ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, வடஇந்தியாவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இருந்து சுமார் 256 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது, இந்துகுஷ் மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதுதொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
கட்டிடங்கள் குலுங்கியதை தொடர்ந்து அவர்கள் வேகமாக கட்டிங்களை விட்டு தெருவிற்கு ஓடிவந்துள்ளனர். பாகிஸ்தானில் சேதம் குறித்தான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானிலும் மின்சார மற்றும் தொலைதொடர்பு சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுடெல்லி, குர்கான், அரியானா, சண்டிகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து அச்சமடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர், மேலும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் ஒருசில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், சண்டிகார், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி சேவை தடைபட்டுள்ளதடன் மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் 2005 ஆம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 86,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான், இந்தியா, நிலநடுக்கம், பாகிஸ்தான்