இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் 19 வயது நியூசிலாந்து வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் மெர்ல்ன்போர்ன் கிரிக்கெட் கிளப் சார்பாக ஆடிய 19 வயதேயான கிளென் பிலிப்ஸ் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி இவர்கள் சாதனையை சமன் செய்துள்ளார்.
தொடர்ந்து அசத்திய அவர் Duke of Norfolk XI அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 123 பந்தில் 201 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென்னாபிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவரான கிளென் பிலிப்ஸ், அண்மையில் வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார்.
ஒக்லாந்து அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சதமும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் குற்றுயிராய் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிர்பிழைத்து புத்த வஸ்திரத்தை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது பார்ப்பதற்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள குக்கிராமத்தில் Kachit Krongyut (53) என்ற முதியவர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, 20 செமீ துளையில் பிஞ்சுக்குழந்தை ஒன்று கிடந்துள்ளது.
குழந்தையின் கால் மட்டுமே மேற்புறத்தில் தெரிந்துள்ளது, அருகில் சென்று உன்னிப்பாக கவனித்த இவர், உள்ளே பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
விரைந்து வந்தவர்கள் குழந்தையை மீட்டு Wangyai மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு இக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இக்குழந்தை உடல்ரீதியாக தாக்கப்பட்டுள்ளது என்றும் கொலை செய்யும் நோக்கில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட பொலிசார், கருக்கலைப்பு செய்ய நினைத்து, அது முடியாமல் போன கட்டத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்கள்.
ஆனாலும், இக்குழந்தை வாழ்வது வீணற்றது என நினைத்து இதுபோன்ற செயலில் இக்குழந்தையை பெற்றெடுத்த தாய் ஈடுபட்டிருப்பாள் என தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் இக்குழந்தை தற்போது நலமாக உள்ளது, ஆனால் இக்குழந்தையின் பெயர் மற்றும் இருப்பிடம் எதுவும் வெளியாகவில்லை.
அன்று ரத்தக்கறைகளோடு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த குழந்தை, இன்று தனது மேனியில் புத்த வஸ்திரத்தை அணிந்துகொண்டு அழகிய சிரிப்போடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது.
இந்த புகைப்படம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது, கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்றாலும் தாய்லாந்தில் அது பொதுவாக நடக்கும் ஒன்றாக உள்ளது,
கடந்த 2011 ஆம் ஆண்டு தாய்லாந்தில்சட்டவிரோதமாக 2,000 கருக்கலைப்பினை செய்த நபருக்கு 40 மாதங்கள் சிறைதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் முற்றாக நிரப்பப்பட்ட வாளி மீது விழுந்து மூழ்கிய நிலையில்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. வீட்டு கிணற்றுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த வாளியில் விழுந்தே குழந்தைஉயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஒரு வயதும் 3 மாதமும் உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தில் நான்காவது குழந்தையான ரத்னவீர பட்டபடிகே ஜாயடி என்ற குழந்தையேஇவ்வாறு உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
இதன்போது, குழந்தையின் பெற்றோர்கள் சமையலறையில் இருந்ததாக பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இத்தாலி நோக்கி வந்த படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை இத்தாலி கடற்படையினர் மீட்டனர். இதில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள்.
இந்த நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்து மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிர் பிழைப்பதற்காக பலர் படகில் இருந்து குதித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை கப்பல் அதை பார்த்து விட்டது. உடனே கப்பலில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு மிதவைகளை பயணிகளை நோக்கி வீசினார்கள். அதை பிடித்துக்கொண்டு பலர் மிதந்தனர். கப்பலில் இருந்த மீட்பு படகுகளையும் உடனடியாக கீழே இறக்கி அங்கு சென்றனர்.
அதன் மூலம் அவர்களை ஒவ்வொருவராக மீட்டு கப்பலில் ஏற்றினார்கள். 562 பேர் மீட்கப்பட்டனர். 7 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.
மேலும் பலரை காணவில்லை. மிகச் சிறிய படகில் 500க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததால் அதை தாங்க முடியாமல் படகு கவிழ்ந்தது தெரிய வந்தது.
படகில் வந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் லிபியா அல்லது துருக்கி நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர் மாநாடு, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.செ.அன்ரன் சோமராஜா தலமையில் ஆரம்பமானது.
முதலாவது நிகழ்வான கண்காட்சி காலை 9.00 மணியளவில் வவுனியா சைவப்பிரகாச கல்லூரி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் காண்காட்சியில் தரம்1 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையிலான மாணவர்களின் அனைத்து பாடங்களுக்குமான கற்பித்தல் சாதனங்களும் ஆசிரியர்களால் காட்சிப்படுத்தப்பட்டன .
அதன் இரண்டாவது நிகழ்வான ஆசிரியர் மாநாடு காலை 11.15 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம் மாநாட்டில் வரவேற்பு நடனம், அரங்கு அறிமுகம், ஆய்வுமுன் மொழிவு , பேருரையாளர் அறிமுகம், பேருரை, பிரதம அதிதி உரை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா தலமையில் ஆரம்பான இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி செல்வின் இரேனியஸ் மற்றும் தெற்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், தெற்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்வி.க.கந்தையா, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.க.பாக்கியநாதன் உட்பட தெற்கு வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்விப் பணிமணை நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர்களுக்கான தொழில்சார் வாண்மையை ஏற்ப்படுத்துதல், தொழில்சார் ஊக்கத்தை வழங்குதல், நவீன கற்பித்தல் சாதனங்களின் மூலம் கற்பித்தலை மேம்படுத்துதல், கற்பித்தல் சார் அனுபவங்களை வழங்குதல் போன்றவற்றை நோக்காக கொண்டே இந்த மாநாடு இடம்பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளையதினம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் திருமதி.செ.அன்ரன் சோமராஜா (வலயக்கல்விப் பணிப்பாளர்) தலைமையில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.இ.ரவீந்திரன் (செயலாளர் கல்வி பண்பாட்டு மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் – வடமாகாணம்) கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த 8 முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் இன்று(26.05.2016) காலை 10 மணிக்கு அவர்களின் குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனை புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் எல்.டீ.எம்.சி.ஜானக ரத்னாயக்கா, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பணிப்பாளர் எம்.எ.ஆர்.கெமிடேன், வவுனியா புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி பி.எ. குணசேகர, மற்றும் இராணுவ அதிகாரிகள், மூவின சமயத்தலைவர்கள், வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் போராளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது.ஜயல என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீற்றர் பயணம் செய்து அனைவரையும் வியக்க வைத்தது.
தொழில்முறை நீர் சறுக்கு வீரர்களான அந்த குழந்தையின் பெற்றோர், படகு ஏரியின் மறுமுனையில் நின்று விட்டது. அப்படி இல்லாவிட்டால் இன்னும் அதிக தூரத்தை Zyla கடந்திருப்பாள் என்று பெருமையுடன் கூறியுள்ளனர்.Parks Bonifay என்பவர் 6 மாதம் 29 நாட்கள் வயதில் நீர் சறுக்கில் ஈடுபட்டதே சாதனையாக இருந்தது. அதனை 6 மாதம் 27 நாட்களில் அதாவது 48 மணி நேர வித்தியாசத்தில் Zylaமுறியடித்து விட்டாள்.
மஹாராஸ்டிராவில் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பெண் ஒருவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பிரியங்கா என்ற 28 வயது பெண்ணின் கணவர் வீட்டில், அவரிடம் பணம் கேட்டு கணவரின் குடும்பத்தினர் தொடர் தொல்லை அளித்து வந்துள்ளனர்.
இதனால் துன்பமடைந்த பிரியங்கா செய்வதறியாது திகைத்துள்ளார். இந்நிலையில், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், திங்களன்று தனது 2 மகன்கள் மற்றும் மகளை அருகில் இருந்த கிணற்றில் வீசி கொன்றுள்ளார்.
பின்னர் தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது இது தொடர்பாக பொலிசார் அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியாரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக சிறையில் அடைத்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட பிரியங்கா மற்றும் இறந்த குழந்தைகளின் உடல்கள் அனைத்துக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு செவ்வாய்க் கிழமை அன்று நடந்துள்ளது.
வவுனியா சோயா வீதியிருக்கும் வவுனியா நகரசபைக்கு சொந்தமான மாடு அறுக்கும் மடுவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விஷேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு அங்கு பணிபுரிந்த 4பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு பசுமாடுகளும் அறுத்த நிலையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று அதிகாலை குறித்த மாடு அறுக்கும் (கொல்களம்) மடுவத்தில் பசுமாடு அறுக்கப்படுவதாக விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையிலேயே அங்கு சென்ற இராணுவத்தினர் அறுத்த நிலையிலிருந்த இரண்டு பசுமாடுகளையும் மேலும் நான்கு மாடுகளையும் பிடித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
வழமையாக மாடு அறுக்கும்போது பொது சுகாதார பரிசோதகர் முன்நிலையில் பரிசோதனையின் பின்னரே மாட்டை அறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்று பொது சுகாதார பரிசோதகர் இல்லாமல் நேரகாலத்துடன் பசுமாட்டினை அறுத்து விற்பனைக்குத் தயாரா இருந்தபோதே விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொண்டபோது மேல் அதிகாரியின் அனுமதியின்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
கைது செய்தவர்களை விஷேட அதிரடிப்படையினர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணையின் பின்னர் இன்று மாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் 15வது சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று 13வது முறையாக எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார்.சட்டசபையில் அவர் சக்கர நாற்காலியுடன் சென்று அமர வசதி செய்து தரப்படாததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக, சட்டசபைக்கு வராமல் இருந்தார். தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சட்டசபைக்கு வந்தார்.
இந்நிலையில் சட்டசபைக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்க, முதல்வர் ஜெயலலிதா சபையில் இருந்து வெளியேறினார்.கருணாநிதி உள்ளே நுழைந்த போது சட்டசபையில் இருந்த ஜெயலலிதா அவரை சந்திப்பதை தவிர்க்க சபாநாயகர் இருக்கை அருகே இருந்த மற்றொரு வாயில் வழியாக வெளியேறினார்.
கருணாநிதி பதவியேற்று சென்ற பிறகும், முதல்வர் ஜெயலலிதா சபைக்கு வரவில்லை. இதனால் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது பதவியேற்க விரும்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விஷால் கடந்த சில நாட்களாகவே பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக திருட்டு விசிடிக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகிறார்.இந்நிலையில் இவர் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு தோல்பட்டையில் பலத்த அடி விழுந்துள்ளது.
வலி தாங்க முடியாமல் விஷால் துடிக்க, உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு விஷாலை அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
சிம்பு, நயன்தாரா இருவரும் காதலித்தது பின் பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாண்டிராஜ் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘படத்தில் மட்டுமில்லை, படப்பிடிப்பிற்கு வெளியிலும் சிம்பு-நயன்தாரா சண்டைப்போடுவார்கள்.
நயன்தாரா மேக்கப் எல்லாம் போட்டு 2 மணி நேரம் காத்திருக்கும், பிறகு தான் சிம்பு வருவார், அவர் வந்தவுடன் நயன்தாரா தான் முதலில் திட்ட ஆரம்பிப்பார்.சிம்புவும் பல காரணங்கள் சொல்ல, அட இது நல்ல இருக்கே என இவர்கள் சண்டையையும் படத்தில் வைத்து விட்டோம்’ என கலாட்டவாக பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நாள் முழுவதும் வெயிலில் கட்டி வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த ஒட்டகம் தனது எஜமானரை தாக்கி, அவரது தலையை கடித்து குதறியது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கோடை வெயில் உக்கிரமாக கொளுத்தி வருகிறது. இதனால் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அம்மாநிலத்தில் உள்ள மங்தா கிராமத்தில் உர்ஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு செல்லப் பிராணியாக ஒட்டகத்தை வளர்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை விருந்தினர்கள் ஏராளமானோர் வந்ததால் ஒட்டகத்தை வீட்டுக்கு வெளியே கட்டிவிட்டு அவர்களை உபசரிப்பதில் மூழ்கி போனார்.
திடீரென அன்று இரவு அவருக்கு ஒட்டகத்தின் நினைவு வந்ததும், வெளியே ஓடி வந்து அதன் கயிற்றை அவிழ்க்க முயற்சித்தார். நாள் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்த அந்த ஒட்டகம், உர்ஜாராமை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், அவரது தலையையும் பற்களால் கடித்து குதறியது. இதனால் பதறிப் போன அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஒட்டகத்தை சமாதானப்படுத்தி, உர்ஜாராமை காப்பாற்றினர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில், செல்லப்பிராணி நாய்களுக்கென முதல்முறையாக தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது.ஐப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களைப் பாதுகாக்க உணவு விடுதிகள், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பெண்மணி ஒருவர் லாஸ்ஏஞ்சலிஸ் நகரில், தெருக்களில் தனித்து விடப்பட்ட நாய்களை காப்பாற்றும் நோக்கில் தேநீர் விடுதி காப்பகத்தினை தொடங்கினார்.
பின்னர் நாய் வளர்ப்போர் இந்த தேநீர் கடைகளுக்கு நாய்களுடன் வரத்தொடங்கியதால், இந்த விடுதி எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. இந்த தேநீர் விடுதிகளுக்கு வருபவர்களிடம் நுழைவு கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதுபோன்ற தேநீர் விடுதிகளுக்கு நாய்களை அழைத்துச்செல்வதன் மூலம், வீடுகளிலேயே அடைபட்டு கிடக்கும் நாய்களுக்கு புத்துணர்ச்சியும், உடல் ஆரோக்கியமும் ஏற்படுவதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த தேநீர் விடுதியில் எஜமானர்கள் தங்களது நாய்களை அழைத்து வந்து தேநீர் அருந்தும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!
* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மொடேன் ஆக உடை அணிந்தாலும் கூட, நேர்த்தியாக அணியுங்கள் .
* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள். சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!
* உடன் வேலை செய்தாலும் உங்களுடைய செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.
* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாளாமல் , பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.
* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.
* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.
* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.
* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.
* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.
* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!
* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
* அலுவலகத்தில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.
* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது “நன்றி” என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.
* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.
* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.
* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.
* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.
* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.
* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.
* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்!
நாட்டின் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று(26.05.2016) மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் கன மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் காற்று பலமாக வீசக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், கடற்கரை பிரதேசத்தில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்மாகாணம், கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் அதேவேளை,
இடி மின்னல் தாக்கமும் அதிகரித்து காணப்படுவதனால் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.