200 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொரூரனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

Briton-Richard-Huckle

மலேசியாவில் 200க்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள கெண்ட் நகரை சேர்ந்தவர் ரிச்சார்ட் ஹக்கல்(30). கிறித்துவ மதபோதகராகவும் ஒரு ஆங்கில ஆசிரியராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அவர் மலேசியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தலைநகரான கோலாலம்பூரில் தங்கிய ரிச்சார்ட் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ஆனால், ஆசிரியர் என்ற போர்வையில் இவர் நடத்தி கொடூரமான செயல்கள் பிரித்தானிய பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகளாக ரிச்சார்ட் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக 6 மாதக் குழந்தை முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள், சிறுமிகள் என 200க்கும் அதிகமான குழந்தைகளிடம் இவர் அத்துமீறி நடந்து வந்துள்ளார்.

மலேசியா நாடு மட்டுமின்றி, ரிச்சார்ட் இந்தியாவில் உள்ள குழந்தைகள் மறுவாழ்வு மையத்திற்கும் விஜயம் செய்துள்ளார். ஆனால், இங்குள்ள குழந்தைகளிடம் அவர் அத்துமீறி நடந்துக்கொண்டாரா என்பது தெரியவரவில்லை.

9 ஆண்டுகளாக எல்லை மீறி நடந்துவந்த ரிச்சார்ட்டின் காம லீலைகள் கடந்த 2014ம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, குழந்தைகளிடம் ரிச்சார்ட் நடத்திய அத்துமீறல்களை அவரோ வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னரே பொலிசாருக்கு ரிச்சார்ட்டின் உண்மை முகம் தெரியவந்தது. கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரித்தானியா திரும்பிய ரிச்சார்ட்டை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதம் நேற்று பிரித்தானிய நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, பிரித்தானிய நீதிமன்ற வரலாற்றில் இவ்வளவு மோசமான பாலியல் குற்றங்களை செய்த ஒரு குற்றவாளியை இப்போது தான் சந்திக்கிறேன்.

இந்த சமுதாயத்திற்கு ரிச்சார்ட் ஒரு பயங்கரமான அச்சுறுத்தல். எனவே, குற்றவாளிக்கு பரோலில் வெளியே வர முடியாதளவிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டுள்ளார்.

யாழில் மூன்று சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!!

police

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு சமூகவிரோத மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் இவர்களில் தேவா என்பவர் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாள்வெட்டு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வேறு பொலிஸ் நிலையங்களிலும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த நபர் உட்பட மூன்று பேரையும் கைது செய்வதற்காக விசாரணைகளையும் ஏற்பாடுகளையும் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் அனைத்தும் மேற்கொண்டிருந்தன.

இவற்றில் இவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சுன்னாகம், யாழ்ப்பாணம், கோப்பாய் ஆகிய பொலிஸ் நிலையங்களால் இவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் வைத்து வாள்வெட்டு நடவடிக்கை ஒன்றுக்கு தயாராக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இருந்த போதிலும் அவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோது தேவா என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைது செய்ய முயற்சித்திருந்த போதும் குறித்த பிரதான சந்தேக நபரான தேவா என்பவர் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார்.

எனினும் இவ் விடயம் தொடர்பாக தாம் துப்பாக்கி பிரயோகம் எதனையும் மேற்கொள்ளவில்லையென சுன்னாகம் பொலிஸார் மறுத்திருந்தனர்.

பின்னர் ஒர் ரொக்டீம் எனும் வாள்வெட்டு கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அத்துடன் அதன் பின்னர் தேவா மற்றும் ஏனைய இருவர்களுடனும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மேற்குறித்த மூன்று பிரதான சந்தேகநபர்கள் தொடர்பாக தகவலறிந்தவர்கள் உடனடியாக சுன்னாகம் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோரியுள்ளார்.

இதன்படி தகவலறிந்தவர்கள் 0718591331 அல்லது 0724 339000 அல்லது 077899 8901 அல்லது 0772336249 ஆகிய பொலிஸ் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி!!

4

துருக்கி நாட்டில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் சேர்ந்த காரபிடி நகர தனியார் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 40 பேர் நேற்று கல்வி சுற்றுலா சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பேருந்து ஓஸ்மானியே என்ற நகருக்கு அருகில் வந்து கொண்டு இருந்த போது பஸ் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து ஒரு பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து ஆற்றில் பாய்ந்துள்ளது.

ஆனால், இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 3

இளையராஜாவுக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ilaiyaraja_airport001

தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லா இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் அண்மையில் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது சோதனையில் அவர் கொண்ட வந்த விபூதி, தேங்காய் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர்.அதோடு விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

 

பிரபல கிரிக்கெட் வீரரை பாட வைக்கும் ஏ.ஆர். ரகுமான்!!

ar-rahman-dc-0306_0_0_0_0

இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15 மாதம் ஆரம்பமாகவுள்ளது.இதன் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த விளையாட்டை பிரபலப்படுத்தம் வகையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு பாடல் உருவாக இருக்கிறது.

இந்த பாடலை பல பாடகர்கள் பாடவுள்ள நிலையில் அவர்களில் ஒருவராக விராத் கோஹ்லியும் இந்த பாடலின் ராப் பகுதியை பாடவுள்ளார்.விராத்கோஹ்லிக்காக ராப் பகுதியை எளிமையாக்கியுள்ளதாகவும், அவர் பேட்டிங்கில் சிறந்து விளங்குவது போல் பாடல் பாடுவதிலும் சிறந்து விளங்குவார் என்று நம்புவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

 

யாழில் மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவியைக் காணவில்லை!

missing

யாழில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் காணவில்லை என, பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாலையில் மேலதிக வகுப்புக்காக சென்ற இவர், இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் பெற்றோர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொஸ்கம சாலாவ ஆயுதக்களஞ்சியசாலை தீ விபத்து : மஸ்தான் எம்.பி. நேரடி விஜயம்!!

 
கொஸ்கம சாலாவ இராணுவ முகாம்ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல பகுதிக்கு விஜயம் செய்த அவர்அங்குள்ள மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அத்துடன் குமாரிமுல்ல பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அப்பகுதியிலுள்ள நீரை குடிநீர்த்தேவைக்கு பயன்படுத்தவேண்டாமென வைத்திய அதிகாரிகளால் அறிவுருத்தப்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து உடனடியாக தனது சொந்த செலவில் அம்மக்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக 250 குடும்பங்களுக்கு 5லீற்றர் விகிதம் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.

குறித்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு பூகொட பெப்பிலிவெல மஹாவிஹாரையில் தங்கியிருந்த மக்களை பார்வையிட்டதுடன் விஹாரையின் தலைவரான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பிரதியமைச்சர் துலிப் விஜய சேகரவுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், அந்த மக்களுக்கான உடனடி தேவைகள் ஏற்ப்படும்போது தான் உதவுவதாகவும் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

01 03 04 06 a1 a2 a4 a6

காகிதம் போல் மடக்ககூடிய தொடுதிரைகள்!!

1414673238109_wps_24_LG_display_jpg
காகிதம் போன்று மடக்ககூடிய தொடுதிரைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் அறிவியல் இதழில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.அதில், தென்கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை(கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப்யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூலீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி மற்றும் கைபேசிகள் ஆகியவற்றின் திரைகளை உருவாக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் OrganicLight Emitting Diode தயாரிப்பில் வெற்றி அடைந்துள்ளனர்.அதாவது தற்போதுவளைந்த திரைகளின் பயன்படுத்தக்கூடிய என்ற Indium-Tin-Oxide உலோகக் கலவைக்கு பதிலாக Graphene–யை பயன்படுத்தவுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் செலவுகளை குறைப்பதுடன் திரைகளை 2.3 மி.மீ வரை மடக்கலாம்.மேலும் எதிர்காலத்தில் காகிதம் போல் மடக்ககூடிய திரைகள் உருவாக்குவது சாத்தியமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)

 
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(06.06.2016) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பக்த அடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் நிகழ்வில் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இவர்களுக்காக விசேட பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் போக்குவரத்துச் சபையும் ஏற்பாடு செய்திருந்தன.

இரவு நேர நிகழ்வுகள் 

 13307459_1228948123791805_8436109984756282131_n 13312660_1228947360458548_5823843655314742483_n 13319793_1228951163791501_8714375032294302239_n 13319952_1228950823791535_4583763796150556495_n 13321667_1228947793791838_96206686599753095_n 13321906_1228948077125143_4775116737762567103_n 13321976_1228951140458170_8532120146663225831_n 13327519_1228950933791524_936017058367136605_n 13330995_1228947290458555_3420973967586524287_n 13332904_1228950570458227_91394269248637783_n 13335659_1228948253791792_428193333645924828_n 13335811_1228951040458180_3701044487129267020_n 13335831_1228951343791483_3985387315769604088_n 13336006_1228948220458462_3428213859278652587_n 13339571_1228947190458565_7962578810295924128_n 13343080_1228950473791570_1896749808343150953_n 13343115_1228950440458240_5530143262538832404_n 13343131_1228950517124899_5475400079881728693_n 13344598_1228950603791557_9076347228531387807_n 13346556_1228952830458001_990874738949403602_n 13346626_1228950950458189_3246076367257350993_n 13346753_1228947437125207_5338231493709671508_n 13406756_1228951583791459_2051719015299613804_n 13406953_1228950673791550_308363723532751634_n 13413579_1228947953791822_565354772433481908_n 13413678_1228950860458198_4569049878714542193_n

பகல் நேர நிகழ்வுகள் 

13239073_1228508307169120_5464704587870410011_n 13269265_1228510000502284_3075237603526794160_n 13321861_1228508180502466_3963903454668926293_n 13325463_1228508883835729_546761820442369222_n 13325557_1228508537169097_4449881227529883252_n 13325588_1228509190502365_8794368700306925289_n 13342894_1228509940502290_7761269300630751046_n 13343065_1228508400502444_2035647296467424952_n 13343100_1228509757168975_584483668024539324_n 13344499_1228508707169080_7931573760019380807_n 13346646_1228508980502386_2733485852465278826_n 13346909_1228509813835636_763621137216517880_n 13394021_1228508330502451_4627970639329157129_n 13394072_1228508607169090_5816653881447521992_n 13394178_1228508797169071_7962590623683673445_n 13406764_1228508830502401_8424346885008570308_n 13406872_1228508230502461_8570173649842474151_n 13407140_1228509250502359_6618576761397662371_n 13407268_1228508270502457_201738507914774289_n news (1) news (14) news (15) news (16) news (17) news (18) news (19) news (20) news (21) news (22) news (23) news (24) news (25) news (26)

எஜமானை புலியிடம் இருந்து காப்பாற்றிய நாய்!!

12_CATERS_DOG_AND_TIGER_BEST_FRIENDS_13-800x498

உத்தரபிரதேச மாநிலம் குதார்நகரம் அருகேயுள்ள பர்பத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குர்தேவ்சிங்.இவர் ஜாக்கி என்ற 4 வயது நாயை தன்னுடன் செல்லமாக வளர்த்து வந்தார். இவரது கிராமத்துக்கு அருகே துக்வா தேசிய பூங்கா என்ற வனச் சரணாலயம் உள்ளது.சம்பவத்தன்று குர்தேவ் சிங் தனது வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரது அருகில் நாய் ஜாக்கியும் படுத்திருந்தது. அப்போது அருகேயுள்ள வனச் சரணாலயத்தில் இருந்து ஒரு புலி அங்கு வந்தது.

அது விவசாயி குர்தேவ் சிங்கை கடித்து கொல்ல அவரை நோக்கி பதுங்கியபடி வந்தது. அதை தனது மோப்ப சக்தி மூலம் அறிந்த நாய் ஜாக்கி சத்தம் கேட்டு குரைத்தது. உடனே சுதாரித்துக்கொண்ட குர்தேவ்சிங் கண் விழித்து எழுந்தார். இதற்கிடையே நாய் குரைத்த சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினரும் திரண்டு அங்கு வந்துவிட்டனர். அதை பார்த்து மிரண்ட புலியின் பார்வை நாயின் மீது ஆத்திரமாக மாறியது. குர்தேவ்சிங்கை விட்டு நாயின் மீது பாய்ந்து தாக்கியது. பதிலுக்கு நாயும் புலி மீது பாய்ந்து சண்டை போட்டது. இரண்டும் கடுமையாக சண்டையிட்டன.

அப்போது புலியும், நாயும் திடீரென காணாமல் போயின. எனவே குர்தேவ் சிங்கின் உறவினர்கள் தேடிச்சென்ற போது சிறிது தூரத்தில் நாய் ஜாக்கி இறந்து கிடந்தது. புலியுடன் ஏற்பட்ட சண்டையில் பலத்த காயம் அடைந்து இறந்துவிட்டது. எஜமானரை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு தனது இன்னுயிரை இழந்த ஜாக்கியின் விசுவாசத்தை குர்தேவ்சிங்கும் அவரது உறவினர்களும் பாராட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

 

கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் படுகொலை!!

1 (14)
காலி-போத்தல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்டுள்ளார்.போத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் பத்தேகம நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றில் ஆஜராகி மீண்டும் வீடு திரும்பிய வேளையில் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் போத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போத்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

ஆசைவார்த்தை கூறி பணத்தை கொள்ளையிட்ட சுற்றுலாப் பயணிகள்!!

1 (12)
காலி – இமாதுவப் பகுதியில் உள்ள நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில், சுமார் 40,000 ரூபா பெறுமதியான பணத்தை மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று திருடிச் சென்றுள்ளனர்.இவர்களில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளடங்குவதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலாப் பயணிகள், நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் கொள்வனவு செய்வதில் தமக்கு மிகுந்த ஆர்வம் எனக் கூறியதோடு, “எங்களிடம் வெளிநாட்டு நாணயங்கள் மாத்திரமே இருக்கின்றன, உள்நாட்டு நாணயங்களை எங்களுக்கு காண்பியுங்கள் என்றும் உரிமையாளரிடம் கேட்டுக் கொண்டபோது, அவரும் இதற்கு சம்மதித்துள்ளார்.கடையை நன்கு அவதானித்த வெளிநாட்டவர்கள் எங்களது பணத்தை உள்ளூர் பணமாக மாற்றி மீண்டும் கடைக்கு வருகின்றோம் என கூறி விட்டு கடையை விட்டுச் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடையை விட்டுச் சென்ற பின் குறித்த உரிமையாளர் தன் பாதுகாப்பில் இருந்த 40,000 ரூபா காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.சம்பவம் தொடர்பில் இமாதுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை வருட இறுதிக்குள் எட்டுவதே இலக்கு- சம்பந்தன்!!

1 (44)
பல்வேறுபட்டவர்கள் சில பல கருத்துக்களைக் கூறினாலும் நியாயமான நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினரை சந்தித்திருந்தது.இச்சந்திப்பின் பின்னர், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த வருட இறுதிக்குள் ஏற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.அவ்விதமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.வேறுபட்டவர்கள் சில பல கருத்துக்களைக் கூற முடியும். அவ்வாறான கருத்துக்களால் நாம் குழம்ப வேண்டிய அவசியமில்லை. நாம் நிதானமாக இருக்க வேண்டும். நிரந்தரமான தீர்வை நோக்கிச் செல்லவேண்டும்.

நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் நியாயமான நிரந்தரமானதும் நாட்டிற்கு உகந்ததுமான தீர்வாகவும் அமையவேண்டும்.அதேநேரம் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை குறித்து கருத்து வெளியிட்ட சம்பந்தன்,இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. வழிநடத்தும் குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது. உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.மக்களுடைய அபிப்பிராயத்தை அறிவதற்காக நியமிக்கப்பட்ட குழு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அனைத்து தரப்புக்களும் தமது பணிகளை முன்னெடுக்கின்றன.ஆகவே அவ்விடயம் தொடர்பான கருமங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்றார்.மேலும் சர்வதேச மட்டத்திற்கு பேச்சுவார்த்தைகளை கொண்டு செல்வது குறித்து தற்போது கூறமுடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.

 

காதல் தோல்வியால் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட இளைஞன்!!

Fire

அவிசாவெல்ல நகர மத்தியில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் தீ வைத்துகொண்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

காதல் தோல்வியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பலத்த தீக் காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞன் பிரதேச வாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவரா நீங்கள் : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

Young businesswoman having back pain while sitting at office desk

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கணணி, இணையம் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அமித் கெஃபன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல்கள்:

ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும்போது, ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது.

ஒரே இடத்தில் அமரும் போது அழுத்தம் கொடுக்கப்படும் இடங்களில் உள்ள இத்தகைய செல்கள் விரைவாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும்.இது ‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ்’ எனப்படுகிறது.

ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும்.

உடலின் மற்ற பகுதிகளைவிட ‘சீட்’ பகுதியில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டுமின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும்.

திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி வழக்கு : குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் பரிந்துரை நிராகரிப்பு!!

Mannar

திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் முன்வைத்த பரிந்துரையை பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நிராகரித்துள்ளனர்.

மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் ஏ ஜி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

இதன் போது புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்விற்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள நிறுவனமொன்றுக்கு கொண்டு செல்ல வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம் பரிந்துரைத்த மூன்று இடங்களை நிராகரித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளமை குறித்து தமது எதிர்ப்பை வௌியிடுவதாக காணாமல் போனோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுள் ஒருவரான வி எஸ் நிரஞ்சன் கூறினார்.

இதேவேளை மனிதப் புதைகுழிக்கு அருகில் அடையாளங்காணப்பட்ட கிணறு சம்பந்தமான வழக்கும் மன்னார் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தற்போது சட்ட வைத்திய அதிகாரி டீ ஏல் வைத்தியரத்தினவால் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன் அதற்கான அனுமதி கிடைத்தவுடன் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியும் என பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இரண்டு நிறுவனங்கள் அறிக்கை மற்றும் மேலதிக அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் புதைகுழி அகழ்வுகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் இறுதித் தீர்மானம் தொடர்பிலும் நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு வழக்குகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

-News First-