2016ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற வேலைத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு அமைய திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி 2016ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (முதலாம் வாசிப்பு) இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த கடற்படை சிப்பாய் அல்லைப்பிட்டி கஞ்சதேவ கடற்படை முகாமில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது நேற்று தனது ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சக வீரர் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த இருவர் உயிரிழந்ததுள்ளதுடன் மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
வென்னப்புவ டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.
இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை வகிக்கிறது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோஹ்லி 140 பந்துகளில் 138 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கோஹ்லி அடிக்கும் முதல் சதம் ஆகும். மேலும் ரெய்னா 53, ரகானே 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தென்னாபிரிக்க அணி பந்துவீச்சில் ரபடா, ஸ்டெயின் தலா 3 வீக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 300 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தென்னாபிரிக்க அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 112 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 3, ஹர்பஜன் 2, மோகித்சர்மா, அக்சர் பட்டேல், மிஸ்ரா தலா ஒரு விக்கெட் விழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது போட்டி வரும் 25ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் வவுனியா தெற்கு வலய பாடசாலைகள் முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக காரியாலயப் பொருட்கள், தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், துவிச்சக்கர வண்டி கொள்வனவு மற்றும் திருத்த வேலைகளுக்கென 13 00 000/= ரூபா வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களால் ஒதுக்கப்பட்டது.
அவ்வொதுக்கீட்டுக்குரிய பொருட்கள் மற்றும் காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வு 17.10.2015 அன்று காலை 9.00 மணியளவில் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவக மாநாட்டு மண்டபத்தில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா தலைமையில் நடை பெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வடமாகாண சபை உறுப்பினர்களான G.Tலிங்கநாதன், ம.தியாகராசா, M.P.நடராசா, A.D.தர்மபாலசெனவிரத்ன, A.ஜெயதிலக ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டுக்குரிய பொருட்கள் காசோலைகள் என்பனவும் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா கருப்பணிச்சாங்குளம் இத்தியடி சித்திவினாயகர் ஆலயத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் நிதி உதவி வழங்கப்பட்டது.
வவுனியா பகுதியிலே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கருப்பணிச்சாங்குளம் இத்தியடி சித்திவினாயகர் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபன நிதிக்காக வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய பரிபாலன சபைதலைவரிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் ஆலய பரிபாலன சபை செயலாளர், அங்கத்தவர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங் மாதர் அபிவிருத்திச்சங்க அங்கத்தவர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இன்று (22.10.2015) விஜயதசமி விசேட பூசை நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து பெரும் அளவிலான பிரசாதங்களை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
மேலும் விசேட பூசை வழிபாடுகள், கலை நிகழ்வுகள், முன்பள்ளி மாணவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு என்பனவும் நடைபெற்றது.
அத்துடன் மத்திய கல்வியமைச்சினால் ஆயிரம் பாடசாலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அதி நவீன இரண்டு மில்லியன் பெறுமதியான மலசல கூடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
கடந்த 19.10.2015 வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்திற்கு அலுவலகத் தளபாடம் வழங்கிவைக்கப்பட்டது.
இன் நிகழ்வு பூந்தோட்டம் மகாவித்தியலயத்தில் நடைபெற்றபோது வடமாகாண மாகாணசபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் அலுவலகத் தளபாடத்தை அதிபர் திருமதி.கிருஸ்ணவேணி நந்தபாலன் அவர்களிடம் கையளித்தார்.
இன் நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர் திருமதி.மோகனதஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டர்கள். தொடர்ந்து இவ் வைபவத்தில் பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் இடம் பெற்றது.
மஹரகமை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது 5 பெண்கள் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிலியந்தலை, பதுளை,வெயங்கொட மற்றும் கலேவேல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பு உட்பட அதன் புற நகர் பகுதிகளில் ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயரில் இவ்வாறான விடுதிகள் இயங்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநில அரச மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் முன்னிலையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நோயாளிகள் படுக்கையில் இருக்க, அவர்களைச் சுற்றி சுவர்களில் வர்ண பலூன்கள் கட்டி, மருத்துவர்களும் தாதியர்களும் மகிழ்ச்சியோடு நடனமாடியுள்ளார்கள்.
அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நிதின்பாய் படேல், வைத்தியசாலையின் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து விட்டு சென்ற சில மணி நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் நடனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ கண்காணிப்பாளர்,
விழாவின் போது ஆடல், பாடலுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும், இந்த செய்தி கேட்டவுடன் உடனே ஆடல் பாடலை தடுத்து நிறுத்தியதாகவும், இதில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கலவான – தேல்கோட பகுதியில் தனது தந்தையை கொன்று புதைத்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 3ம் திகதி தந்தையைக் கொன்று வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளதாக தனது சகோதரரிடம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
தந்தை குடித்து விட்டு மோதலில் ஈடுபட்டமையே இந்த கொலைக்கு காரணம் என சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கலவான பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கொல்லப்பட்டவரின் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில் பின்னர் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
இதனால், சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியரின் விடுதி அறையின் பூட்டை உடைத்து பார்த்த போது குறித்த வைத்தியர் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டு உடனடியாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கொழும்பிலிருந்து வரும் சடலம் வவுனியா வைத்தியசாலையில் சுகாதார அதிகாரி பணிமனையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சொந்த ஊரான முள்ளியவளைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரியவருகிறது.
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து நாவுல பிரதேச செயலாளர் ஊடாக கட்டிட நிர்மாண ஆய்வு நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
\பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 240,000டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கால்பந்து, கூடைப்பந்து, வொலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் 120,000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகின.
மூன்றாம் கட்ட டிக்கெட் விற்பனையில், முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 20 லட்சம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரேசில் அல்லாதவர்களுக்கு தங்கள் நாட்டில் உள்ள மறுவிற்பனையாளர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
தென் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டி ஓகஸ்ட் 5 ஆம் திகதி தொடங்கி 21 ஆம் திகதி நிறைவடைகிறது.
உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக புகழ் பெற்ற கார் நிறுவனமான டொயோட்டா அறிவித்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம் கார்களில் உள்ள பவர் விண்டோ சுவிட்ச்கள் தேவைக்கும் அதிகமாக சூடாகி அதன் காரணமாக உருகவும் தீ பற்றவும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை திரும்ப பெற்று, குறைபாட்டை சரி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
பவர் விண்டோ சுவிட்ச்கள் தொடர்பாக இதுவரை 11 புகார்கள் வந்துள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து மட்டும் 7 புகார்கள் வந்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.