நடுவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த மனிதர்..நம்பமுடியாத நிகழ்வு..இதையும் கொஞ்சம் பாருங்கள்..
ரோஜாவின் மருத்துவ குணங்கள்!!

பிறந்தது அந்நிய பூமியாக இருந்தாலும் நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு எங்கும் நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா?அனைத்தும் இதனை உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.
மட்டக்களப்பில் இளைஞன் ரயிலுடன் மோதி தற்கொலை!!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை 04.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமாங்கத்தைச் சேர்ந்த 20வயதான விஜி சிரான் என்ற இளைஞனே தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியால் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
திருடப்போன வீட்டில் திருடாமல் தூங்கியதால் வந்த வினை!!
அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் தாக்கூர் என்ற 29 வயது வாலிபன் திருட்டையே தொழிலாகக் கொண்டவன். உயர்ந்த கட்டிடங்களிலும் விரைவாக ஏறும் இவனது இயல்பினால் அகமதாபாத் காவல்துறை இவனை ஸ்பைடர்மேன் என்று குறிப்பிட்டுள்ளது.
இவன் கடந்த வாரம் ஆனந்த் நகரில் உள்ள ரோஸ்வுட் அபார்ட்மெண்ட் என்ற குடியிருப்பில் திருடச் சென்றான். நன்றாக உடையணிந்திருந்த இவனை அங்கிருந்த காவலாளி ஏதும் கேட்காததால் உள்ளே சென்ற அவன் லிப்ட் மூலம் முதலில் மொட்டை மாடிக்குச் சென்றான். அதன்பின்னர் ஒவ்வொரு மாடியாக இறங்கி வந்து வீடுகளை நோட்டம் பார்த்துள்ளான்.
சுரேந்திர பாட்டில் என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரின் வீட்டை குறித்துக் கொண்ட அவன் மீண்டும் மாடிக்குச் சென்று தூங்கியுள்ளான். இரவு 1 மணி அளவில் அவரது வீட்டின் முன்கதவுப் பூட்டை உடைத்து அவன் உள்ளே நுழைந்தான். பல வருடங்களாகப் பூட்டியிருந்ததால் அந்த வீட்டில் திருடுவதற்குப் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை.
அந்த வீட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது குடியிருப்பின் தோட்டத்தில் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீழே இறங்கினால் மாட்டிக்கொள்வோம் என்ற நினைப்பில் சிறிது நேரம் கழித்து இறங்க நினைத்த அவன் மீண்டும் அங்கேயே தூங்கிப் போனான்.
மறுநாள் காலை 7 மணி அளவில் அங்கு வந்த வேலை செய்யும் பெண்மணி வீடு திறந்திருப்பதைப் பார்த்து அக்கம்பக்கத்தவர்களிடம் எச்சரித்து அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
அவனைக் கைது செய்த காவல்துறையினர் மூன்று வருடங்களுக்கு முன்னாலும் இதே குடியிருப்பில் வேறொரு வீட்டில் திருட முற்பட்டபோது கதவு பூட்டிக் கொண்டதால் இவன் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தனர். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திருட்டுகளில் இவன் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை இணைக் கமிஷனர் கூறியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பணிப்புறக்கணிப்பில்!!
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் இடம்பெறுகின்றதைக் கண்டித்து பல்லைக்கழக ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் 17 பேர் நேற்று அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இவர்கள் ஊழியர்களாகப் பணியாற்றி வந்தபோதும் கல்விசாரா ஊழியர் நியமனத்தில் இவர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி அனந்தி சசிதரன் பா.கஜதீபன், பொ.ஜங்கரன் மற்றும் கூட்டமைப்பின் வலி. வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்ட ஊழியர்களுடன் கலந்துரையாடினார்கள்.

நடிகை ஜியா கான் கொலை செய்யப்பட்டுள்ளாரா : தாயார் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்!!
பொலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொள்ளவில்லை மாறாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் ராபியா அமின் தெரிவித்துள்ளார்.
பொலிவுட் நடிகை ஜியா கான் கடந்த யூன் மாதம் 3ம் திகதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பெல்ட்டால் கழுத்து நெறிக்கப்பட்டு ஜியா கான் மரணம் அடைந்துள்ளதாக தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜியா கான் இறந்த பின் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவரது தாய் ராபியா வெளியிட்டுள்ளார்.
நடிகை ஜியா கானின் கழுத்து பெல்ட்டால் நெறிக்கப்பட்டதற்கான ஆதாரம் அவரது உடலில் இருந்ததாக தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் பெல்ட்டால் கழுத்தை நெறிக்கப்பட்ட பிறகே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்று ராபியாவின் வழக்கறிஞர் தினேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொண்டவரின் கழுத்தில் இவ்வளவு ஆழமான காயம் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
ஜியா கான் மரணம் கொலை என்றும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1ம் திகதி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஜியா பிணமாகத் தொங்கிய அறைக்கு பக்கத்து அறையில் ரத்தம் கிடந்ததாகவும் வீட்டில் ஏசி ஓடியபோதும் ஜன்னல் திறந்துள்ளது. எனவே ஜன்னல் வழியாக யாராவது வந்து ஜியா கானை கொன்றிருக்கலாம் எனவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு விபரீதமானது : உயிருக்கு போராடும் இளைஞர்!!

தமிழ்நாட்டில் நண்பர்களின் விளையாட்டுத்தனம் விபரீதமாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை, அம்பத்தூர் சேர்ந்த மோகன் என்பவரது மகன் கார்த்திக்(24). இவர் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.
கார்த்திக்கின் நண்பர்களான ஐயப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார்(22), வினோத்குமார்(23) ஆகிய இருவரும் அதே கார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்கள் மூன்று பேரும் காற்றடிக்கும் இயந்திரத்தின் மூலமாக கார்களைச் சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது எதேச்சையாக கார்த்திக்கின் ஜீன்ஸ் பின்புறத்தில் கிழிந்திருந்ததைக் கண்ட விஜயும், வினோத்தும் விளையாட்டுத் தனமாக கார்த்திக்கின் ஆசனவாயில் காற்றடிக்கும் இயந்திரத்தை வைத்துள்ளனர்.
இதனால் கார்த்திக்கின் உடல் வீங்கியுள்ளது. உடனே கார்த்திக் மயங்கி கீழே விழுந்ததைக் கண்டு பதறிய நண்பர்களின் அலறல் கேட்டு விரைந்து வந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக கார்த்திக்கை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மகனுக்கு நடந்த கொடுமை குறித்து பொலிசில் கார்த்திக்கின் தந்தை மோகன் புகார் அளித்ததைத் தொடர்ந்து பொலிசார் வினோத் மற்றும் விஜயைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபாச காட்சி விவகாரம் : இயக்குனர் மீது பொலிஸ் கமிஷனரிடம் நஸ்ரியா புகார்!!
நடிகர் தனுஷ், நஸ்ரியா நசீம் நடிப்பில் உருவாகியுள்ள படம் நய்யாண்டி. இப்படத்தை களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில் நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை இயக்குனர் ஆபாசமாக படம் பிடித்துவிட்டதாக கூறி நஸ்ரியா இயக்குனர் மீதும் படத்தின் தயாரிப்பாளர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை ஆணையர் ஜோர்ஜிடம் நஸ்ரியா நேரில் சென்று இயக்குனர் சற்குணம் மீதும் தயாரிப்பாளர் சந்திரசேகர் மீதும் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது..
நான் நய்யாண்டி படத்தில் நடித்துள்ளேன். இப்படம் வருகிற 11ம் திகதி வெளியாகவிருக்கிறது. நான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் முஸ்லீம் சமுதாயத்தில் பிறந்தவள். நான் மலையாளம் மற்றும் தமிழில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
சமீபத்தில் நய்யாண்டி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரை யூடியூப்பில் பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் நடித்த பாடல் காட்சியின் மத்தியில் வேறு நடிகையை வைத்து டூப் போட்டு ஆபாசமாக நடிக்க வைத்துள்ளனர்.
படத் தயாரிப்பின்போது இந்தக் காட்சியில் நடிக்க நான் மறுத்துவிட்டேன். என்னுடைய குடும்பத்துக்கும், நான் சார்ந்த சமுதாயத்திற்கும் அவமானம் என்பதால் நான் இந்த காட்சியில் நடிக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலரில் என்னை ஆபாசமாக காட்டியிருக்கிறார்கள்.
அதன்பின்னர் இயக்குனர் சற்குணத்தை தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டேன். ஆனால் அவர் என்னையும், என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், இதுபற்றி புகார் கொடுக்கக்கூடாது எனவும் மிரட்டினார். இதையடுத்து, தயாரிப்பாளர் கதிரேசனை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் என்னுடன் பேச மறுத்துவிட்டார்.
இப்படத்தில் இதுபோன்று மேலும் சில டூப் காட்சிகளை எனக்குத் தெரியாமலேயே சேர்த்திருப்பார்கள் என கவலையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் படம் 11ம் திகதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்னர் இந்த படத்தை எனக்கு போட்டுக் காட்ட படக்குழுவினருக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டும். அவர்கள் மறுத்தால் படத்தை வெளியாவதை தடுத்து நிறுத்த வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
காதலியை கரம் பிடிக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹரி!!

இங்கிலாந்து இளவரசர் சால்ஸ்–டயானா தம்பதியின் இளைய மகன் ஹரி தான் காதலிக்கும் பெண்ணை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சி ஹெலிகப்டரில் விமானியாக பணிபுரிகிறார். ஹரியும் கிரசிடா போனாஸ்(24) என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருகிறார். இவர் தொழில் அதிபர் ஜெப்ரி போனாஸ்–மேரி கயே குர்ஷன் தம்பதியின் மகள் ஆவார்.
இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். எனவே இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சு அடிபட்டது. இதற்கிடையே திருமணம் செய்து கொண்டு மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என இளவரசர் ஹரி விரும்பியிருக்கின்றார்.
ஆனால் கிரசிடாவுக்கு அதுபோன்ற எண்ணம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கிரசிடாவும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களது திருமணம் உடனடியாக நடைபெற வாய்ப்பில்லை என்றபோதிலும் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ளது லண்டன் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ரோகித் ஷர்மா!!

டெல்லியில் நடந்த சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்ட வித்தியாசத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் ஷர்மா தலைமையில் கைப்பற்றிய 2வது கோப்பை இதுவாகும். கடந்த மே 6-ம் திகதி ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது.
சம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது..
நவீன கிரிக்கெட்டில் அணியில் தொடர்ந்து இடத்தை தக்கவைப்பது முடியாத விஷயம். டெஸ்ட் போட்டியில் அறிமுகம் காண நான் காத்து இருக்கிறேன். அந்த வாய்ப்பு விரைவில் கிட்டும் என்று நம்புகிறேன். சரியான நேரம் மற்றும் வாய்ப்புக்காக நான் காத்து இருக்கிறேன்.
சம்பியன்ஸ் லீக் வெற்றி எங்களுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. எங்கள் அணி மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட அதிகப்படியான நெருக்கடியை நாங்கள் நல்ல முறையில் கையாண்டோம் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் நிறைய சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம்.
ஹர்பஜன்சிங் சிறந்த வீரர். அவர் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் அருமையாக செயல்பட்டு ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக திருப்பினார். அவர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒன்று, இரண்டு ஓவர்களின் அடிப்படையில் போட்டியின் முடிவு அமைந்ததாக நான் நினைக்கவில்லை.
அணித்தலைவர் சிறப்பாக விளையாடினால் அணியினரை ஈர்க்க முடியும். டோனியை போல் நான் பொறுப்புடன் அணியை வழிநடத்தியதாக நம்புகிறேன். அணியின் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பையும், ஆதரவையும் அளித்தனர்.
20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டெண்டுல்கருக்கு இது சரியான வழியனுப்பு விழா என்று நான் நினைக்கிறேன். டெண்டுல்கருக்காக கோப்பையை வென்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே ஆண்டில் இரண்டு கோப்பையை வென்றது பூரிப்பாக இருக்கிறது என ரோகித்ஷர்மா கூறினார்.
26 வயதான ரோகித்ஷர்மா இதுவரை 102 ஒருநாள் போட்டி மற்றும் 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருந்தாலும் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகவில்லை.
கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு, அனுபவப் பகிர்வை வழங்கத் தயார் : ஈபிடிபி!!

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
பொறுப்புக்களை உணர்ந்தும், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டும் வடக்கு மாகாண சபையை செயலூக்கமுள்ள அரசாக நடத்திச் செல்ல எமது அனுபவப் பகிர்வுகளையும் தேவையான பொழுதில் நாம் வழங்குவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பினர் முரண்பாடுகளை கைவிட்டு முதலமைச்சருக்கு உதவுகின்றவகையில் சுமூகமான தீர்வுக்கு வரவேண்டும்.
வடக்கு மாகாண சபை ஒன்று இல்லாத சூழலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மத்திய அரசுடன் இணக்கப்பாட்டுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு எமது மக்களுக்கும், எமது மாகாணத்துக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்து வந்துள்ளோம்.
அன்று நாம் கூறிய யதார்த்தத்தை இன்று முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் கூறுவதை நாம் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை.
இதையே நாம் இணக்க அரசியல் என்று கூறினோம். இதனூடாகவே எமது மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்த முடியும், அழிந்துபோன எமது வாழ்விடங்களையும் புதுப் பொழிவுடன் மீளக்கட்டி எழுப்ப முடியும்.
இந்த யதார்த்தையே நாம் கூட்டமைப்பினருக்கும் கூறி வந்துள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு தீர்வொன்றைக்காணும் முயற்சியிலும் இதே வழிமுறையே வெற்றியளிக்கும். இதை தற்போது உணர்ந்திருக்கும் வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.
இந்த வழிமுறையை சலுகை அரசியல் என்றும், எலும்புத்துண்டு அரசியல் என்றும் தூற்றியோருக்கு இன்று உண்மை புரிந்திருக்கவேண்டும். எமது அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கும், மத்திய அரசுடன் பகை தவிர்த்து எமது மக்களுக்கான தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசுடன் புரிந்துணர்வுடனான செயற்பாடு ஒன்று அவசியம்.
கூட்டமைப்பின் தலைமை அதை உணர்ந்திருப்பதுபோல் கூறியிருக்கின்றது. மன உறுதியோடு இவ்வழி முறையில் அவர்கள் பயணிப்பார்களாக இருந்தால் அதை நாம் வரவேற்போம்.
வடக்கு மாகாண சபை அரசை புதிய கட்டிடத் தொகுதியிலிருந்தும், புதிய ஆரம்பங்களிலிருந்தும் பெரும் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்க வேண்டியிருப்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். இந்த வேளையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பதனூடாகவே வெற்றிகரமான பயணத்தை செய்யமுடியும்.
நடைமுறைச்சாத்தியமான முயற்சிகளுக்கும், மக்களுக்கான சேவைக்கு முன்னுரிமையளிக்கும் பயன் உள்ள வேலைத்திட்டத்துக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

தென்கொரிய மற்றும் ஜப்பானியக் கப்பல்கள் அமெரிக்காவின் அணுசக்தி விமானத்துடன் இணைந்து இன்று தொடங்க உள்ள ஒரு கூட்டு கடற்படை ஒத்திகை முயற்சியை வடகொரியா எச்சரித்துள்ளது.
வடகொரியா சமீபத்தில் ப்ளுடோனியம் ஆலை ஒன்றின் இயக்கத்தை மீண்டும் துவக்கியுள்ளது. இது அவர்களின் அணுசக்தி உற்பத்திக்கான முயற்சி என்று கருதிய தென் கொரியா, வடகொரியாவின் அணுஆயுதத் தாக்குதல் முயற்சியை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை இன்று கப்பற்படை ஒத்திகையைத் துவங்க இருந்தன. இதில் அமெரிக்காவின் அணுஆற்றல் விமானமான யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன் பங்குபெறும் என்று கூறப்படுகின்றது.
வடகொரியாவும் தன்னுடைய துருப்புகளை எந்த நேரத்திலும் தாக்குதலைத் தொடங்கும் வண்ணம் தயாராக வைத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கொரியாவின் மக்கள் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் நிலைமைகள் மீண்டும் பலவீனப்படுவதாகத் தெரிவித்துள்ள வடகொரியா, அமெரிக்கா தங்களை நெருங்கத் தொடங்குமேயானால் வடகொரியாவின் ராணுவம் ஏற்படுத்தும் பேரழிவுகள் கணிக்க முடியாதவையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கு நடைபெறவிருக்கும் எதிர்பாராத பயங்கரமான பேரழிவிற்கு அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகளே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியதிருக்கும் என்றும் வடகொரிய அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்தக் கூட்டுப் படைகளின் ராணுவப்பயிற்சி தென்கொரியாவை நோக்கி உருவாகியுள்ள ஒரு சூறாவளியின் விளைவாகத் தள்ளிப் போடப்படலாம் என்று அமெரிக்கா-தென்கொரியா கூட்டுப் படைகளின் கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : சினிமாவை விட்டு விலக முடிவு!!

நடிகை அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார். திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. இதனால் பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே நாகார்ஜுனாவையும் அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவின. இருவரும் அதை மறுத்தார்கள்.
ஆர்யாவுடனும் இணைத்து பேசப்பட்டார். இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஆர்யா இதனை மறுத்தார்.
தற்போது சினிமாவில் இல்லாதவரை திருமணம் செய்ய அனுஷ்கா முடிவு செய்துள்ளதாகவும் தகுதியான மாப்பிள்ளையை பெற்றோர் தேடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபாலி ஆகிய இரு படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்கிறார். உத்தம வில்லன் படத்தில் கமல் ஜோடியாக நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது. திருமணத்துக்காக அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் : இந்திய வெளிவிவகார அமைச்சர்!!(படங்கள்)
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாசைகள் என்பவற்றை பூர்த்தி செய்வார்கள் என்று நாம் நம்புகின்றோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
யாழுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று மாலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சிறு தொழில் முயற்சிக்கான கடன் வழங்கும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். அந்நிகழ்வில் அவர் உரையாற்றுகையிலையே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
நீங்கள் வெற்றிகரமான தேர்தலை நடத்தி முடித்ததற்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் தெரிவு செய்தவர்கள் உங்கள் விருப்பங்கள் உங்கள் அபிலாசைகள் என்பவற்றை பூர்த்தி செய்வார்கள் என நாம் நம்புகின்றோம். அதற்கு என்றும் நாம் பக்கபலமாக இருப்போம்.
சில தசாப்த காலமாக நடைபெற்று வந்த போரினை அடுத்து இனிவரும் தலைமுறையினர் வளர்ச்சிக்கு உழைக்கும் தருணம் இது அண்மையில் நீங்கள் பெற்று கொண்ட அதிகாரங்கள் மூலம் நீங்கள் சரியான சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
தற்போது இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை காணப்படுகின்றது அந்த பிரச்சினை பற்றி இரு சாரார்களும் சந்தித்து உறவாடி சுமூகமான தீர்வினை பெற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தெல்லிப்பளை பகுதியில் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகளை இன்றைய தினம் அதன் பயனாளிகளிடம் கையளித்து இருந்தேன் அப்பகுதியில் 16 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதேவேளை இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் 50ஆயிரம் வீடுகளும் 2015ம் ஆண்டுக்குள் நிர்மாணிக்கப்பட்டு அதன் பயனாளிகளிடம் கையளிக்கப்படும். உங்கள் எதிர்காலம் வளமாக அமைய எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வினை அடுத்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமத்திரன் ஆகியோரையும் சந்தித்து குர்ஷித் கலந்துரையாடினார்.

பந்தை எறிகிறார் போத்தா : அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!!

பந்தை எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் ஆபிரிக்க வீரர் ஜோகன் போத்தா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்.
சுழற்பந்து வீச்சாளர்களை கண்டால் அவுஸ்திரேலியாவுக்கு எப்போதும் சிக்கல் தான். இலங்கை சுழல் ஜம்பவான் முரளிதரன் பந்தை எறிவதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா 1996ல் குற்றம் சுமத்தியது. அவுஸ்திரேலியாவில் நடந்த சோதனைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
இப்போது தென் ஆபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோகன் போத்தா(31) மீது சி.ஏ குற்றம் சுமத்தியுள்ளது. 5 டெஸ்ட், 78 ஒருநாள், 40 T20 போட்டிகளில் விளையாடியுள்ள போத்தா மீது, பந்தை எறிவதாக முதன்முதலில் 2006ல் (சிட்னி டெஸ்ட்) சி.ஏ., புகார் தெரிவித்தது.
அப்போது, சர்வதேச கிரிக்கெட் சபை போத்தாவுக்கு தடை விதித்தது. இதில் இருந்து மீண்ட இவர் 2009ல் அவுஸ்திரேலியாவுக்கெதிராக ஒருநாள் போட்டியில் பங்கேற்ற போது மீண்டும் இதே சர்ச்சையை சி.ஏ கிளப்பியது.
தற்போது அவுஸ்திரேலியாவின் உள்ளூர் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் போத்தா தெற்கு அவுஸ்திரேலியா அணியின் அணித்தலைவராக உள்ளார். இப்போட்டிகளில் போத்தா பந்தை எறிவதாக சி.ஏ. மூன்றாவது முறையாக குற்றம் சுமத்தியது.
எந்த போட்டியில் இப்படிச் செய்தார் என்று சரியாக கூறவில்லை.
எனினும், மூன்று நடுவர்கள் சந்தேகம் தெரிவித்ததன் அடிப்படையில் போத்தாவுக்கு சோதனை நடத்தப்படவுள்ளது.
இந்த புகார் காரணமாக போத்தாவுக்கு உடனடியாக தடை விதிக்கப்படவில்லை. ஒருவேளை சோதனையில் பந்தை எறிவது நிரூபிக்கப்பட்டால் தடையை சந்திக்க நேரிடும்.
பாலியல் தொந்தரவு : தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பெண் மரணம்!!

டெல்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி டெல்லி அரசு தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பவித்ரா பரத்வாஜ்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2010ம் ஆண்டிலிருந்தே அந்த கல்லூரி முதல்வர் எனக்கு பாலியல் தொந்தரவு தந்து வந்தார். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும், டெல்லி பொலிஸாரிடமும் நான் புகார் அளித்ததால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் என்னை வேலையில் இருந்தும் நீக்கி விட்டார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன் என பொலிஸாரிடம் பவித்ரா வாக்குமூலம் அளித்திருந்தார். டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.



