வவுனியாவில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள்!!

 
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் இன்று(03.06.2016) காலை வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜெயதிலக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தற்போதைய கோட்டக்கல்வி அதிகாரியுமான எம் பி. நடராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா, பாடசாலை அதிபர், அசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உலக சுற்றுச் சூழல் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்துரைகளையும் மாணவர்கள் வழங்கியிருந்தனர்.

அத்துடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் அதிதிகளால் நாட்டப்பட்டது.

DSC04347 DSC04355 DSC04363 IMG_1092 IMG_1101 IMG_1106 IMG_1113

வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ் : பெருமளவில் மக்கள் இடம்பெயர்வு!!

 
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக பெருமளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாரிஸ் நகரை அண்மித்துள்ள ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளமையினால் குடியிருப்புகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

பிரான்ஸ் நகரான லோங்ஜூமோ பகுதியில் இருந்து இதுவரை 2,000 இற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் பெருமளவிலான மக்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக வௌ்ளப் பெருக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மோசமான வௌ்ளப்பெருக்கு அனர்த்தமாக தற்போதைய வானிலை பதிவாகியுள்ளதாக பிரான்ஸின் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

பிரதேசவாசிகள் மற்றும் வௌ்ள அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன் படகுகளின் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

லோரி மற்றும் செய்ன் ஆற்றக்கரையோரப்பகுதிகளில் வசித்த மக்களின் செல்லப்பிராணிகள் அவர்களின் குழந்தைகள் படகுகள் மூலம் மத்திய பிரான்ஸிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் சில நாட்களுக்கு பிரான்ஸின் குறித்த சில பகுதிகளில் மக்கள் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்கும் வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மனுவல் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

1960 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிரேட் பாரிஸ் எதிர்நோக்கும் பாரிய இயற்கை அனர்த்தமாக இந்த வௌ்ளப்பெருக்கு பதிவாகியுள்ளதாக பிரான்ஸின் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

1 2 4 5 6

வவுனியா நெடுங்கேணியில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்தவர் ஒரு போதைப்பொருள் வியாபாரி : மக்கள் குற்றச்சாட்டு!!

Rape

கடந்தவாரம் வவுனியா நெடுங்கேணி ஒலுமடுவில் 10 வயது பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பிற்கு சென்று வரும்போதே பாடசாலைக்கு முன்பாக சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் 54 வயதுடைய முதியவர் ஒருவரால் கடந்த 27.05.2016 அன்று பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சிறுமியின் தாயார்..

சம்பவதினம் பாடசாலைக்கு உடனடியாக வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைக்கு சென்று சம்பவத்தை ஆசிரியர்களிடம் கேட்டறிந்துகொண்டதாகவும் அதனைத்தொடர்ந்து மகளிடம் விடயத்தை கேட்டபோது அவர் பயத்தில் எதுவும் சொல்லாமல் இருந்ததுடன்,

மகள் உண்மையை கூறினால் அப்பா, அம்மாவின் தலையை வெட்டி உங்களுடைய காணிக்குள் எறிந்துவிடுவேன் என சந்தேக நபர் மிரட்டியதால் மகள் என்னிடம் உண்மையை கூற பயப்பட்டதன் காரணமாக 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிசார் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் மகளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

பாடசாலைச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் குறித்து நெடுங்கேணி சிறுவர் நன்நடத்தை அதிகாரி எஸ்.யுவராஜ்யுடன் தொடர்புகொண்டபோது

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள போதும் வவுனியா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னரே சிறுமி உடல்ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டாரா அல்லது பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளாரா என அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஊர் மக்கள், சந்தேகநபர் மேற்குறிப்பிட்ட தேநீர் கடையில் போதைப்பொருட்களை (கஞ்சா) விற்பனை செய்து வருவதாகவும் இச்செயற்பாடானது அதிகாரிகளின் அனுசரணையுடன் நடைபெற்று வருவதுடன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மறைமுகமாக மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 54 வயது நபர் கைது!!

வவுனியா நெற் இணையத்திற்கு வடமாகாண சபை உறுப்பினரின் 3வது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி!!

Thiyakarasa

வவுனியா மாவட்டத்தின் இணைய சேவைகளின் ஒன்றாக மிளிர்ந்துவரும், நடுநிலையாக எவ்வித அரசியல் நோக்கமும், இலாபநோகமும் இன்றி நடுநிலையாக நல்ல பலசெய்திகளையும் பொதுநிகழ்வுகளையும் உடனுக்குடன் வெளியிட்டு வரும் வவுனியா இணையத்தின் 3வது பிறந்தநாழுக்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் அகம் மகிழ்கின்றேன்.

அத்துடன் இவ் இணையத்தளம் வவுனியா மண்ணில் சாதனை படைக்க காரணமாக இருந்து செயற்பட்டு வரும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் செய்தி சேகரிப்பாளர் அனைவரையும் வாழ்த்தி மேன்மேலும் அவர்கள் பணிதொடர வாழ்த்துகின்றேன்.

வாழ்க வவுனியா நெற் இணையத்தின் பணி.. வளர்க வவுனியா நெற் இணையத்தின் சேவை..

நன்றி

மயில்வாகனம் தியாகராசா
வடமாகாணசபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்

17 அங்குல நீளமான பாதத்தை கொண்டுள்ள இளைஞர்!!

Liu-Huichang

சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் பாதம் 17 அங்குல நீளமானவையாக உள்ளது. இப்பாதம் மேலும் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான லியு ஸுசேங் எனும்இந்த இளைஞன், குழந்தையாக இருக்கும் போதே அரிய வகை நோயொன்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவரின் வலது கால் பாதம் வேகமாக வளரத் தொடங்கியது.

தற்போது 17 அங்குல நீளமாக அப்பாதம் காணப்படுகிறது. இதனால் லியு ஸுசேங் மூட்டு வலியால் அவதிப்பட்டுவருகிறார். இந்த இளைஞனுக்குப் பொருத்தமான பாதணி கடைகளில் இல்லையாம். இதனால், அவரின் பாட்டி ஒருவரே பல வருடங்களாக அவருக்கு விசேட பாதணிகளை தயாரித்து வழங்குகிறார்.

தொழிற்சாலையொன்றில் லியு ஸுசேங் பணியாற்றி வருகிறார். இவரின் பாதத்தை துண்டிக்க நேரிடலாம் என மருத்துவர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். ஆனால், சத்திரசிகிச்சை மூலம் இந்த உபாதையை குணப்படுத்தலாம் என தற்போது மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

சலவை இயந்திரத்துக்குள் தலை சிக்கிகொண்ட விபரீதம்!!

Dfdfdgfgfg

நபர் ஒருவரின் தலை சலவை இயந்திரத்துக்குள் சிக்கிகொண்ட விபரீத சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது. சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சலவை இயந்திரம் இயங்காமல் இருந்தமையால் தனது தலையை உள்ளே போட்டு பழுது பார்க்க முயற்சித்துள்ளார்.

பின்னர் தனது தலையை வெளியே எடுக்க முயற்சித்தார். ஆனால், அவரால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.அவரது நண்பர்களும் முயற்சித்துப் பார்த்து முடியாமல், தீயணைப்புப் படைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 6 பேர் தொடர்ந்து 40 நிமிடங்கள் போராடி அவரது தலையை சலவை இயந்திரத்திலிருந்து வெளியே எடுத்துள்ளனர். சலவை இயந்திரத்தை முற்றிலும் சிறிது, சிறிதாக உடைத்தே அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

 

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்!!

Businesswoman with smart phone

ஸ்மார்ட் கைப்பேசிகளில் வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரிகள், குடும்ப தகவல்கள் போன்றவற்றினை சேமித்து வைக்கின்றோம்.இப்படியான நிலையில் குறித்த கைப்பேசிகள் தொலைந்தால் எப்படி இருக்கும்?

ஆம், அவசர உலகில் டாக்சி, கபேக்கள் போன்றன உட்பட பல இடங்களில் கைப்பேசிகள் தொலைந்து போகின்றன.இவ்வாறு ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான கைப்பேசிகள் தொலைக்கப்படுகின்றன அல்லது களவாடப்படுகின்றன.இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் முகமாக கூகுள் நிறுவனம் அதிரடி வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.அதாவது ஜிமெயில் கணக்கினைப் பயன்படுத்தி சில படிமுறைகள் ஊடாக கைப்பேசி இருக்கும் இடத்தினை தெரிந்து கொள்ள முடியும்.

இது தவிர கைப்பேசியினை லாக் செய்து வேறொருவர் பயன்படுத்தாதவாறு செய்யவும் முடியும்.இவ் வசதி அப்பிளின் iPhone மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய கைப்பேசிகள் என்பவற்றிற்காக தரப்படவுள்ளது.

 

உங்கள் கைப்பேசி தண்ணீரில் விழுந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

iPhone-In-Water
நாம் ஆசை ஆசையாய் வைத்திருக்கும் மொபைல் போன் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிடும். இதில் அதிர்ஷ்டவசமாக தலைதப்பிய போன்களும் உண்டு, அதிகவிலையுடைய போன் அம்போவான கதைகளும் உண்டு.

நாம் என்ன தான் பார்த்து பார்த்து நம்முடைய மொபைல் போனை வைத்திருந்தாலும் கண்டிப்பாக ஒரு முறையாவது அது தண்ணீர் கண்டத்தில் இருந்து தப்பி இருக்கும்.சமீபத்திய ஆய்வு ஒன்றில் 20 சதவீத மொபைல் போன்கள் தண்ணீரால் பாதிக்கப்பட்டு குப்பை தொட்டிக்கு வருவதாக தெரிய வந்துள்ளது. சரி, மொபைலை தண்ணீர் கண்டத்தில் இருந்து எப்படி தப்ப வைப்பது?

உங்கள் போன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டால் தயவு செய்து இந்த செயல்களை செய்யாதீர்கள்.

மொபைல் போனை ஆன் செய்ய வேண்டாம். இது போனில் உள்ள motherboardல் குறைந்த மின்னழுத்தத்தை (short circuit ) ஏற்படுத்தலாம்.மொபைல் உள்ள எந்த ஒரு பொத்தானையும் அழுத்த வேண்டாம். இதுவும் சிக்கலை ஏற்படுத்தும்.சிலர் மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால் போனை நன்றாக குலுக்குவார்கள். இதனால் தண்ணீர் வெளியேறிவிடும் என்று நினைப்பார்கள். ஆனால் தண்ணீர் போனிற்கு உள்ளே செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இது circuit ல் சேதத்தை ஏற்படுத்தவும் செய்யும். இதனால் போனை குலுக்க வேண்டாம்.
மொபைல் தண்ணீர் விழுந்தவுடன் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். சார்ஜ் செய்வதால் போன் நன்றாக வேலை செய்யும் என்ற எண்ணம் ஏற்படாம். ஆனால் அது தவறு.தண்ணீரில் விழுந்த போன் சிறிது வேலை செய்ய தொடங்கியதும், போனில் எந்தவித செயல்பாடுகளையும் செய்ய வேண்டாம்.போன் தண்ணீரில் விழுந்தவுடன் எல்லாம் தெரிந்தது போல் போனை பிரித்து பார்க்க வேண்டாம்.
என்ன தான் செய்ய வேண்டும்?

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தவுடன் உடனடியாக செய்ய வேண்டியது இது தான்.

போன் தண்ணீரில் விழுந்தவுடன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு என போனில் உள்ள அனைத்தையும் எடுத்து விடுங்கள்.போனில் பேட்டரி இருக்கும் பக்கத்தை தரையில் இருக்கும் படி வைத்து விட்டு சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.மற்றபடி தண்ணீரை எடுக்கும் முயற்சியில் உடனே ஊத வேண்டாம், போனில் உள்ள தண்ணீர் வடிய சில மணி நேரங்கள் காத்திருங்கள்.hair drier போன்றவற்றின் மூலம் சூடான காற்றால் போனை சுத்தம் செய்யலாம். இது போனில் உள்ள தண்ணீரை ஆவியாக்கும். hair drier இல்லை என்றால், அது போன்ற ஏதாவது ஒரு சாதனத்தை உபயோகிக்கலாம்.

போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அரிசியில் வைத்தால் சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த முறையும் கைகொடுக்கும்.போனை ஆன் செய்த பிறகு போனின் தொடுதிரையில் பிரச்சனை மற்றும் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் போனை 3 நாட்களுக்கு பிறகு ஆன் செய்து பாருங்கள். அதன் பிறகும் பிரச்சனை நீடித்தால் போனை சரிசெய்யும் இடத்தில் கொடுப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.

மா.கா.பாவிற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா? ஆச்சரியத்தில் கொலிவுட்!!

ma-ka-pa-anand

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் மா.கா.பா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நவரச திலகம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அட்டிப்படம், தீபாவளி துப்பாக்கி என இவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.மேலும், பல சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இவர் கால்ஷிட்டிற்காக காத்திருக்கிறார்களாம்.

 

பரோட்டா நகைச்சுவைக் காட்சியில் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார் என அவரே சொல்கின்றார்!!

Suri

நடிகர் சூரி என்பதை விட பரோட்டா சூரி என்று சொல்ல தான் ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த அளவிற்கு வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சூரி நடித்த பரோட்டா காமெடி காட்சி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் பேசிய சூரியிடம், ஒரு ரசிகர் அந்த பரோட்டா காட்சிக்காக எத்தனை பரோட்டா சாப்பிட்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சூரி ஒரு 17 பரோட்டா இருக்கும் என்று கூறினார்.

 

சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக துபாய் பறந்த சிறுவன் : காரணம் என்ன?

Emirates

சீனாவை சேர்ந்த 16 வயது சிறுவன் துபாய் செல்லும் விமானத்தின் கார்கோ பகுதியில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த ஜூ என்ற சிறுவனே இவ்வாறு பயணம் செய்துள்ளார். சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து துபாய்க்கு சென்ற எமிரேட்ஸ் விமானத்தின் சரக்குப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். விமானம் துபாயை அடைந்த போது தான் சிறுவன் பயணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், துபாயில் பிச்சை எடுத்தால் கை நிறைய காசு கிடைக்கும் என கேள்விபட்டேன், இதனால் துபாய் வர முடிவு செய்தேன். ஆனால் சீனாவில் இருந்து துபாய் வருவதற்கு பணம் இல்லாததால் சரக்கு பகுதியில் ஒளிந்து கொண்டு வந்தேன் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே பொலிஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

 

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கண்காட்சி!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவில் இன்று (03.06.2016) காலை 9.30 மணியளவில் பாடசாலை அதிபர் சீ.மரியநாயகம் தலைமையில் கல்விக் கண்காட்சி நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.தவரட்னம் (பிரதிக்கல்விப் பணிப்பாளர்-கல்வி அபிவிருத்தி,வவுனியா தெற்கு வலயம்), சிறப்பு விருந்தினராக திருமதி.எம்.தேவசேனா (உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பப்பிரிவு) மற்றும் திரு.சி.சிறிரங்கநாதன் (பிரதி அதிபர், வ.த.ம.ம.வி ஆரம்பப்பிரிவு) , பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இக் கண்காட்சியில் மாணவர்களின் கண்கவர் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

DSC_0007 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0013 DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0019 DSC_0020 DSC_0021 DSC_0022 DSC_0023 DSC_0024 DSC_0025 DSC_0026 DSC_0027 DSC_0028 DSC_0029 DSC_0030 DSC_0031 DSC_0032 DSC_0033 DSC_0034 DSC_0035 DSC_0036 DSC_0037 DSC_0038 DSC_0039 DSC_0040 DSC_0041 DSC_0042 DSC_0043

93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பண மாலையை கருணாநிதிக்கு அணிவித்த தொண்டர்!!

625.0.560.350.160.300.053.800.668.160.90
தனது 93வது பிறந்தநாளை குடும்பத்தார் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கருணாநிதி.திமுக தலைவர் கருணாநிதி, தனது பிறந்தநாளை முன்னிட்டு சி.ஜ.டி காலணியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் அரச மரக்கன்றை நட்டார்.

அப்போது திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பொருளாளர் ஸ்டாலின் தனது மனைவியுடன் கருணாநிதி வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.மேலும் தொண்டர் ஒருவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 93 அடி நீளத்தில், 93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட பண மாலையை அணிவித்துள்ளார்.

 

பெண் பொலிஸின் உள்ளாடைகளை திருடிய பொலிஸ் அதிகாரி : ஏன் என்று தெரியுமா?

1408463538567_wps_3_Police_officers_wearing_p
ஜேர்மனி நாட்டில் பெண் பொலிஸ் ஒருவரின் உள்ளாடைகளை தொடர்ந்து திருடி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை அந்நாட்டு காவல்துறை அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளது.மேற்கு Rhine-Westphalia மாகாணத்தில்உள்ள Gelsenkirchen என்ற நகரில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பில் 22 வயதான பெண் பொலிஸ் ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு 29 வயதுடைய மற்றொரு பொலிசாரிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், இவர்களது காதல் சில மாதங்களுக்கு முன்னர் முறிந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெண் பொலிஸ் அறையில் வைக்கப்பட்ட அவரது உள்ளாடைகள் தொடர்ந்து திருடு போயுள்ளது அவருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்னர் வேலை நிமித்தமாக அவர் வெளியே சென்றிருந்தபோது, அவரது பக்கத்து வீட்டு பெண் அவரை கைப்பேசியில் தொடர்புக் கொண்டுள்ளார்.

அப்போது, உங்களது வீட்டிற்குள் பொலிஸ் அதிகாரியான உங்கள் முன்னாள் காதல் வந்து சென்றார். என் வீட்டு கதவு துளைவழியாக பார்த்தேன் எனக் கூறியுள்ளார். உடனடியாக பெண் பொலிஸ் வீட்டிற்கு திரும்பிய போது, அங்கிருந்த அவரது உள்ளாடைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் இதனை உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். புகாரை பெற்ற பொலிசார் முன்னாள் காதலனின் வீட்டில் சோதனை செய்தபோது ஒருபெட்டி முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட உள்ளாடைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இவை அனைத்தும் பெண் பொலிஸ் அதிகாரியின் உடைகள் என உறுதி செய்யப்பட்டதும், அவரை அதிரடியாக பணியிலிருந்து நீக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காவல் துறையின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த புதன்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, உள்ளாடைகள் திருடு போனதாக கூறப்பட்டநேரத்தில் நான் எனது தாயார் மற்றும் நண்பருடன் வெளியில் சென்றிருந்தேன். எனக்கும் இந்த குற்றத்திற்கும் தொடர்பு இல்லை என வாதாடியுள்ளார். நபரின் தாயாரும் இதனை உறுதி செய்துள்ளார். ஆனால், நீதிபதிகள் இருவரின் வாக்கு மூலத்தையும் ஏற்கவில்லை. இருவரும் பொய் கூறுகிறார்கள் என நீதிபதிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் முன்னாள் காதலன் பெண் பொலிஸின் வீட்டிற்கு வந்து சென்றதை பக்கத்துவீட்டு பெண் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளது தாய் மற்றும் மகனின் பொய் வாதத்தை முறியடித்துள்ளது. தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கன்னித்தன்மை சோதனை: மணமகளுக்கு நடந்த கொடூரம்!!

close up on hands of a married Indian couple

மகாராஷ்டிராவில் மணமகள் கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்ததாக கூறி சாதி பஞ்சாயத்து நடந்து முடிந்த திருமணத்தை முறித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் நாச்சிக்கில் அண்மையில் 20 வயது பெண் ஒருவர், 25 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காஞ்சர்பாத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்த சமூக வழக்கத்தின் படி திருமணமான புதுமணத் தம்பதிகள் வெள்ளை விரிப்பு கொண்ட படுக்கை மீது உறவு கொள்ள வேண்டும்.இதன் பின்னர், தம்பதிகள் படுத்திருந்த விரிப்பில் ரத்தக் கறை இருக்கிறதா என்பதை உறவுக்காரர்கள் சோதிப்பர். அப்படி இல்லையென்றால் அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை இல்லை எனக் கூறி அவளை தள்ளி வைப்பர்.

இந்நிலையில் இந்த திருமணத்திலும் படுக்கை விரிப்பில் ரத்தக் கறை இல்லாததால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவள் எனக் கூறி மணமகன் அவளை ஒதுக்கி வைத்துள்ளார். சாதி பஞ்சாயத்துத் தலைவர்களும் திருமணத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட பெண் தான் பொலிஸ் தேர்வுக்காக பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொண்டதாலேயே தன்னால் கன்னித்தன்மை சோதனையில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்று விளக்கமளித்தார்.

ஆனால், அவர் வாதத்தை யாரும் ஏற்கவில்லை. திருமணத்தை செல்லத்தக்கதாக அறிவிக்க வேண்டும் என்றால் மணப்பெண் மற்றுமொரு சோதனைக்கு உட்பட வேண்டும் என பஞ்சாயத்தில் கூறியுள்ளனர்.அதாவது அரைநிர்வாணத்தில் மணப்பெண்ணை ஓட விட்டுவர். அவளை துரத்தும் பஞ்சாயத்து ஆண் உறுப்பினர்கள் அவள் மீது சூடான மாவுப் பந்தை வீசுவர். அதை அந்தபெண் பொறுத்துக் கொண்டு அவள் ஓட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து மணப்பெண்ணும் அவரது தாயாரும் பொலிசில் புகார் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் பெண் வீட்டாரே பூட்டி வைத்துள்ளனர்.மாநில சமூக புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹமீத் தபோல்கர் கூறுகையில், இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கே மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய வன்கொடுமைகளை தடுக்க உடனடியாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.மராட்டிய மாநிலத்தில் சாதி பஞ்சாயத்து மற்றும் ஊர்பஞ்சாயத்து எந்த வடிவிலும் செய்ல்படக்கூடாது என தடை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கண்ணீர் சிந்தும் மனைவியரும்-தட்டுத் தடுமாறும் கணவன்மார்களும்!!

sad-wife
கணவன்- மனைவி இடையே சண்டை நடந்தால் கண்ணை கசக்கி கொண்டு மூக்கை சிந்தும் மனைவிமார்களை பார்த்து எரிச்சல்படும் கணவன்களுக்கு மத்தியில் அதனை ரசிக்கும் கணவன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.பல வீடுகளில், கணவனோடு மல்லுக் கட்டிக்கொண்டு, சரிசமமாக வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிடும் மனைவியரும் இருப்பார்கள், சில வீடுகளில் செல்ல சினுங்கள் மூலம் தனக்கு வேண்டியதை சாதிக்கும் மனைவியரும் இருப்பார்கள்.

பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது.சில இடங்களில் விதி விலக்காக பெண்களால்ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது.மனைவியர் அழுதால் கணவன்கள் என்ன செய்வார்கள்?

ஒரு சிருக்கு தங்கள் மனைவி அழுவதைப் பார்த்தாலே கோபம் இன்னும் சற்று அதிகரித்து, மனைவியை வெளுத்து வாங்கி விடுவார்கள், உச்சக்கட்ட எரிச்சலுக்கு ஆளாகும் அவர்கள் கையில் கிடைப்பவற்றை தூக்கி எறிவார்கள்.
சிலருக்கு, கையும் ஓடுவதில்லை, காலும் ஓடுவதில்லை, எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடிவிடுமோ, என நினைத்து அந்த நேரத்தில் மௌனம் சாதித்து, வீட்டின் பின்பக்கமாக சென்றுவிட்டு, சில மணி நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து சமாதானம் செய்வார்கள்.
பொது இடங்களுக்கு கடைக்கு செல்லும்போது, தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் கணவன்களிடம், காரியம் சாதிக்க மனைவி பொது இடம் என்றும் பாராமல் கண்களை கசக்குவார். இந்த இடத்தில் பெரும் தர்மசங்கடத்திறகு ஆளாகிவிடுகிறார்கள். ஏனெனில் வீட்டிற்குள் எப்படியோ பொது இடத்தில் தான்ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவார்கள்.சில பெண்கள் சாதாரண பிரச்சனைகளைக் கூட பெரிய அளவிற்கு பில்டப் செய்து சீன் கிரியேட் செய்துவிடுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஆண்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்குகிறது, சிறு விடயத்தால் வீட்டையே பிரலயமாக்கிவிடும் மனைவியரால், ஆண்கள் தாங்கள் செய்ய வேண்டிய செயல்களில் சிறிது தடுமாறி விடுகிறார்கள்.

மொத்தத்தில் நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டுகாரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆரம்பத்தில் ரசித்தாலும், நாளடைவில் வெறுப்பு தான் மிஞ்சுகிறது.எனவே மனைவிமார்களே எதற்காக அழ வேண்டுமோ அதற்காக மட்டும் அழுங்கள், இரண்டு சொட்டு கண்ணீர் வடித்து, உங்கள் இருவரின் வாழ்க்கையையும் சீர்குலைக்காமல் இல்லறத்தை நல்லறமாய் நடத்துங்கள்.