அசாமில் ஒன்பதாம் வகுப்பு படித்த சிறுவன் ஒருவனை பணத்திற்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமை சேர்ந்த சிறுவன் பிரேசெஞ்சித் லகர், இவர் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தார். இந்த சிறுவன் இம்மாதம் 1ம் திகதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை.
மகனை காணவில்லை என்று அச்சமடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். சில நாட்கள் கழித்து, சிறுவனின் வீட்டிற்கு, தாங்கள் சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவன் உயிருடன் திரும்பவேண்டுமேன்றல் 15 இலட்சம் ரூபாய் பணம் வேண்டுமென்றும் கூறி ஒரு தொலைபேசி அழைப்பும், எஸ்.எம்.எஸ் செய்தியும் வந்துள்ளது.
தொலைபேசி எண்ணை வைத்து பொலிசார் விசாரித்தப்போது 5 சிறுவர்கள் பிடிப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறுவனை சோனாப்பூர் என்னும் இடத்திற்கு அழைத்து செல்வதாக் கூறி, அவனை கடத்தியுள்ளனர்.
பின்னர், அச்சிறுவனை பாதுகாப்பதில் சிக்கல் வந்ததால் ஐந்து பேரும் சேர்ந்து அவனை கொன்றுவிட்டு வீடு திரும்பினர்.
விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கூறிய தகவல்கள் படி, பலியான சிறுவனின் புத்தகப்பை, உடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
சிறுவனின் சடலம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இலங்கை பிரஜை ஒருவரை, சி.பி.ஐ., பொலிஸார் எனக் கூறி, கடத்திச் சென்ற ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30மணி தொடக்கம் மாலை 5மணி வரை வவுனியாவில் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று, அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத் தலைவர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட வலவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் கண்பார்வையற்றோருக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
வாசிப்பு மாத்தை முன்னிட்டு வவுனியாவில் கல்விக்கண்காட்சியும் புத்த கவிற்பனையும் எதீர்வரும் திங்கள் முதல் வெள்ளிக்கழமை வரை வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

விக்ரம் – எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ´ஐ.´பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை இண்டர்நெட்டில் பல இணையதளங்களில் ரிலீஸ் ஆகி, ஷங்கரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக ஷங்கர் படம் என்றாலே கதையை உதவி இயக்குனர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும். ஆனால் இந்த படத்தின் விரிவான கதை இணையத்தில் வெளியாகியுள்ளதால் ஷங்கர் அதிர்ச்சியில் உள்ளார். இனி கதை என்ன என்பதை பார்போமா?
கென்யாவில் வித்தியாசமான ஒரு அழகிப் போட்டி நடந்துள்ளது. இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண்களின் உடல் அழகை வைத்தோ அல்லது வனப்பை வைத்தோ பட்டம் தரப்படவில்லை. மாறாக மாற்றுத் திறனாளிகள்தான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அசத்தினர். உலகெங்கும் இப்போது தடுக்கி விழுந்தால் அழகிப் போட்டிதான். விதம் விதமான பெண்கள், உலகப் பந்தில் ஏதாவது ஒரு மூலையில் நடந்தபடிதான் உள்ளனர். ஆனால் வழக்கமான அழகிப் போட்டி போல இல்லாமல், வித்தியாசமான ஒரு அழகிப் போட்டியை நைரோபியில் நடத்தியுள்ளனர்.
அட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு காளி என பெயர் வைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தின் தொடக்க விழாவின்போது டைட்டில் வைக்காமல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ‘காளி பட டைட்டில் வைக்காமல் இயக்குனர் பின்வாங்கியது ஏன்? என்று விசாரித்தபோது பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கருக்கலைப்பு குறித்த மசோதா நிறைவேறிக்கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த மூன்று பெண்கள் திடீரென எழுந்து அரைநிர்வாணமாக மாறி, அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ படப்பிடிப்பில் படுபிஸியாக இருந்த எமி ஜாக்சனுக்கு புத்துணர்ச்சி பெறுவதற்காக ஷங்கர் மூன்று நாட்கள் விடுமுறை அளித்தாராம். அந்த விடுமுறையாக ஜாலியாக அனுபவைக்க எமி ஜாக்சன் தன் பள்ளித்தோழிகளுடன் கேரளாவில் உள்ள யானைகள் சரணாலத்திற்கு சென்று மூன்று நாட்களும் யானைகளோடு ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.