ஆசியாவிலேயே மோசமாக களத்தடுப்பில் ஈடுபடும் அணி இலங்கைதான் என்று நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. டெஸ்ட் அந்தஸ்துபெற்ற ஆசிய அணிகளை விட இலங்கை அணி பின்தங்கியுள்ளது என்ற அர்த்தத்தில்தான் நான் கருத்து தெரிவித்தேன் என்று இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் ஜெரோம் ஜெயரத்ன தெரிவித்தார்.
இலங்கை அணிதான் ஆசிய அணிகளிலேயே மிகவும் மோசமாக களத்தடுப்பில் ஈடுபடுகிறது என்று தெரிவித்திருந்தார். இது பெறிதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஜெரோமிடம் இது குறித்து கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய சேவைகள் ஆற்றியுள்ள இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.ரொஷான் மகானாம, அர்ஜுன ரணதுங்க, ப்ரண்டன் குறுப்பு, மஹேல ஜயவர்தன உட்பட முன்னணி கிரிக்கட் வீரர்கள் பலர் இவரிடம் ஆரம்ப பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் விமானி மற்றும் சுற்றுலாப் பயணி என்று 2 பேருடன் சென்ற இலகுரக விமானம் ஒன்று மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் போஹராவிருந்து புறப்பட்டு அங்குள்ள மலைச்சிகரங்களை சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்ட, இலகுரக விமானம் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பவில்லை. இந்த விமானத்தில் ரஷ்ய விமானியும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பயணி ஒருவரும் இருந்துள்ளனர்.
விமானத்தில் உள்ள எரிபொருளைக் கொண்டு 4 மணி நேரம் மட்டுமே விமானத்தை செலுத்த முடியும் என்பதால் விமானம் மாயமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டு, விமானத்தை தேடும் பணி தீவிரமாகியுள்ளது.
உலகிலேயே நீளமான, உயரமான சீனாவின் இந்த கண்ணாடி பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் கண்ணாடி பாலத்தைக் கடக்க வந்த சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவின் யூன்டாய் மலையின் மேல் ஹெனான் என்ற பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் யு வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலத்தில் நடந்த செல்லும்போது, கீழ்ப் பரப்பையும் கண்டு ரசிக்க முடியும்.
இந்த நிலையில், அதிகமான சுற்றுலாப் பயணிகளினால் கண்ணாடி பாதை அடுக்குகளில் கீறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பயணிகளுக்கு தடை விதிக்கபட்டு உள்ளதாகவும் தற்போது கண்ணாடி பாலம் மூடபட்டு பாலத்தை பராமரிக்கும் குழுவினர், கீறலை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் சீன பத்திரிகை தெரிவித்து உள்ளது.
13 வயதுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் அங்குணுவில பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஒரு சிறுமி தனது பாட்டியுடன் தோட்டத்தற்கு சென்றவேளை தோட்டக் காவலாளி குறித்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. சிறுமி துஷ்பரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி 60 வயதுடைய தோட்டக் காவலாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர மஹகும்புக்கடவல பிரதேசத்தில் மற்றுமொறு சிறுமி வீட்டினுள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய் உயிரிழந்துவிட்டதால் குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகின்றார்.
இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுமியின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2015 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தேசிய பசுமை விருது போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய மட்டத்தில் விருது கிடைந்துள்ளது.
இவ்விருதானது கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார்க்கு வழங்கப்பட்டது.
அகில இலங்கை பூராகவும் பலதரப்பட்ட அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் திணைக்களங்களுக்குள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு மாத்திரம் இவ்விருது கிடைத்துள்ளது.
வடமாகாண சபைஉறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா பண்டாரிகுளம் ஜீனியஸ் பாலர்பாடசாலைக்கு தளபாடங்களை வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வானது ஜீனியஸ் பாலர்பாடசாலையில் நடைபெற்றபோது வடமாகாண மாகாணசபை உறுப்பினர் தளபாடங்களை பாலர்பாடசாலை ஆசிரியரிடம் கையளிக்கும் இன் நிகழ்வில் முன்னால் நகரபிதா(சந்திரகுலசிங்கம்) மற்றும் ஜீனியஸ் பாலர்பாடசாலை அபிவிருத்திக்குளு அங்கத்தவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.
2015ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 2வது தடவையாகவும், தோற்றிய 45 மாணவர்களில் 19 மாணவர்கள் வெட்டுப்ப்புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளதுடன் 22 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் 04 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று 100% தேர்ச்சியும் 43% சித்தியும் பெற்றுள்ளனர்.
இவர்கள் வடக்கு வலயத்தில் இரண்டாவது தடவையும் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.
புகைப்படத்தில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்கள் செல்வி.சு.கோகுலவாணி, திருமதி.இ.சசிகுமார் அவர்களுடன் அதிபர் திருமதி.சொ.கமலாம்பிகை அவர்களையும் காணலாம்.
கொழும்பில் ஏற்படும் அதிக வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக விஷேட போக்குவரத்து முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாராளுமன்ற வீதியின் வெலிக்கடை சந்தியில் இருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரையான பகுதி காலை 7.30 முதல் காலை 8.45 மணி வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.
இதற்கான பரீட்சாத்தம் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் நோக்கில் உத்தியோக பற்றற்ற பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஏனைய தமிழ் கட்சிகளுடனும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அரசியல் நோக்கமாக புதிய அரசியலமைப்பை தயாரித்தல், மனித உரிமை மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்தல் என்பன இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது அரசியல் தீர்வைக் காண்பதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளான அரசியல் தீர்வு, தேசிய ஒற்றுமை, மற்றும் மதப் பிரச்சினைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மொழி, மற்றும் இனப்பிரச்சினை விவகாரங்கள் கடந்த ஐந்து தசாப்தகாலமாக நாட்டை ஆக்கிரமித்துள்ள நிலையில் மதப் பிரச்சினை கடந்த தசாப்தத்தில் உருவாகியிருந்தது.
இவற்றை பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் தீர்க்கவேண்டியது அவசியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார் என்று ‘இந்துப் பத்திரிகை’ தெரிவித்துள்ளது. இதே கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்திச் சென்று இரும்புக்கு வெட்டி விற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வவுனியா, நெளுக்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தது. வவுனியா, பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த பேருந்து வெட்டி இரும்புக்காக விற்பனை செய்யப்பட்து விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து,
பேருரூந்தை கடத்திச் சென்று இரும்புக்கு வெட்டி விற்பனை செய்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் குறித்த சந்தேகநபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, லீசிங் பிரச்சினை காரணமாக குறித்த பேருந்து இரும்புக்கு வெட்டி விற்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வாகன முறைப்பாட்டாளர் தலைமறைவாகியுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபேயவர்த்தன அவர்களின் வழிகாட்டிலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி பிரியங்கர, பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயப்பிரகாஸ் (36508), திஸநாயக்கா (37348), புத்திக (74662), வீரசிங்க (10335), லங்காதிலக (67661) ஆகியோர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..
1. ஸ்ரீபவன் யுகிர்த்தன் – 183 புள்ளிகள்
2. சசிதரன் மதுமிகா – 179 புள்ளிகள்
3. ஸ்ரீலங்கா ரட்ணம் பிரகாஷினி – 178 புள்ளிகள்
4. திருநாவுக்கரசு பிரசன்னா – 177 புள்ளிகள்
5. யோகராசா யனுசா – 177 புள்ளிகள்
6. ஜெகதீஸ்வரன் சஞ்சய் – 176 புள்ளிகள்
7. இளங்கோவன் கிருக்சிகா – 174 புள்ளிகள்
8. யோகராஜ் பிரவின் – 173 புள்ளிகள்
9. கோமளேஸ்வரன் கிஷான் – 172 புள்ளிகள்
10. ராஜ்குமார் சந்தியா – 171 புள்ளிகள்
11. தியாகச் செல்வம் டிலுக்சிகா – 171
இவர்களின் சிறந்த பேறுபேற்றிற்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை அதிபர், வகுப்பாசிரியர்கள் மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது
இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.
வேதாளம் படத்தின் டீசர் தான் இன்றைய தலைப்புச் செய்தியே. அஜித் ரசிகர்கள் அனைவரையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆனால், இந்த டீசர் சத்தமில்லாமல் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுநாள் வரை பொப் பாடகி Taylor Shift’s ’Bad Blood’ என்ற அல்பம் தான் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 32 ஆயிரம் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்தது.
ஆனால், இந்த சாதனையை வேதாளம் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று முறியடித்துள்ளது. இதை தொடர்ந்து புலி படத்தின் டீசர் சாதனையையும் இன்றே முறியடித்து விடும் என கூறப்படுகின்றது.
வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் சிறிதரன் நிகேதன் குப்பி விளக்கில் தனது கல்வியைத் தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா வடக்கில் முதல்நிலை பெற்று சாதித்துள்ளார்.
வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாகிய கற்குளம், சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசித்து வந்த நிகேதன் வீட்டில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வவுனியா வடக்கு வலயத்திற்குரிய புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்திலேயே கல்வி கற்றான்.
சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நிகேதன் போக்குவரத்து வசதிகளற்ற ஒழுங்கைகள் ஊடாக 2 கிலோமீற்றர் நடந்து சென்று, பின்னர் பேரூந்தில் 3 கிலோமீற்றர் தினமும் பயணித்தே படித்து வந்தான்.
இது தவிர, அவனது வீட்டிற்கு மின்சார வசதி கூட இன்னும் வழங்கப்படவில்லை. குப்பி விளக்கிலேயே தினமும் படித்து வந்தான். இவ்வாறான கஸ்ரங்களுக்கு மத்தியில் ரீயூசன் செல்லாது பாடசாலைப் படிப்பை மட்டுமே நம்பி, தற்போது வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா வடக்கு வலயத்தில் முதல் நிலையையும் மாவட்டத்தில் 5 ஆவது இடத்தைப் பெற்று அனைவரதும் கனத்தை ஈர்த்துள்ளான்.
இதேவேளை, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் சிலர் குறித்த மாணவனின் வீட்டிற்குச் சென்று அவனை ஊக்கப்படுத்தியதுடன் சிறு பரிசுப் பொருட்களையும் வழங்கினர்.
மாணவனின் போக்குவரத்துப் பிரச்சனையை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சரால் குறித்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்படவுள்ளது.
சாதிப்பதற்கு எதுவுமே தடையல்ல என்று நிரூபித்து மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இம் மாணவனுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றோம்.
நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி தயாளலிங்கம் கவிநிலா 156 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேற்படி நிறுவனம் தனது ஆடம்பர கார்களுக்கான பிரசார நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்தக் காரை உருவாக்கியுள்ளது. இந்தக் காரின் மேற்பரப்பு, செயற்படும் கதவுகள், முகப்பு விளக்குகள், சக்கரங்கள் அனைத்துமே கார்ட்போர்ட்டால் உருவாக்கப்பட்டுள்ளன.
இது உலகில் கார்ட்போர்ட் மட்டையால் உருவாக்கப்பட்டுள்ள செயற்படும் முதலாவது கார் என்ற பெயரைப் பெறுகிறது. அதேசமயம் இந்தக் காரில் உருக்கு மற்றும் அலுமினிய கட்டமைப்பில் மின் மோட்டார் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தக் காரை மழைக் காலத்தில் வீதிகளில் செலுத்திச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.