இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸகீர்கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் இன்று மதியம் 1 மணியளவில் வெளியிட்டார்.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“என்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
2011-ம் ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது மறக்க முடியாத அனுபவம். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே எனது வாழ்க்கையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
37 வயதாகும், ஸகீர்கான் இதுவரை 92 டெஸ்டுகள், 200 ஒருநாள் போட்டிகள், 17 T20 போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்று விளையாடியுள்ளார்.
2000-ம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஸகீர்கான் டெஸ்ட்டில் 311 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டியில் 282 விக்கெட்டுகளையும் 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீரர் ஹேராத் அபாரமாக பந்துவீசி வருகிறார்.
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 250 ஓட்டங்கள் எடுத்திருந்தது.கருணாரத்னே 135 ஓட்டங்களுடனும், சந்திமால் 72 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து நிதானமாக ஆடிய சந்திமால் சதம் அடித்தார். தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே 186 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சந்திமால் 151 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் மேத்யூஸ் தன் பங்கிற்கு 48 ஓட்டங்கள் எடுத்தார். அறிமுக வீரரான சிறிவர்த்தனே (1) ஏமாற்றினார். குஷால் பெரேரா (23), தமிங்க பிரசாத் (13) நிலைக்கவில்லை.
ஹேராத் (0), நுவன் பிரதீப் (0) டக்-அவுட் ஆக, இலங்கை முதல் இன்னிங்சில் 484 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தரிந்து கவுஷால் (9) ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் சார்பில், பிஷூ 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான பிராத்வெய்ட் (19), சாய் கோப் (23) ஹேராத் சுழலில் வீழ்ந்தனர்.
2வது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சாமுவேல்ஸ் (7), டேரன் பிராவோ (15) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கிய 3வது நாள் ஆட்டத்தில் சாமுவேல்ஸ் (11) ஹேராத் பந்தில் பவுல்ட் ஆனார். இதனால் 70 ஓட்டங்களுக்கே மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டை இழந்தது.
தற்போது 36 ஓவர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுக்கு 111 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டேரன் பிராவோ (41), பிளாக்வுட் (11) நிதானமாக விளையாடி வருகின்றனர். இலங்கை அணியின் ஹேராத் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் தந்தையின் காரை திருடிக்கொண்டு நண்பர்களுடன் அசுர வேகத்தில் பறந்த சிறுவன் ஒருவன் ட்ரான்ஸ்பார்மர் மீது விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Fribourg மண்டலத்தில் உள்ள Dudingen நகரில் 15 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளான்.
நண்பர்களுடன் உல்லாசமாக காரில் சுற்றி திரிய திட்டமிட்ட அவன், நேற்று மாலை வேளையில் தனது தந்தையின் காரை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு பறந்துள்ளான்.
வழியில் 3 நண்பர்களை ஏற்றிக்கொண்ட அவன், மனம் போன போக்கில் காரை அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றுள்ளான். கார் ஓட்டுவதில் அதிக அனுபவம் இல்லாததால், சில நிமிடங்களில் கார் சிறுவனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வேகம் சென்றுள்ளது.
சிறுவன் வேகத்தை குறைத்து காரை நிறுத்த முயன்றும் கார் நிற்காமல் சாலையின் பக்கவாட்டுப்பகுதியில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியது.
கார் மோதிய வேகத்தில் மிகவும் சேதம் அடைந்ததால், ஓட்டுனரான 15 வயது சிறுவன் உள்பட 3 நண்பர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார், சிறுவர்களை மீட்டு மருத்துவ வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
15 மற்றும் 16 வயதுள்ள சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். பின்னர், சிறுவர்களை கண்டித்து இதுபோன்ற செயல்களில் ஈடுப்படாமல் கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மாலை வேளையொன்றில் சிறைச்சாலையிலிருந்து வெளியில் செல்வ தற்கு அனுமதிக் கப்பட்டதையடுத்து, மேற்படி கைதி கையடக்கத் தொலைபேசியையும் உபகரணங்களையும் விழுங்கி சிறைச்சாலைக்குள் கடத்த முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் அந்நாட்டுத் தலைநகர் பிரேசிலியாவில் பபுடா சிறைச்சாலை யிலுள்ள எக்ஸ்ரே ஊடுகாட்டும் கருவியை அவர் கடந்து சென்ற போது, அவரது வயிற்றில் கையடக்கத்தொலை பேசிகளும் ஏனைய உபகரணங்களும் இருப்பது அம்பல மாகியுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக அரசிடம் இருக்கும் இரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
சுதந்திரப் போராட்டத்தின்போது, இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 18-8-1945 அன்று தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை.
சோவியத் ஒன்றியத்தால் நேதாஜி சிறைபிடிக்கப்பட்டு, சைபீரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் இரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேசமயம், அந்த ஆவணங்களை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு மறுத்து வந்தது.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.
இதன்போது நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடும் பணி, அடுத்த ஆண்டு அவரது பிறந்தநாளான ஜனவரி 23ம் திகதி தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மும்பையில் ஓடும் ரயிலில் தாயொருவர் அழகிய குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். மும்பை கல்யாண் பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ரயிலில் சென்றுள்ளார் ராம்லால் பால் என்பவர்.
ஆனால், புகையிரதம் புறப்பட்ட சில நேரத்திலேயே அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பின்னர் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி மருத்துவக் குழுவொன்றை புகையிரத நிலையத்திற்கு வரவழைத்து முதலுதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பிரசவ வலியால் துடித்த போது அவருக்கு உதவி செய்யாமல் ரயில் பயணித்த மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். தற்போது குறித்த தாயஞம் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இருவரும் நலமாக இருப்பதாகவும் பெண்ணின் கணவர் ராம்லால் பால் தெரிவித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டு பெண்ணாகவும், மெலிந்த தோற்றத்துடனும் நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குண்டு பெண்ணாக தோன்றுவதற்காக அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்தார்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் பாகுபலி–2 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன் அனுஷ்கா உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு வருகிறார்.
உடல் எடையை குறைக்க தெரபி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா செல்கிறார். இந்த மாத தொடக்கத்திலேயே அனுஷ்கா அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் ‘ருத்ரமாதேவி’ படத்தின் முன்னோட்ட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் அனுஷ்காவின் அமெரிக்க பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. நாளை ‘ருத்ரமாதேவி’ படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு அனுஷ்கா அமெரிக்கா சென்று தெரபி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
‘பாகுபலி–2’ படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகள் ஐதராபாத்தில் தொடங்கி விட்டன. இயக்குனர் ராஜமவுலி நேற்று முன்தினம் ‘ராமோஜி பிலிம்சிட்டி’ வந்து தொழில்நுட்ப குழுவினருடன் படப்பிடிப்பு சம்பந்தமான ஆலோசனைகள் நடத்தினார். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது.
அரண்மனை, நாயகி தூங்காவனம், என செம பிஸியாக இருக்கும் த்ரிஷா தனது முதல் காதலுக்கு திரும்பியதாக அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘பேக் டு மை ஃபர்ஸ்ட் லவ்’ என தலைப்பைக் கண்டவுடன் ஏற்பட்ட பீதியில் முழுமையாக படித்தபோதுதான் உண்மை நிலவரம் தெரிந்தது. த்ரிஷா இடைவிடாது நீச்சல் பயிற்சி எடுத்துக்கொள்பவர் என்பது.
இடையில் தொடர்ச்சியாக சினிமா ஷூட்டிங், நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்ததால் நீச்சல்பயிற்சி செய்யமுடியாமல் இருந்ததாம். தற்போது மீண்டும் நீச்சல் பயிற்சிக்கு திரும்பியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.த்ரிஷாவின் கச்சிதமான உடல் அழகுக்கு அவருடைய நீச்சல் பயிற்சியும் முக்கிய காரணம் என்பது நன்றாகவே தெரிகிறது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன சகல நாடுகளிலும் காணப்படும் பொதுப் பிரச்சினையாகும். சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே அவற்றை ஒழிக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர வலயத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் பங்குகொள்ளும் மூன்று நாள் உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பது சகல நாடுகளிலும் காணப்படும் பொதுப் பிரச்சினையாகும். அந்தவகையில் எமது நாட்டில் குறிப்பிட்ட இந்த பிரச்சினையானது பரந்தளவில் காணப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டிலிருந்து கடல் வழியைப் பயன்படுத்திக் கொள்கலன்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்திச் செல்லும் வீதம் அதிகரித்து காணப்படுவதை ஐக்கிய நாடுகள் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இது போன்ற மிகப் பெரிய சவாலை முறியடிக்க அனைவரும் கூட்டாகவும் ஒன்றுபட்டும் செயற்பட முன்வர வேண்டும். அத்துடன் நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள், கூட்டுப் பயிற்சி தகவல் பரிமாறல் போன்றன மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
இலங்கையை பொறுத்த மட்டிலும் இது ஒரு பாரிய சவாலாகும். இவற்றை முற்றாக முறியடிக்க வேண்டியது சட்டத்தை அமுலாக்கம் செய்யும் அனைத்து தரப்பினர்களினதும் கடமையாகும்.எமது நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக முறியடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.
அதேபோன்று இது தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இளைஞர்கள், மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை விசேட தூதுவராக நியமித்துள்ளார்.
எனவே போதைப்பொருள் இல்லாத நாடொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான பொலன்னறுவைக்கு சென்று எனது வீட்டில் வசிப்பேனே தவிர ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலத்துக்கடியில் உள்ள இரண்டுமாடிக் கட்டட பராமரிப்பு செலவை தவிர்க்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை பத்திரிகை நிறுவனப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது,
நான் ஓய்வு பெற்ற பின்னரும் தற்போது நான் பயன்படுத்தும் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே வசிக்கப்போவதாக பிழையான செய்திகள் வெளிவந்துள்ளதோடு, அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கு பெருமளவில் பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இப் பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு நான் செல்லவில்லை அங்கு வசிப்பதற்கு போயிருந்தால் பராமரிப்பு செலவு மிகவும் அதிகமாகும். அதன் மின்சாரக் கட்டணம் மட்டும் மாதமொன்றுக்கு 150 இலட்சமாகும். எனவே மாளிகையை வைபவங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றேன். இதற்காக மாதம் 30 இலட்சம் ரூபா மின்சாரத்திற்கு செலவாகின்றது.
இம் மாளிகையின் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை பராமரிப்பதற்கான செலவு தவிர்க்க முடியாத செலவாகவுள்ளது.ஜனாதிபதி மாளிகையில் மட்டுமல்ல அதனோடு தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களினதும் வீணான செலவுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் களின் உறவினர்களின் பெயர்களில் வெளிநாடுகளின் வங்கிகளில் பல பில்லியன் ரூபா கணக்குகள் உள்ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்படு கின்றது. அதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் அவர் கூறினார். எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள் ளார். அதன்படி விசாரணைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரத்தினபுரி – கரன்கோட பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சகோதரரே அவரைக் கொன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதையில் இடம்பெற்ற மோதலே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 30 வயதான ஒருவரே பலியாகியுள்ளதோடு, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மனைவியை கத்திரிக்கோலினால் குத்திக் கொலை செய்த கணவருக்கு 16 வருடங்கள் கடுழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். யாழ். கைதடி பகுதியைச் சேர்ந்த வாகீசன் தர்சினி (வயது 33) என்ற குடும்ப பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சந்தேகநபருக்கு எதிரான வழக்கு கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று புதன்கிழமை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக்கு 16 வருடங்கள் கடுழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்ட உத்தரவிட்டார்.
தண்டப்பணம் செலுத்த தவறின் 3 மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
பாரிய அளவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சுங்க அதிகாரிகள் மூவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
125 மில்லியன் ரூபாய் பணத்தை இவர்கள் இலஞ்சமாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என, ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட இலஞ்சத் தொகை இதுவென கூறப்படுகின்றது.
மேலும் சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
வௌிநாட்டு நிறுவனம் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்காக கொண்டு வந்த சில பொருட்களை விடுவித்த பின்னர் 1500 மில்லியன் ரூபாய் வழங்க வேண்டும் என குறித்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
குறித்த பணத்தை சட்டப்படி வழங்க தேவையில்லையே என அந்த நிறுவன அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர். பின்னர் மீதமுள்ள பொருட்களை விடுவிக்க 150 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நிறுவன அதிகாரிகள் இலஞ்ச ஊழல் அதிகாரிகளுடன் பேசியதன் பின்னர் 125 மில்லியன் ரூபாவாக குறித்த தொகையை குறைத்துள்ளனர்.
பின்னர் கொழும்பில் வைத்து பணத்தை கைமாற்ற முற்பட்ட போது இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
கட்டுகஸ்தொட்ட, நித்யவல பிரதேசத்தில் பாதை ஓராமாக சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாதை அருகில் இருந்த ஓடையில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 5.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓடையில் விழுந்த மாணவி நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கட்டுகஸ்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கட்டுகஸ்தொட்ட, மடவளை பிரதேசத்தை சேர்ந்த 17வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தையொட்டி வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (15.10.2015) வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் ஏராளமான பாடசாலை சிறார்களும் முதியவர்களும் கலந்துகொண்டனர் .மேற்படி நிகழவில் பலூன் ஊதி உடைத்தல் பழம் பொறுக்குதல் சங்கீத கதிரை கிடுகு பின்னுதல் முயல் மற்றும் தவளை பாச்சல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது .
12.10.2015 அன்று வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியகராசா மற்றும் இ.இந்திரரா சா அவர்களினால் நிழல் பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைஉறுப்பினர்களனா திரு.ம.தியாகராசா மற்றும் இ.இந்திரராசா அவர்கள் தங்களுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு நிழல்ப்பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) மற்றும் புகைபடக்கருவி என்பன வழங்கி வைக்கப்பட்டும் இன் நிகழ்வானது பெரிய கோமரசன்குளம் பாடசாலையில் நடைபெற்றபோது வடமாகாண மாகாணசபை உறுப்பினர் கள் போட்டோக் கொப்பிஇயந்திரத்தை அதிபர் ஆசிரியரிடம் கையளிக்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.