கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்ட குவைட்டில் இருந்து வந்த விமானம் திடீரென மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிக பணிமூட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்ட குவைட்டில் இருந்து வந்த விமானம் திடீரென மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிக பணிமூட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.மாணவர்களால் இன்று இந்த முறைப்பாடு வழங்கப்படவுள்ளது.
மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் மாணவர்களைத் தாக்கியமை குறித்து அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த முற்பட்ட வேளை சிறிய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என, இது குறித்த பொலிஸ் ஊடக சந்திப்பில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (02.11.2015) காலை 8.45 மணியளவில் A9 வீதி கனகராயன்குளத்திற்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கயஸ் ரக வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இவ் வாகனம் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இவ் விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குஉள்ளானது. இவ் விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-படங்கள் சிந்து & தீபன்-
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நேற்றைய போட்டி மழை காரணமாக சற்று பிந்தியே ஆரம்பமானது. அதன்படி மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பிளட்சர் மற்றும் சார்லஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த இருவரையும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லக்மால் வீழ்த்தினார்.
இந்த இருவரும் முறையே 3 மற்றும் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினர். அதன்பிறகு ஜோடிசேர்ந்த பிராவோ மற்றும் சாமுவெல்சையும் பிரித்தார் லக்மால். இதில் சாமுவெல்ஸ் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்க மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நீண்ட நேரத்திற்கு இடை நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி 8.30 மணிக்கு ஆரம்பமானது.
அதன் பின்னர் அதிரடியாக ஆடிய பிராவோ 38 ஓட்டங்களுடனும் ரசல் 41 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ஹோல்டர் 36 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 26 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் அசத்திய சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும் அசந்த மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இலங்கை அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 26 ஓவர்களுக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் மற்றும் குசல் ஆகியோரின் அதிரடியில் இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான ஓட்டச் சேர்க்கையைப் பெற்றுக்கொண்டது.
அதன்பிறகு குசல் பெரேரா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டில்ஷான் அதிரடியாக ஆடி 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 59 ஓட்டங்களை விளாசினார்.
அதன் பின்னர் திரிமன்ன (17), மெத்தியூஸ் (13), குணதிலக்க (12), சிறிவர்தன (7), ஜசூரிய (0) என சொற்ப ஓட்டங்களுடன் அடுத்தடுத்து இலங்கை அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இறுதியில் அஜந்த மெண்டிஸ் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் கிடைத்த ப்ரீ ஹிட்டைப் பயன்படுத்திக்கொண்ட அஜந்த மெண்டிஸ் சிக்ஸர் ஒன்றை விளாசி இலங்கைக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
அஜந்த மெண்டிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
வவுனியா மாவட்டத்தில் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 27 மாணவ மாணவிகள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேற்படி பாடசாலையில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும் .
மேற்படி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்களுடன் பெற்றோரும் வாழ்த்துகின்றனர் . அத்துடன் இம்மாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்திய ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது .
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் வாரங்களில் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 27 மாணவ மாணவிகளுக்கு வவுனியா நெற் இணையமும் தனது வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறது .
யாழ்.மாவட்டத்தில் நீரால் பரவும் நோய்களின் தாக்கம் அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் இந் நோய்கள் தொடர்பாக பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை செய்துள்ளார்.
குறிப்பாக இவ்வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த 24 ஆம் திகதிவரைக்கும் 512 பேர் வயிற்று உளைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரினால் பரவும் கிருமியின் தாக்கம் காரணமாக அதே காலப்பகுதிக்குள் மட்டும் 3 ஆயிரத்து 629 பேர் நோய்வாய்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..
தற்போது பருவமழைக்காலம் ஆரம்பித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பது வழமையாகும். மழை வெள்ள நீர் எமது நிலத்தடி நீருடன் கலந்து கிருமி தொற்றுக்கு உள்ளாகின்றதே இதற்கு முக்கியமான காரணம்.
இவ்வாறு நீரினால் பரவும் வாந்தி போதி, வயிற்றுளைவு போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு கொதித்தாறிய நீரினை அனைவரும் பருகுவது நன்மைபகிர்க்கும்.
வயிற்று உளைவு, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதனை புள்ளிவிபரங்களின் ஊடாக அறிய முடிகின்றது.
குறிப்பாக வயிற்று உளைவு காரணமாக இவ்வருடன் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிவரை 786 பேர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் இவர்களில் 512 பேருக்கு வயிற்றுப் போக்கு நோய் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சாதாரண பாதிப்பினை ஏற்படுத்தி வந்த வயிற்றுப் போக்கு நோயானது கடந்த செம்டெம்பர் மாதத்தில் இருந்து சடுதியாக அதிகம் பரவுகின்ற நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதே காலப்பகுதியில் வயிற்றுப் போக்கு மற்றும் கிருமி தொற்று நோய்கள் காரணமாக 3 ஆயிரத்து 629 பேர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
நீரினால் பரவுகின்ற இந் நோய் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பொது மக்கள் அனைவரும் கொதித்தாறிய நீரினை பருகுமாறும் பணிப்பாளர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 17 குழந்தைகள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில் எகிப்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கோரச் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள எகிப்து அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவற்றில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடலை ஆய்வு செய்த பின்னர், அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியதா என்ற விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வடக்கில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால், இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, வகுப்பினையும் பகிஷ்கரித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் நடத்தியதாகவும் சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் பெய்த கடும்மழை காரணமாக 16 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்மழையின் விளைவாக வீதி போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்களை மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹஸ்டன் நகரில் இருந்து பல பகுதிகளுக்கு செல்லும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த 24 மணிநேரத்தில் ஹஸ்டன் அருகேயுள்ள லா போர்ட்டே மற்றும் ஃபிரண்ட்ஸ்வுட் பகுதிகளை சூறாவளி தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடமகாண விளையாட்டுப்போட்டி நேற்று (31.10.2015) வவுனியா கல்வியற்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
இவ் விளையாட்டுப் போட்டியை வடமாகாண சபையின் முதலமைச்சர் திரு C.V.விக்கினேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, M.P.நடராஜ், G.T.லிங்கநாதன், தர்மபாலசெனவிரட்ண, வவுனியா கல்வியற்கல்லூரி பீடாதிபதி, வடமகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
31.10.2015 அன்று காலை 10.30 மணியளவில் றோயல் மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவிக்கையில்..
ராணுவம் தமிழ் முஸ்லீம் மக்களின் வடகிழக்கு மாகாண காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்தது போல் விடுதலைப்புலிகள் முஸ்லீம் மக்களின் காணிகளை அபகரிக்க அனுமதிக்கவில்லை. நான் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்தவன். வன்னிநிலப்பரப்பில் நடந்தேறிய அரசியல் போராட்ட சூழல் தெரிந்தவன்.
துரதிஸ்டவசமான ஒரு சூழலில் தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட அனுமதிக்கமுடியாத நிலையிலேயே முஸ்லீம் மக்கள் வடபகுதியில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்படவேண்டி இருந்தது. இருப்பினும் முஸ்லீம் மக்களின் காணிகளை தமிழ் மக்கள் அபகரிக்க என்றும் விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை.
விடுதலைப்புலிகள் தூரநோக்கில் செயல்பட்டதால் தான் இன்று எவ்வித தங்கு தடையும் இன்றி முஸ்லீம் மக்கள் தமது காணிகளில் முல்லைமாவட்டத்தில் குடியேறக்கூடியதாக இருக்கிறது.
விடுதலைப்புலிகளின் ஆரம்பகால போராட்டத்தில் முஸ்லீம் இளைஞர்களும் முக்கிய பங்கு வகித்தனர். என்றும் முஸ்லீம் மக்களை இனசுத்திகரிப்பு செய்யும் நோக்கில் விடுதலைப்புலிகள் நோக்கவில்லை அதனால்தால் 20 ஆண்டு காலத்தின் பின்னும் முஸ்லீம் மக்கள் தமிழர்களுடன் சேர்ந்து மீழ்குடியேறி வருகிறார்கள்.
வடகிழக்கு மாகாணம் முஸ்லீம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் மொழி பேசும் மாகாணம். இங்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக எந்த ஒரு தமிழனும் யாதார்த்தத்திற்கு மாறாக செயல்படமாட்டான். ஒரு சில தமிழ் முஸ்லீம் இனவாதிகளால் தமிழ் மொழி பேசும் எமது மக்களின் ஒற்றுமை குலைக்கப்பட இடமழிக்கமுடியாது.
அதேசமயம் எமது வடகிழக்கு பிரதேச மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தபின் சிங்கள ராணுவம் எமது காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கியது பாரிய தவறு. மேற்படி தமிழ்மொழி பேசும் தமிழ் முஸ்லீம் மக்கள் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சிங்கள அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் துணைபோயினர் என்பது பட்டவர்த்தனம் என்று தெரிவித்தார்.
ஆபாச இணையத் தளங்களை தடை செய்ய கோரி, பொது மக்களிடம் கையெழுத்து பெறும் வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என, ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்கச் சபை தெரிவித்துள்ளது.
சிறுவருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றங்கள் பல பெருகிவர இதுவும் காரணம் என, அந்த சபையின் செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹீல் டோல் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த மனுவில் மக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் நவம்பர் 4ம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை இடம்பெறவுள்ளன.
கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதனையடுத்து குறித்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ். அருள்குமரன், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாகவும், கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரசாங்க வைத்தியசாலைகளில் நடந்தபோதிலும் சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக செயற்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்துக்கு பயணமானார்.
தாய்லாந்து பிரதமரின் விசேட அழைப்பையேற்று ஜனாதிபதி தாய்லாந்துக்கு பயணமானமை குறிப்பிடத்தக்கது.
எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வான்வெளியில் எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரியவந்துள்ளது.
ரஷிய அரசால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட அந்த தனியார் விமானத்தில் 217 பயணிகளும் விமானிகள் உள்பட 7 பணியாளர்கள் இருந்ததாகவும் ரஷியாவின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தை எகிப்து பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயில் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சினாய் பகுதியில் ரஷிய பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது.
தொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் உண்கிறார்கள். இவர்களால் உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது.
இத்தகையோர்களுக்காகவே அக்குபஞ்சர் ஒரு சிறந்த நிவாரணத்தை தர முனவருகிறது. அது என்னவென்று தற்போது பார்ப்போம்.
முதலில் தொப்பை ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தொப்பை விழுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, உடலில் தானாக கொழுப்பு சேருதல். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் சரியாக ஜீரணிக்காததால் ஏற்படுவது என்று பொருள். இரண்டாவது காரணம், நம் உடலுக்குள் அதிகமாக திரவங்கள் சேர்வது. இவ்விரண்டு காரணங்களைத் தவிர ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலின் எடை அதிகரித்து தொப்பை ஏற்படும்.
தொப்பை ஏற்பட்டால் அன்றாட பணிகளைக கூட செய்வதற்கு சிரமமாகிவிடும். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால் இதயக் கோளாறு மற்றும் பித்தப்பை கோளாறுகளையும் உருவாக்கிவிடும். ஆகவே தொப்பையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்குரிய கவனத்தை செலுத்தி அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
இதற்காக அக்குபஞ்சர் தவிர வேறு எந்த மருத்துவ சிகிச்சை முறையை அணுகினாலும் தொப்பையை குறைக்க இரண்டு விடயங்களை அவசியமாக வலியுறுத்துவார்கள். ஒன்று உணவுக் கட்டுப்பாடு மற்றொன்று உடற்பயிற்சி.
இவ்விரண்டையும் கேட்கும் போது எளிதாகவும், செயல்படுத்தும்போது கடினமாகவும் இருக்கும் என்பது நடைமுறை நிஜம்.
உணவுக் கட்டுப்பாட்டை ஓரளவிற்கு கடைபிடித்துவிட இயலும். ஆனால் தொப்பையை வைத்துக்கொண்டு குனிந்து, நிமிர்ந்து, ஓடி, குதித்து உடற்பயிற்சியை செய்யவேண்டும் என்றால்.. மிகவும் கடினமாகதாக தோன்றும்.
உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் ஆயுள் முழுமைக்கும் கடைபிடிக்கவேண்டும். அப்போது தான் அவை கட்டுக்குள் இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக இடைநிறுத்தம் செய்தால் மீண்டும் தொப்பை வந்துவிட வாய்ப்பு உண்டு. அதனால் அதற்கு முன் செய்த உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி வீணாகிவிடவும் வாய்ப்பு உண்டு.
ஆனால் தொப்பைக்கு அக்குபஞ்சர் சிறந்த நிவாரணத்தையும் உடனடி பலனையும் தருகிறது. கல்லீரலோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகள் காதில் உள்ளன. இந்த அக்குப்புள்ளிகளைத் துõண்டுவதன் மூலம் கல்லீரலின் பணியை மேம்படுத்தி, உடலில் தங்கிவிட்ட அதிகப்படியான கொழுப்பை எரிக்க செய்ய இயலும். மேலும் ஜீரண மண்டல உறுப்புகளோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகளும் காதிலேயே இருக்கின்றன.
அதனையும் தேவையான அளவிற்கு துõண்டிக்கொண்டிருந்தால், வயிற்றிற்குள் தேவைõன அளவு சாப்பாடு சென்றவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். இதன் மூலம் உணவுக்கட்டுப்பாட்டை நம்மை அறியாமலேயே கடைபிடிக்க முடியும்.
அதனைத் தொடர்ந்து அக்குபஞ்சர் மருத்துவத்தில் இதற்கென விசேடமாக தயாரிக்கப்படும் மூலிகை கலந்த எண்ணெய்யை வயிற்றின் மேற்பகுதியில் தடவிக்கொள்ளவேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள தோலின் தன்மையில் மாற்றம் ஏற்படும்.
ஏனெனில் ’ஓஸ்மாஸிஸ்‘ எனப்படும் அறிவியல் கோட்பாட்டின் படி உடலுக்குள் இருக்கும் அதிகப்படியான திரவம், தோலில் உள்ள சிறு துவாரங்கள் வழியாக வெளியேறிவிடும், இப்படி மூன்று வழிகளில் நீங்கள் முயற்சி எடுத்தால் தொப்பையை எளிதாக குறைக்க முடியும்.
பதினைந்து நாள்கள் வரை தினமும் இரண்டு முறையாக, முப்பது நிமிடங்கள் வரை இத்தகைய சிகிச்சைகளை செய்து கொண்டால் உடனடி பலன் கிடைக்கும். அதாவது தொப்பைக்கு எளிய முறையில் குட்பை சொல்லலாம்.