முடிசூடா மன்னன் முகமது அலியின் இறுதிச் சடங்கு!!

Muhamad ali

குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழந்த முகமது அலியின் இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

´தி கிரேட்டஸ்ட்´ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்தவாரம் காலமானார்.

காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முகமது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வந்தார்.

சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முகமது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த நான்காம் தேதி அவர் காலாமானார்.

மூன்றுமுறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் உடல் கடந்த ஆறாம்தேதி அரிசோனா நகரில் இருந்து கென்ட்டுக்கி மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகருக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

சவப்பெட்டியின் மீது தங்கநிற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற போர்வையால் மூடப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட முகமது அலியின் உடலுக்கு கடந்த மூன்று நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இறப்புக்கு பின்னர் தனது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என குடும்பத்தாரிடம் முஹம்மது அலி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று இறுதிச்சடங்குகள் தொடங்கியது. கலிபோர்னியா நகரை சேர்ந்த சைத்தூன்யா கல்லூரியின் நிறுவனரான இமாம் சைத் ஷாகிர் தலைமையில் நடைபெற்ற ‘ஜனாசா’ தொழுகையில் சாதி, மதபேதங்களை கடந்த நிலையில் சுமார் 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

இன்னும் சிலமணி நேரத்தில் நடைபெறவுள்ள சர்வமத பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், துருக்கி அதிபர் தாய்யிப் எர்டோகன், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்ட்டல் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முகமது அலியின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூனர் வருடங்களின் பின் மீண்டும்  நாளை முதல் ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30  மணியளவில்  கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .

மேற்படி ஆலய மகோற்சவம்  நாளை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி

19.06.2016 –  ஞாயிற்றுகிழமை  தேர்த்திருவிழாவும்

20.06.2016   திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்

21.06.2016  செவ்வாய்க்கிழமை  பூங்காவனமும் இடம்பெற்று

22.06.2016   புதன்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.

11053343_165884727079684_5729806005419846244_o 13329346_289488844719271_7418897572794653115_o 13332978_289488804719275_1311081141545205310_n 13335955_289488748052614_5940122945387232784_n

சென்னையில் கடல் சீற்றம் : 50 வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன!!

1

சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கடற்கரையை அண்டியுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள காட்சிபட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே கடல் நீர்மட்டம் உயர்ந்தும் சீற்றம் அதிகரித்தும் காணப்பட்டது. இதனால், கடலோரம் அமைந்துள்ள பல வீடுகள் அலையின் சீற்றத்தில் நொறுங்கின.

கடல் சீற்றம் ஏற்பட்டு நொறுங்கிய வீடுகள்இது குறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீநிவாஸபுரம் மீனவ பஞ்சாயத்தின் தலைவரான சுரேஷ், பல படகுகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் மீன் பிடிக்கும் வலைகள் மணலுக்குள் புதைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

2009-ஆம் ஆண்டிலும் இதேபோல கடல் சீற்றம் ஏற்பட்டு சில வீடுகள் நொறுங்கியதாகவும், அங்கு வசித்த பெண்கள் தெரிவித்தனர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் கடற்கரையோரம் நிற்கும் பெண்கள்இப்போது பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் விரும்பினால் கண்ணகி நகர் போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும், அதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும் அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

கடுமையாக சேதமடைந்த வீடுகள்இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்சென்னை மட்டுமல்லாமல், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதேபோல பல இடங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை பெய்யும் காலகட்டத்தில் இதுபோல, கடல் நீர்மட்டம் உயர்வது இயல்பானது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் கடல் சீற்றம்ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல் கடல் நீர் பல மீட்டர் தூரம் உள்ளே வந்திருப்பதால், இந்தப் பகுதியில் வசிப்பவர்கள், தொடர்ந்து அச்சத்தில் இருந்துவருகின்றனர்.

2

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 258 குளங்கள் சேதமடைந்துள்ளன!!

Kulam

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 258 குளங்கள் சேதமடைந்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வௌ்ளம் காரணமாக சுமார் 3500 ஏக்கர் வயல் நிலமும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் சுனில் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வௌ்ளத்தினால் மணலும் அதிகளவில் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் இழப்பீடுகள் தொடர்பில் ஆராயப்படும் எனவும் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் சுனில் வீரசிங்க குறிப்பிட்டார்.

110 பேரைக் கொன்று குவித்த போராளிகள்!!

Africa

ஆபிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவ வீரர்களுடன் இணைந்து ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினரும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் இருந்து 300 கி.மீ தொலைவில் ஹல்கான் நகரில் ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையின் தளத்தில் அல் ஷபாப் போராளிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் அல் ஷபாப் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டார். ஆனால் இது தவறான தகவல் என்று ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜோ கிபெட் கூறுகையில், “அல் ஷபாப் போராளிகள் தாக்குதல் நடத்தியபோது எதிர் தாக்குதல் நடத்தினோம். இதில் அந்த போராளிகள் 110 பேரை கொன்று குவித்து விட்டோம். ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினர் 60 பேரை கொன்று விட்டதாக அவர்கள் கூறியது தவறான தகவல்” என குறிப்பிட்டார்.

ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவும் கைப்பேசி பட்டன் அறிமுகம்!!

Button

ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் அவசர உதவி பட்டன் (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவலாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இந்த தருணத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதத்தில் எந்தவொரு அவசர சூழ்நிலையிலும், ஆபத்திலும் பெண்கள் செல்போன் மூலம் போலீசை எளிதாக தொடர்பு கொண்டு, அவர்களின் உதவியை நாடும் வசதியை ஏற்படுத்தி தர மத்திய அரசு விரும்பியது.

அந்த வகையில், புத்தாண்டு (ஜனவரி, 1ம் திகதி, 2017) முதல் விற்பனைக்கு வரும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில் தற்போது உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் இந்த அவசர உதவி பட்டன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

தற்போது உபயோகத்தில் உள்ள செல்போன்களுக்கு, சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் புதிய சாப்ட்வேர் துணையுடன் இந்த வசதியை உருவாக்கித்தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு காலத்துக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என கால வரையறை எதுவும் விதிக்கப்படவில்லை.

அவசர உதவி பட்டனை(9 அல்லது 5 என்ற எண்ணை) அழுத்தினால், அது தானாகவே நெருக்கடி கால தொலைபேசி எண்ணான 112-க்கு (போலீசுக்கு) அழைப்பாக சென்று விடும்.

உடனடியாக அவர்களின் உதவியை பெறவும் வழி ஏற்படும்.

9 அல்லது 5 என்ற எண்ணை செல்போனில் அழுத்தி, 112- என்ற நெருக்கடி கால தொலைபேசி எண்ணை அழைக்கிற இந்த வசதி புத்தாண்டு (ஜனவரி, 1-ந் திகதி, 2017) முதல் அமலுக்கு வருகிறது. அதன்பின்னர் தற்போது அமலில் இருந்து வருகிற நெருக்கடி கால தொலைபேசி எண்கள் 100 (போலீஸ்), 102 (ஆம்புலன்சு), 108 (தீயணைப்பு படை), 1515 (ரயில் குற்ற தடுப்பு) உள்ளிட்டவை படிப்படியாக வழக்கில் இருந்து ஒழிந்து போகும்.

இந்த வசதி பெண்களால் வரவேற்கப்படுவதாக அமையும்.

அடுத்த கட்டமாக 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் திகதி முதல் செயற்கைக்கோள் வழியாக இருப்பிடம் கண்டறியும் ‘ஜி.பி.எஸ்.’ என்னும் வசதியை கொண்ட செல்போனைத்தான் இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கட்டாயம் ஆக்கி இருப்பது நினைவுகூரத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா : வவுனியா நெற் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!!

Narasingar

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை (11.06.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் இலங்கையின் முன்னணி பாடகர்கள் கலந்து சிறப்பிக்கும் எம்.சிவகுமாரின் அக்னி இசைக்குழுவின் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை 4வது ஆண்டாக நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

காலை 9 மணிமுதல் இன் நேரடி ஒளிபரப்பினை உலகின் எப்பாகத்திலிருந்தும் வவுனியா நெற் இணையத்தளத்தில் கண்டுகளிக்க முடியும். இச் செய்தியை உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

சிங்கப்பூரில் அரசு ஊழியர்கள் அலுவலகக் கணினியிலிருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை!!

Singapore office workers

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து அரசு ஊழியர்கள் தமது அலுவலகக் கணினியில் இருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பணி தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் பகிரப்படும் ஆவணங்களின் தகவல்கள் கசியும் சாத்தியக்கூறைத் தடுப்பதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் தங்களின் பணி குறித்து எந்த தகவலும் தங்களின் சுய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக்கொள்வதற்கும் தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சிங்கப்பூர் மக்கள் தங்கள் அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கையை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கை சிங்கப்பூர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தேசம் என்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிக்கு மாறானது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது மாதிரி பணி குறித்த முக்கிய பணிகளில் தொடர்பில்லாத ஆசிரியர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என்பது மிகவும் தீவிரமான நடவடிக்கை எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

5 நிமிடங்கள் மணியடித்த சங்கக்கார!!

sangakara1

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி நேற்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும் போட்டியை முக்கியஸ்தர் ஒருவர் 5 நிமிடம் அங்குள்ள மணியை அடித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார்.

அந்தவகையில் இப் போட்டியை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் ஜாம்பவானுமாகிய குமார் சங்க குறித்த மணியை ஒலிக்கவிட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

LONDON, ENGLAND - JUNE 09:  Former Sri Lankan batsman Kumar Sangakkara rings the fiver minute bell ahead of day one of the 3rd Investec Test match between England and Sri Lanka at Lord's Cricket Ground on June 9, 2016 in London, United Kingdom.  (Photo by Gareth Copley/Getty Images)

வவுனியா மகாறம்பைக்குளத்தில் அடிப்படை வசதியற்று வாழும் குடும்பம் : கண்கலங்க வைக்கும் காட்சிகள்!!

 
வவுனியா மகாறம்பைக்குளத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற வீட்டில் மிகவும் வறுமையான நிலையில் ஒரு குடும்பம் ஒன்று வசித்து வருகின்றனர்.

7 பேரைக்கொண்ட இக் குடும்பம் அதிகமாக பெண் பிள்ளைகளை கொண்டதாக காணப்படுகின்றது. இக் குடும்பத்தினருக்கென ஒரு மலசலகூடம் கூட அற்ற நிலையில் வாழ்கின்றமை மிகவும் மன வருத்தத்திற்குறிய விடயமாகும்.

வீட்டிக்கு அருகே காணப்படும் காட்டுப்பகுதியிலேயே தங்களது இயற்கைத் தேவைகளை கழிப்பதுடன் மழை காலத்தில் குறித்த கொட்டகை வீட்டிவ் வசிக்க முடியாத நிலையில் இக் குடும்பத்தின் வறுமை காட்சியளிக்கின்றது.

இவ் விடயத்தினை கேள்வியுற்ற அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா அவர்களும் அவர்சார் ஊழியர்கள் தனராஜ், பாலமுரளி ஆகியோர் அவ் குடும்பத்தின் நிலமையினை நேரில் சென்று பார்வையிட்டதுடன் உடனடி உதவியாக உலர் உணவுப் பொதிகள், பாய், பெட்சீட், இரு தரப்பால் என்பவற்றை வழங்கினார்கள்.

மேலும் வீட்டிற்கு மேலே 33000 வோல்ட் லக்சபான மின்சாரம் பாயும் காணியில் அவர்கள் இருப்பதால் கள்ளிக்குளத்தில் அவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

1 2 3 4 5 6 7 8 11 12

‘பசுமை திருமலை’ அமைப்பின் நூல் வெளியீடு!!

Book

‘நிலக்கரி மின் ஆலையில் சம்பூர்’ எனும் ஆவணப்படுத்தப்பட்ட நூல் ஒன்றினை பசுமைத் திருமலை அமைப்பு வெளியிடுகின்றது. இந் நூலினை, வைத்தியர் அ.சதீஸ்குமார் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந் நூலானது 11.06.2016, சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஜெசியூட் ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது.

இவ் வெளியீட்டில் திருமலை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்களும், புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் என்.பிரதீபன் அவர்களும் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்வதுடன், மதியுரைஞர் திரு.பொ.சற்சிவானந்தம் (சிரேஸ்ட ஊடகவியலாளர்) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனவே ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பசுமை திருமலை அமைப்பு சார்பாக அவ் அமைப்பினுடைய தலைவர் திரு.கோபவன் அவர்கள் கேட்டுக்கொள்கின்றார்.

விரைவில் வோல்ஸ்வோகன் கார் நிறுவனம் குளியாபிட்டியவில் ஆரம்பம்!!

Car

வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி : முச்சக்கர வண்டிக்கான வரியை அதிகரித்துவிட்டு அமைச்சர்களுக்காக கார் கொள்வனவு செய்வதற்கு கோடிக் கணக்கில் செலவிடப்படுகின்றதே இது நியாயமா?

பதில் அவ்வாறு எண்ண வேண்டாம். யதார்த்ததை புரிந்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்களுக்கு கட்டாயமாக வாகனம் இருக்க வேண்டும். இல்லையேல் தமது அன்றாட வேலைகளை செய்வது கடினமாகும்.

அமைச்சர்களுடன் கூடவே இருந்தால் உங்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடியும். அத்துடன் முச்சக்கர வண்டிக்கான வரி அதிகரித்தமைக்கு மாற்று வழிமுறையாகதான் 3 இலட்சம் ரூபா பெறுமதியான கார்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

நாட்டில் வாழும் அனைவரும் வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலின் பிரகாரமே நாம் பயணித்து கொண்டிருக்கின்றோம்.

இதன்பிரகாரம் குளியாபிட்டியவில் வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்பின்னர் இலங்கையிலிருந்து கார் தயாரிப்பு செய்யப்படும். தற்போது வோட்ஸ் வோகன் கார் நிறுவன நிர்மாணத்திற்கான தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

பட்டப்பகலில் மாணவன் கடத்தல் : சிசிடிவி காட்சிகள் வெளியானது!!

CCTV

பீகாரில் பட்டப்பகலில் மாணவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 7ம் திகதி பட்டப்பகலில் மாணவன் ஒருவனை காரில் வந்த நபர்கள் கடத்தி செல்கின்றனர். சிசிடிவி கமெராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பீகாரில் நடைபெற்று வரும் நிதிஷ்குமார் ஆட்சியை சட்டங்கள் இல்லாத ஆட்சி என பாஜக கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொஸ்கமவில் சேதமடைந்த வீடுகளுக்கு மாதம் 50,000 கொடுப்பனவு!!

Gosgama

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு, மாதாந்தம் 50,000 ரூபாவை கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மூன்று மாதங்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து இராணுவத்தை முற்று முழுதாக அகற்ற வேண்டும் : வவுனியாவில் விக்னேஸ்வரன்!!

Vigneswaran

வவுனியா உள்ளூராட்சித் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு தெரிவித்தார்..

இன்றைய கூட்டத்தில் முதலமைச்சருடைய அமைச்சு தொடர்பான விடயங்களை ஆராய்ந்தோம். கடந்த வருடம் நாம் செய்யவில்லையென கூறுகின்றனர். எனினும் கடந்த வருடம் 95 சதவீதத்திற்கு மேல் நிதியை செலவளித்துள்ளோம்.

இந்த வருடத்திற்கு செய்ய வேண்டிய வேலைகள் உள்ளது. அதனடிப்படையில் இந்த வருடம் முன்கூட்டியே வேலைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கான மீளாய்வை தற்போது செய்துள்ளோம். இதில் எமக்கு திருப்திகரமாக அமையவில்லை. இருந்த போதும் அதற்குரிய நடவடிக்கையை செய்ய வேண்டுமென கலந்துரையாடியுள்ளோம்.

கடந்த வருடம் 95 சதவீதத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். இவ் வருடம் 100 வீதம் செய்ய வேண்டும் என்பதே எமது இலக்கு.

போதுமான நிதி மத்திய அமைச்சிடம் கேட்டும் கிடைப்பதில்லை. எமக்கு நிதியானது பல திட்டங்களின் கீழ் வருகின்றது. 10 மில்லியன் ரூபா நிதியானது இரண்டு கிழமைக்கு முன்னர் தான் கிடைத்திருக்கின்றது. நாம் வேலைகளை செய்து முடிப்போம்.

வட பகுதியில் இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கிறேன். இராணுவத்தை முற்று முழுதாக அகற்ற வேண்டும் என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றேன்.

இலங்கையின் மீன் தேவையை மூன்றில் ஒரு பங்கை மயிலிட்டியிலிருந்தே வழங்கி வந்தோம். தற்போது அதனை முழுமையாக மூடியுள்ளார்கள். அதனை திறக்குமாறு கூறிய போது பல்வேறு காரணங்களை கூறி இறுதியாக ஆயுதக்கிடங்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மயிலிட்டியிலிருந்து மாற்றுமாறு இராணுவ அதிகாரி மகேஷ் சேனநாயக்கவுக்கு நான் கூறியிருந்தேன். அதற்கு சில காலம் எடுக்கும்மென ஒருமாதத்திற்கு முன்னர் கூறியிருக்கின்றார்.

எனவே கொஸ்கம போல் நடந்துவிட்டால் எங்களது இடங்களெல்லாம் பாழாய் போய்விடும். கொஸ்கமவில் நடந்தது வருந்தத்தக்கது. எனினும் எங்களுக்கு ஒரு படிப்பினையும் தந்திருக்கின்றது.

ஆயுதக்கிடங்கை மயிலிட்டியில் வைத்துக்கொண்டு எமது இயற்கை துறைமுகத்தை செயற்படாமல் வைப்பது அநியாயமான ஒரு செயல். இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றோம்.

இதே சமயம் தாண்டிக்குளம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு புதிய இடத்தினை தெரிவு செய்துள்ளோம். அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம். அனேகமாக இந்த வாரத்துக்குள் தெரிய வருமெனத் தெரிவித்தார்.

இறுதியாக ஒரு கேள்வி வடக்கு முதலமைச்சராக நீதித்துறையைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க சிலர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைகிறீர்கள் எனக்கேட்டபோது,

இதுவரை எனக்கு எவரும் இது தொடர்பாக சொல்லவில்லை. என்னிடமே கேட்டு வருகின்றனர். கடவுளே பார்த்துக்கொள்வாரென கூறியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கான வாழ்வாதார உதவி!!

 
வவுனியா மாவட்டத்திற்கான ஒன்றுகூடல் நேற்று (08.06.2016) காலை 10.30 மணியளவில் வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் நடாத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு இத் திட்டம் நடைபெறுகின்றது.

இவ் விசேட ஒன்றுகூடலில் வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, G.T.லிங்கநாதன், ஜெயதிலக, சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தேன்மொழி மகேஸ்வரன், கத்தோலிக்க அருட்தந்தை, இந்துமதக் குருக்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

IMG_1143 IMG_1145 IMG_1147 IMG_1154 IMG_1165 IMG_1180 IMG_1187 IMG_1189 IMG_1196