சகோதரனைக் கொன்றவரை 19 வருடங்கள் காத்திருந்து பழிவாங்கிய நபர்!!

Murded

சுவிட்சர்லாந்து நாட்டில் சகோதரனை குத்தி கொலை செய்தவரை 19 வருடங்களாக காத்திருந்து பழிவாங்கிய நபரின் குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸின் St.Gallen மாகாணத்தில் உள்ள Walenstadt என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 19 வருங்களுக்கு முன்னர் இளைய சகோதரர் அங்குள்ள தேவாலயம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, சுவிஸ் குடிமகன்கள் மூவருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மூவரில் ஒருவர் இளைய சகோதரரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, ‘தற்காப்பிற்காக தான் கொன்றதாக’ கூறியதால் கொலையாளிக்கு விடுதலை கிடைத்தது.
ஆனால், உயிரிழந்த நபரின் சகோதரர் தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளார்.

19 வருடங்களுக்கு பிறகு, கடந்த ஓகஸ்ட் 22, 2014ம் ஆண்டு கொலை செய்த நபர் தேவாலயத்திற்கு தொழுகைக்காக சென்றபோது அவரை மூத்த சகோதரர் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர், தொழுகையில் ஈடுப்பட்டிருந்த 51 வயதான அந்த நபரை சுமார் 7 முறை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நபர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

மூத்த சகோதரரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். நபர் மீதான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, தம்பியை கொன்ற நபரை பழிவாங்கியது உண்மை தான் என அவர் நீதிபதிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

19 வருடங்களாக காத்திருந்து திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக தற்போது 52 வயதாகும் மூத்த சகோரருக்கு 18 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

16 வயதுச் சிறுவனை நிர்வாணமாக இழுத்து சென்ற குடிகாரர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

Capture

டெல்லியில் 16 வயதுச் சிறுவனை அடித்து உதைத்து நிர்வாணமாக வீதியில் அழைத்துச்சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

டெல்லியின் இந்தர்புரியில் இருக்கும் கொலனி ஒன்றை சேர்ந்த 4 நபர்கள் குடித்துவிட்டு 16 வயது சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பியர் பாட்டிலால் அச்சிறுவனை தாக்கி, அவனது இரண்டு கைகைளையும் கட்டிபோட்டு நிர்வாணமாக வீதியில் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை அந்நபர்களில் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார், இந்த சம்பவம் நடைபெற்று 2 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வெளியான வீடியோ மூலம் பொலிசார் அக்குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

திருடிய காரணத்தினால் அச்சிறுவனை நாங்கள் அடித்தோம் என அந்நபர்கள் பொலிசிடம் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த நந்தினிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!!

Fat baby in india

இந்தியாவின் பல பாகங்களிலுள்ள வழக்கப்படி நந்தினிக்கும் 18 வயதில் திருமணமாயிற்று. 19 வயதாவதற்குள்ளேயே கர்ப்பம் தரித்து விட்டார்.

19 வயதேயான நந்தினி வழமையான பிரசவத்திற்குக் காத்திருந்தார். ஆனால் சி-செக்சன் அறுவை மூலமே பிள்ளையை வெளியே எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறிய போது அவர்களும் சம்மதித்தனர்.

ஆனால் பிள்ளையை கர்ப்பப்பைக்குள் இருந்து வெளியே எடுத்த வைத்தியர்களுக்கு அதிர்ச்சி குழந்தையின் எடை சராசரி ஒரு இந்தியக் குழந்தை 10 மாதத்தில் இருக்கும் நிறை. ஆமாம் நந்தினியின் குழந்தையின் நிறை 15 இறாத்தல் 7 அவுன்ஸ்.

இந்தியாவிலேயே இதுவரை பிறந்த குழந்தைகளில் பெரியதாக இந்தக் குழந்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு பார்த்த வைத்தியர் பூர்ணிமா அவர்களின் தகவலின் படி இந்தியாவிற்கு இது ஒரு செய்தி.

இங்கே நாங்கள் அமெரிக்காவிலுள்ள அஸ்ரின் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஜோன் மிரோக்ஸ்வி எப்போதோ கூறியதை உங்களிற்கு சமர்ப்பணம் செய்கின்றோம். “பிள்ளை பெறுவதற்கு சிறந்த வயது 19 ஆகும். உடலியற்கூறுகள் இளமையாகவும், துடிப்பாகவுமுள்ள இந்தக் காலத்தில் பிள்ளைகள் ஆரோக்கியமாகப் பிறக்கின்றார்கள்” என்றார்.

இவர் இதனை 2002ம் ஆண்டில் தெரிவித்த போது ஏதோ பொழுது போக்காகத் தெரிவிக்கவில்லை. மாறாக இது தொடர்பான ஆராச்சியை மேற்கொண்டே தெரிவித்தார். இப்போது 27 வயது வரைப் படிக்கின்ற பெண்பிள்ளைகளால் பிள்ளை பெறுவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாவிட்டாலும்,

எந்த வயதுவரை பிள்ளைகள் பெறலாம் எவ்வளவு ஆரோக்கியமாக அவர்கள் இருப்பார்கள் என்ற செய்தியை எதிர்காலத்தில் பார்ப்போம். 35 வயதிற்கு பிறகு பருமணாகும் குணாதிசயத்தை பெண்கள் கொண்டிருப்பதால் அதற்கு முன்பே மகப்பேறடைவதே சிறந்ததாகும்.

2

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிக்கும் ஒப்பந்தம்!!

5G

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சரான ஹரின் பெர்னான்டோ மற்றும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா உமாமஸ்வரன் முன்பள்ளியின் புதுவருட நிகழ்வு!!

 
வவுனியா திருநாவற்குளம் உமாமஸ்வரன் முன்பள்ளி சிறார்களின் புதுவருட நிகழ்வுகள் ஆசிரியர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் இன்று (27.05.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், திருநாவற்குளம் கிராம அபிவிருதிச்சங்கத்தின் பொருளாளருமான சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், உறுப்பினர் பி.கேர்சோன் ஆகியோருடன் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய ஆசிரியை திருமதி சியாமா, முன்பள்ளி ஆசிரியர் செல்வி சபீதா தர்மலிங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி முன்பள்ளியின் புதுவருட நிகழ்வு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) லண்டன் கிளை உறுப்பினர் தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன் ) அவர்களின் அனுசரணையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட அலுமாரியும் பிரதம அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_6897 IMG_6904 IMG_6905 IMG_6908 IMG_6915 IMG_6918 IMG_6922 IMG_6923 IMG_6931 IMG_6933 IMG_6938 IMG_6949 IMG_6950 IMG_6952 IMG_6953 IMG_6957 IMG_6960 IMG_6966 IMG_6987 IMG_6990

தமிழ் கற்றுக் கொள்வதற்கு எளிதான மொழி : தமன்னா!!

Tamana

தமிழ்தான் கற்றுக்கொள்வதற்கு எளிதான மொழி. அதை நான் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் தமன்னா. இந்தியை தாய் மொழியாக கொண்டவர். கேடி படத்தில் அறிமுகமான போது தமிழ் என்ற பெயரை டமிள் என்றுதான் சொன்னார். இப்போது தமிழில் சரளமாக பேசும் அளவுக்கு தன்னை தயார்படுத்தி இருக்கிறார்.

தமிழ் பேசும் தமன்னாவின் ஆர்வம் வெளி மாநிலங்களில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் தமிழில் ஒன்றிரண்டு வார்த்தைகள் கூட பேச முடியாத மற்ற நடிகைகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. சரளமாக தமிழ் பேசுவது குறித்து தமன்னா தெரிவிக்கையில்

எதைச் செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். நான் தமிழ் பேசுவதற்கும் அதுதான் காரணம். நான் தமிழ் பேசுவதை கண்டு பலர் இது எப்படி என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதிசயமாக பார்க்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போதே நிச்சயம் தமிழ் பேச வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக தினமும் பயிற்சி செய்து வந்தேன். அதனால் இந்த அளவுக்கு என்னால் தமிழ் பேச முடிகிறது. என்னைப் பொருத்தவரை எளிதில் பேசக்கூடிய மொழி தமிழ்தான். மற்றவர்களும் இதை உணர்ந்தால் தமிழில் பேசலாம்.

இப்போது நான் தமிழ் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பேசுகிறேன். நடிப்பு, நடனம், கவர்ச்சி மட்டும் கதாநாயகிகளின் வேலை அல்ல. தங்கள் வசனங்களையும் டப்பிங் பேசினால்தான் முழுமை கிடைக்கும். அதனால்தான் இந்த முயற்சி என்று தெரிவித்தார்.

சிம்புவின் நடிப்பைப் பார்த்து வியந்த ஆண்ட்ரியா!!

Simbu

இது நம்ம ஆளு படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த ஆண்ட்ரியா, அவரது நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார்.

சிம்பு நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் இது நம்ம ஆளு. இதில் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விநியோகம் செய்துள்ளது. சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இசையமைத்திற்கும் இந்த படத்தின் பாடல்கள் எற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை பற்றியும் சிம்புவுடன் நடித்த அனுபவத்தை பற்றியும் ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இது நம்ம ஆளு படம் தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது. படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் ஆகி விடுவார். அவருடைய திறமை அபரிதமானது. ஒவ்வொரு காட்சியிலும் சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன்.

யதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது இது நம்ம ஆளு திரைப்படம். பொதுவாகவே வலுவிழந்த கதைகளில் முன்னணி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு கொஞ்சமும் கிடையாது. சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையம்சத்தில் நடிப்பதை தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த வகையில் இது நம்ம ஆளு படம் எனக்கு பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலையில் வைத்தியர் இன்றி முதியவர் உயிரிழப்பு!!

Dead

வவுனியா சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் அங்கு வைத்தியர் கடமையில் இல்லாமையினால் உயிரிழந்துள்ளதாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசித்து வந்த 64 வயதுடைய செல்லத்துரை சந்திரலிங்கம் என்பவர் செஞ்சுவலி காரணமாக சிதம்பரபரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவ் வைத்தியசாலையில் வைத்தியர் கடமையில் இல்லாமையினால் நோயாளியை அங்கு கடமையில் இருந்த தாதியர் ஒருவர் சிகிச்சை அளித்து கையொப்பம் இடப்படாத படிவம் ஒன்றினூடாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளர் மரணமடைந்துள்ளதாக மரண விசாரணையில் நோயாளியின் மகன் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் முன்னரும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இரண்டுநாட்கள் நடைபெறும் தொழிற்சந்தை!!

 
வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சந்தை இன்று(27.05) காலை வவுனியா பல்கலைக்கழகம் பம்பைமடு வளாகத்தில் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதல்வர் வவுனியா வளாகம் கலாநிதி த.மங்களேஸ்வரன், வியாபார கற்கைநெறி பீடாதிபதி கலாநிதி அ.புஸ்பநாதன், பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி சி.குகநேசன், தலைவர் தொழிற்சந்தை ஏற்பாட்டுக்குழு கலாநிதி ர.நகுலன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

இன்று (27.05.2016) அனைத்துப் பட்டதாரிகள் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும் நாளை (28.05.2016) அனைத்து தொழில் வாய்ப்புக்களைத் தேடுபவர்களுக்காகவும் இடம்பெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையும் இத் தொழிற்சந்தை இடம்பெறும்.

DSC04089 DSC04090 DSC04091 DSC04097 DSC04103 DSC04104 DSC04106 DSC04118 DSC04122 DSC04136 DSC04140 DSC04145 DSC04148 DSC04151

பேருந்தில் பெண்ணுக்கு ஆபாச காணொளி காண்பித்த முதியவர் கைது!!

MObile

கண்டி, மாத்தளை வீதியில் பேருந்தொன்றில் பயணித்த பெண்ணுக்கு முகப்புத்தகத்திலிருந்த ஆபாச காணொளியொன்றினை காண்பித்த குற்றச்சாட்டின் பேரில் முதியவரை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (27.05) இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி சென்ற பேருந்தில் முதியவருக்கு அருகே அமர்ந்திருந்த 24 வயதுடைய யுவதிக்கு தனது முகப்புத்தகத்திலிருந்த ஆபாச காணொளியை காண்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் 61 வயதுடைய முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அதிரடி மாற்றத்தினை கொண்டுவரும் டுவிட்டர்!!

f1b5lfuzmwvzs7nslwbn
சமூக வலைத்தளங்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை டுவிட்டர் பதிவு செய்துள்ளது.பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள இத்தளத்தில் சில வரையறைகள் காணப்படுகின்றன. அதாவது ஒரு டுவீட் செய்யும்போது அதிக பட்சம் 140 எழுத்துக்களையே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.இந்த மட்டுப்படுத்தல் பயனர்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

அதிலும் @Name என டுவீட் செய்யும்போது @ என்ற குறியீட்டினையும் ஒரு எழுத்தாக கணக்கிடுகின்றது.ஆனால் புதிய மாற்றத்தின் படி இக் குறை நீக்கப்பட்டுவிடும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர வீடியோக்கள், அனிமேசன் கோப்புக்கள், கருத்துக்கணிப்புக்கள் என்பவற்றிலுள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளது.இப்புதிய சேவையினை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குப்பை என ஒதுக்கிய கிரீடத்தின் மதிப்பு ரூ.67 லட்சம்: வியப்பில் உறைந்த உரிமையாளர்!!

625.0.560.350.160.300.053.800.668.160.90

பிரித்தானியாவில் குப்பை என ஒதுக்கி வைத்திருந்த பண்டைய கிரீடம் ஒன்றிற்கு 67 லட்ச ரூபாய் மதிப்பு இருப்பதை அறிந்த உரிமையாளர் வியப்பில் உறைந்துள்ளார்.பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் குடியிருந்து வரும் முதியவர் ஒருவரை அரிய வகை பொருட்களை ஏலத்தில் விடும் நிறுவனத்தில் இருந்து சிலர் வந்து சந்தித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கை அறிந்த அந்த முதியவர் தமது குடும்பத்தில் பரம்பரையாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களை அவர்களுக்கு காட்டியுள்ளார்.இதனிடையே பல ஆண்டுகளாக ஒதுக்கியே வைத்திருக்கும் ஒரு அட்டை பெட்டியை அந்த முதியவர் எடுத்து அதில் இருப்பவையை வெளியே கொட்டியுள்ளார்.

அப்போது அந்த அட்டை பெட்டியில் தங்கத்தாலான கிரீடம் ஒன்றும் இருந்துள்ளது. அந்த முதியவருக்கு அந்த கிரீடம் குறித்து மேலதிக தகவல் எதுவும் தெரியாததால் அதை அப்படியே குப்பை என ஒதுக்கி வைத்திருந்துள்ளார்.கிரீடத்தை பார்த்த ஏலம் விடும் நபர்களுக்கு, அந்த கிரீடத்தின் தனித்தன்மையும் வடிவமும் வித்தியாசத்தை உணர்த்தியுள்ளது.

உடனடியாக அவர்கள் அந்த கிரீடத்தின் மதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் விசாரித்துள்ளனர். அந்த நிபுணர்கள் தெரிவித்த தகவல்கள் கிரீடத்தின் உரிமையாளரை வியப்பில் உறைய வைத்துள்ளது.

அந்த கிரீடம் சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானது எனவும் சுத்தமான தங்கத்தால் பொற்கொல்லர்களால் கைகளால் உருவாக்கப்பட்ட கிரேக்க கிரீடம் இதுவெனவும், பண்டைய காலகட்டத்தில் வெற்றிவாகை சூடும் கலை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும் பொக்கிஷம் இது எனவும், இந்த கிரீடத்தின் தற்போதைய மதிப்பு குறைந்தது 67 லட்ச ரூபாய் எனவும் அந்த முதியவரிடம் தெரிவித்துள்ளனர்.

முதியவருக்கு இந்த கிரீடம் எப்போது அவர்களது குடும்பத்தினரால் வாங்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் 1940களில் இவரது குடும்பத்தினர் எவரேனும் இதை வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.கடந்த 2012 ஆம் ஆண்டு இதேப்போன்ற கிரீடம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டதில் அந்த உரிமையாளருக்கு 1.96 கோடி ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கணவனுக்கு அடி பணியாவிட்டால் மனைவியை அடிக்கலாம்!!

image

பாகிஸ்தானில் சி.ஐ.ஐ. என்னும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில், அரசியல் சாசன அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பால், இஸ்லாமிய சட்டப்படி மசோதா தயாரித்து அந்நாட்டு அரசை சட்டமாக இயற்றுமாறு அறிவுறுத்த இயலும். அந்த வகையில், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு மசோதா ஒன்றை உருவாக்கியது.ஆனால், இதை நிராகரித்த சி.ஐ.ஐ அமைப்பு மாற்றாக ஒரு மசோதா தயாரித்து இதை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த மசோதாவில் கணவன்களின் கட்டளைகளைக்கு கீழ்படிய மறுத்தால் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.163 பக்கங்களை கொண்ட இந்த வரைவு மசோதாவில், தான் சொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் லேசாக அடிக்கலாம். தனது விருப்பத்தின்படி உடை அணியாமலும், தனது தாம்பத்திய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உடன்படாமலும் இருக்கிற மனைவியை கணவர் அடிக்கலாம். அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசினாலும், சத்தமாக பேசினாலும், கணவரின் அனுமதியின்றி மற்றவர்களுக்கு பண உதவி செய்தாலும் மனைவியை கணவர் அடிப்பதை அனுமதிக்கலாம்.

தொடக்க கல்விக்கு அடுத்த நிலைகளில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கிற இருபாலார் கல்வி முறையை தடை செய்ய வேண்டும் பெண்கள் ராணுவ பயிற்சி பெறவும், வெளிநாட்டு தூதுக்குழுக்களை வரவேற்கவும், ஆண்களுடன் பேசுவதையும் தடை செய்ய வேண்டும் போன்ற சர்ச்சைக்குரிய பரிந்துரைகள் உள்ளன.

அதேவேளையில், பெண்கள் அரசியலில் இணையலாம் எனவும் பெற்றோர்கள் சம்மதம் இன்றி நிக்கா ஒப்பந்தத்தை செய்து கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான உரிமைகள் நசுக்கப்படுவதாக சிஐஐக்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் இந்த வரைவு மசோதா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

14 வயது சிறுமி 6 நபர்களால் பாலியல் வன்புனர்வு: சித்தப்பா முக்கிய குற்றவாளி – ஆந்திராவில் நடந்த கொடூரம்!!

1 (54)
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின், Pedapadu mandal பகுதியில் உள்ள Khajigudem கிராமத்தில் 14 வயது சிறுமி ஆறு நபர்களால் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.கடந்த மே 20ம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார், சிறுமியின் அப்பா, அம்மா அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள் என நன்கு அறிந்த ரவி(வயது 30) என்னும் நபர், அவரின் நண்பர்கள் ஐந்து பேருடன் வீட்டில் நுழைந்துள்ளார்.பின்னர், ஆறு பேரும் சிறுமியை அடித்து சித்ரவதை செய்து பாலியல் வன்புனர்வு செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது சிறுமியின் சித்தப்பா, சித்தி வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அவர்களை ரவி வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சம்பவத்தை பெற்றோரிடம் கூற பயந்த சிறுமி, உடல் ரீதியாக அவதிப்பட்டு வந்துள்ளார், இதை கவனித்த பெற்றோர் சிறுமியை அதட்டிக் கேட்க அவர் கண்ணீருடன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

பெற்றோர் உடனே பொலிஸ் நிலையத்தை நாடி உள்ளனர், இதன் மூலம் குறித்த சம்பவம் தற்போது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.வழக்கு குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய பொலிசார், சிறுமியின் சித்தப்பா தன், அண்ணனுடன் எற்பட்ட பழைய பகை காரணமாக ரவியை பாலியல் வன்புனர்வு செய்ய ஊக்குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட ரவி உட்பட ஐந்து பேரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

104 பேர் உயிரிழப்பு; 99 பேரை இதுவரை காணவில்லை!!

THANGA_SRI_LANKA_FL_352215f

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 6043 குடும்பங்களின் 21,484 பேர் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமை காரணமாக 104 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99 பேரை காணவில்லை என்றும் அந்த நிலையம் கூறியுள்ளது. அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 பேர் என்று கூறப்பட்டுள்ளது. 4,414 வீடுகள் பகுதியளவிலும், 623 வீடுகள் முழுமையாகவும் அழிவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பங்களாதேஷில் இருந்து விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் வருகிறது!!

Flag-Pins-Bangladesh-Sri-Lanka

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களுடனான விமானம் ஒன்று பாங்காதேஷில் இருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.100 மில்லியன் பங்களாதேஷ் டாக்கா பெறுமதியான மருந்து வகைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளடங்கிய பல நிவாரணப் பொருட்கள் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டுப் பிரதமர் ஷெய்க் ஹஸீனாவின் ஆலோசனைக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பாகிஸ்தானினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யித் ஷகீல் ஹுஸைன் அவற்றை கையளித்துள்ளார். பாகிஸ்தான் இதற்கு முன்னரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மருந்து வகைகள், மின் பிறப்பாக்கிகள் போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது.