சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட முசலி பிரதேச சபை உதவித் தலைவர் உட்பட ஐவர் கைது!

 
மன்னார் முருங்கள் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட சிலாவத்துறை முசலி பிரதேச சபை உதவி தலைவர் முகமட் பைரூஸ் என்பவர் உட்பட ஐவரை நேற்று காலை 7.00 மணிக்கு கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டம் முருங்கன் மல்வத்து ஆற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடைபெறுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் உட்பட இரண்டு ரக்டர்கள், எட்டு மண் அள்ளும் சவல்(மண்வெட்டி) ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கையில்..

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் நெறிப்படுத்தலில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளை சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட முசலி பிரதேச சபை உதவி தலைவர் தடுத்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டதாகவும் அரசாங்க முத்திரை பதித்த கப் ரக வாகனத்தில் மண் அகழ்வோருக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும் தெரிவித்த பொலிசார் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய அனைவரையும் கைது செய்து இன்று 07.06.2016 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பேதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி தர்மரெத்தின மற்றும் சிறிகுமார தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

1 5 6 8 9

வவுனியா தமிழ் மாமன்றத்தின் இரண்டாவது களத்தைக் கண்ட ‘விளைநிலம்’!!

Tamil

கலை இலக்கியத் துறைசார் செயற்றிடங்களை முன்னெத்துவரும், தமிழ் மாமன்றம், புதிய முயற்சியாக ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுத்த ‘விளை நிலம்’ எனும் நிகழ்வின் இரண்டாவது களம் கடந்த 05.06.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வவுனியா கமநல சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது.

ஒரு நிமிட மௌன வணக்கத்துடன், ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையினை தமிழ் மாமன்றத்தின் உறுப்பினர் ச.கஜன் நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்வின் தொடக்கவுரையினை பண்டிதர் வீ.பிரதீபன் பிரதேச கலாசார உத்தியோகத்தர்-வவுனியா நிகழ்த்தினார்.

அவர் தனது உரையிலே இளைஞர்கள் இலக்கியத்துறையில் மேலும் தமது ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியதோடு பல இலக்கியச் செயற்பாடுகளை சமுகத்தில் முன்னெடுக்கவேண்டி அவசியம் குறித்தும் தனது உரையிலே தொரிவித்ததோடு இலக்கிய செயற்பாடுகளிலே தனது பங்களிப்பு எப்போதுமே இருக்கும் எனவும் கூறினார்.

ஆற்றலகளை வளர்தெடுப்பதோடு, சமூக நலன் தொடர்பான விடங்கள் தொடர்பாகவும் சிந்தனையினை ஏற்படுத்தும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட இந் நிகழ்வின் முதலாவது நிகழ்வாக ‘களிமண்’ என்ற நாடகம் கலைநிலாக் கலையகத்தினால் இடம்பெற்றது.

இன்றைய வன்முறைக்கு காரணமான சூழலை எவ்வாறு கையாளவேண்டும் மற்றும் பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வாறு அவசியமானது போன்ற விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு மிகச் சிறப்பான நாடகத்தை வழங்கியிருந்தார்கள்.

நிகழ்வின் இரண்டாவது அம்சமாக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்தாலோசிக்கும் களமாக கருத்தாடற்களம் அமைந்திருந்தது “போருக்குப் பின்னரான தமிழரின் பொருளாதார மீள் எழுச்சியை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர்கள்” ‘தமிழ் அரசியற் தலைமைகளே’ என்னும் தலைப்பில் சி.துஷாரன், ந.ஜெனன், கி.கிஷாந் ஆகியோரும் ‘தென்னிலங்கை அரசியற் தலைமைகளே’ எனும் தலைப்பில் சி.கிருபானந்தகுமாரன், கி.நிக்ஷலன், சி.விதுர்சன் ஆகியோரும் கலந்துகொண்டு தமது கருததுக்களை ஆழமாகப் பதிவு செய்திருந்தனர்.

இக் கருத்தாடற் களத்தினை வைத்திய கலாநிதியும் தமிழ்மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினருமான செ.மதுரகன் அவர்களும் தமிழ்மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினருள் ஒருவரான இரா.இராஜேஸ்வரன் அவர்களும் நடுநிலைவகித்து சிறப்பித்தார்கள்.

தொடர்ந்து, தமிழ் மாமன்ற இணைச்செயலாளர் செல்வி.ஜெசிதா ஆனந்தமூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இன் நிகழ்வில் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள், வவுனியாவை சேர்ந்த கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை இலக்கிய துறைசார் ஆர்வலர்கள் என பலதரப்பட்ட பலரும் அவையை நிறைந்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டு, சரியான முறையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
தொடச்சியாக விளை நிலம், பாடசாலை மாணவர்களையும், கலைஞர்களையும் உள்ளடக்கி, அடுத்த அடுத்த களங்களை காத்திரமான நிகழ்வுகளோடு அரங்கேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13383365_1101437959920134_795752677_o 13383440_1101437866586810_506071758_o 13383498_1101437909920139_1791648254_o 13383506_1101437929920137_729011622_o 13388838_1101437923253471_2044071875_o 13396696_1101437869920143_485988872_o 13405237_1101437949920135_1899066821_o 13405593_1101437883253475_1945649693_o 13410526_1101437973253466_1699955751_o 13410527_1101437979920132_2034898869_o

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்!!(வீடியோ)

1

துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில் A300 எயார்பஸ் விமானமொன்றை மூழ்கடித்துள்ளனர்.

177 அடி நீளமும் 144 அடி அகலமுடைய இந்த விமானம் கடல் அடித்தளத்திற்கு மூழ்குவதை பொழுதுபோக்காகக் கொண்ட சுற்றுலா பயணிகளை அந்த வாசஸ்தலத்திற்கு கவர்ந்திழுப்பதாக அமையும் என துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விமானம் கடல் நீருக்கு கீழான தாவரங்களையும் உயிரினங்களையும் காந்தமாக கவர்ந்திழுக்கும் என கூறப்படுகிறது.

இந்த 36 வருட கால பழைமையான விமானத்தை அயிடின் நகர சபை 270,000 துரக்கிய லிரா பணத்திற்கு தனியார் நிறு விமான நிறுவனமொன்றிடமிருந்து வாங்கியிருந்தது.

2 3 4 5

ஒரே குடும்பத்தில் மூன்று விநோத பிறவிகள்: திண்டாடும் குடும்பம்!!

3children_candicapped_002

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய விரல்களுடன் மூன்று குழந்தைகள் அவதிப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பெரியசெவலையை சேர்ந்த கோவிந்தராஜ்(39), செங்கல் சூலைத் தொழிலாளி. இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. இதில் தேவி(13), மகேந்திரன்(8), ஐயப்பன்(7) ஆகிய 3 பேரும் பிறவியிலேயே வினோதமாக பிறந்துள்ளனர்.3 பேரின் கை மற்றும் கால்விரல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு உள்ளது. இதனால் சாப்பிடுவதற்கும், மற்ற வேலைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இதனை குணப்படுத்த முடியும் என்றாலும் போதிய பண வசதியில்லாமல் தவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி என அடையாள அட்டை வழங்கப்பட்டும், 90% ஊனம் என்று மருத்துவர்களால் சான்று அளிக்கப்பட்டும் அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை கூட இன்னமும் கிடைக்கவில்லை.

இதற்காக பெற்றோர் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஒரே குடும்பத்தில் 3 மாற்றுத்திறனாளி மற்றும் வினோத குழந்தைகளை வைத்துக்கொண்டு கோவிந்தராஜ் வறுமையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

 

பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை!!

fbmobilemain-420x0
பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.இதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுபோன்ற மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீட்க அல்ஜீரியாவின் கான்ஸ்டண்டீன் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தால் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

 

சிம்புவால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா!!

Trisha

சிம்பு-த்ரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வருபவை.இந்நிலையில் சிம்பு அடுத்து த்ரிஷா இலன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் 3 கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க, ஒரு கதாபாத்திற்கு வாரணம் ஆயிரம் சிம்ரன் ஸ்டைலில் சிம்புவிற்கு அம்மாவாக நடிக்க த்ரிஷாவை அனுகியுள்ளார்களாம்.அவர் அதிர்ச்சியில் ‘என்னய்யா நான் இன்றும் ஹீரோயின்’ தான் என கூறி அனுப்பிவிட்டாராம்.

 

கமல்ஹாசன் போஸ்டர் கிழிப்பு- தொடங்கிய பிரச்சனை!!

15-1452801240-kamal-hassan

கமல்ஹாசன் என்றாலே எங்கிருந்து தான் பிரச்சனை செய்ய வருவார்களோ?. இந்த முறை படத்தின் தலைப்பிற்கே பிரச்சனை தொடங்கிவிட்டது.இவர் அடுத்து நடித்து வரும் படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்க்குலைப்பதாக ஒரு அமைப்பினர் கோவையில் போராட்டம் செய்துள்ளனர்.இது மட்டுமின்றி கமல்ஹாசன் போஸ்டரை கிழித்து தங்கள் எதிர்ப்பை அவர்கள் காட்டியுள்ளனர்.

 

அம்புலன்ஸில் படுத்தபடியே காதலனை மணந்த காதலி! ருசிகர சம்பவம்!!

308ABA4200000578-0-image-a-1_1453671825314
கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் ஆம்புலன்சில் படுத்தபடியே தனது காதலனை திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பி.ஜி.கெரே என்ற கிராமத்தை சேர்ந்த பெண் நேத்ராவதி.வைத்திய தாதி மாணவியான இவர் குருசாமி என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர், அதன்படி அமாவாசை அன்று சித்ரதுர்காவில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.இந்நிலையில் நேத்ராவதி தனது காதலருடன் சித்ரதுர்காகோட்டையை சுற்றிப்பார்க்க சென்ற போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவர் முதுகெலும்பு பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் 5ம் திகதி நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் தானும் கலந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.உடனே இதற்கு சம்மதம் தெரிவித்த நிர்வாகம் ஆம்புலன்சில் நேத்ராவதியை சித்ரதுர்காவுக்கு அனுப்பி வைத்தனர்.ஆம்புலன்ஸில் படுத்தபடியேஅவரது காதலரான குருசாமி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

43 வயதில் மகளுடன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பெண்!!

492934-students-exam

மும்பையில் 43 வயதான குடும்பபெண், தனது 16 வயது மகளுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றுள்ள சம்பவம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.இரண்டு மகள்களுக்கு அம்மாவான Sarita Zagade, கடந்த மார்ச் மாதம், முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்,

நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், Sarita Zagade 44 சதவீத மதிப்பெண்களுடனும், அவரது மகள் 69 சதவீத மதிபெண்களுடனும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.Sarita Zagade, சிறு வயதில் வறுமையின் காரணமாக தனது படிப்பை நான்காம் வகுப்புடன் நிறுத்தியுள்ளார்,

திருமணத்திற்கு பிறகு வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் அவரது கணவர் விஸ்வநாத்தின், உக்குவிப்புடன் இரவு நேர பள்ளிக்கூடத்தில் 8ம் வகுப்பில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.எனினும் 35 வருடங்களுக்குபின் பள்ளிக்கு சென்று படிக்க தான் அச்சப்பட்டதாக கூறும் Sarita Zagade, சில நாட்களுக்குபிறகு படிப்பை விரும்பி படித்தாக தெரிவித்துள்ளார்.Sarita Zagade, மூத்த மகள் இதே வருடம் 12 வகுப்பு தேர்வு எழுதி 48 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வின் போது, மூவரும் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்டு படித்ததாக Sarita Zagade குறிப்பிட்டுள்ளார்.

 

பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறை!!

Ragging

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர் இணைந்துக் கொண்டுள்ளனர்.இதன்போது, பகிடி வதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

 

இராணுவ வீரருடன் மொபைல் காதல் : 2 மாதம் பேசாததால் கடலில் குதித்த பாடசாலை மாணவி!!

balaklava-photo-camp-crimea_21879_600x450
பாடசாலை சீருடையுடன் மாணவி ஒருவர் கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.எனினும் குறித்த மாணவி கடலுக்குள் பாய்வதை அவதானித்த பிரதேவசாசிகள், திக்வெல்ல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து மாணவியை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய தனது நண்பி ஒருவரின் தொலைபேசி ஊடாக இராணுவ சிப்பாய் ஒருவருடன் காதல் ஏறபட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக குறித்த நபர் தன்னுடன் கதைக்காமையினால் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு தீர்மானித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார.இதேவேளை திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராம பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி கல்வி பயில்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

டெங்குவை கட்டுப்படுத்த 4 வர்ணப் பைகள்!!

d
டெங்குவை கட்டுப்படுத்த 4 வர்ண பைகள் அறிமுகம் மேல் மாகாண சுகாதார சபையானது நான்கு வர்ண பைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் நோக்கம் மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை என மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தீப்தி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2016ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுகக்குள் கொழும்பு மாவட்டத்தில்7600 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த வர்ண பைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தப் பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குப்பைகளை வீசும் போது பிளாஸ்டிக் கழிவுகளுக்காக செம்மஞ்சள் நிறமும், கடதாசி பொருட்களுக்காக நீலநிறமும்,பொலித்தீன் கழிவுகளுக்காக மஞ்சள் நிறமும், தேங்காய் சிரட்டைகளுக்காக கபில நிறம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மகளை எச்சரிக்க முயன்ற தந்தையால் நிகழ்த்த விபரீதம்!!

1

வீட்டுப் பாடத்தை செய்யாது விளையாடிய 10 வயது மகளை எச்சரிப்பதில் ஈடுபட்ட தந்தையால் தவறுதலாக வீசப்பட்ட கத்தரிக்கோல் மகளின் மண்டையோட்டை ஊடுருவிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினம் குறிப்பிட்ட மகள் வீட்டுப் பாடத்தை செய்யாது விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட தந்தை, அவரை விளையாட்டை நிறுத்தி பாடத்தைச் செய்யுமாறு கையை ஆட்டி எச்சரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அவரது கையிலிருந்த 6 அங்குல நீள கத்தரிக்கோல் கையிலிருந்து தவறுதலாக வீசப்பட்டு சிறுமியின் தலையைத் தாக்கி மண்டையோட்டினூடாக ஊடுருவியுள்ளது.

இதனையடுத்து ஷங்காய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிக்கலான அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டு அவரது தலையை ஊடுருவியிருந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றினர்.

அந்த சிறுமி உயிர் பிழைத்த போதும் அவர் பகுதியாக ஞாபகசக்தியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கத்தரிக்கோல் சிறுமியின் மூளைக்கு செல்லும் முக்கிய குருதிக் கலனிலிருந்து மயிரிழையில் விலகிச் சென்றிருந்தமை காரணமாகவே அந்த சிறுமியால் உயிர் பிழைக்க முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2

கல்லடி உணவகத்தில் கைகலப்பு : சந்தேகநபர் ஒருவர் கைது!!

kallady

மட்டக்களப்பு – கல்லடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்த ஒருவருக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையில் நேற்று முன்தினம் (06.06.2016) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேலும் சிலரை அங்கு அழைத்துச்சென்ற வெளிநபர் உணவக உரிமையாளருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது உணவக உரிமையாளரும் மற்றுமொருவரும் காயமடைந்ததுடன் உணவகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயத்திற்குள்ளான உணவக உரிமையாளரும், மற்றைய நபரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இன்று இரவு இடியுடன் கூடிய கடும் மழை!!

Rain

நாட்டின் மத்திய, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு பூராகவும் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

சிதறியுள்ள ஆயுதங்கள் வெடிக்கலாம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

Gosgama

கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பு மும்முனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

விசேட இராணுவ நீதிமன்றம், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதவான் விசாரணை என்பன தனித்தனியாக இடம்பெற்று வருகின்றன.

மேலும் தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுத்ப்பட்டிருந்த பகுதி இப்போது 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் 6 கிலோமீற்றர் பரப்பு தடைசெய்யப்பட்ட வலயமாக அடையாளப்படுதப்பட்டிருந்த நிலையிலேயே இப்போது அந்த பரப்பு 500 மீற்றர் அளவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த பகுதிக்குள் மக்கள் குடியமரமுடியாது எனவும் ஏனைய பகுதியில் மக்கள் குடியமர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகாமிலுள்ள ஆயுத களஞ்சியம் வெடிப்புக்கு உள்ளான போது வெடித்து சிதறிய ஆயுதங்கள் அனைத்தும் கிராமங்களில் விழுந்துள்ள நிலையில் அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.

பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் சிதைவடைந்த ஆயுதங்களை கையில் எடுக்கவோ அல்லது வீடுகளில் வைத்திருக்கவோ வேண்டாம் என பாதுகாப்பு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும் சிதைவடைந்த ஆயுதங்களில் சில மேலும் வெடிக்கலாம் எனவும் ஆகவே வெடி பொருட்கள் இருக்கும் இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறும் உடனடியாக இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளனர்.

-வீரகேசரி-