ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் : சிம்ரன்!!

Simran

ரஜினியுடன் விரைவில் நடிக்கப் போவதாக சிம்ரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்..

தமிழில் கமல், விஜய், அஜீத், எஸ்.ஜே.சூர்யா என நிறைய ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை வாய்ப்பு கிட்ட வில்லை. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. விரைவில் ரஜினியுடன் நடிப்பேன்.

விஜய் எனக்கு பிடித்த நடிகர். நாங்கள் ஜோடியாக நடித்த படங்கள் ஹிட்டாகியுள்ளது. படங்களில் எங்கள் கெமஸ்ரி நன்றாக இருந்தது. விஜய்யுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என்றும் நினைவில் இருப்பவை.

அஜீத்துடன் நடித்ததும் இனிமையான அனுபவம். அவர் ஒரு ஜென்டில்மேன். வாலி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் அஜீத்துடன் நடித்தேன். கதை வித்தியாசமான இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். கமல்ஹாசன் அவரோடு நடிக்கும் நடிகைகளுக்கு உதவுவார். கமலுடன் நடித்த படங்கள் காமெடி கதையம்சம் உள்ளவை. எனக்கு காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் இன்னும் எனக்கு வரவேற்பு தருகிறார்கள்.

ஹோட்டல்களுக்கு சாப்பிட செல்லும் போதும் ஷாப்பிங் போகும் போதும் என்னை சூழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக போகிறது. என் கணவர் தீபக் நல்ல நண்பராக இருக்கிறார் என்று சிம்ரன் கூறினார்.

சுவிஸ்லாந்தில் டூயட் பாடும் சசிகுமார்!!

sasikumar

குட்டிப்புலி படத்திற்கு பிறகு சசிகுமார் தற்போது நடித்துவரும் படம் பிரம்மன். இப்படத்தை நடிகர் கமலஹாசனின் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்குகிறார். கே.மஞ்சு தயாரிக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். மேலும், சந்தானம், சூரி, கன்னட நடிகர் சுதீப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி அங்கு 17 நாட்கள் படமாக்கப்பட்டது. பின்னர் சென்னையில் சசிகுமாரும், சுதீப்பும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்களை படமாக்குவதற்காக இப்படக்குழு சுவிஸ்லாந்து பயணமாகவிருக்கிறதாம். இதற்காக சசிகுமார், லாவண்யா மற்றும் நடன இயக்குனர் ராஜு சுந்தரம் ஆகியோருடன் சேர்ந்து 20-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் விரைவில் சுவிஸ்லாந்து பயணப்படவிருக்கிறார்கள்.

கவர்ச்சி காட்சியில் டூப் நடிகையை பயன்படுத்தி மோசடி : இயக்குனர் மீது நஸ்ரியா புகார்!!

nazriya

நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து கவர்ச்சி காட்சிகளை எடுத்துள்ளதாக நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் அளித்துள்ளார்.

நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆர்யா ஜோடியாக நடித்த ராஜா ராணி படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து தனுஷ் ஜோடியாக நடித்த நய்யாண்டி படம் வரும் 11ம் திகதி வெளியாகிறது.

இப்படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
சற்குணம் மீதும் நய்யாண்டி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீதும் நடிகர் சங்கத்தில் நஸ்ரியா மோசடி புகார் அளித்துள்ளார்.

தனக்கு பதில் வேறு நடிகையை வைத்து சில காட்சிகளை படமாக்கி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து நஸ்ரியா கூறியதாவது..

நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நய்யாண்டி படத்தில் எனக்கு பதில் டூப் நடிகையை பயன்படுத்தி சில கவர்ச்சி காட்சிகளை எடுத்துள்ளனர். நான் கேரளாவில் இன்னொரு படப்பிடிப்பில் இருந்தபோது இந்த விஷயம் என் கவனத்துக்கு வந்தது.

படத்தின் டிரெய்லரை பார்த்த தோழிகள் இதனை தெரிவித்தனர். நான் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக இயக்குனர் சற்குணத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டேன். அப்போது இன்னொரு நடிகையை டூப்பாக பயன்படுத்தி அந்த காட்சிகளை எடுத்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.

என்னிடம் அனுமதி பெறாமல் இக்காட்சிகளை எடுத்துள்ளனர். இது ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகும். எனக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைத்து காட்சிகளை எடுத்து இருப்பது மோசடித்தனமாது. இதில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும். நடிகர் சங்கத்தை நாடி உள்ளேன். சட்டப்படியும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு நஸ்ரியா கூறினார்.

இது குறித்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியிடம் கேட்டபோது இப்பிரச்சினை பற்றி நஸ்ரியா போனில் என்னிடம் பேசினார். புகாரும் அளித்துள்ளார். இதை விசாரித்து நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

32 கிலோ தங்கம் கடத்த முயற்சித்த இலங்கையர்கள் நால்வர் கைது!!

Gold-bars-close-up

தங்க கட்டிகளை கடத்த முயற்சித்த இலங்கையர்கள் நால்வர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து புதுடில்லி நோக்கி பயணிக்க தயாராகவிருந்த இருவர் கைது செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து ஒருதொகை தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் டுபாயிலிருந்து சென்னை நோக்கி பயணித்த மேலும் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 32 கிலோ கிராம் தங்கத்தின் பெறுமதி இந்திய ரூபாய்ப் படி 9.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 202வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது!!

பண்டாரவன்னியனின்

பிரிட்டிஸ்காரருக்கு எதிராக போராடி தமிழரின் வீரத்தை உலகெங்கும் பறைசாற்றிய மாவீரன் பண்டாரவன்னியனின் 202ஆவது ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் 31ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த தினத்தை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்ளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா நகர சபையும் பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் இணைந்து வவுனியா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிலையில் எதிர்வரும் 31ம் திகதி காலை 8.30 தொடக்கம் 9.30 மணிவரை வவுனியா மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறும். காலை 9.30 தொடக்கம் நண்பகல் 1.30 மணிவரை கலை நிகழ்வுகளும் நினைவுப்பேருரைகளும் நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

பண்டாரவன்னியனின் நினைவு தினத்தன்று அவரது நினைவுக்கல் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கற்சிலைமடுவில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

pandaravanniyan

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் விபரம்!!

northern_map

வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டமைப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மாகாண அமைச்சுகள் வழங்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு..

 

 

பொ. ஐங்கரநேசன் – விவசாயம், கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை

பா. டெனிஸ்வரன் – உள்ளுராட்சி நிர்வாகம்

த. குருகுலராஜா – கல்வியமைச்சு

ப. சத்தியலிங்கம் – சுகாதாரம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை மீளப்பொருத்தி உலக சாதனை!!

colomo

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தொன்றின் போது உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஒரு குழந்தையின் தந்தை ஒருவரின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு வைத்தியர்களும் ஏனைய வைத்தியர்களும் கூட்டாக இணைந்து துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை மீளப் பொருத்தியுள்ளனர்.

12 மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பு ஒன்றை மீளவும் பொருத்தி வழமை நிலைமைக்கு கொண்டு வந்த முதல் சந்தர்ப்பமாக இது கருதப்பட வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளியை வைத்தியசாலையில் சேர்த்த நேரம், துண்டிக்கப்பட்ட உறுப்பை பாதுகாப்பாக எடுத்து வந்த விதம் ஆகியன இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவியது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த நபர் இயல்பு வாழக்கையை தொடர முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முற்று முழுதாக துண்டிக்கப்பட்டிருந்த ஆணுறுப்பு வெற்றிகரமாக மீளப் பொருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். சிறுநீர் கழித்தல் தாம்பத்ய உறவை தொடருதல் போன்ற சகல செயற்பாடுகளையும் தடையின்றி மேற்கொள்ளக் கூடிய வகையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரே ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குற்றவாளிகளின் புகைப்படங்களை நீக்க கூகுள் முடிவு!!

google-services

குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன.

இவற்றை தனது தேடுதளத்தில் இருந்து நீக்குவதால் குற்றவாளிகள் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பாக இருக்க முடியும். சட்ட அமலாக்க கழகங்களின் உதவியுடன் இது போன்ற மக் ஷாட் புகைப்படங்களை பெற்று அவற்றை பொது மக்கள் பார்க்கும் வகையில் வெளியிடுவதற்கு என பல்வேறு வலைதளங்கள் உள்ளன. இதனை பொது சேவையாகவே கருதி செய்து வருகின்றன.

எனினும் இதனால் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு நல்ல பணி அல்லது வீடுகளில் வசிப்பது போன்ற எண்ணங்கள் அமைவது குற்றவாளிகளுக்கு சாத்தியமில்லாமல் போகிறது. இது போன்ற தளங்களில் புகைப்படங்கள் வெளியாகாமல் இருப்பதற்கு 400 டொலர்கள் அல்லது அதற்கு மேல் ஒரு தொகை வசூலிக்கப்படுகின்றன. ஆனால், கூகுள் போன்ற தேடுதளத்தில் இது போன்ற புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

எனவே குற்றவாளிகளுக்கு பயன் சேரும் வகையில் இது போன்ற புகைப்படங்களை நீக்குவதற்கு கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது நிறுவனத்தின் குழுவானது தேடு தளத்தின் முடிவுகளை மேம்படுத்த தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பே பால், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர் அண்ட் மாஸ்டர்கார்டு போன்ற இணையதளம் வழியே வர்த்தகம் மேற்கொள்ள உதவும் நிறுவனங்களும் இத்தகைய மக் ஷாட் புகைப்படங்களை நீக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.

வழிதவறிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பொலிஸார் பணி நீக்கம்!!

abuse

வழிதவறி தவித்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற 2 பொலிஸாரை டெல்லி காவல்துறை பணி நீக்கம் செய்துள்ளது.

சம்பவத்தன்று டெல்லி விகாஸ்புரியில் உள்ள பொலிஸ் குடியிருப்பு பகுதி அருகே வழிதவறி வந்த இளம்பெண்ணை பார்த்த பொலிஸ்காரர் அமீத் டோமர் என்பவர் அவளிடம் நைசாக பேசி அதே குடியிருப்பில் வசிக்கும் குர்ஜிந்தர் சிங் என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கே அமீத் டோமரும், குர்ஜித் சிங்கும் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து விடுபட அவள் போட்ட கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்கள் மகளிர் அவசர உதவி மையத்துக்கு தகவல் அளித்தனர்.

அவசர உதவி மைய பொலிஸார் விரைந்து வந்த அந்த பெண்ணை மீட்டு அவளை கற்பழிக்க முயன்ற இருவரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து வேலியே பயிரை மேய்ந்த கதையாக இளம்பெண்ணை காவலர் குடியிருப்பில் கற்பழிக்க முயன்ற 2 பொலிஸாரையும் அதிரடியாக பணி நீக்கம் செய்து டெல்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஹார்மிசன் ஓய்வுபெற்றார்!!

harmision

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஹார்மிசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த முடிவை அவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
34 வயது நிரம்பிய ஹார்மிசன் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 226 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2004ம் ஆண்டு 12 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அன்றுமுதல் வேகப்பந்து வீச்சில் தனிமுத்திரை பதித்து வந்தார்.

9 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு விளையாடிய ஹார்மிசன் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் வகித்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த பிரான்ஸ் ஸ்பைடர்மேன்!!(வீடியோ)

spiderman

பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் அலன் ரூபர்ட், தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் அலன் ரூபர்ட்(51). இவருக்கு உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம் செய்வது என்றால் மிகவும் பிரியம். இதனாலேயே பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படுகிறார்.

இவர் பிரான்சின் ஈபிள் டவர், சிட்னியில் உள்ள ஓபரா கட்டிடம், அமெரிக்காவில் உயரமான கட்டிடமான எம்பயர் ஸ்டேட், கோலாலம்பூரில் உள்ள இரட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் பாரிசில் உள்ள 185 மீற்றர் உயரம் கொண்ட GDF சூயஸ் கோபுரத்தின் மீது கடந்த 3ம் திகதி ஏறி சாதனை படைத்துள்ளார்.

காது மற்றும் தலைச் சுற்றல் நோயால் அவதிப்பட்டு வரும் அலன் கட்டிடங்களில் ஏறும் போது பலமுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சிலந்தி போன்று ஏறுவதே ஆகும்.

முகமது நஷீத்தின் வெற்றி செல்லாது : மறு தேர்தலுக்கு மாலைதீவு நீதிமன்று அனுமதி!!

Maldives-flag

மாலைதீவில் 2008ல் முதல் ஜனநாயக தேர்தல் நடந்தது. இதில் மாலைதீவின் ஜனநாயக கட்சியின் முகமது நஷீத் வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்தார். ராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பதவி விலகினார்.

பின்னார் 2வது ஜனநாயக தேர்தல் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி நடந்தது. இதில் துணை ஜனாதிபதியாக இருந்த முகமது வகீத், மாஜி ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் நீதிமன்றில் முறையிட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்று மறு தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. ஏற்கனவே நடந்த தேர்தல் செல்லாது எனவும் அறிவித்தது.

நல்லெண்ண சமிக்ஞைக்கு பலனின்றேல் விளைவுகளுக்கு சிங்கள தலைவர்களே பொறுப்பு : சம்பந்தன்!!

sambanthan

போருக்கு பிந்தைய சமூகத்தில் தமிழ் மக்களுக்கு உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பல தேவைகள் இருக்கும் நிலையில் அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு அரசியல் தீர்வு அவசியம், இதை அடைய இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு நல்லுறவும் அவசியம்.

எனவே தான் ஒரு சுமுகமான சமிக்ஞையைத் தரும் வண்ணம், இலங்கையின் வட மாகாண முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இருந்த சர்ச்சை பற்றி குறிப்பிட்ட சம்பந்தன்,

முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஜனாதிபதியிடம் பதவி பிரமாணம் ஏற்பதில் பெரிய உள்ளர்த்தம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் பதவிப்பிரமாணத்தை எங்கு செய்து கொண்டாலும், இதே வாசகத்தைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றார்.

இலங்கையில் மத்திய அரசுடன் மோதி மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும் ஏனென்றால் மாகாண சபை தற்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அது வளரவேண்டும் என்று கூறிய சம்பந்தன் மாகாண சபையை நடத்துவதற்கு ஒரு அலுவலகக் கட்டடம் கூட இல்லாத யதார்த்தத்தை நினைத்துப் பார்க்கவேண்டும் என்றார்.

ஆனால் இந்த நல்லெண்ண சமிக்ஞையை சிங்கள அரசியல் தலைமை சரியாக ஏற்றுக்கொண்டு தமிழர்களுக்கு சரியான தீர்வைத் தராவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்றார் சம்பந்தன்.

மட்டக்களப்பில் பெண் மற்றும் சிறுமி ஆகியோர் சடலமாக மீட்பு!!

dead_body_leg

மட்டக்களப்பு, கந்தளாய் பொலிஸ் பிரிவில் வென்ராசன்புரம் குளத்தில் இருந்து பெண் மற்றும் சிறுமி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் நேற்று மாலை இச்சடலங்களை மீட்டுள்ளனர்.

49 வயதுடைய எம்.பி.ஸ்ரீயாலதா மற்றும் 7 வயதுடைய நிலேகா பிரியதர்ஷினி ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கென கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் மூலம் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் பாட்டி, பேத்தி உறவுடையவர்களாவர்.
கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் இந்திய- அவுஸ்திரேலிய தொடர்!!

IND VS AUS

சம்பியன்ஸ் லீக் தொடர் முடிந்த கையோடு, அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது இந்தியா. சமீபத்தில் இங்கிலாந்தில் சம்பியன்ஸ் கிண்ணம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே தொடரில் கிண்ணத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இரண்டு மாதம் முழு ஓய்வு கிடைத்தது.

தற்போது வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தவிர, சம்பியன்ஸ் லீக் தொடரும் முடிவடைந்துள்ளது. இனி இந்திய அணிக்கு அடுத்த உலக கிண்ணத் தொடர் வரை தொடர்ச்சியான போட்டிகள் காத்திருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பின் சர்வதேச களத்துக்கு திரும்பும் இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சர்வதேச 20-20, 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்திய அணியை சந்திக்க இங்கு வந்துள்ள ஜோர்ஜ் பெய்லி தலைமையிலான அவுஸ்திரேலிய வீரர்கள் அதேவேகத்தில் பயிற்சியை தொடங்கி விட்டனர். முதல் நாளில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்தனர். ராஜ்கோட்டில் நடக்கவுள்ள 20-20 போட்டிக்கு முன் இன்றும் நாளையும் மும்பையில் பயிற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உலக சம்பியன் மற்றும் சர்வதேச தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ள இந்தியா, நம்பர்-2 அவுஸ்திரேலிய அணிகள் மோதும் தொடர் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய தொடருக்கு முன்னாள் அணித்தலைவர் இயன் சப்பல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தோல்வியால் அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே கந்தல் துணியாக கிழிந்து கிடக்கிறது. வரும் நவம்பர் 21ம் திகதி சொந்த மண்ணில் மீண்டும் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில் நவம்பவர் 2ம் திகதி வரை இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
இதற்கான நேரமும் இதுவல்ல இதையெல்லாம் உணராமல் பணத்துக்காக இத்தொடருக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா பங்கேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

59 நாள் தொடர்ச்சியாக தூங்கும் இளம் பெண்ணின் பரிதாபம்!!(படங்கள்)

பிரிட்டனை சேர்ந்த இமார்ல்டு டூப்ரே(23) என்ற இளம் பெண் நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து தூங்கும் நோய்க்கு தள்ளப்பட்டார்.

கடந்தாண்டில் மட்டும் 59 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கியுள்ள இவர் ஒரு குழந்தை தூங்கும்போது எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொள்கிறார்.

தூக்க கலக்கத்திலேயே எழுந்து தண்ணீர் அருந்துவது, பால் குடிப்பது, சாப்பிடுவது போன்ற வேலைகளைச் செய்யும் இவரை, பரிசோதித்த மருத்துவர்கள் நரம்பில் சில பிரச்னைகள் இருப்பதால் தொடர்ச்சியாக தூங்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலகில் 1 000 பேருக்கு மட்டுமே இந்த விசித்திர நோய் காணப்படுகிறது என்றும் இந்த நோயை குணப்படுத்துவது மிக கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இமார்ல்டு டூப்ரே தனக்கு ஏற்பட்டுள்ள இந்த விசித்திர நோய் குணமடைந்து விடும் என உறுதியாக நம்புகிறார்.

33322222