ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்!!

AB de Villiers of Royal Challengers Bangalore bats during match 57 (Qualifier 1) of the Vivo IPL ( Indian Premier League ) 2016 between the Gujarat Lions and the Royal Challengers Bangalore held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India,  on the 24th May 2016 Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS

இம்முறை இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளின் முதலாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி 9 ஓட்டங்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. பிஞ்ச் (4), மக்கலம் (1), ரெய்னா (1) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

5 ஆவது நபராக களம் இறங்கிய டுவெயின் ஸ்மித் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ஓட்டங்களை குவித்தார்.

ஸ்மித்தின் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் அணி 158 ஓட்டங்களைப் பெற்றது. பெங்களூர் அணியின் வட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து. அந்த அணியின் ஆரம்ப வீரர் விராட் கோஹ்லி தான் சந்தித்த 2 ஆவது பந்தில் டக் அவுட் ஆகி அதர்ச்சியளித்தார்.

விராட் கோஹ்லியை வீழ்த்திய தவால் குல்கர்னி பந்தில் அனல் பறந்தது. விராட் கோஹ்லியைத் தொடர்ந்து கெய்ல் (9), ராகுல் (0), சச்சின் பேபி (0), ஆகியோரையும் வெளியேற்றினார். மற்றொரு முனையில் வட்சன் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதனால் பெங்களூர் அணி 29 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் பெங்களூர் அணி தோற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், டி வி்ல்லியர்ஸ் மட்டும் மைதானத்தில் நின்றிருந்தார். அதனால் பெங்களூர் ரசிகர்கள் மட்டும் நம்பிக்கையில் இருந்தனர்.

6 ஆவது விக்கெட்டுக்கு வில்லியர்ஸ் உடன் ஸ்டூவர்ட் பின்னி ஜோடி சேர்ந்தார். ஜகாதி வீசிய 9-வது ஓவரில் பின்னி 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 18 ஓட்டங்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரில் பின்னி ஆட்டமிழந்தார், அவர் 15 பந்தில் 21 ஓட்டங்களை சேர்த்தார்.

அடுத்து இக்பால் அப்துல்லா டி வில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். அப்துல்லா நிலைத்து நின்று ஆடினார். சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் 33 பந்தில் அரைச்சதம் அடித்தார். ஸ்மித் வீசிய 15 ஆவது ஓவரில் டி வில்லியர்ஸ் 11 ஓட்டங்கள் அடித்தார். அடுத்த ஓவரில் டி வில்லியர்ஸ், அப்துல்லா தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். அதன்பின் பெங்களூர் பக்கம் ஆட்டம் திரும்பியது.

பிராவோ வீசிய 18 ஆவது ஓவரில் இக்பால் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

19 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் 2 ஓட்டங்களைப் பெற்று பெங்களூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைக் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டி வில்லியர்ஸ் 46 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 78 ஓட்டங்களை எடுத்தும், அப்துல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உதவினார்கள். குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக குல்கர்னி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக டி வில்லியர்ஸ் தேர்வுசெய்யப்பட்டார். மேலும் பெங்களூர் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் அணி எது என்பது இன்னும் இரண்டு போட்டிகளில் தெரிந்து விடும்.

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்!!

Sun

புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நமது கிரகத்தின் பூர்வீகம் என்ன, உயிர்கள் வாழ்வதற்கு என்ன சூழல் தேவை? பிற கிரகங்களில் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிடம் இருந்து வெளிப்பட்ட வெப்பம் குளிராக இருந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு போதுமானதாக இல்லை என்ற கருத்து இதுவரை நிலவி வருகிறது.

இந்நிலையில் சூரியனின் வெப்ப ஆற்றல் காரணமாகவே குளிர் பந்தாக இருந்த பூமி உயிர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகமாக மாறியதாக நாசாவின் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது..

சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன், சூரியன் தோன்றியபோது தற்போது நாம் காணும் பிரகாசத்தை விட மூன்றில் ஒரு பங்கு பிரகாசத்துடன் தான் இருந்தது. ஆனால் அதன் வெளிப்புறம் எரிமலை போல் எப்போதும் வெடித்துக் கொண்டிருந்தது.

அதில் இருந்து வெளிப்பட்ட எண்ணற்ற மூலக்கூறுகளும், கதிர்வீச்சுகளும் விண்ணில் சிதறியபடி இருந்தன. அப்போது பீறிட்ட வெப்பம் தான் பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான ஆற்றலையும், சூழலையும் உருவாக்கி உள்ளது. சூரியனில் இருந்து வெளிப்பட்ட இந்த ஆற்றல்கள் தான் வாழ்க்கைக்கு தேவையான டிஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற மூலக்கூறுகளை உருவாக்கியது.

400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சூரியன் ஆற்றலை இழந்தபோது, இளம் நட்சத்திரம் சூரியனாக உருவெடுத்தது. அதில் இருந்து வெளியான வெடிப்புகள், கதிர்வீச்சுகள் தான் பூமிக்கு தேவையான சக்தியை வழங்கி வருகின்றன. அந்த நட்சத்திரம் தான் தற்போது நாம் காணும் சூரியன்.

எகிப்­து­ விமானம் விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு!!

parts

எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்த இடத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மனித எச்­சங்கள் அந்த விமா­னத்தில் பாரிய வெடிப்பு இடம்­பெற்­றுள்­ள­மையை எடுத்துக் காட்டுவதாக எகிப்­திய தட­ய­வியல் அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யொ­ரு­வரை மேற்கோள்காட்டி ஏ.பி. ஊடகம் செவ்­வாய்க்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அந்த விமானம் கடந்த 19 ஆம் திகதி 66 பேருடன் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­த­தை­ய­டுத்து மேற்கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது இது­வரை ஒரு கரம் அல்­லது ஒரு கால் என்ற ரீதியில் சுமார் 80 உடல் பாகங்கள் துண்­டு­ துண்டுகளாக சித­றிய நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­போது முழு­மை­யாக எந்த உடலும் மீட்­கப்­ப­டாத நிலையில் அவ்­வாறு உடல்கள் சிதறியமைக்கு விமா­னத்தில் இடம்­பெற்ற பாரிய வெடிப்பே கார­ண­மாக இருக்­கலாம் என நம்பப்படுவ­தாக அந்த அதி­காரி தெரி­வித்­துள்ளார்.

எனினும் மேற்­படி தக­வ­லுக்கு அந்­நாட்டு நீதி அமைச்சின் தட­ய­வியல் திணைக்­களத் தலைவர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி தகவல் வெளி­யா­வ­தற்கு முதல் நாள் எகிப்­திய அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் வானில் பறக்கும் விமா­னங்­களின் இடத்தைக் கண்­ட­றியும் வேவையை வழங்கும் ஸ்தாப­னத்தின் தலைவர், அந்த விமானம் ஏற்­க­னவே கிரேக்க பாது­காப்பு அமைச்­சரால் தெரி­விக்­கப்­பட்­டது போன்று திரும்­ப­ல­டை­யவோ அல்­லது சடு­தி­யாக செங்­குத்­தாக விழவோ இல்லை என தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களின் உடல் பாகங்­களை அடை­யாளம் காண மர­பணு பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக க கூறப்படுகிறது.

விளையாட்டு மைதானத்தில் பரிதாபமாக பலியான வீரர்!!(வீடியோ)

Dead

ஆர்ஜன்டினாவில் நிகழ்ந்த காற்பந்தாட்ட போட்டியொன்றின் போது 23 வயதான மைக்கல் பெவ்ரே என்னும் வீரர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த வீரர் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிரணி வீரரொருவரின் கால் முட்டியானது முகத்தில் பலமாக மோதியுள்ளது.
இதனால் காயமடைந்து கீழே விழுந்த குறித்த வீரனை எதிரணியின் வீரரொருவர் மீண்டும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தின் பின்னர் குறித்த வீரனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் ஆடை அலங்காரக் கண்காட்சி!!

 
நுவரெலியா குதிரை பந்தயத் திடலில் ஆண் பெண் இருபாலருக்குமான ஆடை அலங்கார கண்காட்சி நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவான அழகிய ஆடைகளை அணிந்து வந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொடலிங் ஆண்களும் பெண்களும் விதவிதமாக ஆடைகளை அணிந்து காட்சிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது நிகழ்வு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.1280.160.95 (1) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (2) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (3) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (4) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (5) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (6) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (7) 625.0.560.350.160.300.053.800.1280.160.95 (8) 625.0.560.350.160.300.053.800.1280.160.95

நான்காம் தர மாணவிக்கு கடும் தண்டணை வழங்கிய ஆசிரியையால் சர்ச்சை!!

School

காலியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றும் நான்காம் தர மாணவிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

சிறு குற்றம் இழைந்த மாணவிக்கு, வகுப்பிலுள்ள ஏனைய 44 மாணவிகளை அவரின் தலையில் குட்டுமாறு, வகுப்பாசிரியை பணித்துள்ளார்.

பயிற்சி நிலை ஆசிரியையினால் வழங்கப்பட்ட தண்டனையினால், குறித்த மாணவி பலவித உடல் உபாதைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களமும் சம்பவம் குறித்து தனி விசாரைணை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2800 குடும்பங்களுக்கு பழைய இருப்பிடங்களில் வசிக்கத் தடை!!

An elderly Sri Lankan woman and a girl are shifted on a mattress at a flooded area in Colombo, Sri Lanka, on Tuesday, May 17, 2016. Photo: Eranga Jayawardena/AP

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் வசித்த 2800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அவர்களது பழைய இருப்பிடங்களில் வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்களுக்கு அங்கு வசிப்பதற்கான தடையினை தேசிய கட்டிட ஆய்வுநிலையத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் மேலாண்மை பணிப்பாளர்ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் கேகாலை மாவட்டத்தில் 1762 குடும்பங்களும்,கண்டியில் 652, இரத்தினபுரி 230, நுவரெலியாவில் 114, மாத்தளையில் 42, குருநாகலில் 31, காலி 15, மற்றும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் 15 குடும்பங்களும் இவ்வாறு தமது பழையவாழ்விடங்களை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பதுளை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 661 இடங்களில் மண்சரிவு தொடர்பான ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத்தாருங்கள் : தாயார் வேண்டுகோள்!!

harishnavi

வவுனியா உக்குளாங்குளத்தில் பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி (13 வயது) பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்றுவரை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளதாகவும், விசாரணைகள் பின்செல்வதால் குற்றவாளி தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த 16.02.2016 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். எனினும் இன்று வரையில் குற்றவாளி இனங்காணப்படவில்லை.

சந்தேகத்தின் பேரில் அயல்வீட்டில் இருந்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாரால் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.

அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா மன்னார் வீதி புனரமைப்புப் பணி : மக்கள் விசனம்!!

 
வவுனியா மன்னார் வீதி கடந்த பல வருடங்களாக சீரற்ற நிலையில் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அடிக்கடி செப்பணிடப்படுகின்ற போதும் அவ் வீதி செப்பனிடப்பட்டு சில வாரங்களிலே மீண்டும் பழுதடைவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது வவுனியா நகரிலிருந்து சாம்பல்தோட்டம் வரை 6 கிலோமீற்றர் பாதை செப்பணிடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இவ் வீதி புனரமைப்பு பணியின் போது மணல் போடப்படுவதனால் வீதி விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன.

இன்றைய தினம் இவ் வீதி புனரமைப்பின் பின்னர் போடப்பட்ட மண்ணினால் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு செப்பணிடப்படும் வீதி இன்னும் இரு வாரங்களில் மீண்டும் பள்ளமாக காணப்படும். இவ்வாறான அபிவிருத்தி எமக்கு தேவையில்லை. முழுமையாக நீண்டகால அடிப்படையில் செப்பணிட்டுத் தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.

P1200689 P1200690 P1200691 P1200692 P1200693 P1200694 P1200695 P1200696 P1200697 P1200698

வவுனியா செட்டிகுளம் பூவரசங்குளம் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் சிரமம்!!

 
செட்டிகுளம் பூவரசங்குளம் பிரதான வீதியில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

வவுனியா பூவரசங்குளம் பிரதான வீதியில் குப்பைகள் மற்றும் கட்டிடப்பொருட்களின் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் என்பன கொட்டப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் இவ் வீதியூடாக தினசரி பயணிக்கின்றேன். இவ்வாறு வீதியில் குப்பைகள் கொட்டுவதனால் சுற்றுப்புற சூழல் மாசடைவதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது. இவ் விடயத்தில் அரச அதிகாரிகளை குறைகூறமுடியாது. மக்கள் தான் இதற்கு முழுப்பொறுப்பும் என தெரிவித்தார்.

எமது சுற்றுப்புற சூழலினை பாதுகாப்பது எமது கடமை. சிந்திப்போம் செயற்படுவோம்.

P1200666 P1200667 P1200668 P1200669 P1200670 P1200671 P1200672 P1200673 P1200674 P1200675 P1200676 P1200677

கவர்ச்சி எல்லையை மீறமாட்டேன் : சுருதிஹாசன்!!

Sruthi

சுருதிஹாசன், சபாஷ் நாயுடு படத்தில் அவருடைய தந்தை கமல்ஹாசனுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கம் படத்தின் 3ம் பாகமாக தயாராகும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். தெலுங்கு, இந்தியிலும் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இந்திப் படங்களில் அவர் கவர்ச்சியாக வருவதாக விமர்சனங்கள் வெளிவந்தநிலையில். சமீபத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் இணைய தளங்களில் பரவி உள்ளன. இதுகுறித்து சுருதிஹாசனிடம் தெரிவித்தபோது..

‘‘நான் கவர்ச்சியாக இருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாகத் தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சிதான். நடிகைகள் கவர்ச்சியை மட்டுமே நம்பிக்கொண்டு சினிமாவில் நீடிக்க முடியாது. கவர்ச்சியும், திறமையும் சேர்ந்து இருக்க வேண்டும்.

என்னை பார்த்து யாரேனும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன். ஆனாலும் கவர்ச்சியின் எல்லை எனக்கு தெரியும். அதை மீற மாட்டேன். எனது ரசிகர்கள் நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு முக்கியத்துவம் தருவேன். அவர்கள் எனக்கு ஒரு நடிகையாக மனதில் இடம் தந்தால் போதும்” என்று சுருதிஹாசன் தெரிவித்தார்.

சந்தானத்துக்கு நான் ஜோடியா : மறுக்கும் பார்வதி நாயர்!!

Santhanam - Parvathi Nair

சந்தானத்துக்கு ஜோடியாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். இப்படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளிவந்த உத்தமவில்லன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த தகவலை பார்வதி நாயர் மறுத்துள்ளார். சந்தானம் நடிப்பில் தற்போது தில்லுக்கு துட்டு படம் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் படப்பிடிப்பிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்விரு படங்களுக்குப் பின்னர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்திலும் சந்தானம் நடிக்கவுள்ளார். இந்த படத்தில்தான் பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை என்றும், சந்தானம் நடிக்கும் எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அன்பும் அரவணைப்பும் ஈழத்தமிழருக்கு எப்போதும் அவசியம் : நீதிபதி இளஞ்செழியன்!!

Ilancheliyan

தமிழக அரசியல் எமக்கு அவசியமில்லை. ஆனால் தமிழக மக்களின் அன்பும் – ஆதரவும் – அரவணைப்பும் எப்போதும் எமக்கு அவசியம் என்று தெரிவித்தார் யாழ்மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

வவுனியாவில் முன்தினம் நடைபெற்ற அனைத்துலக 14வது ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தொடர்ந்து தெரிவிக்கையில்..

தமிழ்நாட்டு தமிழ்மொழியை செம்மொழி என்பார்கள். எங்கள் நாட்டு தமிழை செந்தமிழ் என்பார்கள். இலங்கைத் தமிழ் உச்சரிப்பு உரைநடை வேறு எங்கும் இல்லாதது மிகவும் வித்தியாசமானது. ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ளவர்கள் இலங்கை வானொலியைக் கேட்பார்கள். கே.எஸ்.ராஜா அப்துல் ஹமீட் ஆகியோரின் உரையை கேட்பார்கள்.

போரின் போது நாம் அழுதபோது தமிழகம் அரவணைத்து உணவு தந்தது. பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு அனுமதி தந்தது. தமிழகத்தின் அரசியல் எமக்கு அவசியமில்லை. ஆனால் தமிழக மக்களின் அன்பும் – ஆதரவும் – அரவணைப்பும் எப்போதும் எமக்கு அவசியம். எங்களுக்கு தொப்புள் கொடி உறவுகள் தான் முக்கியம்.

தமிழக மக்கள் – வடக்கு,கிழக்கு மக்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்ட வேண்டும். முன்பைப் போன்று பல்கலைக்கழக அனுமதி எமது தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். எங்களுடைய கல்விக்கு உதவி செய்ய வேண்டும். போரின்போது எமக்கு எவ்வாறு உதவி செய்தார்களோ அதேபோன்று ஆதரவு தரவேண்டும்.

எங்களுடைய தேச வழமைச் சட்டத்துக்கும், இந்தியாவின் மலபார் (மலையாள தேசத்துக்கும்) தொடர்பு உண்டு. தமிழகத்தின் கன்னியாகுமாரி மாவட்டத்துக்கும் எமது யாழ்ப்பாண மக்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்திருக்கின்றன. எமது உறவுகள் தொடர்ந்து இருக்க வேண்டும். பாரதியின் கருத்துக்கு ஏற்ப தமிழ் எங்கும் ஒலிக்க வேண்டும். தமிழனை இலங்கை பார்த்துக் கொள்ளட்டும். தமிழ் மொழியை தமிழ் நாடு பார்த்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

வவுனியா தாலிக்குளம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய பிரான்ஸ் உறவுகள்!!

 
வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைகோட்டுக்கு உட்பட 40 மாணவர்களுக்கு தாலிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ப.அந்தோணிபிள்ளை தமிழ் விருட்சத்திடம் அவர்களின் நிலையை எடுத்து கூறி அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரான்ஸ் வாழ் உறவு மூலம் 21.05.2016 அன்று தாலிக்குளம் அ.த .க பாடசாலை மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர் திரு கா.பிரதீஸ், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் அன்றூ, சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ப.அந்தோணிபிள்ளை, செயலாளர் திருமதி இ.புனிதவதி, நிர்வாக உறுப்பினர்களான புனிதவதி, ஜெயபாரதி, ஜூலியட், கபலீஸ்வரி, மு.நாகலிங்கம் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

DSCN6816 DSCN6821 DSCN6823 DSCN6826 DSCN6827 DSCN6857 DSCN6858 DSCN6862 DSCN6867 DSCN6870 DSCN6877 DSCN6882 DSCN6883

வவுனியா புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!!

Flood

வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கம் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக அனைத்து ஊழியர்களினதும் ஒரு நாள் கொடுப்பனவான 250 ரூபாவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாக வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் ஏஸ்.கே.றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

புகையிரத கடவை ஊழியர்களுக்கு பொலிஸ் திணைக்களம் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுவதாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்தம் காரணமாக அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கித் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவும் முகமாக வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் 75 ஊழியர்களின் விருப்பத்திற்கு அமைவாக தலைவர் செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு இணங்க ஒருநாள் கொடுப்பனவை அனர்த்த நிவாரண முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா பொலிஸ் அத்தியட்சகரை கடிதம் மூலம் கோரியிருப்பதாகவும் பொலிஸ் அத்தியட்கர் இச் செயற்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை நிவாரணத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

வியக்கவைக்கும் பைடர் மேன் என அழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன்!!(படங்கள்)

 
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயற்பாடுகளால் ”ஸ்பைடர் மேன்” என்று அழைக்கப்படுகிறார்.

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இவர் தனது உடல் அவயங்களை வளைத்துக் காட்டுகிறார். கால் பாதங்களைத் தூக்கித் தோள்களில் வைக்கிறார். உடலைப் பின்பக்கமாக வளைத்து, தலையை முன்னோக்கிக் காட்டுகிறார். இரண்டு கைகளால் நடக்கிறார். ஒரு கையால் நிற்கிறார்.

4 அடி 6 அங்குல உயரமும் 29 கிலோ எடையும் கொண்ட முகமதுக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே தற்போதைய இலட்சியம். முகமதுவின் திறமை லெபனான் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

உடல் வளைப்பு போட்டியில் கலந்துகொண்ட முகமதுக்கு 1.4 கோடி வாக்குகள் கிடைக்கப்பெற்றன. தனித்துவம் மிக்க 4 உடல் அசைவுகளை, இவர் போலச் செய்வதற்கு இந்த உலகில் யாரும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய திறமைகளை கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார் முகமது.

347C455E00000578-0-image-a-84_1463918214809 347C470E00000578-0-image-a-72_1463918191636 347C450200000578-0-image-a-76_1463918200005 347C467500000578-0-image-a-98_1463918253117 347C474700000578-0-image-a-74_1463918195879 36384375 230868822 311574574 337313713 spider-man-boy