ஸ்ருதியை நினைத்து சரிகா கவலை அடைந்துள்ளார். கமலை விட்டு பிரிந்த சரிகா மும்பையில் வசிக்கிறார்.
அவருடன் இளைய மகள் அக்ஷரா தங்கி இருப்பதுடன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதேபோல் மூத்த மகள் ஸ்ருதி மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதுடன் கைநிறைய படங்களை ஒப்புக்கொண்டு ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்கள் என மாறி மாறி நடிக்கும் ஸ்ருதி இடைவிடாமல் ஊர் ஊராக பறந்த வண்ணம் இருக்கிறார். தவிர அவர் நடித்து அடுத்தடுத்து சமீபத்தில் திரைக்கு வந்த டி டே, ரமய்யா வஸ்தாவய்யா ஆகிய படங்களின் புரமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இப்படி ஸ்ருதி பிஸியாக இருப்பதை எண்ணி ஒருபுறம் சரிகா சந்தோஷம் அடைந்தாலும், மறுபுறம் ஓய்வில்லாமல் அவர் உழைப்பதால் உடல்நிலை பாதிக்குமே என்று கவலை அடைந்திருக்கிறார்.
இது பற்றி ஸ்ருதியிடம் பேசிய சரிகா, உன்னை நீயே வருத்திக்கொள்ளும் அளவுக்கு படங்களை ஒப்புக்கொண்டு ஓய்வே எடுக்காமல் இருக்கிறாய். குறைந்த பட்சம் 10 நாட்களாவது ஓய்வு எடு என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால் ஸ்ருதியோ 2 நாட்கள் கூட ஓய்வு எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக சொன்னாராம்.
தமிழின படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையறிந்த பொலிசார் 23 மாணவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
இதை கண்டித்தும், சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் தியாகுவிற்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கல்லூரி மாணவர்களை சேர்ந்த பிரபாகரன், ராஜ்குமார், கவியரசன், பிரசாத், சைமன், மதியழகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று நள்ளிரவு கும்பகோணம் காந்தி பூங்கா அருகே திடீரென சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் பிசியாக நடிக்கிறார் அமலாபால். தலைவா படத்துக்கு பின் சம்பளம் உயர்ந்துள்ளது. சக நடிகைகள் போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கும் மாறியுள்ளார். மலையாள படமொன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக தோன்ற சம்மதித்துள்ளார்.
இதில் அமலாபால் ஜோடியாக நிவின்பாலி நடிக்கிறார். இவர் தமிழில் ‘நேரம்’ படத்தில் நடித்தவர். அடுத்து மம்முட்டி, மோகன்லால் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடுகிறார். அமலாபால் அளித்த பேட்டி வருமாறு:–
நான் நிறைய கேரக்டர்களில் நடித்து விட்டேன். டாக்டர்,வக்கீல், ஆசிரியை வேடங்களில் வந்துள்ளேன். அடுத்து இதுவரை செய்யாத கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. இளவரசியாக நடிக்க விருப்பம் உள்ளது. துணிச்சலான சாகசங்கள் எனக்கு பிடிக்கும். சினிமா வாழ்க்கையில் நடிகை ஸ்ரீதேவி கையால் விருது வாங்கியது மறக்க முடியாதது. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒவ்வொரு வரும் பிரபலமானவர்களை தங்கள் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
என்னை பொறுத்த வரை பெற்றோரைத்தான் முன் மாதிரியாக கொண்டு செயல்படுகிறேன். அவர்கள் எனக்கு ரொம்ப உறுதுணையாக இருக்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர்களை தான் சிறந்த ஆண்களாக கருதுவேன். தன்னம்பிக்கை செயல் திறனும் இருக்க வேண்டும்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்த சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங், ‘இந்த வெற்றியை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அறிவித்தார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதிய டி20 போட்டி, ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் (குஜராத் மாநிலம்) நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இப்போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸி. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 201 ஓட்டங்களைக் குவித்தது.
அடுத்து களமிறங்கிய இந்தியா 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களை எடுத்து அபாரமாக வென்றது. ஒருகட்டத்தில் இந்தியா 11.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது.
இந்த நெருக்கடியான கட்டத்தில் யுவராஜ் சிங், தலைவர் டோனி ஜோடி அபாரமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.
ஆஸி. பந்துவீச்சை சிதறடித்த யுவராஜ் 77 ஓட்டங்களையும் (35 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்), டோனி 24 ஓட்டங்களையும் (21 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற யுவராஜ் கூறியதாவது,
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா அல்லது சோகமாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்ததில் மகிழ்ச்சி.
அதே சமயம், இதே நாளில் சச்சின் தனது ஓய்வு முடிவை அறிவித்திருப்பதால் சோகமாகவும் உள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஏ தொடரில் இருந்தே நல்ல பார்மில் இருக்கிறேன். இந்த வெற்றியை சச்சினுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும் திட்டமிட்டுள்ளேன். நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து நன்றாக விளையாட வேண்டும் என்று தினந்தோறும் பிரார்த்தனை செய்து வந்த எனது தாயாருக்கும் இந்த வெற்றியில் பங்கு உள்ளது.
சச்சினுடன் இணைந்து பல ஆண்டுகள் விளையாடியது அற்புதமான அனுபவம். வீரர்கள் அறையில் அவருடன் பழகிய நாட்களை மறக்கவே முடியாது.
அந்த மகத்தான வீரரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் பரப்பிய ஒப்பற்ற தூதர் அவர். அவரது ஓய்வு முடிவு ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே உணர்ச்சிகரமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
மிகப் பெரிய வீரராக இருந்தாலும், இளம் வீரர்களிடம் எந்தவிதமான பந்தாவும் காட்டாமல் சாதாரணமாகப் பழகுவார். உண்மையில், நாங்கள்தான் சற்று அச்சத்துடன் விலகியிருப்போம். அவரது ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்காக பங்களிப்பேன் என நம்புகிறேன் என்றார்.
புகை பிடிக்கும் பழக்கம் உலக நாடுகளில் ஆண்– பெண் பாகுபாடின்றி பரவியுள்ளது. மேலை நாடுகளில் விருந்துகளில் பெண்கள் புகை பிடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
புகை பிடிப்பதால் உயிருக்கு ஆபத்து, உடல் நலக்குறைவு எற்படும், ஆயுள் குறையும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் புகை பிடிப்பவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஒரு சிலர் மட்டும்தான் புகை பழக்கத்தை கைவிடுகிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் சாக்ஸ் ஆய்வகத்தில் பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினார்கள். புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட 2 லட்சம் பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டனர். 4 ஆண்டுகளாக இவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சராசரியாக 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என தெரிய வந்தது. அடர்த்தியான புகையிலையை விட சக்தி குறைந்த புகையிலையால்தான் பாதிப்பு அதிகம். நுரையீரலை அதிகம் பாதிக்க செய்கிறது என்றும் தெரியவந்தது.
இதுபற்றி சாக்ஸ் ஆய்வக பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் கூறுகையில், புகை மற்றும் புகையிலை பழக்கத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு என அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என்று கண்டுபிடித்து உள்ளோம். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த ஆதாரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்த கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.
அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை 1945–ம் ஆண்டுகளில் ஆண்கள் அதிக அளவில் புகை பழக்கத்துக்கு ஆளானார்கள். 1978–ம் ஆண்டுகளில் பெண்களுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் பரவியது. அவுஸ்திரேலியாவில் இறப்பு விகிதத்தில் புகை பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம் பேர் என்றும் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் சென்ற ஆட்சியில் தமிழில் படத்துக்கு பெயர் வைத்தாலே வரிச்சலுகை கிடைத்துவிடும். இந்த அரசு பதவியேற்றதும் அதில் சில மாற்றங்களை செய்தது.
தமிழில் பெயர் இருப்பதுடன் யு சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். நல்ல முடிவு. ஆனால் அடுத்து ஒரு வாசகத்தையும் தனது வசதிக்காக சேர்த்துக் கொண்டது. தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இந்த ஆயுதத்தை வைத்துதான் தமிழக அரசு எதிரிகளை வீழ்த்தி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தும் வரிச்சலுகை அளிக்கவில்லை. படத்தை இதோ பார்க்கிறோம் அதே பார்க்கிறோம் என்று இழுத்தடித்தே ஊத்தி மூடினார்கள்.
அதேநேரம் பாரில் தாலி கட்டும் 3 படத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரிக்க, அவரது மனைவி கிருத்திகா இயக்கத்தில் வணக்கம் சென்னை படம் இன்று வெளியாகியிருக்கிறது.
தமிழில் பெயர், யு சான்றிதழ் என எல்லா தகுதிகளும் இருந்தும் வரிச்சலுகை கிடையாது என மாநில அரசின் வரிச்சலுகைக்குழு தெரிவித்திருக்கிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு போயிருக்கிறார் உதயநிதி.
அமெரிக்காவில் உடலுறவுக்கு அழைத்த போது மறுத்த வாலிபரின் கண் மற்றும் தோள்பட்டையில், பெண்ணொருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
புளோரிடா நகரில் வசிக்கும் வா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க் (28) என்ற பெண் தனது தோழி ஒருத்தியுடன் அப்பகுதியில் உள்ள நண்பனின் வீட்டுக்கு சென்றாள்.
3 பேரும் சேர்ந்து நிறைய மது குடித்தனர். நிதானம் தெரியாத போதையில் வா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க் தனது நண்பனை உடலுறவுக்கு அழைத்தார்.
இன்னொரு பெண்ணையும் உடன் வைத்துக்கொண்டு அவளுடன் உடலுறவு கொள்வதை விரும்பாத அந்த வாலிபர் அவளது அழைப்பை நிராகரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவள் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நண்பனின் கண் மற்றும் தோள்பட்டையில் வெறித்தனமாக குத்தினாள்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட அந்த வாலிபர் பொலிசில் அளித்த புகாரையடுத்து லா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க்கை கைது செய்த பொலிசார் அவள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சூப்பஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் பொருத்தமானவர் இல்லை, எனவே அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என ஒருவர் பொலிஸில் புகார் கொடுக்க முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக ஐஸ்வர்யா நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் 2004 நவம்பர் மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிகருமான தனுஷ்சை கரம்பிடித்தார். இருவரும் திருமணமான ஆரம்பகாலத்தில் மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் குடும்பம் நடத்தினார்.
ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப வாழ்கையில் புயல் வீச தொடங்கியுள்ளது. இதற்கு காரணமாக அமைந்தது ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 திரைப்படமே.
தனுஷ் – ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த இந்தப் படத்தைத் தொடர்ந்து, இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.
3 படம் வெளியாகிய பின்னும் இவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவிற்கு தெரியாமல் இரகசியமாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கிட்ட தட்ட ஸ்ருதிஹாசன் அவர் அம்மாவை போலவே கல்யாணம் செய்யாமலே தனுஷ்டன் குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
இதனால் தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஜினிகாந்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலால் மனவேதனையின் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன் ஒரு நபர் (பெயர் வெளியிடப்படவில்லை) சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகார் செய்துள்ளார். அது பின்வருமாறு,
ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவை ரஜினிகாந்த் முதலில் எனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறும் சமயத்தில், கஷ்தூரிராஜாவின் குடும்பம் இடையில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டது.
ரஜினியும் மனம் மாறி தனுசுக்கு தன் மகளை திருமணம் செய்துவைத்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் என்னை ஏமாற்றி விட்டார்.
இதை பற்றி வெளியில் யாருக்கும் சொல்லவேண்டாம் என என்னை வார்த்தையால் கட்டி போட்டு விட்டார். அவருக்கு மதிப்பளித்து இதுநாள் வரை நான் யாரிடமும் இதைப் பற்றி கூறவில்லை.
ஆனால் என்னால் ஐஸ்வர்யாவை இதுவரையிலும் மறக்க முடியவில்லை நான் இன்னும் அவரை காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்க்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர் ஐஸ்வர்யாவை மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் பொருத்தமானவர் அல்ல எனவே என் ஐஸ்வர்யாவை என்னுடனே சேர்த்து வையுங்கள்.
இவ்வாறு புகார் மனுவை கமிஷ்னரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கமிஷ்னர் இதை வாங்க மறுத்ததோடு, அவரை மன நலம் பாதிக்கபட்டவர் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும் விஷயம் அரசல் புரசலாக வெளியில் கசிய தொடங்கியுள்ளது.
மகளை கொன்று, இரத்தம் குடித்த தந்தையை பப்பு நியூ கினியா பொலிசார் கைது செய்துள்ளனர்.
பசிபிக் கடலில், இந்தோனேசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் அமைந்துள்ள நாடு பப்புவா நியூ கினியா. இங்கு பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர்.
இங்குள்ள, லே நகரில், மிருக குணம் படைத்த தந்தை, மகளின் கழுத்தை கடித்து, இரத்தத்தை குடித்து குழந்தையின் மாமிசத்தை தின்று கொண்டிருந்தார்.
அதை பார்த்த சிறுவர்கள் அங்கிருந்த தென்னை மரத்தின் மீது பயந்து ஏறிக்கொண்டனர். அதன் பின் அவர்கள் ஓடி சென்று, ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதை கேள்விப்பட்டு ஊர் மக்கள் திரண்டு வந்து, மகளின் மாமிசத்தை தின்று கொண்டிருந்த நபரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நாட்டில், மனித மாமிசத்தை தின்னும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. சிலரை கொன்று அவர்களது மூளையை ருசித்து சாப்பிட்ட, ஏழு பேர் கடந்த ஆண்டு கைது செய்யபப்ட்டமை குறிப்பிடத்தக்கது.
நடிகை கார்த்திகாவுக்கு திருமணம் என்று வெளியான செய்திகள் தொடர்பில் அவரது தாயார் ராதா விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
என்னோட பிறந்தவங்க 5 பேரு. அம்பிகா அக்கா, மல்லிகா அக்கா, அர்ஜுன், நான், என் தம்பி சுரேஷ். இவங்கதான் என் குடும்பம். இவர்களில் மல்லிகா அக்காவுக்குதான் முதலில் கல்யாணம் நடந்தது.
அவர்களுக்கு வினிதா, விஷால் என்று இரண்டு பசங்க. இப்போது வினிதாவுக்குதான் கேரளாவில் வரும் 26ம் திகதி கல்யாணம். இந்த செய்தி எப்படி குழப்பமாச்சுன்னே தெரியல.
என் மகள் கார்த்திகாவுக்கு கல்யாணம் என்ற செய்தியாக மாறிவிட்டது. கார்த்திகாவுக்கு 21 வயசாகுது. இன்னும் 4 வருஷத்துக்கு கார்த்திகா கல்யாணம் பத்தி யாருமே யோசிக்கல.
எனக்கு என் மகள் கார்த்திகாமேல் இல்லாத அக்கறை மத்தவங்களுக்கு இருக்கா? அவள் நடிப்பிலும் சரி, படிப்பிலும் சரி, படு சுட்டி. இப்போதைக்கு கார்த்திகாவுக்கு கல்யாணம் பண்ணிவைக்க வீட்டில் யாருக்குமே விருப்பம் இல்லை.
பொய்யான செய்திகளை விசாரிக்காமலே ஏன் இப்படி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை’. இவ்வாறு ராதா பேசினார்.
கார்த்திகா இன்னும் இரண்டு படங்களுக்கு கதை கேட்டிருக்கிறார். விரைவில் அறிவிப்பு வரும்.
தமிழக மீனவர்கள் மீது அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாகை மாவட்டம் வெள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 மீனவர்கள் கடந்த 10ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரையின் தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், அவர்கள் மீது சரமாரியாக தாக்கியதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் நாகை மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அவர்கள் பறித்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலால் படுகாயம் அடைந்த நாகை மீனவர் கிருஷ்ணமூர்த்தி நாகை அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நடிகைக்கு தருகிற முக்கியத்துவத்தை இந்த நாடு ஒரு நடிகருக்கு தரவே மாட்டேங்குதே என வருதத்தில் ஆழ்ந்துள்ளாராம் கருணாஸ்.
ஏனென்றால் கருணாஸ் காமராஜரை பற்றி தவறாக பேசிவிட்டார் என்று ஒரு வார இதழில் செய்தி வந்ததால் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.
தினந்தோறும் ஏதாவது ஒரு அமைப்பு அவரது வீட்டுக்கு முன் போராட்டம் நடத்தி கோஷம் போட்டுவிட்டு கலைகிறது. இதில் மிகவும் நொந்துபோனார் கருணாஸ்.
வேறு வழியில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்துவிட்டு போனார்.
இவர் போய் திரும்பும்வரை ஒன்றிரண்டு பத்திரிகையாளர்களை தவிர, வேறு யாரும் இவரை கண்டு கொள்ளவில்லையாம். ஆனால், நடிகை நஸ்ரியா இதே அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருகிறார் என்றதும், கூட்டங்களை கட்டுப்படுத்துகிற பேரிகார்டுகளை கொண்டு வந்து இறக்கினார்களாம்.
அவரை புகைப்படம் எடுக்கவும் பேட்டி எடுக்கவும் பயங்கர தள்ளுமுள்ளு. அடுத்த நாள் செய்தி தாள்களில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் இவரது பிரச்சினையைதான் அலசியிருந்தார்கள்.
இதனால் மிகவும் மனவேதனையில் உள்ளாராம் கருணாஸ். நஸ்ரியாவின் தொப்புளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஊடகங்கள் என்னுடைய வீட்டிற்கு கொடுக்க மாட்டேங்கிறாங்களே என்று புலம்புகின்றார்.
வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் நேற்றயதினம் யாழ்ப்பாணத்தில் பதவிப்பிரமாணம் செய்திருந்தனர்.
வடமாகாண சபை அமைச்சரவையில் வவுனியா சார்பாக வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தினை முடித்துக்கொண்டு நேற்று மாலை வவுனியா திரும்பிய சத்தியலிங்கத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட கூட்டமைப்பு பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை வவுனியா பஸ் நிலையத்திலிருந்து பசார் வீதி வழியாக, மாலை அணிவித்து பட்டாசுகள் முழங்க மிகுந்த ஆரவாரத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பசார் வீதி வழியாக இலுப்பையடிச் சந்திவரை ஊர்வலமாக அழைத்து வரப்பபட்ட அவர் இலுப்பையடிச் சந்தியில் வைத்து தனது வாகனத்தில் ஏறிச் சென்றார்.
என் சொந்த வாழ்க்கை பற்றி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கோபமாக பாய்கிறார் அனன்யா.
நாடோடிகள், எங்கேயும் எப்போதும், சீடன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா.
இவருக்கும், திருச்சூரை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து திருமணம் தடைபட்டது.
ஆனாலும் இருவரும் ரகசியமாக சேர்ந்து வாழ்வதாக கிசுகிசு நிலவுகிறது.
திருமண சர்ச்சையால் படங்களில் நடிக்காமல் சில காலம் ஒதுங்கி இருந்த அனன்யா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல கதை, நல்ல நிறுவனம் என்றால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
தற்போது மலையாளத்தில் நாடோடி மன்னன், தோம்சன் வில்லா படங்களில் நடிக்கிறேன் என்றும் கதாநாயகிகளுக்கு இடையேயான போட்டி பற்றி எனக்கு கவலை இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் என் சொந்த வாழ்க்கை பற்றி கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன, அதுபற்றி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என கூறியுள்ளார்.
வன பாதுகாப்பு திணைக்களத்தின் கள வேலையாளர் ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் அதிகாரி பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு சொந்தமாக இடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பயிற்ச் செய்கையில் ஈடுவதற்காக இந்நபர் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்துள்ளார்.
அப்பெண்ணின் கணவனால் குறித்த அரச காணியில் பயிர்ச் செய்கை செய்யவிருந்த நிலையில் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காது இருக்க வேண்டும் என்பதற்காக அவ் அதிகாரி பாலியல் லஞ்சம் கோரியுள்ளார்.
இவ் லஞ்சத்தை பெற்றுக் கொள்வதற்காக அப் பெண்ணின் வீட்டிற்கு அதிகாரி சென்றிருந்த நிலையில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னதாக பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை கைது செய்யப்பட்ட அதிகாரியை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.