கோழி வளர்ப்பின் மூலம் வறுமையை நீக்க திட்டமிட்டுள்ள பில்கேட்ஸ்!!

Bill Gates

உலகின் ஏழை நாடுகளிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில், ஒரு இலட்சம் கோழிகளை தானமாக வழங்கத் திட்டமிட்டுள்ளார் கோடீஸ்வரர் பில் கேட்ஸ்.

கோழி விற்பனை மூலம் ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கோழிகள் வளந்து பெருகும் போது அவை நாளடைவில் நல்ல முதலீடாக அமைந்து வருமானத்தைப் பெருக்கும் எனவும் பில் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேற்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீதமாக உயர்த்தி, கோழி வளர்ப்பு முறையை பெரிய அளவில் ஊக்கப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய ஆராய்ச்சிகளின்படி, 10 கோழிகள் கொண்ட ஒரு பண்ணை ஆண்டுக்கு 1000 டொலர்கள் வரை ஒரு குடும்பத்திற்கு வருவாயை ஈட்டித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலில் எமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

Love

ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. இரண்டுமே அவர்களது பலகீனமே.அதாவது, பொய் மற்றும் நண்பர்கள்.இந்த இரண்டில் தெளிவாக இருந்தால் இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து தவிர்த்துவிடலாம்.இவர்கள் கூசாமல் நிறைய பொய் சொல்வார்கள். முன்னர் சொன்ன பொய்யை, அப்படிச் சொல்லவே இல்லை என்று சாதிப்பார்கள்.

அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவார்கள். கண்டுபிடித்துக் கேட்டால், அதை ஒரு குற்றம் மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது பரிசு கொடுத்து அல்லது மீண்டும் சில பொய்கள் சொல்லி சமாளிப்பார்கள். பொய்கள் எண்ணிக்கை உயரும் பொழுது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் இவர்களது நோக்கத்தினை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இவர்கள் நட்பு என எவரையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள். நீங்கள் யாரையாவது அறிமுகப்படுத்த விரும்பினாலும் சாமர்த்தியமாக தட்டிக் கழிப்பார்கள்.மிக புத்திசாலித்தனமாக நடப்பவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை மட்டும் நாடகத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்துவார்கள். இவர்கள் ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் நேரங்களில் மட்டும் ஆஜராகி மிக அற்புதமாக அவற்றைத் தீர்த்துவிட்டு விலகுவார்கள்.

அம்மாவிடம் இந்த வாரம் கூட்டிப் போகிறேன் என மிக உறுதியாக வாக்குறுதி கொடுப்பார்கள். கடைசி சில நிமிடங்களில் உடல் நலம் சரியில்லை, ஊருக்குப் போய்விட்டார்கள் என நடிப்பார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் என்றால், அதனை அனுபவித்த பின்னர் விலகுவார்கள் அல்லது சுய ரூபத்தைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்கள். பணம் அல்லது சொத்து என்றால் அவசரக் கல்யாணம் வரை போவார்கள்.

பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கவில்லை என்று நாடகமாடுவார்கள். திருமணத்திற்குப் பின் தேவையானதை சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள். அல்லது காதல் வேண்டாம் காசு வேண்டும் என சுய ரூபத்தைக் காட்டுவார்கள்.இப்படிப்பட்ட நபர்களும் நம் சமூகத்தில் கலந்து இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு விலக வேண்டியது மிக முக்கியம்.

5 கோடிப் பேரை கவர்ந்த வீடியோ : கோழிமுட்டையை வைத்து சாதனை படத்த மாணவர்கள்!!

Chicken

கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த மாணவர்கள் பொய்மையாக்கியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளனர்.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுக்கும் ஒரு மாணவி அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின்மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைக்கும் வகையில் அதை இழுத்து பெரிதாக்குகிறார். அந்த உறையை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின்மீது போர்த்தி, முட்டையை உடைத்து டம்ளருக்குள் ஊற்றுகிறார்.

பின்னர், திறந்த நிலையில் அந்த டம்ளரை பொரிப்பானில் (இன்குபேட்டர்) வைத்த பின்னர் முட்டையின் மஞ்சள் கருவின் சிறு துணுக்காக தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக நடைபோடுகிறது.

இதன்மூலம், முட்டையின் ஓட்டுக்குள்தான் குஞ்சுகள் பொரிக்கும் என்னும் பழைய சித்தாந்தம் தவிடுப்பொடியாகி உள்ளது.

இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்த சில நாட்களில் ஐந்து கோடிக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அந்த வீடியோ, உங்கள் பார்வைக்கும்…

பாலியல் நடவடிக்கைகளுக்கு சிறார்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது : அதிர்ச்சி அறிக்கை!!

Abuse Report

நாட்டில் தற்போது சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமையானது சமூக பிரச்சினையாக மாறி, சிறுவர்களின் அழகான இளம் பராயம் மேற்படி ஆபந்தான நிலைமையில் அழிந்து போவதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திர தெரிவித்துள்ளார்.

சிறுவர் தொழிலாளர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த தினத்தை முன்னிட்டு மூன்று கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதனடிப்படையில், சிறுவர்களை பாலியல் தொழிலாளிகளாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் மாநாடு, ஆய்வு மற்றும் சிறுவர்களை பாலியல் தொழிலாளிகளாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்க தேசிய மாநாடு ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக நடாஷா பாலேந்திர தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆங்கிலம் கற்கச் சென்ற சிறுமியை கர்ப்பிணியாக்கிய மதகுரு!!

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

காலி திக்குவளை பிரதேசத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் மதகுரு ஒருவர் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வார நாட்களில்இந்த தேவாலயத்தில் ஆங்கில வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்கில வகுப்புக்கு வரும் சிறுமியை தேவாலயத்தில் இருக்கும் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று இந்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி வந்துள்ளார்.

சிறுமியின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த தாய், சிறுமியை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று சோதித்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். இதனையடுத்து தாய், திக்குவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

திக்குவளை மஹாவேல பிரதேசத்தில் உள்ள தேவாலயத்திற்கு பொலிஸார் சென்றிருந்த போது மதகுரு வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

விரைவில் வருகிறது Bluetooth 5!!

bluetooth-main

Bluetooth 4ல்இருந்த குறைகளை நிவர்த்தி செய்து பல்வேறு அம்சங்களுடன் அடுத்த வாரம் Bluetooth 5 வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது உள்ள Bluetooth 4வுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக வேகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு புது அம்சங்களுடன் வெளியாகவிருக்கும் Bluetooth 5ன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்றும், இடம் தொடர்பான தகவல்கள் (Location-Relevant Information), Navigation தொடர்பான தகவல்களை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 16ம் திகதி லண்டனில் நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதெல்லாம் ஒரு சங்கமே கிடையாது : கருணாஸ் கோபம்!!

Karunas

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி, சட்ட மன்ற தேர்தலில் வெற்றி என ம்கிளிசியில் உள்ளார் கருணாஸ். இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘தயாரிப்பாளர் சங்கம் பஜ்ஜி, போண்டா சாப்பிடும் ஒரு சபையாக தான் இருக்கின்றது, அவர்களுக்கு சிறு பட்ஜெட் படங்களை பற்றி கவலையே இல்லை.

திருட்டு விசிடி குறித்து எந்த ஒரு கவலையும் அந்த சங்கத்திற்கு இல்லை, பிறகு என்ன சங்கம் அது?’ என கோபமாக பேசியுள்ளார்.

உலகை மாற்றியவர்கள் பட்டியல் : டைம் இதழில் இடம்பிடித்த தமிழர்!!

umesh-sachdev

தங்களது புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என்ற தலைப்பில் டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர் ஒருவர் இடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், தொலைபேசியில் ஒரு முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், அதனை மறுமுனையில் கேட்பவரால் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை கண்டுபிடித்த சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ் இடம்பெற்றுள்ளார்.

அவசரகால உதவி மையங்களுக்கு தொடர்பு கொள்ளும் மக்கள், தங்களது உள்ளூர் மொழியில் பேசுவதை, தொலைபேசியின் மறுமுனையில் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை அறிமுகம் செய்த சாதனைக்காக டைம் இதழ் உமேஷ் சச்தேவை தெரிவு செய்துள்ளது.

இவரது இந்த மென்பொருள் உலக அளவில் 25 மொழிகளையும் 150 பேச்சு வழக்குகளையும் இனம்கண்டு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெருவாரியான இந்தியர்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேர் சச்தேவ் வடிவமைத்துள்ள இந்த மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.

30 வயதான உமேஷ் சச்தேவ் அவரது நண்பருடன் இணைந்து சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதே போல விவசாயிகள், தட்பவெப்ப நிலை குறித்து அறிந்து கொள்ளவும் மென்பொருளை உருவாக்கியுள்ளார் சச்தேவ்.

உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல : உலகின் மிகக் குட்டையான தம்பதியர்!!(படங்கள்)

shortest-couple

மூன்று அடிக்கும் குறைவான உயரமுடைய, உலகின் மிகக் குட்டையான ஜோடி, உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

உயரக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலைச் சேர்ந்த பாலோ கப்ரியல் த சில்வா பரோஸ் மற்றும் கட்யுசியா ஹொஷினோ முறையே 34.8 மற்றும் 35.2 அங்குல உயரமுடையவர்கள்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் நம்பிக்கையிலுள்ள இவர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் அறிமுகமாகி MSN மெசஞ்சர் மூலம் அளவளாவத் தொடங்கியுள்ளனர்.

30 வயதான பாலோ, முதற் சந்திப்பிலேயே தனக்கு கட்யுசியா மீது அளவற்ற காதல் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், 26 வயதான கட்யுசியாவிற்கு அதே ஈடுபாடு பாலோ மீது ஏற்பட்டிருக்கவில்லை.

ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் சரியான புரிதல் இருந்திருக்கவில்லையென பாலோ குறிப்பிட்டுள்ளார். இதனால், கட்யுசியா பாலோவை தனது மெசஞ்சர் தளத்தில் தடை செய்துள்ளார். 18 மாதங்கள் கழித்தே பாலோவை மீண்டும் இணைத்துள்ளார்.

அதன் பிறகே பாலோ அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார்.
நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக இவர்கள் சந்தித்துக்கொண்ட பிறகு சேர்ந்து வாழத் தீர்மானித்துள்ளனர்.

கட்யுசியா தனது உயரத்திற்கு தகுந்த மாதிரி அழகு நிலையம் ஒன்றை அமைத்து அதில் பணியாற்றி வருகிறார். பாலோ ஒரு சட்ட செயலாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

”அடிப்படையில் நாங்களும் ஒரு சாதாரணத் தம்பதியர் தான் என்றாலும் எங்களுடைய உயரம் தான் கொஞ்சம் குறைவு.
கட்யுசியா ஒரு சின்னப் போராளி, தோழமையும் நெருக்கமும் தான் எங்கள் உறவின் சிறப்பம்சம்,” என பாலோ தெரிவித்துள்ளார்.

”சாதாரணத் தம்பதியரைப் போலவே நாங்களும் போராடுகின்றோம். எங்களுடைய சிந்தனையும் உணர்வுகளும் ஒரே மாதிரியானவை. பாலோ புரிந்துணர்வுள்ள பொறுமையுள்ள மனிதர்,” என கட்யுசியா குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றாகவே பயணிக்கும் இவர்கள், பொது இடங்களில் ATM , கழிவறை பாவனைகளின் போது உயரக்குறைபாடு காரணமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வெளியில் செல்கையில் மக்களின் கேளிக்கைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் ஆளாவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

எல்லா வகையான இன்னல்களையும் கடந்த 8 ஆண்டுகளாக சேர்ந்தே கடந்துவிட்ட இவ்விருவரும் திருமண பந்தத்தில் இணையத் தீர்மானித்துள்ளனர்.

குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு கட்யுசியாவின் உயரம் பெரும் தடையாக இருக்கும் என்ற போதும் சொந்த வீடு, வழமையான எதிர்காலம் என்ற கனவுகளுடன் இருவரும் இணைகின்றனர்.

11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

காபனீர் ஓக்சைட் வாயுவை கல்லாக மாற்றினால் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தலாம் : ஆய்வாளர்கள் நம்பிக்கை!!

Carbon-dioxide

காபனீர் ஓக்சைட் வாயுவை கல்லாக மாற்றுவதன் மூலம் பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என தாம் நம்புவதாக ஐஸ்லாந்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கார்ப்ஃபிக்ஸ்’ என்ற இது குறித்த பரிசோதனையை நடத்திவரும் விஞ்ஞானிகள், காபனீர் ஓக்சைட் (கரியமில வாயு) வாயுவை தண்ணீரில் கரைத்து, அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள்.

அப்போது அந்த வாயு, ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் இரசாயன மாற்றமடைந்து திடமான ஒரு பொருளாக மாறியது.

இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பதாலும், இது போன்று இரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும் இது புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த உதவும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தானத்தின் தந்தை காலமானார்!!

Santhanam

ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சிரிக்க வைத்தவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாகவும் வெற்றி கொடிநாட்டி விட்டார்.

இந்நிலையில் இவரின் தந்தை நீலமேகம்(69) இன்று உடல்நிலை சரியில்லாமல் காலமானார். சந்தானம் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழ் சினிமாத்துறையினர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு : மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மலசலகூடம்!!

 
வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் இலங்கையில் முதல் தடவையாக விஷேட தேவைக்குட்பட்டோருக்கான மலசலகூடத்தினை புதிய நவீன முறையில் கண்டுபிடித்துள்ளார்.

இக் கண்டுபிடிப்பு இன்று (10.06.2016) காலை வவுனியா அருந்ததி மண்டபத்தில் ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் இப்புதிய மலசலகூடம் தொடர்பாக இங்கு கருத்துத் தெரிவித்த கண்டுபிடிப்பாளர் திரு.என். என்.ஜக்சன்,

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வருவதாகவும் சின்ன வயதிலிருந்து கண்டுபிடிக்கும் ஆற்றல் தன்னுடன் ஊறியுள்ளதாகவும் எதையாவது சாதிக்கவேண்டும், தன்னால் பொதுமக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பல கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்துள்ளபோதிலும் பெரியளவில் வரவேற்றபினை பெற்றுத்தரவில்லை என்று தெரிவித்த என்.என்.ஜக்சன்,

தனது 30வது வயதில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான மலசலகூடத்தினை அமைப்பதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை சரியான முறையில் பயன்படுத்தியதால் தனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருமணமாகி ஒரு ஆண் பிள்ளைக்குத் தந்தையான ஜக்சன். அலுவலகத்திற்கு, பொது இடங்களுக்கு, பயணம் மேற்கொள்ளும்போதும், மிகவும் வசதியாகவும் தண்ணீர் வசதி இன்றியும் வீடு போன்ற இடங்களில் இப்புதிய மலசலகூடத்தினை எடுத்துச் செல்ல முடியும்,

அத்துடன் துர்நாற்றம் இல்லை இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய வசதி, அத்துடன் சிறுநீரை சேகரித்து வைக்கும் வசதி, படுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு இது அதிகளவில் பயனைத்தரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆகக்குறைந்தது ஜந்து வருட உத்தரவாதம். இதன் உற்பத்திப் பெறுமதி பத்தாயிரம் ரூபா என்றும் தெரிவித்தார். அத்துடன் புதிய கண்டுபிடிப்பாளர்களும் தமது கண்டுபிடிப்புக்களை வெளி உலகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் அதை ஊடகங்கள் ஊடாக உலகத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.

இன்னும் சில கண்டுபிடிப்புக்களை தான் மேற்கொண்டுள்ளதாகவும் வெகுவிரைவில் அதனையும் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜக்சன் சம்பூர் அனல் மின்நிலையத்திற்கு தம்மிடம் ஒரு தீர்வு இருப்பதாகவும் அதிகாரிகள் அது தொடர்பாக தன்முடன் தொடர்பு கொண்டால் அவ் உதவியை பெற்றுக் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

DSC_0003 DSC_0008 DSC_0009 DSC04440 DSC04443

மாணவர்களின் காலில் கற்பூரத்தை ஏற்றி தண்டித்த ஆசிரியர்!!

Student punishment

சரியாக படிக்காததால் ஆசிரியர் மாணவர்களுக்கு காலில் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் வைஜெயந்திமாலா.

நான்காம் வகுப்பு படிக்கும் 13 மாணவ- மாணவிகள் சரியாக பள்ளிக்கு வரவில்லை, ஒழுங்காக படிக்கவில்லை என கூறி நேற்று அவர்களது காலில் கற்பூரத்தை வைத்து சூடுபோட்டுள்ளார்.

வலி தாங்காமல் மாணவர்கள் துடிதுடித்து கதறவே, வீட்டில் சொன்னால் நாளைக்கும் சூடு வைப்பேன் என மிரட்டியுள்ளார். இதனால் மாணவர்களும் தங்களது பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை.

இன்று காலை எழுந்தபோது கால்கள் புண்ணாகி இருந்தது, உடனே பெற்றோர்கள் வற்புறுத்தி கேட்டதும், மாணவர்கள் உண்மையை கூறியுள்ளனர்.

பதறி துடித்த பெற்றோர்கள் பள்ளிக்கூடம் சென்ற போது கூலாக பதிலளித்துள்ளார் வைஜெயந்திமாலா.

இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வைஜெயந்திமாலா கைது செய்யப்பட்டார், இந்த விவகாரம் தொடர்பாக வைஜெயந்திமாலாவை பணிநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் தலைமை ஆசிரியர் வரதராஜன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உண்டியல் உடைத்து திருடியவரை உறங்க வைத்த நரசிம்மர் : சுவாரஷ்ய சம்பவம்!!

Arrested

புத்தூர், வீரவாணி நரசிம்மர் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிய திருடன், அயர்ந்து உறங்கியதால் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளொன்றில் சென்று உண்டியலை உடைத்துத் திருடிய மேற்படி நபர், அந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஆள் நடமாற்றம் அற்ற இடத்தில், தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு ஆழ்ந்து நித்திரை கொண்டுள்ளார்.

வீதிரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளை அவதானித்து தேடுதல் நடத்தினர். இதன்போது சற்று ஒதுக்குப் புறமான இடத்தில் பணம் நிரம்பிய உரைப்பையுடன் தூங்கிக் கொண்டிருந்தவரை அவதானித்து அவரை விசாரணை செய்தனர்.

இதன் போது கோயில் உண்டியல் உடைத்த விடயம் தெரியவந்தது.
பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரிடமிருந்து 8 ஆயிரத்து 550 ரூபாய் உண்டியல் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஜோர்தானில் காணாமல் போயுள்ள மகளை மீட்டுத் தாருங்கள் : தாயார் கண்ணீருடன் வேண்டுகோள்!!

Jordan

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தானுக்குச் சென்ற எனது மகள் திரும்பி வரவுமில்லை. இப்போது எதுவித தொடர்புகளும் இல்லை. ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் தனது மகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள்” என யுவதியின் தாய் அக்கறையுள்ள எல்லாத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த நேசதுரை சர்மினி (வயது 26) என்ற யுவதி கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில் வாய்ப்புப் பெற்று ஜோர்தான் சென்றுள்ளார்.

ஆனால், இன்றுவரை ஆறு வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் ஒரு முறையேனும் நாடு திரும்பவே இல்லை என்று யுவதியின் தாயான புவனேஸ்வரி நேசதுரை (வயது 48) தெரிவித்தார்.

கடந்த ஆறு வருடங்களிலும் மாதாந்தம் சுமார் 18 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையிலேயே சம்பளப் பணம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் சீராக இல்லை. ஐந்து ஆறு மாதங்களுக்கொரு முறை வீட்டு எஜமானர் விரும்பித் தரும் சம்பளப் பணத்தை அனுப்புவார். ஆனால் பல மாதச் சம்பளத்தை அவர்கள் தனது மகளுக்குக் கொடுக்கவே இல்லை என்றும் தாய் கூறினார்.

அதேவேளை கடந்த 2015 நவம்பர் மாதம் 29 ஆம் திகதியுடன் தனது மகளிடமிருந்து தொடர்பு கிடைப்பது நின்று விட்டது என்றும் தாய் தெரிவிக்கின்றார்.தனது மகள் சொந்தமாக தொலைபேசி பாவிப்பதை வீட்டு எஜமானர் அனுமதிக்கவில்லை. அவர்களது வீட்டுத் தொலைபேசியூடாகத்தான் (0096253500553) பேச அனுமதிப்பார்கள்.

ஒரு முறை எனது மகள் அவர்களது வீட்டுத் தொலைபேசி மூலம் எங்களைத் தொடர்பு கொண்டுவிட்டாள் என்பதற்காக எனது மகளுக்கு அவர்கள் தண்டனை கொடுத்திருந்தார்கள். மகளை இரண்டு தினங்கள் அவர்கள் வீட்டில் பூட்டி வைத்திருந்ததாக மகள் எங்களிடம் சொல்லி அழுதாள்.

இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 4 தடவைகள் சென்று முறைப்பாடு செய்தபோதும் இதுவரை அவர்கள் தமது மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறுகின்றார்.

தனது மகளின் நிலைமை தொடர்பாகக் கண்டறியுமாறும் தனது மகளை மீட்டுத் தருமாறும் கோரி தான் பல்வேறு அக்கறையுள்ள தரப்பினருக்கும் அறிவித்துள்ள போதிலும் சாதகமான எந்த செயற்பாடுகளும் இடம்பெற்றதைக் காணவில்லை என்றும் அவர் குறைப்பட்டார்.

இதேவேளை ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப் பட்டிருக்கும் தனது மகளை மீட்டுத் தருமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானாவிடமும் சென்று தான் கண்ணீர் மல்கி வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் புவனேஸ்வரி தெரிவித்தார்.

தாய் புவனேஸ்வரியின் தொலைபேசி இல 0775069583

12

‘அம்மா நான் சாகப்போகின்றேன்’ தாயிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த மாணவன்!!

2

மாத்தறை, புனித தோமஸ் கல்லூரியில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவனொருவர் மாத்தறை நுபே பிரதேசத்திற்கருகில் பயணித்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலிஞ்ஞவில, கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசித்து வந்த வீ.ஜீ.ஹரின் என்னும் பாடசாலை மாணவனே குறித்த தற்கொலைச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது,

குறித்த மாணவன் நேற்று காலை பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அத்துடன் தனது தாய்க்கு அழைப்பொன்றை மேற்கொண்டு தான் தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியினால் பதற்றமடைந்த தாய் மகனைத் தேடிச்சென்ற போது ஹரின் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தற்கொலை சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

1