வவுனியா தோணிக்கல் சரஸ்வதி முன்பள்ளின் விளையாட்டு விழா நேற்று (29.05.2016) அ.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, M.P.நடராஜ் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடினார்.
அவர் 38 பந்தில் 76 ஓட்டங்களை குவித்தார். இதில் 4 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும். இதில் 7 ஆவது சிக்சரை விளாசிய போது அவர் 250 சிக்சரை தொட்டு சாதனை புரிந்தார். 92 போட்டிகளில் விளையாடிய கெய்ல் இதுவரை 251 சிக்சர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ரோகித்சர்மா 163 சிக்சர் அடித்து 2 ஆவது இடத்தில் உள்ளார்.
இதேபோல் டி20 போட்டிகளில் 9,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் கிறிஸ் கெய்ல் படைத்தார். ஆனால் கெய்லின் இந்த ஆட்டம் பலன் இல்லாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
சவூதியை சேர்ந்த ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரை நபர் ஒருவர் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகன்னத் அல் ஜப்ன் என்ற குறித்த மருத்துவர் பெண்னொருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த பிரசவத்தின்போது பெண்ணின் கணவரும் உடனிருந்துள்ளார். அப்போது தன்னுடைய மனைவியின் உடல் உறுப்புக்களை ஆண் மருத்துவர் தொட்டது அவருக்கு பிடிக்கவில்லை.
இதனையடுத்து, பிரசவம் முடிந்து பல நாட்களுக்கு பின்னர் குறித்த ஆண் மருத்துவரை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய தங்களுக்கு நன்றி கூற வேண்டும் என கூறி தங்களை சந்திக்க முடியுமா என கேட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் வைத்தியசாலையின் கீழே உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என முடிவெடுத்து சந்தித்தனர். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது குறித்த பெண்ணின் கணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரை சுட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.
உடனடியாக பாதிகப்பட்ட மருத்துவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் துப்பாக்க்கியால் சுட்ட அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மனைவியை எப்படி ஒரு ஆண் மருத்துவர் பிரசவம் பார்க்க முடியும், எந்தவொரு பெண் மகப்பேறு நிபுணரும் இல்லாமல் எனது மனைவிக்கு ஆண் மருத்துவரை கொண்டு பிரசவம் பார்த்தது தவறு என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தில் சிக்குண்ட ஒருவருக்கு நிவாரணமாக கிடைக்கப்பெற்ற உணவு பொதியை 100 ரூபாவிற்கு விற்ற சம்பவம் களனி கங்கையை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் வீடுகள் தொழிற் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பல நீரில் மூழ்கின.
இந்நிலையில் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய நபர் நீச்சல் தெரியாத காரணமாக நிறுவனமொன்றுக்குள் சிக்கிக் கொண்டார்.
குறித்த நபரை மீட்க யாரும் வராதமையால் 3 நாட்களாக மேசை ஒன்றின் மீது இருந்து வந்துள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருளில் நுளம்புகடிகளுக்கு மத்தியில் மிகவும் சிரமத்துடன் இருந்துள்ளார்.
ஒரு நாள் காலை வேளையில் குறித்த நபர் மேசையின் மீது தலையை வைத்து படுத்தியிருக்கும் போது ஒருவர் வந்து உணவு வேண்டுமா எனக்கேட்டுள்ளார்.
அதற்கு குறித்த நபர் தன்சலா என்று வினவியதையடுத்து, ஒரு உணவு பொதி 100 ரூபாவென கூறியுள்ளார்.
பாக்கெட்டில் 300 ரூபா மாத்திரமே வைத்திருந்த இவர், இரு நாட்களாக பிஸ்கட்டுகளை மாத்திரமே உண்ட காரணத்தினால் உணவு பொதியொன்றை அவரிடமிருந்து 100 ரூபாவிற்கு வாங்கியுள்ளார்.
உணவினை வழங்கிய நபர் குறித்த நபரை வெளியே செல்ல வேண்டாமெனவும் நீரோட்டம் அதிகமாக காணப்படுகின்றதெனவும் பகல் உணவு குறித்து கவலை கொள்ள வேண்டாம் தானே கொண்டு வந்து தருவதாகவும் கூறிச்சென்றுள்ளார்.
இருட்டில் நுளம்பு கடியை பொறுத்துக்கொள்ள முடியாமல் குறித்த நபர் மருந்து வாங்குவதற்காக வெளியே வந்த போது மக்கள் வேனொன்றின் முன் வரிசையாக நின்றுக்கொண்டிருந்துள்ளனர்.
குழப்பமடைந்த அவர் காலையில் சந்தித்த நபரும் வரிசையில் நின்று கொண்டிப்பதை அவதானித்துள்ளார்.
வரிசையில் இருந்த நபர் அவரை கண்டதோடு, அவர் எதற்காக வெளியே வந்தாரென வினவியதுடன் அவருக்கான பகல் உணவை தானே கொண்டுவரயிருந்ததாகவும் காலையிலும் இவர்களே தனக்கு உணவு அளித்ததாகவும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு குறித்த நபர் அதிர்ச்சியடைந்ததுடன் மேற்கொண்டு எதுவும் கூறாமல் அவ்விடத்தை விட்டுச்சென்றுள்ளார்.
வவுனியா ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுவரும் இம் மாணவி மாலைநேர வகுப்புக்கு பாடசாலைக்கு வந்து செல்கையிலேயே தேனீர்க்கடைக்காரரான 54 வயதுடைய குறித்த சந்தேக நபர் துஷ்பிரயோகத்தை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு நாட்களாக சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமி தெரிவித்துள்ள நிலையில் தற்போது சிகிச்சைக்காக சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா, தன் உடலில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 11.5 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளார். இதைத் தவிர, பல்வேறு உலோகங்களிலான கடவுள் விக்ரகங்களையும் தன்னுடன் காரில் எடுத்துச் செல்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்ற அவர், உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆக்ராவுக்கு வந்துள்ள அவர், தனக்கும், தன்னுடைய நகைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொலிசில் மனு கொடுத்துள்ளார்.
இதற்காக ஆக்ரா எஸ்.பி அலுவலகத்துக்கு சென்ற அவருடன், அங்கிருந்த மக்கள், செல்பி எடுத்து கொண்டனர். பரேலிக்கு செல்ல விரும்புவதாகவும், பொலிஸ் பாதுகாப்பு கோரியும் அவர் மனு கொடுத்துள்ளார்.
”தங்கம் என்பது கடவுளின் வடிவம்” அதை அணியும்போது, மனம் அமைதி அடைகிறது. அதனால்தான், 1972ம் ஆண்டு முதல் தங்க நகைகளை அணியத் தொடங்கினேன் என கூறியுள்ளார்.
புகலிடம் கோரி பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கடத்தல் படகுகள் மூலம் ஐரோப்பாவில் குடியேற செல்கின்றனர். அளவுக்கு அதிகமாக படகுகளில் ஆட்களை ஏற்றி வருவதால் விபத்து ஏற்படுகிறது.
இது போன்று கடந்த 3 தினங்களில் அகதிகளை ஏற்றி வந்த 3 படகுகள் விபத்துக்குள்ளானதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தனர்.
கடந்த புதன் கிழமை 600 பேருடன் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில், அவர்களில் 100க்கும் குறைவானவர்களே மீட்கப்பட்டனர். இதில் பலரை காணவில்லை.
அதேபோல் கடந்த வியாழக்கிழமை 670 பேரை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 550 பேர் மாயமாகினர்.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தரைக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 135 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 45 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும், பலரை காணவில்லை.
குறித்த அனைத்து படகுகளும் லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்த தருணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.
நபர் புகையிரதத்தினால் தூக்கி எறியப்பட்டுள்ளார் என்று பொலிஸார்சந்தேகிக்கின்றனர்.
முதியவர் ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளார் எனவும்,நபர் குறித்து தகவல்கள்இன்னும் அடையாளப்படுத்தப் படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு (1916 – 2016) பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையும், குருதி நன்கொடை நிகழ்வும் இன்று (30.05.2016) 9.00 மணிக்கு பாடசாலையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அதிதிகளாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் மற்றும் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், தொற்றா நோய்களால் மனிதர்களில் ஏற்படும் இறப்பு வீதம் தொற்று நோய்களினால் ஏற்படும் மரணங்களைவிட அதிகமானது. குறிப்பாக இருதய அடைப்பினால் ஏற்படும் இறப்புக்கள் மூன்றில் ஒரு பங்கு இடத்தைப்பிடிக்கின்றது.
எனவே இது சம்மந்தமான விளிப்புணர்வு நடவடிக்கைகளில் எமது வைத்தியர்கள் ஈடுபடுவது மிகவும் பாராட்டுக்குரியது. புதுக்குளம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களின் இந்த முயற்சிகள் தொடர எனது ஆசிகள் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1916 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்தபாடசாலை ஆரம்பத்தில் புதுக்குளம் குளத்திற்கு அருகாமையில் இயங்கிவந்த நிலையில் 1960 களில் புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம் சந்திக்கு இடமாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்று ஏ தரத்திலான இந்தப்பாடசாலை வவுனியா வடக்கு கல்விவலயத்தின் முதன்மையான பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால நண்பர் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பிரியா மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “எனக்கும் முஸ்தபா ராஜுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் பிரியா மணி நடித்துள்ளார். “பருத்தி வீரன்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் வசித்துவரும் வி.தியீபன் என்பவரது வீட்டுக்குள் கடந்த 28.05.2016 அன்று சிவில் உடையில் நுழைந்த இருவர் தம்மை பொலிஸார் என்று அடையாளப்படுத்திக்கொண்டு குறித்த இளைஞரை கைதுசெய்ய வந்துள்ளதாகவும், அதற்குரிய நீதிமன்ற பிடியாணை தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் அந்த நீதிமன்ற பிடியாணையை தனக்கு காட்டுமாறு கோரியபோது காட்ட மறுத்தவர்கள், நீதிமன்ற பிடியாணையை காட்டாவிட்டால் வரமாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்த இளைஞன் மீது துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதிஸ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு வன்னி மாவட்ட மக்களின் சார்பாக எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
குறித்த சந்தேக நபர் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்றதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருவதாகவும், அவர் ஒவ்வொரு வழக்குக்கும் தவறாமல் சமுகமளித்து வருவதாகவும், இன்று (30.05.2016) வழக்கு தவணை ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக நீதிமன்ற விசாரணைக்கு சமுகமளித்துவருவதாக கூறப்படும் அவரை கைதுசெய்யுமறு அழைப்பாணை அனுப்பியது யார்? அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார் அதனை காட்ட மறுத்தது ஏன்? தப்பிச்செல்ல எத்தனிக்காத, பொலிஸாரை தாக்க முற்படாத குறித்த சந்தேக நபர் மீது அதுவும் வீட்டுக்குள் வைத்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு தேவை என்ன இருந்தது? என்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த இடத்தில் குறித்த சந்தேக நபரினுடைய அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அத்துமீறி அவர் மீது துப்பாக்கிச்சூடு பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் தான் இவ்வாறான சட்டவிரோத சூடுகளும், கொலைகளும், கடத்தல்களும், காணாமல் ஆக்கப்படுதல்களும் மலிந்து காணப்பட்டன. தற்போதைய ஆட்சியில் அத்தகைய நிலைமைகள் இல்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் கூறிவரும் நிலையிலேயே கேப்பாப்பிலவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தற்போதைய நல்லாட்சி அரசும் தமிழ் மக்களை கிள்ளுக்கீரைகளாக, புல் பூண்டு பூச்சிகளாக கருதியே நடத்தி வருகின்றது என்பதற்கு ஓர் உதாரணமாகும். கையில் துப்பாக்கி உள்ளது என்ற தைரியத்தில் எதையும் செய்ய துணிபவர்களிடம் எவ்வாறு நியாயத்தை எதிர்பார்ப்பது?
ஆகவே இந்த சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை நடத்தியவர்கள் மீது பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதுவே நல்லாட்சி அரசுக்குள்ள ஒரே வழியாகும். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரின் நேரடி கவனத்துக்கும் தான் கொண்டு சென்றுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் கிணறு வெட்டிய குழிக்குள் விழுந்த தரம் ஒன்று மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிறுவனம் ஒன்றினால் மலசல கூடம், கிணறு என்பன கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த நிலையில் பொதுக் கிணறு ஒன்று வெட்டப்பட்டு 8 அடி தோண்டப்பட்ட நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிணறு தோண்டப்பட்ட குழியில் மழை வெள்ளம் சென்று நிறம்பியுள்ளது.
அருகில் வசித்து வந்த இராமச்சந்திரன் டினோஜன் (6 வயது) வவுனியா கருங்காலிக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவன் நேற்று (29.05.2016) மாலை 4 மணியளவில் குறித்த குழிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் தவறுதலாக விழுந்துள்ளார்.
5 மணியானதும் தாயார் மகனைக் காணவில்லை என்று தேடியபோதும் சிறுவனைக் காணவில்லை. சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இளைஞர் ஒருவர் குறித்த கிணற்றுக் குழியில் குதித்து தேடுதலை மேற்கொண்டபோது கற்பாறைக்குள் சிறுவன் சிக்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சிறுவனை குழியிலிருந்து மீட்டு உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் வீட்டில் நான்காவதும் கடைசியுமான சிறுவன் என்பதும், தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வருவதாகவும் தெரியவருகின்றது.
மரண விசாரணையினை மேற்கொண்ட நகர திடீர்மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மரண விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தரவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ளவும்.
இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்துகொண்டு 15 நிமிடங்கள் பயிற்சி செய்தால் உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும், மன அழுத்தம் குறைக்கும். அதிக கொழுப்பு உண்டாவதை கட்டுப்படுத்துகிறது.
அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க அவரின் ஐ பேட், ஐ மேக், ஐ போன்களை தண்ணீர்தொட்டியில் தூக்கிப்போட்டு பெண் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். கால மாற்றத்திற்கு ஏற்ப பழிவாங்கும் முறைகளும் மாறி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையின் உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளுக்கு அடுத்தபடியான முக்கிய தேவையாக இருப்பது ஸ்மார்ட் போன்களும், இசை கேட்க பயன்படும் கருவிகளும், கணிணிகளும் தான். ஒருவரை பழிவாங்க இவற்றையே ஒரு ஆயுதமாக பயன்படுத்த முடியும் என நிருபித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த பெயர் தெரியாத பெண் ஒருவர்.
தனது காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை கண்டுபிடித்த அப்பெண், கட்டுக்கடங்காத கோபத்தில் அவரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி காதலனின் ஐ பேட், ஐ மேக், இரண்டு ஐ-போன்கள் மற்றும் ஒரு ஜோடி மேக்புக் ஆகியவற்றை தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசினார். பின்னர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அவற்றை தனது போனில் படமாகவும் எடுத்தார்.அதன் பின் தன்னை மனரீதியாக இழப்பில் தள்ளிய காதலனை, பண ரீதியாக இழப்பில் தள்ளிய மகிழ்ச்சியில், தான் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரிலும் வெளியிட்டார் அந்த பெண்.
தென்னிந்திய சினிமாவில் தொடர் வெற்றிகளால் முன்னணியில் இருப்பவர் சமந்தா. இவர் அடுத்து கன்னட படமான யு-டர்ன் ரீமேக்கை கைப்பற்ற மிகவும் தீவிரம் காட்டி வருகிறாராம்.இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
கன்னடத்தில் இயக்கிய பவன்குமாரே தமிழ்+தெலுங்கிலும் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் சமந்தா நடிக்க முடிவு செய்துள்ளாராம்.