மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் மாதவன்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படம், ஹிந்தியில் ‘சாலா காதூஸ் (Saala Khadoos)’ என்கிற பெயரிலும் வெளியானது.
சமீபத்தில் தனது 17 ஆவது திருமண நாளைக் கொண்டாடினார் மாதவன்.
அப்போது அவர் ட்விட்டரில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..
”வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. நான் ஒன்றும் லெஜண்ட் கிடையாது. இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிற நடிகர் தான். மனைவி சரிதா 25 வருடங்கள் பழக்கம். 17 வருடங்கள் திருமண வாழ்க்கை. இமயமலைக்குச் சென்று இந்தத் தருணத்தைக் கொண்டாடினோம்.” என்று தெரிவித்துள்ளார்.
சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப் படையினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அல்-பயான் பகுதி மருத்துவமனை அருகே இராணுவம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அல்-மர்ஜா என்ற பகுதியில் வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கு 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். அல்-மாதி பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை “ஏ” அணியில் அக்குறணையைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணியிலேயே இவர் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணி விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை “ஏ” அணியின் தலைவராக அஷான் பிரியஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இக் குழுவிலேயே அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,இடதுகை வேகப்பந்து வீச்சாளருமான மொஹமெட் டில்ஷாட் இணைக்கப்பட்டுள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான மொஹமெட் டில்ஷாட் , மணிக்கு சுமார் 130 கிலோ மீற்றருக்கும் அதிகமான வேகத்தில் மிகத்துல்லியமாக பந்து வீசக்கூடிய ஆற்றல் படைத்தவர்.
14 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷாட் , 42 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை “ஏ” அணி விபரம் வருமாறு,
உலகிலேயே அதிக தற்கொலை இடம்பெறும் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய அறிக்கையை மேற்கோள்காட்டி, சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் காணப்படும் மக்கள் தொகைக்கு ஏற்பட அந்த நாடுகளில் இடம்பெறும் தற்கொலை வீதம் ஒரு இலட்சம் பேருக்கு 11 வீதமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 28.8 வீதமானோர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நுாற்றுக்கு 50 பேரே மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் பாவனையுடன் தொடர்புடையவர்கள். இதுவே அவர்களைத் தற்கொலை செய்வதற்கு தூண்டும் காரணியாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
லண்டனில் நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த கடுமையான மழையினால் பல பகுதிகளில் திடீரென மழைவெள்ளம் சூழ்ந்து கொண்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர். நேற்றையதினம் மாலை 4 மணியளவில் பெய்த கடுமையான மழையினால் நோர்த் ஹரோ ரயில் நிலையத்துக்கு முன்பாகச் செல்லும் வீதியில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது.
இந்த திடீர் வெள்ளத்தால் வீதிப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.
மேலும் நோர்த் ஹரோ ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் வெளியேறமுடியாது தவித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்துக்கு விரைந்து பயணிகளை மீட்டனர்.
அதேவேளை ரயில் நிலையத்துக்கு முன்பாக பயணித்த கார்கள் கிட்டத்தட்ட முழுமையாக மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காரில் இருந்து மூன்று குழந்தைகள் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணியளவில் நோர்த் ஹரோ ரயில் நிலையமும் அதன் முகப்பு வீதியும் மூடப்பட்டதனால் ஹரோ நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
முடி உதிர்தல், பெரும்பாலானோருக்கு பெரும் கவலைகளுள் ஒன்றாகும். மோசமான உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் தலை சீவுதலின் தன்மை போன்றவை இப்பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. இதற்காக நம்மில் பலர், பல அதிக செலவில் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் எண்ணெய்களை நாடுகிறோம்.
விலை மதிப்பு மிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை விட நம் சமையலறையிலெயே விலை மதிப்பில்லாத இயற்கையான தீர்வு இருக்கிறது. கறிவேப்பிலை தான் அந்த மதிப்பில்லா இயற்க்கை ரகசியம். சாதாரனமாக கரிவேப்பிலை உட்கொண்டால் நம் தலை முடிக்கு நல்லது என்று நம் பாட்டி தாத்தா சொல்லி கேட்டிருப்போம். இதனை வெளியில் பயன்படுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கறிவேப்பிலையில் என்ன உள்ளது:
கறிவேப்பிலையில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் கானப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், முடியின் வேர்பகுதிகளை வலுவாக்கும் மற்றும், முடி மெலிந்து போவதை தடுக்கும் தன்மை கொண்டது. எனவே இது முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமினே ஆசிட் முடியில் ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது. இதை தவிற கருவெப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. பீட்டா கரோட்டின் முடி உதிர்வை தடுக்கும் தன்மையும், புரதம் முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
எப்படி உபயோகிப்பது:
உங்கள் முடிக்கேற்ற அளவு கரிவேப்பிலையை எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். கூடுதல் பலனிற்க்கு இதனுடன் சிறிது ஊரவைத்த வெந்தைய விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த விழுதை தலைமுடியில் நன்கு பரப்பி, 2 மணி நேரம் வரை ஊரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, தலையை நன்கு கழுவவும்.
கறிவேப்பிலையின், தன்மை காரணமாக தலை சற்று பிசுபிசுப்பாக இருக்கும். இது சாதாரனம் தான், தலை காய்ந்ததும் இது சரி ஆடிவிடும். இது கஷ்டமாக இருந்தால், லேசாக ஷாம்பு போட்டு அலசிக் கொள்ளலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முடி இயற்கையாகவே, வலிமை அளிப்பதுடன், நல்ல கறுப்பு நிறத்திலும், மிருதுவாகவும் இருக்கும்.
முடி உதிர்வை தடுக்க எண்ணெய்:
கறிவேப்பிலை, கருப்பு சீரகம், வெந்தய விதைகள் இவற்றை நன்கு அரைத்து விழுதாகிக் கொள்ளவும். பொடுகு பிரச்சனை இருப்பின் வேம்பு இலைகள் சிலவற்றையும் சேர்த்துக்கொள்ளவும். இந்த விழுதை வழக்கமாக உபயோகிக்கும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து உபயோகிக்கவும்.இதை, தலையில் தேய்த்து எட்டு மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு முடியை சுத்தம் செய்துகொள்ளவும். முடி உதிர்வை தடுப்பதுடன், தலை முடியை முடி ஷைனாகவும் வைத்துக்கொள்ள இது உதவும்.
ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்தவர் தமரா சம்சனோவா ( வயது 68) அங்குள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். கடந்த வாரம் இவரது நண்பர் வாலண்டினா உளனோவா ( வயது79) என்பவரை கொலை செய்ததாக ரஷ்ய போலீசார் இவரை கைது செய்தனர். போலீசார் அங்கிருந்த சிசி டிவியை ஆய்வு செய்ததில் வாலண்டினாவின் உடல் பாகங்களை சம்சனோவா ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்து இருந்தது உறுதியானது.
இதை தொடர்ந்து போலீசார் பாட்டி சம்சனோவா வின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து போலீசார் ஒரு டைரியை கைபற்ற அதன் மூலம் இந்த 69 வயதான பாட்டி 14 பேரை கொலை செய்து இருக்கும் பயங்கர தகவல் வெளியாகி உள்ளது.இந்த கொலைகார கொடூர பாட்டி தான் கொலை செய்தவர்களின் தலை மற்றும், நுரையீரல் , கை கால்களை வெட்டி எடுத்து இருப்பார் என போலீசார் சந்தேகபடுகின்றனர்.
ஓய்வூதியம் பெற்று வரும் இந்த பாட்டி நர மாமிசம் சாப்பிடும் காட்டு மிராண்டிகளோடு ஒப்பீடுகின்றனர் போலீசார். 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒரு வியாபாரியின் அடையாள அட்டை பாட்டியின் வீட்டில் கண்டெடுக்கபட்டு உள்ளது. அவரது தலை , கால் மற்றும் கைகளை பாட்டி வெட்டி எடுத்து உள்ளார்.
அங்கு இருந்த டைரியில் ”எனது வீட்டில் வாடகைக்கு இருந்த வாலண்டினாவை அவரது உடல் பாகங்களை பாத்ரூமில் வைத்து கத்தியால் வெட்டினேன். பின்னர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பேக்கில் போட்டு தூக்கி எறிந்து விட்டதாக” கைப்பட எழுதி உள்ளார். கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்ட போது பாட்டி சம்சனோவா இந்த நீதி மன்றம் கொடுக்கும் எததனை வருட சிறை தண்டனையையும் ஏற்று கொள்ள தயாராக் இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.
நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியின் முதல் ஐந்து மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 135 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளது.
மாவட்ட மட்டத்தில் இந்த நோய் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களை வைத்திய சிகிச்சைகளுக்கு உட்படுத்துவது, விஷேடமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானர்களை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம் என, சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் காதலித்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட மகளை அவரது தாயார் உயிருடன் எரிந்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லாகூர் நகரில் பர்வீன் ரபீக் என்ற தாய் ஷீனட் ரபீக்(18) என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் ஹாசன் கான் என்ற வாலிபரை ஷீனட் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய ஷீனட் ஹாசனை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.மகளின் ஒழுக்கமற்ற நடவடிக்கையால் குடும்பத்தின் கெளரவம் கெட்டுவிட்டதாக பெற்றோர் மற்றும் ஷீனட்டின் சகோதரன் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
சரியான நேரத்தை எதிர்ப்பார்த்திருந்த தாயார் 3 நாட்களுக்கு முன்னர் ஷீனட்டிற்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், ‘எல்லாம் நடந்து முடிந்து விட்டது. ஆனால், நமது குடும்ப சம்பிரதாயப்படி உனக்கு விஷேடமான நிகழ்ச்சி நடத்த வேண்டும். எனவே, உடனடியாக வீட்டிற்கு புறப்படவும்’ என தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தாயார் மனம் மாறியுள்ளதை அறிந்து உற்சாகம் அடைந்த ஷீனட் புதிய கணவனை விட்டுவிட்டு அவர் மட்டும் தனியாக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டிற்குள் ஷீனட் நுழைந்ததும் அவரது கை கால்களை கயிற்றால் கட்டி தாயும் சகோதரனும் உள்ளே தூக்கி சென்றுள்ளனர். ஷீனட் அதிர்ச்சியில் அலறி துடித்துள்ளார்.உள்ளே சென்ற இருவரும் அங்குள்ள கட்டில் மீது ஷீனட்டை படுக்க வைத்து எழ முடியாமல் கட்டிபோட்டுள்ளனர்.
பின்னர், சமையல் அறையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஷீனட் மீது தாயார் ஊற்ற, அருகில் இருந்த சகோதரன் தீவைத்துள்ளார்.எதிர்கால கனவுகளுடன் தாய் வீட்டிற்கு வந்த ஷீனட் துடிக்க துடிக்க உடல் கருகி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் முடிந்ததும் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டு பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.பாகிஸ்தான் நாட்டில் மட்டும் சம்பிரதாயங்களை மீறி திருமணம் செய்துக்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 பெண்கள் இதுபோன்று கொலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினி முருகன் படத்திற்கு பிறகு முன்னணி நடிகை என்ற லிஸ்டில் இணைந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்து ரெமோ, விஜய்-60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இது மட்டுமின்றி இவர் நடிப்பில் விரைவில் தொடரி படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.இந்த விழாவில் இவர் அணிந்திருந்த ஆடையை அவரே வடிவமைத்தாராம், ஏனெனில் கீர்த்தி பேஷன் டிசைனிங் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையை கொண்ட ஸ்மார்ட் போன்களை Samsung அடுத்த வருடம் வெளியிட உள்ளது.சமீபத்திய தகவலின் படி, முன்னணி மொபைல் நிறுவனமான Samsung புதிய மைல்கல்லாக வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையைக் கொண்ட 2 ஸ்மார்ட் போன்களை அடுத்த வருடம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மொபைல்களில் ஒன்று இரண்டாக மடித்துக் கொள்ளும் வகையிலும், மற்றொன்று தொடுதிரை நன்றாக வளைந்து கொடுக்கும் படியும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இரு போன்களுமே 5 இன்ஞ் OLED தொடுதிரையை கொண்டுள்ளன. இவை வளைந்து கொடுக்கும் போது 8 இன்ஞ் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடக்கும் Mobile World Congress 2017ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எத்தனையோ படங்கள் நடித்துவிட்டேன்.
ஆனால், தற்போது என் அப்பாவுடன் நடித்து வரும் சபாஷ் நாயுடு எனக்கு மிகவும் ஸ்பெஷல்.ஒரு நடிகையாக என் அப்பாவிடம் இருந்து பல நடிப்பு திறமைகளை கற்றுக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.
போர்ச்சுக்கல் நாட்டில் 4 மாத கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.இதனால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. ஆனால் அப்பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தையின் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.
எனவே அக்குழந்தை தொடர்ந்து வளர அப்பெண்ணின் கணவர் சம்மதித்தையடுத்து குழந்தை வளர சிகிச்சையளிக்கப்பட்டது.தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 2.35 கிலோ எடையுடன் நலமுடன் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.மூளைச்சாவு அடைந்த நீண்ட நாட்களுக்கு பிறகும் பெண்ணின் வயிற்றில் குழந்தை வளர்ந்து பிறந்தது போர்ச்சுக்கல்லில் இதுவே முதன்முறை.
சவுதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என நினைத்து ஓடும் காரில் இருந்து வீசியெறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடைபெற்ற அன்று Manama நகரில் இந்நபர் தனது மனைவி மற்றும் 4 மாதக்குழந்தையுடன் காரில் பயணித்துள்ளார்.அப்போது, இந்நபர் காரின் ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
இதனைப்பார்த்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல், காரில் இருந்து இறங்கி தனது குழந்தையை காப்பாற்ற ஓடியதில், லொறியில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.இதில் கீழே விழுந்த குழந்தைக்கு அடிபட்டதில் குழந்தையும் உயிரிழந்தது, இதுதொடர்பான விசாரணையில், தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது எனக்கூறி, பயங்கரமாக குழந்தையை அடித்துள்ளார்.
அதன் முடிவில்தான் குழந்தையை காரின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார், மேலும் மனைவியும் காரில் இருந்து இறங்கிவிட்டாலும், அதனைப்பொருட்படுத்தாது சென்ற இவரை பொலிசார் பின்தொடர்ந்து சென்று விரட்டி பிடித்துள்ளனர்.இதுதொடர்பான வழக்கு மெக்காவில் நடைபெற்று வந்த நிலையில், இவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனையும், 1,500 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகள் தொடங்கிய காலத்தில் பொதுமக்கள் இதை தகவல் தொடர்பை பரிமாற்றிக்கொள்ளுவதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். இதன்மூலம் அறிமுகம் இல்லாதவர்கள் கூட நண்பர்கள் ஆகும் நிலைக்கு சமூக வலைத்தளங்கள் உதவியது.
பின்னர், சமூக வலைத்தளங்களை பல்வேறு விரோத செயல்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக போலியான ஐடிகளை உருவாக்கி எதிரில் இருப்பர்களிடம் நண்பர்கள் என்று கூறி காதலித்து கைவிடுவதில் இருந்து தொழில் தொடங்க பணம் கேட்டு முறைகேடு செய்வது நடைபெற்று வருகிறது.
இப்படித்தான் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த வருடம் மர்ம நபர் ஒருவர் 1.18 கோடி ரூபாய் ஏமாற்றி ஏப்பம் விட்டார். தற்போது ஒருவர் 1.97 கோடி ரூபாயை கோட்டைவிட்டு ஏமாந்து நிற்கிறார்.
மேற்கு மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் குவாலேவாலா (வயது 72) நாஷிக்கில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். இவர் பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துள்ளார். இவர் ஒருநாள் பேஸ்புக்கில் நண்பர்களை தேடும்போது ரயோன் ஜான் (பெயர் மாற்றம்) என்பவர் அறிமுகமானார். இருவரும் நீண்ட நாட்கள் பேஸ்புக் மூலம் பேசியபின் நண்பர்கள் ஆனார்கள்.
அப்போது ரயோன் ஜான், தான் அமெரிக்க ராணுவத்தில் வேலைப் பார்ப்பதாகவும், தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைப்பிரிவில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜான், சில நாட்களுக்குப்பிறகு நான் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்காக முதலீடு செய்ய விரும்பினேன். ஆனால் நம்பிக்கையான நபர் யாரும் கிடைக்கவில்லை. நீங்கள் என்னுடன் பிசினஸ் பார்ட்னராக விரும்பினால், 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 3.32 கோடி ரூபாய்) மதிப்பில் முதலீடு செய்ய இருக்கிறேன் என்று கூறினார். இதற்கு குவாலேவாலா சம்மதம் தெரிவித்தார்.
மேலும், ஜான் அனைத்து வகை சான்றிதழ்களையும் பொய்யாக தயாரித்து குவாலேவாலா நம்பும் வகையில் அனுப்பி வைத்தார். அத்துடன் வங்கி நிர்வாகி ஒருவரும் ஜான் தொடர்பாக பேசினார். இதனால் உறுதியாக நம்பிய குவாலேவாலா, பல்வேறு வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கி பணம் டெபாசிட் செய்தார். அந்த அக்கவுண்ட் அனைத்திலிருந்தும் ஜான் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் தொடங்கப்பட்டிருந்தது.
சில நாட்கள் கழித்து குவாலேவாலா ஏடிஎம் சென்டரில் சென்று பணம் எடுக்க முயன்றார். அப்போது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. அதே சமயத்தில் ஜான் குவாலேவாலாவுடன் வைத்திருந்த அனைத்து தொடர்பையும் துண்டித்தார். அப்போதுதான் தான் ஏமாற்றம் செய்யப்பட்டுள்ளதா குவாலேவாலா உணர்ந்தார். உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்தியாவில் குவாலேவாலாதான் முதன்முறையாக அதிக பணமாக சுமார் 2 கோடி ரூபாய் சமூக வலைத்தளம் மூலமா இழந்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருந்த சுவாமி சிலையின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, பெரும் சர்ச்சைக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள லஸ்கனா பகுதியில் நாராயண சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள சுவாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் சீருடையான காக்கி நிற அரைக்கால் டிரவுசர், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சிலையின் ஒருகையில் தேசியக்கொடியும் இருந்தது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங்வகேலா கூறியதாவது, கடவுளுக்கு காக்கி அரைக்கால் டிரவுசர் அணிவித்து எதை நிரூபிக்க போகிறீர்கள்? இதை செய்தவர்கள் மீது இரக்கப்படுகிறேன்.இன்று நீங்கள் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவிப்பீர்கள், நாளை பா.ஜனதா சீருடையை அணிவிப்பீர்கள். இது போன்ற நடவடிக்கைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயலுக்கு பா.ஜனதாவும் அதிருப்தி வெளியிட்டு உள்ளது.மாநில பா.ஜனதா தலைவர் விஜய்ருபானி இது குறித்து கூறுகையில், ‘இதை பார்த்து உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். இதைநான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இது கண்டிப்பாக நடந்திருக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.
கோவிலின் சுவாமிஜி விஸ்வபிரகாஷ் இது குறித்து கூறுகையில், நாங்கள் இந்த சுவாமி சிலைக்கு நாள்தோறும் வெவ்வேறு உடைகளை அணிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீருடையை உள்ளூர் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். எனவே நாங்கள் இதை அணிவித்தோம் என்று கூறியுள்ளார்.