சிறிவர்த்தன சிறந்ததொரு தெரிவு : மத்தியூஸ்!!

Angelo-Mathews

இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறி­வர்­தன சிறந்­த­தொரு தெரி­வென்று பாராட்­டி­யுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ்.

மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­மு­டிந்த 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்­றி­யது.

ஏற்­க­னவே பாகிஸ்தான் மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்­தி­ருந்த நிலையில், மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான டெஸ்ட் தொடரை கைப்பற்­றி­யி­ருப்­பது விசேட அம்­ச­மாகும்.

இந்தத் தொடரின் இரண்டா­வதும் கடை­சி­யு­மான போட்டி கொழும்பு பி.சரா கிரிக்கெட் அரங்கில் நடை­பெற்­றது. இதில் இலங்கை அணி 72 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில்
வெற்­றி­பெற்­றது.

இந்­தப்போட்­டியில் மிலிந்த சிறிவர்­தன முதல் இன்­னிங்ஸில் 68 ஓட்­டங்­களைப் பெற்றார். இதுதான் இலங்கை அணிவீரர் பெற்­றுக்­கொண்ட அதிகூ­டிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

அதேபோல் 2 விக்­கெட்டுக்­க­ளையும் வீழ்த்­தினார். இரண்­டா­வது இன்­னிங்ஸில் சிறி­வர்­தன 42 ஓட்­டங்­க­ளையும் 3 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்தி இலங்கை அணி
யின் வெற்­றிக்கு வித்­திட்டார்.

இவரின் செயற்­பாடு குறித்து கருத்து தெரி­வித்த இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ்இ துடுப்­பாட்­டத்­திலும்இ பந்­துவீச்­சிலும் அதேபோல் களத்­த­டுப்­பிலும் சிறப்­பாக செயற்­ப­டு­கிறார் சிறி­வர்­தன.

இவர் அணிக்கு மிகச் சரி­யா­னதொரு தெரிவு. ஒருநாள் போட்­டி­யிலும் அதேபோல் டெஸ்ட் போட்­டி­யிலும் சிறப்பாக விளை­யாட கூடி­ய­வ­ ராக இருக்­கிறார். அவர் தொடர்ந்தும் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சிறந்த வீரராக பிர காசிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

மரத்தில் விழுந்த மாணவனின் கழுத்துப் பகுதியில் புகுந்த இரும்புத் துண்டு!!

boy

ஹொரணை பிரதேசத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவரின் கழுத்துப் பகுதியில் கம்புத்துண்டொன்று குத்தியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழுத்துப் பகுதியில் குத்திய கம்புத்துண்டொன்று நெஞ்சுப் பகுதி வரை ஊடுருவியுள்ளது. வலியால் துடித்த மாணவன் அயலவர்களால் உடனடியாக ஹொரணை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான்.

எனினும் மிகவும் மோசமான காயம் ஏற்பட்ட நிலையில் இருந்த மாணவனுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லாத நிலையில் மாணவருக்கு முதலுதவி அளித்து, உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளார்.

மாணவன் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிரமான சத்திரசிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கட் வீரர் அமித் மிஸ்ரா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!!

Misra

இந்திய கிரிக்கட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த மாதம் இந்திய கிரிக்கட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூரில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த தோழியை தாக்கியுள்ளார்.

இதில் தான் தாக்கப்பட்டதாக மிஸ்ராவின் பெண் தோழி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய பொலிசார், மிஸ்ராவின் மீது வழக்குப்பதிவு செய்து, ஒரு வாரத்துக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மிஸ்ராவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அமித் நேற்று பெங்களூர் பொலிசார் முன்பு ஆஜரானார். இதன்போது காலை 10.45 மணி முதல் 3 மணிநேரம் பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு பொலிசார் அவரை கைது செய்து சிறிது நேரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நவம்பர் 13ம் திகதி காலி கடற்பரப்பில் வானில் இருந்து விழும் மர்மப் பொருள்!!

World

நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்தப் பொருள் சுமார் 7 அடி அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள் என்னவென்பது தொடர்பில் முதலில் கண்டறியப்படாத நிலையில் பின்னர் வானியலாளர்கள் அது தொடர்பில் கண்டுபிடித்துள்ளனர்.

இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட அப்பலோ விண்கலத்தின் பாகம் அல்லது அதற்குப் பின்னர் விண்ணில் செலுத்தப்பட்ட லூனா விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

WT1190F என பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் கடலில் விழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றும் நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!

Rain

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (28.10) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று காலைமுதல் தொடர்ச்சியாக மழை!!(படங்கள்)

வவுனியாவின் பலபகுதிகளிலும் நேற்று காலை  தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது .நாடு தழுவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையின்  தாக்கம் வட பகுதியிலும் நீடித்து வருகிறது .

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வவுனியா நகரம் மற்றும் ஓமந்தை, கனகராயன்குளம், செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இன்று(2710.2015) காலை முதல் பிற்பகல் இரண்டு முப்பது மணிவரை 30 mm  மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியிருப்பதாக  வளிமண்டலவியல் திணைக்களத்தின்  புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .

இதே போன்று முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி  ஆகிய மாவட்டங்களிலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது .

-பிரதேச நிருபர் –

12047312_1083003915052894_145986506_n 12047417_1083003821719570_1366061103_n 12178270_1094552343898051_1243846496_n 12179215_1094552217231397_1535758913_n 12188430_1094552167231402_467067698_n

 

வவுனியா வேப்பங்குளம் சனசமூக நிலையத்திற்கு உதவி!!

வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து தோணிக்கல் அம்மன் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்களை வழங்கினார்.

மேலும் வேப்பங்குளம் சனசமூக நிலையத்திற்கு நூலகத்திற்கான தளபாடங்களும் வழங்கப்பட்டது.

வவுனியா உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் 26.10.2015 அன்று நடைபெற்ற இன் நிகழ்வில் சனசமூக நிலைய தலைவர் செயலாளரிடம் வடமாகாண சபை உறுப்பினர் திரு. ம.தியாகராசா அவர்கள் மற்றும் வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.P.M.A.அசங்ககாஞ்சனகுமார (P.M.A.Asankakanchanakumara) ஆகியோர் வழங்கினர். இன் நிகழ்வில் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.

2 3 4 5 10 IMG_5808 IMG_5820 IMG_5822 IMG_5825

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்தில் 275 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்பட்டுள்ளன. 7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்துகுஷ் மலைப் பிராந்தியத்திலுள்ள ஃபைசலாபாத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வின் தாக்கம் பாகிஸ்தான், இந்தியாவின் வடபிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது.

பின்தங்கிய பகுதிகளே நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய மலைப்பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் மிகவும் ஆழமான பகுதியில் ஏற்பட்டதால் அதன் தாக்கம் மிகக் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

பாகிஸ்தானின் வட பிராந்தியத்திலேயே அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை 214 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துல்ஹுவா மாகாணத்தில் மாத்திரம் 154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்கானின் டக்ஹார் மாகாணத்திலுள்ள பெண்கள் பாடசாலையின் வகுப்பறையில் இருந்து வெளியேற்ற முற்ப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் 12 மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், பயணத்தை இரத்துச்செய்து நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானின் மூன்று மாகாணங்களில் நிலநடுக்கம் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசாங்கம் கோரியுள்ளதாக ஆப்கான் தலைமை நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தை அடுத்து லாகூரில் தொலைத் தொடர்புகள் தூண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்திய தலைநகர் புதுடில்லியில் வீதிகளுக்கு மக்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் சேதங்கள் ஏற்பட்டிருக்குமாயின் அதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி பணித்துள்ளார்.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தலைநகரங்களிலுள்ள கட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், பல பகுதிகளுக்கான தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 75 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 9000 பேர் உயிரிழந்ததுடன், 9 இலட்சம் பேரின் வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

11 12 13

பிரெஞ்சுப் பெண்ணின் பங்களிப்பில் ஓவியங்களால் அழகுபடுத்தப்படும் காலி சிறைச்சாலை!!

galle

பிரான்சின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் ரோஸ் ரொபின்சன் எனும் பெண்மணி, காலி சிறைச்சாலை சுற்றுச் சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பொதுமக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மற்றும் கராப்பிட்டிய சிறுவர் மருத்துவமனை போன்றவற்றை தனது ஓவியங்களால் அழகுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் காலி சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொண்ட வேண்டுகோளின் பேரில் அவர் தனது குழுவினருடன் தற்போது காலி சிறைச்சாலை சுற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் வகையில் ஓவியங்கள் தீட்டும் பணியை ஆரம்பித்துள்ளார்.

சித்தப்பாவை காயப்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது!!

தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை ஹற்றன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து, ஹற்றன் நகரிற்குச்
சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

உடலை முழுமையாக மூடும் வகையிலான ஹபாயா ஒன்றை அணிந்துவந்த நபரே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த காயமடைந்த நபரின் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளதோடு, கொள்ளையிட்ட பணத்தையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 31 வயதுடைய யுவதி ஒருவர் என்பதுடன், காயமடைந்த நபரின் மனைவியின் சகோதரியுடைய மகள் எனவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்து கொண்டிருந்த வேளையில் குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மையை தோற்றுவித்ததோடு, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் 6 மாதகாலமாக வீட்டுப் பணிப்பெண்ணான சவுதி அரேபியாவில் தொழில்செய்துள்ளதோடு, சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நாடு திரும்பியவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபராக குறித்த யுவதி, மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தான் அதிகளவான கடன் சுமைக்கு முகங்கொடுத்திருப்பதால் இந்த பணத்தை கொள்ளையிட திட்டமிட்டதாக சந்தேக நபரான ராசையா நிலூஷா பொலிஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும், அடவு வைத்திருக்கும் அதிகளவான நகைகளை மீட்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இந்த பணத்தை வங்கியிருந்து பெற்றதாக காயமடைந்த நபரின் மனைவி கூறியுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 12 13

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை புறக்கணிப்போம் : பாகிஸ்தான் எச்சரிக்கை!!

Pak

இந்­திய கிரிக்கெட் அணி எங்­க­ளுடன் விளை­யா­டா­விட்டால் அடுத்த வருடம் இந்­தி­யாவில் நடைபெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணப் போட்­டி­களை புறக்­க­ணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது.

எங்­க­ளுடன் செய்து கொண்ட ஒப்­பந்­தப்­படி இந்­திய கிரிக்கெட் அணி (டிசம்­பர்–­ஜ­ன­வ­ரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்­க­ணித்து விடுவோம் என்று தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்­டியில்..

பாகிஸ்­தா­னுடன் கிரிக்கெட் போட்­டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்­து­வித வாய்ப்புகளையும் இந்­தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறி­வு­ரையை கேட்டு அடுத்­த­கட்ட முடிவெடுப்போம்.

அப்­ப­டி­யொரு சூழலில் இந்­தி­யாவில் நடக்கும் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்தில் பங்­கேற்க வேண்டாம் என்றே எங்­க­ளது அரசு அறிவுறுத்தும் என்றே நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை!!

Salary

தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை இரண்­டா­யி­ரத்து ஐந்நூறு ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. சென­வி­ரத்ன தெரி­வித்தார்.

தேசிய தொழில் பாது­காப்பு வாரத்­தை­யொட்டி தொழில் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்..

அரச ஊழி­யர்­க­ளுக்கு கடந்த கால கட்­டங்­களில் பல சந்­தர்ப்­பங்­களில் சம்­பள அதி­க­ரிப்பு வழங்கப்பட்­ட­போதும் தனியார் துறை­யி­ன­ருக்கு அந்த சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை.
இதனால் அவர்கள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ளமையால் அவர்­க­ளுக்கு 2 ஆயி­ரத்து 500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுப்பேன்.

தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை 2500 ரூபாவால் அதி­க­ரிக்­கு­மாறு தனியார் துறை­யி­ன­ரிடம் பல தட­வைகள் கோரிக்கை விடுத்தபோதும் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. தனியார் துறையின் சில நிறுவ­னங்கள் மாத்­தி­ரம்தான் அரசின் கோரிக்­கையை ஏற்றுக்கொண்­டன.

இதன் அடிப்­ப­டையில் சில முத­லா­ளிமார் 1000 ரூபா­வி­னாலும் மேலும் சில நிறு­வ­னங்கள் 500 ரூபா­வி­னாலும் சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுத்­துள்­ளனர்.

ஆகை­யினால் விசேட சட்­ட­மூலம் ஒன்றின் மூலம் இந்த சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். அதே­போன்று தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம் என்றார்.

டேவிட் மில்லரின் காதல் வலையில் விழுந்த பிரீத்தி ஜிந்தா!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர், பொலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்த நிலையில் அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர், பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பொலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இருவரும் மும்பையில் ஹொட்டல் ஒன்றில் இரவு உணவருந்த வந்திருந்தனர். அப்போது வெளிப்படையாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் அணியின் சக உரிமையாளரும், காதலருமான நெஸ் வாடியுடன் ஏற்பட்ட மோதலில் அவரை விட்டு பிரிந்தார்.

இந்நிலையில் 40 வயதான பீரித்தி ஜிந்தா சமீபத்தில் தனது வாழ்க்கையில் சிறந்த ஒரு நபர் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை. அவர் டேவிட் மில்லராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பீரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் டேவிட் மில்லர், 6வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்தில் 101 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் அவரை ‘கில்லர் மில்லர்’ என அழைப்பதுண்டு.

1 2 3

பாடசாலைகளுக்கருகில் போதைவஸ்து விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்கவும்!!

Police

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சிறுவர் பதுகாப்பு வாரம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

“பிரகாசமான சிறுவர் உலகிற்கு பாதுகாப்பான நாளை” என்ற தொனிப் பொருளில் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வார காலத்தில் பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலை சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மருந்துகள் விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் பின்னேர வகுப்புக்களுக்கு அருகில் போதை மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பாக கடந்த காலங்களில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க அரசாங்கம் முடிவு!!

Ranil

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நீதி ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரும் காவல்துறை தலைவர் மற்றும் சட்டமா அதிபர் அலுவலக உயரதிகாரிகளும் பங்குபற்றியுள்ளனர்.

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தன் கொலை தொடர்பாக விசாரணை தேவை : ஜி.ரி.லிங்கநாதன்!!

GT

வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவனபவானந்தம் சண்முகநாதன் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போது கொல்லப்பட்டவர்களை இனம் கண்டு கொள்வதற்காக நாடாளுமன்ற குழு ஒன்றை தாங்கள் நியமிக்க எடுத்த முடிவை மனதார பாராட்டுகின்றேன்.

இந் நிலையில் வன்னி மாவட்டத்தை சேர்ந்த துடிப்பு மிக்க அர்ப்பணிப்புமிக்க மக்கள் நலன் சார்ந்து சிந்தித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சரவனபவானந்தம் சண்முகானந்தம் அவரது 3வயது மகன் வக்சலன் ஆகியோரின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களையும் இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகின்றேன் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.