பாடசாலைகளுக்கு அருகில் விபச்சார விடுதி – மக்கள் கல்லெறி தாக்குதல்!!

beth-stones
மாலபே பிரதேசத்தில் நடாத்திச் சென்ற விபச்சார விடுதிக்கு குறித்தப் பிரதேச மக்கள் கல்லெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் மாலபே ரொபட் குணவர்த்தண மாவத்தையில் குறித்த விபச்சார விடுதியை நடாத்திச் செல்பவர் அரசியல்வாதி ஒருவரின் செயலாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொள்ளுப்பிட்டியிலிருந்து குறித்த விபச்சாரிகள் அழைத்து வரப்படுவதாகவும், இவர்கள் வெளிநாட்டுப் பெண்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களும், இலங்கையில் உள்ள செல்வந்தர்களுமே குறித்த விபச்சார விடுதியை தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தங்கும் விடுதியாகவே குறித்த விபச்சார விடுதி நடாத்தி வந்துள்ளதாகவும், இதற்கு அண்மையில் இரண்டு பிரதான பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் – பிரதமர்!!

1 (28)

போர் நடைபெற்ற சமயத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக தேடி அறிவதற்காக உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை சிலரை நேற்று அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் இது குறித்து விளக்கியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் இதில் கலந்து கொண்டார்.உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தீர்க்க முடியாத வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும்.வெளிநாட்டு சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட போதிலும் அவர்கள் வழக்கு விசாரணைகளில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் பிரதமர் இதன் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சம்பந்தமாகவும் விரிவாக தெளிவுப்படுத்தியுள்ள பிரதமர், போர் நடைபெற்ற காலத்தில் கைப்பற்றிய தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான நடத்தப்படும் விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு எந்த சர்வதேச அமைப்பும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.எனினும் தற்போதைய நிலைமையின் கீழ் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதம் தொடர்பில் செயற்பட வேண்டிய அத்தியவசியம் இருக்கின்றது.உண்மையை கண்டறியதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

காதலி விட்டுச் சென்ற சோகத்தில்! தீயால் எரிந்த இளைஞனிற்கு நடந்தவை??

625.0.560.320.160.600.053.800.668.160.90மொரட்டுவை நகரில் உடம்பு முழுதும் தீயால் எரிந்த நிலையில் உள்ள இளைஞன் ஒருவனை காணக்கூடியதாக உள்ளது.காதல் விவகாரத்தில் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உடல் முழுதும் தீயால் வெந்த நிலையில் இருக்கும் இவரை சந்திக்கும் நபர்களிடம் காதலி விட்டுச் சென்ற சோகத்தில், நெருப்பு வைத்துக் கொண்டதாக தெரிவித்து வருகின்றார்.

 

கின்னஸ் சாதனைக்காக பற்கள் முழுவதையும் அகற்றி 500 பச்சை குத்திக்கொண்ட முதியவர்!!

 
இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார். மொத்தமாக 500 இற்கும் மேற்பட்ட உருவங்கள் இவரின் உடலில் பச்சை குத்தப்பட்டுள்ளன.

74 வயதான பிரகாஷ் ரிஷி எனும் இவர், 20 சாதனைகளைப் படைத்ததாக கூறுகிறார். தற்போது அவர் “கின்னஷ் ரிஷி” என்றே அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1942 ஆம் ஆண்டு புதுடில்லியில் பிறந்த பிரகாஷ் ரிஷி, 1990 ஆம் ஆண்டு முதல் தடவையாக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றார்.

அவர் தனது இரு நண்பர்களுடன் மோட்டார் ஸ்கூட்டர் ஒன்றில் 1001 மணித்தியாலங்கள் பயணம் செய்தமை கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

பின்னர் புதுடில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு பீட்ஸா விநியோகித்தமை, ஒரு போத்தல் தக்காளி சோஸை 4 நிமிடங்களுக்குள் உட்கொண்டமை என பல சாதனைகளை அவர் படைத்தார்.

வாயில் அதிகம் உறிஞ்சும் குழாய்களை (ஸ்ட்ரோ) வைத்து சாதனை படைப்பதற்காக இவர் தனது பற்கள் முழுவதையும் கழற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி, 2 ஆம் எலிஸபெத் அரசி உட்பட பல பிரமுகர்களின் உருவங்களையும் இவர் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.

கின்னஸ் ரிஷியின் மனைவி பிம்லா, உலகின் மிகச்சிறிய உயில் எழுதியமைக்காக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றமை குறிப்பிடத்கதக்து. 1991 ஆம் ஆண்டு அனைத்தும் மகனுக்கே (All to son)என்பதே இந்த உயிலாகும்.

1 3 4 5 6 7

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

Rain

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று வெள்ளிக் கிழமை அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய மலைப் பிரதேசத்திலும், நாட்டின் கடற்கரைப்பிரதேசங்களிலும் அதிக காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலத்திணைக்களம் கூறியுள்ளது.

கிழக்கு கடற்கரைப் பிராந்தியங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார்.

காற்று மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும் எனவும் வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா வர்த்தக சங்கம் இடமாற்றம்!!

 
வவுனியா வர்த்தக சங்கம் வர்த்தகர்களின் நன்மை கருதியும் பொது மக்கள் இலகுவில் வர்த்தக சங்கத்தினரை சந்திக்கவும் வசதியாக தற்பொழுது முதலாம் குறுக்குத் தெருவில் சிற்றி கட்டிடத் தொகுதியில் முதலாம் மாடியில் இயங்கிவருவதாகவும் பொது மக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வந்து செல்வதற்கும் வசதியாகவே இவ்விடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக வர்த்தக சங்கம் தனது செயற்பாட்டினை பஸார் வீதி, குளோப் கட்டிடத் தொகுதியில் வழங்கி வந்தது. எனினும் இடவசதி இன்மை மற்றும் பொதுமக்கள் வர்த்தக சங்கத்துடன் நல்லுறவிணைப் பேணும் முகமாகவும் இவ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

image-6e9f9ff330b52810363946979991df485595f1073c91d77fa4967c4bdee01304-V image-e841504edcd85e90b7647077a36b93f9c785faab5fe5342bd392ec8efe584f9a-V

பங்களாதேஷில் 20 கிலோ இராட்சத தலையுடன் வாழும் சிறுவன்!!

Big head

தென் பங்­க­ளா­தேஷில் 20 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத தலை­யுடன் பாலகன் ஒருவன் வாழ்வது தொடர்­பான தகவல் சர்­வ­தேச ஊடகங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன.

எமொன் என அழைக்­கப்­படும் மேற்­படி 2 வயது பால­கனின் தலையின் நிறை ஒரு வயதுக் குழந்தையொன்றின் சரா­சரி நிறையை ஒத்­த­தாகும். அந்தப் பாலகன் பிறந்த போது அதன் தலை சாதா­ரண குழந்­தை­களை விடவும் சிறிது பெரி­தாக மட்­டுமே இருந்­த­தா­கவும் ஆனால் கடந்த 2 வருட காலத்தில் அத­னது தலை படிப்­ப­டி­யாக பெரி­தாகி இராட்­சத உருவை அடைந்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

மூளை தண்­டு­வட திரவம் மண்­டை­யோட்டில் சேர்­வதால் ஏற்­படும் ஹைரோ­செ­பலஸ் என்ற பாதிப்பு அவ­னுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

வழ­மை­யாக மூளை­யையும் முள்­ளந்­தண்­டையும் சூழ்ந்து காணப்­படும் திரவம் அந்த உறுப்புகளுக்கு மெத்­தை­யாக செயற்­பட்டு பாது­காப்பு அளிப்­ப­துடன் அந்த உறுப்­பு­க­ளுக்­கான போஷணை­களை வழங்­குதல் மற்றும் கழி­வ­கற்றல் செயற்கி­ர­மங்­க­ளுக்கும் உறு­து­ணை­யாக இருந்து வரு­கி­றது.

மூளை­யானது தின­சரி சுமார் ஒரு பைந்து புதிய தண்­டு­வட திர­வத்தை தொடர்ச்­சி­யாக உற்­பத்தி செய்­கி­றது. அதே­ச­மயம் மூளையால் வெளி­யி­டப்­பட்ட பழைய திரவம் குருதிக் கலங்­களால் துரிதமாக அகத்­து­றிஞ்­சப்­ப­டு­கின்­றன. குருதிக் கலங்­களால் அந்தத் திரவம் அகத்­து­றிஞ்­சப்­ப­டு­வதில் இடை­யூறு ஏற்­படும் போது மூளை தண்டு வட திரவம் அதி­க­மாகச் சேர்ந்து மூளை மீது அழுத்தத்தைப் பிர­யோ­கிக்கும். அத்­த­கைய பாதிப்பே எமொ­னுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகி­றது. இந்தப் பாதிப்புக் கார­ண­மாக எமொனால் பேசவோ நடக்­கவோ அல்­லது அவய­வங்­களை அசைக்­கவோ முடி­யா­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்கு முன் இந்­தி­யாவில் இத்­த­கைய பாதிப்­புக்­குள்­ளான ரோனா பேகம் என்ற பால­கிக்கு ஒரு தொகை அறுவைச் சிகிச்­சை­களின் மூலம் அவரது தலையின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமக்கு இந்திய புது டில்லி சென்று அத்தகைய சிகிச்சையை பெற போதிய வசதியில்லை என எமொனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Head 1

நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இந்தி நடிகைகள்!!

Hindi-actress

தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட பல மடங்கு அதிகம் இந்தி நடிகைகள் சம்பளம் பெறுகின்றார்கள்.

தென்னிந்திய சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா 2.5 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். அதேநேரம், இந்தியின் முன்னணி நடிகை கங்கனா ரனவத் 11 கோடிகள் சம்பளம் பெறுகிறார்.

கங்கனா ரனவத் பெரும்பாலும் நாயகி மையப் படங்களில் நடிக்கிறார். அவை ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலிக்கவும் செய்கின்றன. அதனால் இந்த சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது.

கங்கனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கரீனா கபூர் 10 கோடிகள் பெறுகிறார்.

தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் தலா 9 கோடியும் வித்யாபாலன், கத்ரினா கைப் ஆகியோர் தலா 7 கோடியும் அனுஷ்கா சர்மா 6 கோடியும் அலியாபட் 5 கோடியும் சோனாக்சி சின்ஹா 4 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள்.

பொலிவுட் உலகின் சந்தை மிகப்பெரியது என்பதால் இந்த பெரிய தொகை சம்பளமாக நடிகைகளுக்கு வழங்கப்படுகிறது.

தாயைக் கத்தியால் குத்திய மகன் கைது!!

Kathi

தனது தாயாரை கத்தியால் குத்திய மகனை கண்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 63 வயதுள்ள தாயையே 43 வயதுடைய மகன் கத்தியால் குத்தியதாக கைதானதாக கண்டி பொலிசார் தெரவித்தனர்.

இச்சம்பவம் நேற்றுக் காலை 5.30 மணியளவில் இடம் பெற்றதாகவும் இது ஒரு குடும்பப் பிரச்சினை காரணமாக இடம் பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனை அடுத்து சந்தேநபரை அவரின் இரு சகோதரர்கள் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணின் இடுப்புப் பகுதியில் காயமேட்பட்டுள்ளதுடன் அவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காந்தியின் கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!!

Gandhi

இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோட்சே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், கொலை தொடர்பாக ஜே.எல்.கபூர் தலைமையில் விசாரணை கமிஷனும் அப்போது அமைக்கப்பட்டது.

ஆனால் ஜே.எல்.கபூர் குழுவால் காந்தியின் கொலைச்சதி முழுவதையும் வெளிக்கொணர முடியவில்லை எனவும், புதிய விசாரணைக்குழு ஒன்றை அமைத்து காந்தியின் கொலையை விசாரிக்க வேண்டும் எனவும் மும்பையை சேர்ந்த அபினவ் பகத் அமைப்பின் அறங்காவலர் பங்கஜ் பட்னிஸ் மும்பை உயர் நீதிமன்றத்தில் தற்போது பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், ‘7 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியால் காந்தி சுடப்பட்டதாகவும், இதில் 3 தோட்டாக்கள் காந்தியின் உடலை துளைத்த நிலையில், மீதமுள்ள 4 தோட்டாக்கள் சம்பவத்தின் போது பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்ததாக அரசு தரப்பு கூறியுள்ளது. ஆனால் காந்தியின் உடலில் 4 தோட்டாக்கள் இருந்துள்ளது. அப்படியானால் அங்கு கோட்சேயை தவிர வேறு கொலையாளிகள் யாரும் இருந்தனரா என்பதை கண்டறிய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலைமையிலான அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீது அடுத்த மாதம் (ஜூன்) 6ம் திகதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

யாழில் கராத்தே பயில அனுமதி மறுத்ததால் தூக்கில் தொங்கிய மாணவன்!!

hang death

பாடசாலையில் கறாத்தே கற்பதற்கு பெற்றோர் அனுமதிக்காமையால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தரம் 6 கல்வி கற்கும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கை சேர்ந்த யதீஸ் தேனினியன் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்தவராவர்.

குறித்த மாணவனை பாடசாலையில் கறாத்தே பயிலுவதற்காக பெற்றோரிடம் கடிதம் வாங்கி வருமாறு பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து தந்தை தற்போது கறாட்டி பயில்வதில் ஈடுபட்டால் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என தெரிவித்து கடிதம் வழங்க மறுத்துள்ளார்.

இதனால் கவலையுடன் பாடசாலை சென்ற குறித்த மாணவனுக்கு தாய் 20 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். எனினும் அப் பணத்தை அம் மாணவன் வீதியில் வீசி விட்டு செல்லவே அதனை அவதானித்த அவனது சகோதரன் இச் சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார்.

இதனால் தாய் அம் மாணவனிடம் காசை வீசியமை தொடர்பாக தந்தைக்கு கூறப் போவதாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான கடந்த 17 ஆம் திகதி மாலை வீட்டின் பின்புறமாக உள்ள தற்காலிக கொட்டகைக்குள் சென்று அங்கு வாழைக்குலை தொங்க விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன் போது அங்கு தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்த வந்த அவரது சகோதரன் தூக்கில் தொங்கிய தம்பியை காப்பாற்றி அவனை தாயுடன் இணைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அன்று இரவு எட்டு மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் நேற்று காலை 4 மணியளவில் குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாகன விலைகள் மேலும் அதிகரிப்பு!!

Vehicle

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைக் கூறியுள்ளது.

அதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப காலஎல்லை நீடிப்பு!!

OL

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்தமுறை (2016ம் ஆண்டுக்கான) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் ஜூன் மாதம் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மஸ்தான் ரேடர்ஸ் நிறுவன லொறி இனம்தெரியாதோரால் கடத்தல்!!

Lorry

வவுனியாவின் பிரபல வர்த்தக நிறுவனமான மஸ்தான் ரேடர்ஸ் இன் லொறி கடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த குறித்த லொறி குருநாகல் நாரம்பல பிரதேசத்தில் பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.

WP-JL – 5667 என்ற இலக்கத்தைக்கொண்ட குறித்த வாகனம் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் 0773760587, 0777779321 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

-சர்ஜான்-

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆண்மைத் தன்மை நீக்கப்படும்!!

Abuse

இந்தோனேசியாவில் சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு இரசாயனம் மூலம் ஆண்மைத்தன்மையை நீக்கும் சட்டமூலத்தில் அந்நாட்டு அதிபர் ஜொகோ விடோடோ கைச்சாத்திட்டுள்ளார்.

அவ்வாறன நபர்கள் பிணையில் வெளியில் செல்ல நேர்ந்தாலும் மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 14 வயது சிறுமி ஒருவர் இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 7 பதின்மவயதினர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர கொலைச் சம்பவத்தை அடுத்தே, இந்தோனேசியாவில் இந்த புதிய சட்டம் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரச வங்கியில் காசாளரை ஏமாற்றி ஐந்து இலட்சம் சுருட்டிய வெளிநாட்டவர் தப்பியோட்டம்!!

bank

வெளிநாட்டுப் பிரஜைகள் இரண்டு பேர் அரச வங்கியொன்றில் ஐந்து லட்சம் ரூபாவை சுருட்டிக் கொண்டு நாட்டை விட்டுத்தப்பியோடி உள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

கொழும்பு-07 டொரிங்க்டனில் உள்ள அரச வங்கியொன்றின் கிளைக்கு நேற்று வருகை தந்த வெளிநாட்டவர் இரண்டு பேர் அங்கிருந்த காசாளரை தந்திரமாக ஏமாற்றி ஐந்து லட்சம் ரூபாவை சுருட்டிக் கொண்டு லாவமாக நழுவியுள்ளனர்.

நேற்று மாலை குறித்த காசாளர் வங்கி அலுவல்களை முடித்து நாளாந்த கணக்கு வழக்கை ஒப்படைக்க முற்பட்டபோதுதான் தான் லாவகமாக ஏமாற்றப்பட்டு ஐந்து லட்சம் ரூபா பணத்தை பறிகொடுத்திருப்பதை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாரின் அவசர உதவி நாடப்பட்டு, விமான நிலையத்தில் வைத்து குறித்த வெளிநாட்டுப் பிரஜைகளை மடக்கும் நோக்கில் பொலிசார் விரைந்துள்ளனர்.

எனினும் அவர்கள் இருவரும் அதற்கு முன்னரே விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டும் வெளியேறியிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.