சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தையொட்டி வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (15.10.2015) வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் ஏராளமான பாடசாலை சிறார்களும் முதியவர்களும் கலந்துகொண்டனர் .மேற்படி நிகழவில் பலூன் ஊதி உடைத்தல் பழம் பொறுக்குதல் சங்கீத கதிரை கிடுகு பின்னுதல் முயல் மற்றும் தவளை பாச்சல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது .
12.10.2015 அன்று வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியகராசா மற்றும் இ.இந்திரரா சா அவர்களினால் நிழல் பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைஉறுப்பினர்களனா திரு.ம.தியாகராசா மற்றும் இ.இந்திரராசா அவர்கள் தங்களுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு நிழல்ப்பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) மற்றும் புகைபடக்கருவி என்பன வழங்கி வைக்கப்பட்டும் இன் நிகழ்வானது பெரிய கோமரசன்குளம் பாடசாலையில் நடைபெற்றபோது வடமாகாண மாகாணசபை உறுப்பினர் கள் போட்டோக் கொப்பிஇயந்திரத்தை அதிபர் ஆசிரியரிடம் கையளிக்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.
வடமாகண கல்வித்திணைக்களமும், சுகாதாரதிணைக்கமும் ,வவுனியா நகரசபையின் அனுசரணை யோடு நடாத்திய உளநல தின நிகழ்ச்சிகள் நகரசபை மண்டபத்தில் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில்இன்று(15.10.2015) நடைபெற்றது.இந் நிகழ்வரிற்கு பிரதம அதிதியாக. கௌரவ சுகாதா அமைச்சர் P.சத்தியலிங்கம் கலந்துகொண்டுடிருந்தார்.
ஆசியுரையினை கல்வி,பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறையின் செயலாளர் இ.இரவீந்திரன் நிகழ்த்தினார்.மேலும் இந்நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய பார்வையைச் செலுத்தினால், இறம்பபைக்குளம் மகளீர் கல்லூரிமாணவிகளும் தமிழ் மத்திய மாகாவித்தியாலய மாணவர்களும் இணைந்து நிகழ்த்திய பட்டிமன்றம் -(சினிமாசமூகத்தைசீர்படுத்துகிது-சீர்டுத்தவில்லை)என்ற வாதப்பிரதி வாங்கள் சமூகச்சீர்கேடுகளைதடுக்க என்னசெய்யலாம்?எது நல்ல சினிமா? என்பது பற்றி மாணவர்களை சிந்திக்கத்தூண்டியிருக்கும். யா/மல்லாகம் மகாவித்தியா மாணவி செல்வி.வைசா நடித்த. தொழில்நுட்பத்தின் கையில் வாழ்க்கை என்னும் ஓராள் அரங்கஆற்றுகை முகநூல்பாவனையின் அவலங்கள் பற்றிப்பேசிது, செட்டிக்குளம் மமகா வித்தியாலமாணவ,மாணவிகள் இணைந்து நடித்த ‘திறமைக்கு கைகொடுப்பகோம் ‘என்னும் நாடகம் பெற்றேர்கள் பிள்ளைகள் மீது கல்வியை திணிப்பதால் ஏற்படும் எதிர்வினைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருந்தனர்,
குணநாயகம் மகிழ்ச்சிகரன் இயக்கத்தில் வெளியான. வாழ்வைத்தேடி,தவிப்பு,அமைதி இக்நேசியஸ் இயக்கத்தில் உருவான அசப்பு ஆகிய குறும்படங்கள். சமகால பிரச்சினைபற்றிப்பேசி சிந்திக்கவைக்கின்றன.இவ்வாறு இவைஒருபரிமாணத்தை காட்டிநிற்க வவுனியா வறோட்நிறுவனம்,முல்லைத்தீவு இனியஇல்ல மாற்றுத்திறநாளிகளின் கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு வியந்து நின்றனர். ஒரு அரங்கில் குறும்படம்,நூல்வெளியீடு,கலைநிகழ்ச்சிகள்,உரைகள் என பல்துறை அம்சங்களையும் கண்டு இன்புற்றிருந்த நிறைவுடன், மீண்டும் சந்திப்போம்.
சர்வதேச கைகழுவுதல் தினத்தை முன்னிட்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் ஆரப்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் பாடசாலை மட்டத்திலிருந்து சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் நோக்குடன் மாணவர்களை இரு பிரிவுகளாக பிரித்து கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயன்முறை விளக்கங்களுடன் சுகாதார விளக்கங்களையும் வழங்கி பாடசாலை மட்டத்தில் சுகாதார விழிப்புனர்வை ஏற்படுத்தயதுடன் மாணவர்களுக்கு சுகாதாரப் போட்டிகள் நடாத்தி பரிசில்களும் வழங்கிவைத்தனர்.
தந்தையார் இறந்ததையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மகளொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய கிருபாகரமூர்த்தி ராஜநந்தினி ஆவார்.
குறித்த பெண்ணின் சடலம் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் ஓநாய் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு தங்களது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க ஓநாய் போன்று ஊளையிட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.பிரித்தானியாவில் உள்ள லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் இந்த விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஓநாய் விரும்பிகள் 464 பேர் ஒன்று திரண்டு ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.குறிப்பிட்ட நிமிடத்துக்கு இவர்கள் அனைவரும் தொடர்ந்து ஓலமிட்டு அந்த நகரையே மிரட்டியுள்ளனர்.
இந்த சிறப்பு சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் பலர் தங்களுக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்திருந்தனர்.இந்த மாத இறுதியில் வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் இந்த சாதனை நிகழ்வு அமைந்துள்ளது.
முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் செயின்ட் க்ளவுட் பல்கலைக்கழகத்தில் 296 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஊளையிட்ட சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் குடிபழக்கத்துக்கு அடிமையான தனது கணவரை திருத்த நினைத்த பெண்மணி ஒருவர் மதுபாருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளார். கோவை கணபதி நகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெயக்குமார் தினமும் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
சம்பள பணத்தில் பெரும்பகுதியை குடித்து அழித்ததோடு, தினமும் தகராறும் செய்து வந்ததால் அவரது மனைவி லில்லி மிகவும் சிரமப்பட்டுள்ளார். குடிபழக்கத்தை கைவிடுமாறு எவ்வளவு கெஞ்சியும் ஜெயக்குமார் கேட்காத நிலையில் தான், லில்லி அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் கணவர் தினமும் மது அருந்தும் அத்திப்பாளையம் அருகே உள்ள மதுபாருக்கு சென்ற லில்லி, உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
மதுபாருக்குள் திடீரென்று ஒரு பெண் வந்து அமர்ந்ததால் அங்கு குடித்து கொண்டிருந்த ஆண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் லில்லியை வெளியே போக சொல்லியபோது, எனது கணவர் இங்கேதான் தினமும் மது குடிக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து மது குடிக்கப் போகிறேன் என லில்லி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஜெயக்குமார் பாரின் உள்ளே தனது மனைவி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இங்கே ஏன் வந்தாய்? என மனைவியை திட்டியுள்ளார்.
அதற்கு லில்லி, எனக்கும் சேர்த்து மது வாங்குங்கள் இருவரும் சேர்ந்து மது குடிப்போம் என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மனைவியை சமானதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து போக முயன்ற போது, முடிவு தெரியாமல் போக மாட்டேன் என்று லில்லி செல்ல மறுத்துள்ளார்.
பின்னர், மதுக்கடையில் கணவன் மனைவியிடையே தகராறு நடப்பதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர்.லில்லி பொலிசாரிடம், என் கணவர் மது குடிப்பதை நிறுத்தும்படி பல முறை கூறியும் அவர் கேட்கவில்லை.
இதனால்தான் இது போன்று நடந்து கொண்டதாக லில்லி கூறியதை அடுத்து பொலிசார் ஜெயக்குமாரை கண்டித்துவிட்டு இருவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், எனது கணவர் மீண்டும் மது குடித்தால், நான் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று லில்லி பொலிசாரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுட்டு விரலில் மோதிரம் போன்று அணியக் கூடிய முழுமையாக செயற்படும் ஐபோன் கையடக்கத்தொலைபேசி தொடர்பில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் அறிவித்துள்ளது.
‘ஸ்மார்ட் மோதிரம்’ என அழைக்கப்படும் இந்த சின்னஞ்சிறு கையடக்கத்தொலைபேசி சிறிய தொடுகை உணர்வுள்ள திரையைக் கொண்டுள்ளது.
பெருவிரலால் செயற்படுத்தக்கூடிய இந்தக் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி எழுத்து வடிவ செய்திகளை அனுப்பவும் புகைப்படங்களை எடுக்கவும் பல்வேறு மென்பொருள் நிகழ்ச்சித் திட்டங்களை கையாளவும் முடியும்.
அப்பிள் கடிகாரங்கள் போன்று இந்த மோதிரமும் பயன்பாட்டாளரது ஐபோன் கையடக்கத் தொலைபேசியுடன் இணைப்பைக் கொண் டுள்ளது.
சிம்பு வாலு படத்தின் பிரச்சனையில் இருந்து தற்போது தான் மீண்டு வந்தார். இதை தொடர்ந்து கான், அச்சம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.இதில் சமீபத்தில் கான் படம் நிதி நெருக்கடியால் நின்றது அனைவரும் அறிந்ததே.
ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில், இப்படத்தை சிலர் வேண்டுமென்றே தான் நிறுத்தினார்களாம்.அதேபோல் சிம்புவை நடிகர் சங்க தேர்தலில் நிற்க சொல்லி, பின் கடைசி நேரத்தில் ஒரு நடிகர் விலகி விட்டாராம். அவர் தான் சிம்புவின் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது.
பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் தமன்னா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இன்றைய கால பெண்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
இதில் ‘நான் சினிமாவிற்காக இப்படி நடிக்கின்றேன், ஆனால், வீட்டில் இருக்கும் போது சாதரண பெண்களை போல் தான் உடைகளை அணிகிறேன்.சினிமா ஹீரோயின் போல் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய கால பெண்கள் பலரும் அவர்களை போலவே ஆடைகளை அணிவது தவறு’ என கூறியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது டெஸ்ட் இன்று காலை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடி வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தனது 3வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
துருக்கியிலிருந்து சட்டவிரோதமாக படகுப் பயணத்தை மேற்கொண்ட சிரியாவைச் சேர்ந்த நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர், கிரேக்கத் தீவான லெஸ்பொஸ் கடற்கரையில் ஆரோக்கியமான குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
அவர் மேற்படி கடற்கரையை வந்தடைந்து சிறிது நேரத்தில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு குழந்தையைப் பிரசவிக்க மருத்துவ உத்தியோகத்தர்களும் பிரதேசவாசிகளும் உதவியுள்ளனர்.
இதனையடுத்து அவர் மேலதிக மருத்துவ கவனிப்புக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குடியேற்றவாசிகளை அடையாளம் கண்டு பதிவுசெய்வதற்கான முதலாவது நிலையத்தை எதிர்வரும் 10 நாட்களுக் குள் திறப்பதாக கிரேக்கம் உறுதியளித்திருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்நாடு ஒவ்வொரு இரு மாதங்களுக்கு ஒரு தடவையும் 10,000 குடியேற்ற வாசிகளையும் அகதிகளையும் மீளக் குடி யமர்த்த எதிர்பார்த்துள்ளது.
பிரேசிலில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்த நிலையில் கரையொதுஙகி இருப்பதால், துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில், லெபனான் கப்பல் ஒன்று கடந்த வாரம் ஐந்தாயிரம் மாடுகள் மற்றும் 750 டன் எண்ணெய்யுடன் பாரா பகுதிக்கு வந்தது. விபத்தில் சிக்கிய இந்தக் கப்பல், கடலில் மூழ்கியதால், கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மாடுகள் உயிரிழந்து கரை ஒதுங்கின.
தொன்கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால், கடல் உயிரினங்கள் மட்டுமில்லாமல், அப்பகுதி மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இறந்த மாடுகள் கரைஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளகியுள்ளனர். கப்பல் மூழ்கியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று பாராட்டப்பட்ட அப்துல் கலாமின் 84வது பிறந்த தினம் இன்று (15ம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபடுகிறது .
இந்த நிலையிலேயே ஏவுகணை வளாகத்திற்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்தை தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஏற்பாடு செய்த விழிப்புலனற்றோரின் ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் துளசி மண்டபத்தில் நிறைவடைந்தது.
தரிசனம் பாடசாலை தலைவர் முருகு.தயானந்தா தலைமையில் வெள்ளைப்பிரம்பை தாங்கிய பெரும் எண்ணிக்கையிலான விழிப்புலனற்றோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு செயலமர்வு கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.