடன் கூடிய தொழில் நுட்ப கற்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கணனி கற்கை நிலையங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள், வங்கி நடவடிக்கைகள் எனப் பல நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிப்படைகின்றன.

இது தொடர்பில் வவுனியா, மின்சார திணைக்களத்தின் வாடிக்கையாளர் பிரிவுடன் தொடர்பு கொண்டு கேட்டால் திருத்த வேலைகள் நடைபெறுகின்றது, முடிந்ததும் மின்சாரம் வரும் என்றும் பதில்களையே திரும்பத் திரும்ப அவர்கள் கூறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் சீராக வழங்கும் போது திருத்த வேலைகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. அதேபோல் திடீர் என ஏற்படுகின்ற திருத்த வேலைகளுக்கு முன்னறிவித்தல் செய்ய முடியாது என்பதும் உண்மையே.

ஆனால் திட்டமிட்ட ரீதியில் மின்சார சபையால் ஒவ்வொரு பகுதிக்குமான மின்சார வேலைகள் இடம்பெற்று வருவதால் அதனை முன் கூட்டியே தெரியப்படுத்தினால் அதனால் எதிர்நோக்கப்படும் அசௌகரியங்கள் குறைக்கப்பட்டு மக்களது இயல்பு வாழ்கையில் பெரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

வவுனியாவில் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!!(படங்கள்)

மேசன் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த புனர்வாழ்வு பெற்ற முன்னால் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 133 பேருக்கு சான்றிதழ் மற்றும் தொழில் சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவருவதாவது,

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் கடந்த காலங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளுக்கு வவுனியா தொழிற் பயிற்சி கல்லூரி மூலம் மேசன் வேலை பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த பயிற்சி நெறியை பூரணமாக கற்று சித்தியடைந்த 133 முன்னாள் போராளிகளுக்கு தொழில் செய்வதற்கான உபகரணங்களும், பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி மேஜர் நாமல்திலகரட்ன, வவுனியா இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர், வவுனியா தொழிற் பயிற்சிக் கல்லூரி அதிபர், நைற்றா நிறுவன அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.24 1 3

ஆபாச காட்சி விவகாரத்தில் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நஸ்ரியா!!

nasதனுசுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்துள்ள நஸ்ரியா நேற்று பொலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகள் எடுத்துள்ளதாக புகார் அளித்தார். இதன்மீது மத்திய குற்றப்பபிரிவு போலீசார் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இன்று காலை நய்யாண்டி படத்தை பொலீசார் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் போலீசார் படத்தை பார்த்தனர். அவர்களுடன் நஸ்ரியாவின் தந்தை நசீம், மற்றும் அவரது வக்கீல்களும் படம் பார்த்தார்கள். நஸ்ரியா படப்பிடிப்புக்காக கேரளா சென்று விட்டதால் வரவில்லை.

படம் முடிந்ததும் நஸ்ரியா தந்தை நசீம் கூறும்போது நய்யாண்டி படத்தை முழுவதுமாக பார்த்தோம். நஸ்ரியாவுடன் போடப்பட்டு ஒப்பந்தத்தை மீறி காட்சிகள் உள்ளனவா என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். நஸ்ரியா தரப்பில் 3 காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாவும் அதற்கு இயக்குனரும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நஸ்ரியா இயக்குனர் சற்குணத்திடம் இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளாராம். விரைவில் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் முடிவெடுத்துள்ளனராம்.

துடுப்பில் சிலிக்கன் டேப் : பீட்டர்சனுக்கு நஷ்டஈடு!!

pieterson

ஆஷஸ் தொடரில் துடுப்பின் நுனியில் சிலிக்கன் டேப் ஒட்டி விளையாடியதாக வெளியான செய்திக்கெதிரான வழக்கில் கெவின் பீட்டர்சனுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என வெற்றி பெற்றது.
இத்தொடரில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) செய்ய பயன்படுத்தப்படும் ஹொட் ஸ்பொட் தொழில்நுட்பத்தில் இருந்து தப்பிக்க இங்கிலாந்தின் பீட்டர்சன் உள்ளிட்ட சில வீரர்கள் தங்களது பேட்டின் நுனியில் சிலிக்கன் டேப் ஒட்டி விளையாடியதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த சனல்9 உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்களது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டிருந்தன.

இதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் பீட்டர்சன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் பீட்டர்சன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறுகையில், பீட்டர்சன் துடுப்பின் நுனியில் சிலிக்கன் டேப் ஒட்டி விளையாடியதாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றது என்றார்.

இதை ஏற்றுக் கொண்டு பீட்டர்சனிடம் மன்னிப்பு கேட்ட அந்த தனியார் நிறுவனம், சமூக வலைதளத்தில் இருந்து அந்த செய்தியை நீக்க ஒப்புக்கொண்டதோடு அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் ஒப்புக்கொண்டது.

நாயை வைத்து சத்யராஜ் தயாரிக்கும் புதிய படம்!!

sathiyaraj

நடிகர் சத்யராஜ் நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் சொந்தமாக நாதாம்பாள் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தன்னுடைய மகன் சிபிராஜ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய லீ என்ற படத்தை தயாரித்தார். அப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை.

இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் மேலும் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். அப்படத்திற்கு நாய்கள் ஜாக்கிரதை என்று பெயரிட்டிருக்கின்றனர். இப்படத்திலும் தன்னுடைய மகன் சிபிராஜையே நாயகனாக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம்.

இப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார். இவர், பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த நாணயம் படத்தை இயக்கியவர். தரண்குமார் இசையமைக்கிறார். நிஷார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட 6 பேர் கைது!!

arrest1

பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் விசா அனுமதி காலம் முடிவடைந்த நிலையில் மேலதிக காலம் தங்கியிருந்துள்ளார்.
குறித்த நபர் கடையொன்றில் சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருந்தவேளை குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஏனையோர் இந்தியா மற்றும் பங்களாதேஸைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேரும் நாட்டுக்குத் திருப்பியனுப்புபடும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடிவரவு தடுப்பு அமுலாக்கல் குழுவின் உதவி இயக்குனர் கொலின் பேரிங்டொன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான எச்சரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக வியாபார நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் கைது செய்யப்படும் பட்சத்தில் 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் என அறிக்கப்பட்டிருந்தது.

புதிய பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம்- திகாம்பரம், பிரபா, ரங்கா ஆகியோருக்கு பதவிகள்..!

dlsஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய பிரதியமைச்சர்கள் பலர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் புதிய பிரதியமைச்சர்கள் சத்தியப் பிர மாணம் செய்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய பிரதியமைச்சர்களின் எண் ணிக்கை தொடர்பில் பல்வேறு கருத் துக்கள் நிலவுகின்றபோதும் 14 பேர் புதிய பிரதியமைச்சர்களாக நியமனம் செய்யலாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பிரதியமைச்சர்களைக் கொண்டிராத அமைச்சுக்களுக்கு புதிய பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

திகா, பிரபா, ரங்கா ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகள்

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட பழனி திகாம்பரம், ஜெ. ஶ்ரீரங்கா மற்றும் பிரபா கணேசன் ஆகியோருக்கு பிரதியமைச்சர்கள் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் ஆளும் கட்சியில் கூட்டணி வகிக்கும் சிறு கட்சி உறுப்பினர்களுக்கு இவ்வாறு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களும், மாகாணசபைகளில் கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

பெரும்பாலும் 12 முதல் 13 பேர் வரையில் பிரதி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச, சனத் ஜயசூரிய, நிசாந்த முத்துஹெட்டிகம, சரத் வீரசேகர, லக்ஸ்மன் வசந்த பெரேரா, அருந்திக்க பெர்னாண்டோ, சாந்த பண்டார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் இலவச ஆயுள்வேத மருத்துவ முகாம்!!

vav-north

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட குளவிசுட்டான், மாறாயிளுப்பை ஆகிய பிரதேசங்களில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயுள்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதனை மக்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலவசமாக ஆயுள்வேத மருந்துகள் வழங்கப்பட்டதுடன் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.