கட்டாரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ அனர்த்தம்- 11 பேர் பலி!!

fire-al-saliyah-QATAR1

கட்டாரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 11 பேர் பலியானதுடன் 12 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.அபு சம்ரா பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ அனர்த்தம் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சல்வா சுற்றுலா திட்டத்திற்காக பணியாற்றும் கம்பனிக்கு சொந்தமான கட்டடத்தில் ஏற்பட்ட அந்தத் தீ அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. கட்டாரில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான குடியேற்றத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் தெற்கு ஆசிய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் மேற்படி தீ அனர்த்தத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி காலமானார்!!

PAR2006012810432

பிரபல உலக குத்துச் சண்டை வீரரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 வது வயதில் காலமானார்.

சுவாசக் கோளாறு காரணமாக அவர் கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே (Cassius Marcellus Clay) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்த பின் தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார்.

1942ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி பிறந்த தி கிரேடேஸ்ட் (The Greatest), தி லூயிவிள்ளே லிப் (The Louisville Lip) என்ற பல்வேறு பட்டப் பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.

இவர் கலந்து கொண்ட 61 குத்துச் சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 05 போட்டிகளிலேயே தோல்வியடைந்துள்ளார்.

விடுமுறை குறையும் ஆண்டாக 2017!!

Sri-Lanka-2016-Holiday-Calendar

2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, நேற்றையதினம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில், 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தனர்.

ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில் 19 நாட்களும், தாய்லாந்தில் 20 நாட்களும் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாகக் காணப்படுகின்றன. அத்துடன், அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பொலிஸ் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்!!

vavuniya hospital

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று(04.06.2016) காலை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் நோக்கிப் பயணித்த பொலிஸ் வாகனமொன்று ஈச்சங்குளத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த துவிச்சக்கரவண்டி மீது மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த செ.அன்தன்லால் (22வயது) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அதிரடி வசதி!!

Facebook Search

இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன. இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும்.

ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது.

Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும். தவிர இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.

இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் கைப்பேசி அறிமுகம்!!

Android Mobile

உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் கைப்பேசி லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம் ’சோலாரின்’ (Solarin) என்ற பெயரில் அன்ட்ரொய்ட் கைப்பேசியை 14,000 அமெரிக்க டொலர்கள் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் இராணுவ அமைப்புகள் பயன்படுத்தும் அதி நவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த கைப்பேசி வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான கைப்பேசிகளில் இல்லாத அளவுக்கு, எந்த விதமான சைபர் தாக்குதல்களையும் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் சேர்ந்து பாலியலில் ஈடுபடுமாறு மகளை பலவந்தப்படுத்திய தாய் : மகளின் துணிகர முடிவு!!

Paaliyal

கர்நாடகாவில் தன்னுடைய தாய், அவருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு பலவந்தப்படுத்தி வருவதாக 16 வயது சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தூர் தாலுகாவின் கேஜ்ஜலகேரே பகுதியில் வசித்து வருபவர் நாகாமா, இவரின் கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார், நாகாமாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள்.

வறுமையால் இரு குழந்தைகளும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். அன்றாட தேவைகளுக்காக நாகாமா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தாயின் கேவலமான வருமானத்தில் உயிர்வாழ மறுத்த, நாகமாவின் 16 வயதான பெண் குழந்தை, 6 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து சம்பாதித்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாகாமா மற்றொரு பாலியல் தொழிலாளியுடன் சேர்ந்து, ஆடைத் தொழிற்சாலைக்கு சென்று அவருடைய மகளை, தன்னுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு பலவந்தப்படுத்தியுள்ளார்.

ஆனால், மகளே அதற்கு மறுத்துள்ளார், இருவருக்கும் இடையே மோதல் எற்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள் மகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவயிடத்திற்கு விரைந்து இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்னர், மகளை பாலா மந்திராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் ‘டெப்’ வழங்கப்படும் : பிரதமர் அறிவிப்பு!!

Tab

நாட்டிலுள்ள சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் ‘டெப்’ வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு நிவிஸ்டர்ட் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்று கல்வியை வெறும் கடதாசியில் மட்டும் பெற்றுவிட முடியாது.

புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் கல்வியைப் பெறுவதே இன்றைய மாணவர்கள் விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அனைவரினதும் கைகளிலும் கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. அநேகர் அதை குறுந்தகவல் அனுப்பவும்,செல்பி எடுக்கவுமே பயன்படுத்துகின்றனர்.

ஆனால் கைத்தொலைபேசியானது எமக்கு கல்வி கற்பதற்குரிய சிறந்த மார்க்கம் என்றும் பிரதம் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த நாட்டில் உள்ள சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் டெப் வழங்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்!!

Water

கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையில் நீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பேராதனை நீர் வழங்கல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பும் நீர் கட்டணங்களை உயர்த்த ஓர் பிரதான ஏதுவாகும் என அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் நீர்க் கட்டணம் உயர்த்தப்படாது என அரசாங்கம் முன்னதாக திட்டவட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி மரணம்!!

Dead in water

வைரவர் பூசைக்கு பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி மரணம்நிகழ்ந்த சம்பவம் நேற்று அம்பாறை மாவட்டம், அன்னமலையில் இடம்பெற்றுள்ளது .

நேற்று மாலை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்னமலை தாமரைக் குளத்தில்பூப்பறித்துக் கொண்டிருந்த அன்னமலை இரண்டை சேர்ந்த 45 வயதுடைய இரண்டுகுழந்தைகளின் தந்தையான சிற்றம்பலம் அருளம்பலம் என்பவரே குளத்தில் மூழ்கிசடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வீட்டில் இடம்பெறவிருந்த வைரவர் பூசைக்கு தாமரைப் பூப் பறிக்க சென்றவேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

நேற்று இரவு 7.30 மணிக்கு சடலம்மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சவளக்கடை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் அதிசொகுசு விமானம் : மெல்போர்னில் இருந்து லண்டன் செல்ல 11 மில்லியன் ரூபா!!

Ethihad

நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் சொகுசுடன் உலகிலேயே விலை உயர்ந்த விமானப் பயணத்தை எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 53 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபூ தாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னுக்கு புதிய ஏர்பஸ் ஏ380 ரக சொகுசு விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த விமானத்தில் ‘தி ரெஸிடென்ஸ்’ (இல்லம்) என்ற சிறப்பு பிரிவின்கீழ் தனியாக டிக்கெட்கள் விற்கப்படுகிறது. 75 ஆயிரம் டொலர்கள் (சுமார் 11 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான கட்டணத்தை செலுத்தி இந்த டிக்கெட்டில் பயணம் செய்பவர்களுக்கு 3 அதிசொகுசு அறைகளுடன் 5 நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.

இந்த விலையுயர்ந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் விருந்தினரை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

அதாவது, அதிநவீன பாத்ரும், 32 அங்குல பிளாட் எல்.சி.டி. டிவி, தோலினால் உருவாக்கப்பட்ட டபுள் சோபா ஆகியவையும் சொகுசு அறைகளில் இடம்பெறுகின்றன.

இவ்வகையில், லண்டனில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய எத்திஹாட் சொகுசு விமானம் கடந்த வியாழக்கிழமை மெல்போர்ன் நகரில் தரை இறங்கியது.

இதுதவிர, இந்த விலையுயர்ந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் விருந்தினரை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

அதாவது, அதிநவீன பாத்ரும், 32-இன்ச் பிளாட் எல்.சி.டி. டிவி, இரண்டாக மடிக்கும் வகையிலான டைனிங் டேபிள்கள், தோலினால் உருவாக்கப்பட்ட டபுள் சோபா ஆகியவையும் சொகுசு அறைகளில் இடம்பெறுகின்றன.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு கோரிக்கை!!

Auto

வாடகை அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளன.

வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த யோசனையை முன்வைத்ததாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்க செயலாளர் ரி.ஆர்.ஆர். பள்ளி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு தங்களின் சார்பாக யோசனை முன்வைக்கப்பட்டதாக முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டி சங்கங்களின் இந்த கோரிக்கைகள் குறித்து வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்தபோது..

முச்சக்கர வண்டி சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் சிறந்தவையாகும் என்றும், அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு பாடசாலை செல்ல பயமாக இருக்கிறது : வவுனியாவில் பாதிக்கப்பட்ட சிறுமி கதறல்!!

sexual-abuse

வவுனியா நெடுங்கேணி ஒலுமடுவில் கடந்த 27.05.2016 அன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி வவுனியா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ள போதிலும் தொடர்ந்து பாடசாலைக்கு செல்ல மறுத்து வருவதுடன் எனக்கு பாடசாலை செல்ல பயமாக இருக்கிறது, அவ்வாறு நான் பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் எனது பாடசாலையின் முன் உள்ள தேநீர் கடையை அங்கிருந்து அகற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அவ்வூர் மக்கள்,

2009 ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின் நெடுங்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது துஸ்பிரயோக சம்பவமாக இது பதியப்பட்டுள்ளது. யுத்தத்தின் காரணமாக மோசமாக பாதிப்பிற்குள்ளான எமது ஊரில் அதிகாரிகளுடன் கதைப்பதற்கே எமது மக்கள் பயப்படுகிறார்கள்.

இதன் காரணமாக ஒலுமடு கிராம மக்கள் வாய் மூடி மொனிகளாக இருப்பதாகவும் அச்சத்துடன் தெரிவிக்கும் மக்கள் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கருதப்படும் தேநீர்க்கடையானது தொடர்ந்தும் சட்டத்துக்கு புறம்பான லேகியம் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

துஸ்பிரயோகம் மேற்கொண்டவராக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்நிலைப்படுத்த திட்டங்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஒருசில அதிகாரிகளின் நேர்மையற்ற நடவடிக்கை காரணமாக நல்ல அதிகாரிகளையும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு எங்கள் பெண் பிள்ளைகள் நிம்மதியாக பாடசாலை செல்ல வேண்டுமானால் பாடசாலையின் முன் அமைந்துள்ள தேநீர்க்கடை மூடப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.

வவுனியாவில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு!!

 
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பத்தினார் மகிழங்குளத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (02.06.2016) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டினை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதலில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

news (1) news (2)

வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் 12 இலட்சம் கப்பம் கோரிய நபர் கைது!!

Sathiyalingam

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு தொலைபேசி மூலம் 12 இலட்சம் ரூபா கப்பம் கோரிய சந்தேநபரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த 20.05.2016ம் திகதி வடமாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன் 12 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இம் முறைப்பாட்டினை விசாரணை செய்த பொலிசார் இன்று வவுனியா புதுக்குளத்தை சேர்ந்த மாடசாமி சுதாகரன் என்பவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விவசாய அமைச்சினால் விவசாய இயந்திரங்கள் வழங்கல்!!

 
வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர் கழகங்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சினால் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா விவசாயப் பண்ணையில் இன்று (03.06.2016) இடம்பெற்றது.

விவசாயப் பண்ணையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக்ரஞ்சன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராஜா, ஆர்.இந்திராசா, அ.ஜெயதிலக, மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள், விவசாயிகள், இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண விவசாய அமைச்சிற்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் அறுவடை இயந்திரங்கள், நவீன முறையில் நாற்றுநடும் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இன் நிகழவில் வடமாகாண விவசாய அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்..

எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 410 மில்லியன் ரூபா மாத்திரமே. இன் நிதியையே ஐந்து மாவட்டங்களுக்கும் பிரிக்கப்பட வேண்டும். இதில் 240 மில்லியன் விவசாய திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டு அதில் 40 மில்லியன் ரூபாவை வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரையில் உணவின் உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். இவ்வாறான இயந்திரங்களை வழங்குவது விவசாயத்துறைக்கு நன்மை தரக்கூடியது என்று தெரிவித்தார்.

DSC00833

DSC00838

IMG_0999

IMG_1000

IMG_1002

IMG_1017

IMG_1018

IMG_1024

IMG_1031