கொட்டகலை பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பலா மரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இல. 131 ரொசிட்டா ஹவுஸ் ஸ்கீம் கொட்டகலை பி. ஜெகநாதன் என்பவரின் வீட்டிலே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் பிரதேசத்தில் இச் செய்தி தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த அதிசயத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் குறித்த வீட்டிற்கு படையெடுத்து வருவதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியிலுள்ள பல வீடுகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் அபாயமான சூழ்நிலை காணப்படுவதால் இராணுவ முகாமிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் சுற்று வட்டார பகுதியை விட்டு விலகியிருக்குமாறு பாதுகாப்பு படையினர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மனித உறுப்புகளை பன்றியின் உடலுக்குள் உருவாக்கும் ஆராய்ச்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
உலகெங்கிலும் மனித உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உறுப்புகள் போதிய அளவு கிடைக்காத பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் கலிபோர்னியா பல்கலக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று மனிதக் குருத்தணுக்களை பன்றிகளின் கருக்களில் ஊசி மூலம் செலுத்தி “சிமேரா” என்றழைக்கப்படும் மனித-பன்றி கருக்களை உருவாக்கியிருக்கின்றனர்.
இந்த கருக்கள் பொதுவாக சாதாரண பன்றிக் கருக்களைப் போலத்தான் இருக்கும் ஆனால் அவற்றின் உறுப்புகளில் ஒன்று மனித செல்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறப்படுகின்றது.
ஆனால் இந்த மனித-பன்றி சிமேராக்களால் ஆனா கருக்கள், 28 நாட்கள் வரை வளர அனுமதிக்கப்பட்டு பின்னர் அந்த கரு கலைக்கப்பட்டு, திசுக்கள் பரிசோதனைக்கு செய்யப்படும்.
இந்த மனித செல்கள் பன்றியின் மூளைக்குள் சென்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அஞ்சுகிறார்கள்.
சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்த இஷாரா பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் தற்போது கல்லூரி அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரிக்க கேவின் ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்த இஷாரா தலை மறைவாகி விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் அவர்கள் கூறி உள்ளதாவது,
இஷாராவை 28.02.2016 அன்று 4 இலட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நாங்கள் கேட்டது 20 நாட்கள். ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் திகதி கொடுத்தார். அவர் இல்லாத காட்சிகளையும் படமாக்கினோம். அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதன் பிறகு அவரிடம் தொடர்புகொண்டு திகதி கேட்டதற்கு டுபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன், வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ்ஆப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் இயக்குனர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார்.
சில சமயங்களில் யாரோ ஒரு ஆண் குரல்தான் வரும் இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு தொலைபேசி ஓப் ஆகிவிடும். நாங்கள் கதையில் ஏதாவது திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்றோம். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்பார். திகதி கொடுப்பார் ஆனால் சொன்ன திகதியில் படப்பிடிப்பிற்கு வரவே இல்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல இலட்சம் ரூபாய் வரை நஷ்டம்.
அவள் வருவாளா என்று காத்திருந்தோம். எந்த தகவலும் இல்லை வேறு வழி இல்லாமல் கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் வரை சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரவில்லை. தயாரிப்பாளர் கில்டில் ஜாக்குவார் தங்கம் மூலம் இஷாரவிடம் பேச சொன்னோம் அவர்களுக்கும் சரியான தகவல் இல்லை.
இஷாரவுக்கு தொலைபேசி அழைப்பு செய்தால் புலொக் லிஸ்டில் எங்கள் எல்லோரதும் தொலைபேசி எண்களையும் மாற்றி விட்டார். உங்களது அணுகுமுறை சரியில்லை நாங்கள் பத்திரிகையாளர்களிடம் முறையிடுவோம், வழக்கு தொடுப்போம் என்று குறுச்செய்தி அனுப்பினோம். அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் “ போங்க “ என்று. இப்படியெல்லாம் தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கிற இது மாதிரி நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா பல கோடிகளை முதலீடு செய்கிறது.
அவர்களது முதலீட்டில் விளையாடும் புதியவர்களின் கனவுகளில் வெண்ணீர் ஊற்றும் இது மாதிரியான நடிகைகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றார்கள்.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதாரங்களை சீராக்க 33,447 கோடி ரூபாய் தேவைப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக பாரீஸில் உள்ள Seine நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
இதுமட்டுமில்லாமல், Seine, Loing மற்றும் Yonne ஆகிய 3 நதிகளின் கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதாரத்தை உண்டாக்கியது.பிரான்ஸில் பெய்த மழைக்கு 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 24 பேர் வரை படுகாயமுற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமரான மேனுவல் வால்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பாரீஸ் நகரை புரட்டிப்போட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதித்த மழை தற்போது முடிந்து வெள்ளத்தின் அளவும் குறைந்துள்ளது.பாரீஸ் மாநகர் முழுவதும் ஏற்பட்ட வெள்ள சேதாரத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பார்வையிட்டுள்ளனர்.
இந்த வெள்ள சேதாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரத்தை சீரமைக்க சுமார் 2 பில்லியன் யூரோ(3,34,47,21,27,000 இலங்கை ரூபாய்) தேவைப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாரீஸ் நகரின் பெரும்பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சேதாரம் ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 25 வயதான நபர் ஒருவர் மது போதையில் மனைவியை அடித்து கொன்று விட்டு, பிணத்துடன் உறவு கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரதீப் சர்மா- மோனிகா ஜோடி, டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர், பிரதீப் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார், இருவருக்கும் இடையில் பணம் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மே 30ம் திகதி வீட்டின் உரிமையாளர் வாடகை பிரச்சனை காரணமாக பிரதீப்-மோனிகா தம்பதியை வீட்டை விட்டு வெளியேறும் படி கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து பிரதீப்- மோனிகா இடையில் கடும் சண்டை நடந்துள்ளது, அப்போது மது போதையில் இருந்த பிரதீப், மோனிகாவின் தலையை பிடித்து சுவரில் தொடர்ந்து மோதியுள்ளார், இதில் மோனிகா உயிரிழந்துள்ளார்.பின்னர் மோனிகாவின் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்த பிரதீப், பிணத்துடன் உறவு கொண்டுள்ளார்.
மறுநாள் காலையில் எழுந்த போது தான், மனைவி கொல்லப்பட்டதை உணர்ந்துள்ளார், பின்னர், மனைவியை கொன்று விட்டதாக பிரதீப் அவரது தந்தையிடம் செல்போன் மூலம் கூறி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.கொலை குறித்து வீட்டின் உரிமையாளர் பொலிஸிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், பிரதீப்பை தீவிரமாக தேடி வந்த பொலிசாருக்கு, அவர் தப்பிச் செல்ல Nangloi ரயில் நிலையத்தில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.Nangloi ரயில் நிலையத்தில் தொடரந்து இரண்டு நாட்கள் தீவர கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசார், பிரதீப்பை கைது செய்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையில் 8000 பேர் ஓய்வு பெற வாய்ப்பு இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரியும் 8000 பேர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஓய்வானது குறித்த பணியாளர்களின் சுயவிருப்புடனே நடைபெறுவதாக இலங்கைபோக்குவரத்து சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த தனசிறி பாலசூரியதெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் மறு ஒழுங்கமைப்பு திட்டத்தின் கீழ் இதுநடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தமது விருப்பின் பேரில் ஓய்வு பெற்று செல்லும் பணியாளர்களுக்கு இலங்கைபோக்குவரத்து சபையினால் இழப்பீட்டு பணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைவான சுற்றுநிரூபம் ஒன்று போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த சுற்றுநிரூபத்தின் படி தன்னார்வ பணியாளர்களும், பஸ்சாரதிகள், நடத்துனர்கள், பொறியிலாளர்களும் ஓய்வு பெறும் பணியாளர் வரிசையில்உள்ளடக்கப்படவில்லை என்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் குறித்த ஓய்வுக்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 30ஆம் திகதி வரைபெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலாவ இராணுவம் முகாமில் பரவிய தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்த பகுதியில் புகைமூட்டம் தொடர்ந்தும் நிலவுகின்றது.
குறித்த பகுதியில் காணப்படும் புகையை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும் என சூழல் நலன்கள் , உடல்நலன் மற்றும் உணவு பராமரிப்பு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.இதேவேளை, தீ பரவிய பகுதிகளில் மூடாத கிணறுகள் காணப்படுமாயின் அவற்றினை துப்பரவு செய்த பின்னரே பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சாவக்கச்சேரி – பேரம்பலம் வீதியின் பெரியமாவடி பகுதியில் வீடு ஒன்றின் நுழைவாயில் மீது இடி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.06) அதிகாலை வேளையில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டின் நுழைவாயில் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. மேலும் இந்த சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை, பாண்டிருப்பினை சேர்ந்த தமிழ் யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனினும், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக யுவதியின் காதலன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யுவதியின் காதலன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த யுவதியும் மட்டக்களப்பு, பெரியகல்லாறை சேர்ந்த இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இக்காதலுக்கு யுவதியின் பெற்றோர் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், பின்னர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த யுவதியை பெற்றோர் சித்திரவதை செய்து வந்துள்ளதாகவும், அது தொடர்பிலான குறுஞ்செய்திகளை தனக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் யுவதியின் காதலன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுவதி மரணிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தன்னுடன் குறித்த யுவதி உரையாடியதாகவும் அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
குளித்து விட்டு வந்து கதைப்பதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தின் பின்னர், தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் குறித்த யுவதியின் சகோதரியொருவர் ஏதோ சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த யுவதியின் உயிரிழப்பிற்கு காதலனின் அழுத்தம் காரணம் என பெற்றோர் தெரிவித்துள்ள நிலையில் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்லாந்தில், வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும் அரசே சம்பளம் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டனர்.
உலகின் செல்வம் மிகுந்த ஐரோப்பிய நாடான சுவிஸ்லாந்து, புதுமையான திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, அந்நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வேலைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் மாதந்தோறும், 1.70 லட்சம் ரூபாயை, சம்பளமாக அரசே வழங்கும், குழந்தைகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
வறுமையை ஒழிக்கும் நோக்குடன், அந்நாட்டில் சில அறிஞர்கள் இத்திட்டத்தை முன்வைத்தனர். அரசும் அந்த திட்டத்தை ஏற்றது. எனினும் அங்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதற்கும், பொதுமக்களின் ஒப்புதல் அவசியம்.
எனவே இதற்கு ஒப்புதல் கோருவதற்கான பொது வாக்கெடுப்பு , அந்நாட்டில் நேற்று நடந்தது.ஆனால், ‘இந்த சம்பள திட்டம் வேண்டாம்’ என, மக்கள் நிராகரித்து விட்டனர்.
வாக்குப் போட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் வருமாறு:
சுவிஸ்லாந்தில், 3 சதவீதம் பேர் மட்டுமே வேலையின்றி உள்ளனர். அவர்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
அதுபோலவே, சாதாரண வருமானத்தை ஈட்டும் மக்களுக்கு அங்கு சமூக திட்டங்கள் உள்ளன. புதிய சம்பள திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிதி நெருக்கடியை சமாளிக்க, அரசு, வரியை உயர்த்தும். தொழில் நிறுவனங்களுக்கான வரியும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் மறைந்து, வேலைக்கு ஆள் இல்லாத சூழல் உருவாகும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் தான், மக்கள் இந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.
முதல் நாடு:
மக்களின் சமூக பாதுகாப்பிற்காக, குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசே சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்த முதல் நாடு, சுவிஸ்லாந்து.
பின்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இந்த திட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றன. இருப்பினும் அது தொடக்க நிலையில் தான் இருக்கிறது.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களும் இன்று மூடப்படவுள்ளன.
கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமின் களஞ்சியசாலையில் இடம்பெற்ற திடீர் வெடிப்பு காராணமாக ஏற்பட்ட தீப்பரவலை அடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமாலை 5.45மணியளவில், முதலாவது குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதையடுத்து, ஆயுதக் கிடங்கு ஒன்று தீப்பற்றிய எரியத் தொடங்கியது.
அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதால், அருகில் இருந்த மற்றொரு ஆயுதக் கிடங்கிலும் வெடிவிபத்து ஏற்பட்டது.
இங்கு கனரக ஆயுதங்களுக்கான வெடிபொருள்களே அதிகளவில் சேமிக்கப்பட்டிருந்ததால், பாதிப்பும் இழப்புகளும் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்திடம் உள்ள மிகப் பெரிய ஆயுதக் கிடங்குகளில், சலாவ முகாம் ஆயுதக் கிடங்கும் ஒன்றாகும்.
இந்த விபத்தை அடுத்து, ஏற்பட்ட தீயிணை அணைப்பதற்கு, தீயணைப்புப் படையினரால் நெருங்கவே முடியாதிருந்தது. இதனால், தீ தானாகவே அணையும் வரை அவர்கள் காத்திருக்க நேரிட்டது.
இந்த வெடிவிபத்தினால் ஏற்பட்ட நிலைமைகளை தரையில் இருந்து கண்காணிக்க முடியாததால், சிறிலங்கா விமானப்படையின் ஒரு ஆளில்லா வேவு விமானம் மற்றும் பி-200 பீச்கிராப்ட் கண்காணிப்பு விமானம் ஆகியன தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறுசிறு உபாதைக்குள்ளான 39 பேர் சிகிச்சையின் பின் வைத்தியசாலையை விட்டு வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்குள் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என இராணுவப் பேச்சாளர் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து மாதங்களில் முகநூல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இணையத்தை பிழையாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
925 முறைப்பாடுகளில் சுமார் 95 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி குற்றச் செயல் விசாரணைப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்டவர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில் முகநூல் கணக்குகள் உருவாக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
காதலன், காதலி அல்லது நண்பர்களுக்கு இடையிலான பிணக்குகள் முகநூல் வழியாக மோசமாக பிரதிபலிப்பதாகவும், ஒருவரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் புகைப்படங்கள் தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய சமூக ஊடகங்களை பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரநாயக்க பகுதி பாரிய மண்சரிவிற்கு உள்ளாகி தற்போது அமைதியான நிலைக்கு திரும்பியுள்ள சந்தர்ப்பத்தில், மீண்டும் தற்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம் பதிவாகியுள்ளது.
அதாவது 14 வயதுடைய சிறுமி ஒருவர் இரண்டு வார காலப்பகுதிக்குள், இரண்டு காதலர்களுடன் வீட்டை விட்டு சென்று, இருவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் அரநாயக்கா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சிறுமியின் 16 மற்றும் 19 வயதான இரண்டு காதலர்களும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 22 ஆம் திகதி 16 வயது காதலனுடன் வீட்டை விட்டுச் சென்ற சிறுமி, எப்பாவல பிரதேசத்தில் மறைந்திருந்த போது அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதன் காரணமாக குறித்த 16 வயது சிறுவன் மே மாதம் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்திற்குள் முதல் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரண்டாவது காதலனுடன் குறித்த சிறுமி மீண்டும் வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
இரண்டாவது காதலனான 19 வயது இளைஞனுடன் மீண்டும் வீட்டை விட்டுச் சென்ற குறித்த சிறுமி தபாரவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது மீண்டும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில் இரண்டாவது காதலனாலும் குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது காதலனையும் கைது செய்து ஜூன் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியின் இவ்வாறான செயற்பாடுகளால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் அதிர்ச்சியிலும், கோபத்துடனும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததால் அவரது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ராசா றமணி என்பவர் நேற்று முன்தினம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று காலையில் மரணமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வைத்தியர் ஜெயவர்த்தன மற்றும் கிளிநொச்சி மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி க.திருலோகமூர்த்தி ஆகியோரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின் உடல் யாழ் போதான வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஓரளவு சாதரண நிலைமைக்கு திரும்பிய நிலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நோயாளி இரவு மீண்டும் சுகயீனம் காரணமாக அவதிப்பட்டுள்ளார் என்றும் ஆனால் வைத்தியசாலை அதிகாரிகள் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இதனாலேயே அவர் இறந்துள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மா.ஜெயராசா அவர்களிடம் கேட்ட போது, வைத்தியசாலையின் பெண் பரிசோதகர் அவசர சிகிச்சை பிரிவில் மூளைக் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட வேளை மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு, உடல் யாழ் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.