ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு!!(படங்கள்)

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த  21.05.2016 சனிக்கிழமை காலை  இடம்பெற்றது

 இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன்  மற்றும் கலாசார உத்தியோகத்தர்  நித்தியானந்தன்  கலந்து கொண்டு  ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல்லை  நாட்டி வைத்தனர் . மேற்படி நிகழவில் ஆலய பரிபாலன உறுப்பினர்கள் மற்றும் ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ..
10406671_761377870598499_7053546498252476830_n 13221057_1045622135507403_2749409532743183219_n 13237736_1045622302174053_7996592852627032747_n 13239173_1045622765507340_2908835914754811161_n 13240547_1045622205507396_5898870172775739103_n 13244819_1045621618840788_16584331831824038_n 13254297_1045622478840702_8021661804915227145_n 13256408_1045622675507349_8727832735144608925_n 13260276_1045622585507358_5912922340067843845_n 13260290_1045622032174080_7854859026841459352_n

 

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 2016!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்  கடந்த 21.05.  2016 சனிக்கிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது . மாலையில் கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது .

13227077_1756148144597534_269445910343417678_n 13230330_1756148104597538_7119368699831801231_n 13237855_1756148231264192_6095824467481746065_n 13254589_1756148141264201_9005211754957883274_n 13256497_1756148221264193_7093857320354912603_n 13260108_1756148147930867_7785100213233207888_n

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய இரதோற்சவம் 2016!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் கடந்த 20.05.  2016 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில்  இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு கொண்டு தங்களது நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர் …
13221107_1756147441264271_8460043730855290884_n 13227019_1756147654597583_6986734738636752419_n 13230215_1756147447930937_2288638500036272417_n 13237708_1756147521264263_6248899015812349733_n 13237739_1756147537930928_5092438201261895205_n 13240063_1756147491264266_7988123188930785632_n 13240573_1756147644597584_6260274430017641808_n 13254205_1756147591264256_3273064347420528087_n 13254405_1756147561264259_8128782801783817632_n 13256286_1756147457930936_7426460960294480203_n (1) 13256286_1756147457930936_7426460960294480203_n 13260041_1756147621264253_8447484215267105751_n

வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை!!

 
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று (23.05.2016) மாலை 3.30 மணியளவில் ஊடகவியாளர் சந்திப்பு நடைபெற்றது. இவ் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன்..

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் எதிர்வரும் மே 27ம் மற்றும் 28ம் திகதிகளில் மாபெரும் தொழிற்சந்தை ஒன்றை பம்பைமடுவிலுள்ள வவுனியா வளாகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி, தொழில்சார் கற்கை, தொழில் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.

இந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான தொழில் வல்லுனர்களை பல்வேறு துறைகளில் நேரடியாக தெரிவு செய்து வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளன. இவ் வேலை வாய்ப்புக்கள் பல்வேறு தகமையுடையவர்களுக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

இந்நிகழ்வானது 27 ம் திகதி அனைத்து பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும் 28ம் திகதி அனைத்து வேலை தேடுபவர்களுக்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் இரண்டு நாட்களும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகள் இரு நாட்களும் காலை 9 மணி முதல் மலை 4 மணிவரை இடம் பெறும் எனத் தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி த.மங்களேஸ்வரன்(முதல்வர், வவுனியா வளாகம்), கலாநிதி அ.புஷ்பநாதன்( பீடாதிபதி, வியாபாரக் கற்கைகள் பீடம்), திரு.சி.குகனேசன் (பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம்), கலாநிதி இ.நகுலன்(சிரேஷ்ட விரிவுரையாளர்), இ.ஜெயக்குமார் (சிரேஷ்ட உதவிப்பதிவாளர், பரீட்சைகள் கிளை, வவுனியா வளாகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை!!

P1200648 P1200651 P1200654 P1200656 P1200658

இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் பெரேரா!!

Kusal-Sanath

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில்,

இலங்கை அணியில் தாராளமாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சகலதுறை ஆட்டக்காரர்களும் உள்ளனர்.

இந்நிலையில், சுரங்க லக்மால் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டில்ருவான் பெரேரா ஆகியோர் மேலதிக வீரர்களாக உள்ளனர். இதையடுத்தே, பந்துவீச்சாளர் தம்மிக்கவுக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் குசலை இங்கிலாந்துக்கு அனுப்ப தீர்மானித்துள்ளோம்.

வெகுவிரைவில் குசல் ஜனித் பெரேரா அணியுடன் இணைந்துகொள்வார். அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவாரென அவர் மேலும் தெரிவித்தார்.

சிரியாவில் குண்டுவெடிப்பில் 101 பேர் பலி!!

Bomb Blast

சிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டமஸ்கஸுக்கு உட்பட்ட ஜப்லே மற்றும் டார்டஸ் நகரங்களில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 7 மணியில் இந்த இரு நகரங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஜப்லே நகரில் 53 பேரும், டார்டஸ் நகரில் 48 பேரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளாகியுள்ள இரு நகரங்களிலும் இதுவரை இம்மாதிரியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் ரயில் மோதி வயோதிபப்பெண் பலி!!

Jaffna

சுன்னாகம் பகுதியிலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் இன்று (23.05) ரயில் மோதி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

பலியான பெண் 70 வயது மதிக்கத்தக்கவர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த போதும் , இந்த வயோதிப பெண், கடவையின் கீழாக குனிந்து ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட போதே கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.

உயிரிழந்தவர், இன்னமும் அடையாளங் காணப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுன்னாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கிலும் மாபெரும் வெற்றிபெற்ற பிச்சைக்காரன்!!

Pichaikaran

தமிழில் விஜய் அண்டனி நடிப்பில் வெளிவந்த வெற்றிநடை போட்ட பிச்சைக்காரன் திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இசை அமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனிப் பாணியை அமைத்து வெற்றிகரமான நாயகனாக வலம்வரும் விஜய் அண்டனிக்கு சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பிச்சைகாரன் வணிக ரீதியாக மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்தது.

தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற இப் படம் தெலுங்கில் பிச்சகாடு எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. கடந்த வார இறுதியில் தெலுங்கு வெளிவந்த பிச்சகாடு பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.

தமிழ் திரையுலகைத் தாண்டி, தெலுங்கு திரையுலகிலும் தான் நடித்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் அன்ரனிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து விஜய் அண்டனி கூறும்போது, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்று இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது.

தமிழ்த் திரை உலகில் இருந்து வரும் நடிகர்கள் பொதுவாக தெலுங்கில் நிலைப்பது இல்லை என்ற கூற்றை என் அடுத்தடுத்த படங்களின் கதை, மற்றும் மற்ற அம்சங்கள் பொய்யாக்கும் என்று நம்புகிறேன். இந்த வெற்றி ஒரு நடிகனாக என்னை இன்னமும் மேம்படுத்தி தென்னிந்தியாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வர வைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இளம் நடிகருடன் விரைவில் திருமணம் : சமந்தா பரபரப்புப் பேட்டி!!

Samantha-Ruth-Prabhu

இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பரபரப்பு பேட்டியில்..

கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.

கேள்வி:- திருமண திகதியை முடிவு செய்து விட்டீர்களா?

பதில்:- அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.

கேள்வி:- ஒரு இளம் கதாநாயகனை நீங்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளதே உண்மையா?

பதில்:- உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கின்றது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.

கேள்வி:- உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த நிஜ கதாநாயகன் யார்? அவரை உங்களுக்கு பிடித்துப்போக என்ன காரணம்?

பதில்:- அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். நான் விளையாட்டுப் பிள்ளைமாதிரி இருப்பேன். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.

கேள்வி:- திருமணத்துக்குப் பின்னர் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?

பதில்:- சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கௌரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.

கேள்வி:- உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்து விட்டதா?

பதில்:- எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.

கேள்வி:- நீங்கள் சமூக சேவை பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே அவர் எப்படி?

பதில்:- அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார்.

இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்கமாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார். எனவே நான் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன் என்று சமந்தா தெரிவித்தார்.

பூசாரியாக வேடம் தரித்து தோஷம் கழிப்பதாகக் கூறி இரு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்!!

Abuse

சந்தேக நபர் சாந்திகர்ம என்ற தோஷம் கழிக்கும் பூசாரியாக வேடம் பூண்டு இரு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் புரிந்த ஒருவரை ஹசலக்க பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அதில் 16 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் வெவ்வேறு பெயர்களில் பல்வேறு பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

40 வயதுடைய மேற்படி சந்தேக நபர் சாந்திகர்ம என்ற தோஷம் கழிக்கும் பூசாரியாக வேடம் பூண்டு வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்டசந்தேக நபரைக் கைது செய்த ஹசலக்க பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவுகளால் கைவிடப்பட்டு மயானத்தில் வாழ்ந்த முதியவர் பொலிசாரால் மீட்பு!!

1

பல வருடங்களாக உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் மயானத்தில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய முதியோர் இல்லத்தில் அவரை ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் மஸ்கெலியா தோட்ட மயானத்தில் கடந்த 4 வருடங்களாக தங்கி இருந்தாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். 70 வயது மதிக்கத்தக்க இவர் அவ்வழியாக செல்லும் மக்கள் வழங்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலையில் மயானத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் இருந்துள்ளார். இந்நிலையிலே மேற்படி முதியவரை பொலிஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

குறித்த நபரின் நிலையை கவனத்திற்கொண்ட நீதவான் அவரை நோட்டன் சந்திரா முதியோர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தவிட்டார்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வலுவிழந்தவர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

2

காதலுக்கு உதவிய தோழி தற்கொலை!!

Hang Death

பெற்றோரின் அறிவுரைகளை பொறுக்க முடியாமல் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்கமுப மஹானான்னெரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இச்சம்பவத்தில் மஹானான்னெரிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுலோசனா ரத்னாயக்க என்னும் 14 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது தோழியின் காதலுக்கு உதவி செய்தமை பெற்றோருக்கு தெரிய வந்ததைத்தொடர்ந்து, அவர்கள் கண்டித்தமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

15 கிலோ வெண்ணெய்யில் வடிவமைக்கப்பட்ட ஜெயலிதாவின் சிலை!!

Jayalalitha

சென்னையில் சமையற்கலை நிபுணர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை வெண்ணையில் முப்பரிமாண சிலையாக வடிமைத்துள்ளார்.

சென்னை சைதாபேட்டையில் இயங்கிவரும் தனியார் சமையல்கலை பள்ளியின் நிறுவனர் வினோத். காய்கறிகளில் சிற்பம் செதுக்கும் வல்லுநனரான இவர், கின்னல் உட்பட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பதை வரவேற்கும் வகையில், அவரது உருவத்தை முழுவதும் வெண்ணையில் முப்பரிமாண சிலையாக வடிவமைத்துள்ளார்.

பளிங்கு சிலை போன்று காட்சியளிக்கும் இது, சுமார் 15 கிலோ வெண்ணெய்யை கொண்டு வடிவமைக்கப்படுகிறது, வெப்பம் காரணமாக இந்த சிலை உருகாமல் இருக்க -2 டிகிரி வெப்பநிலை உள்ள அறையில் வைத்து மிக நுட்பமாக வடிவமைத்து வருகிறார் வினோத்.

இன்னும் 2 நாட்களில் இந்த சிலைமுழுவதும் வடிவமைக்கப்பட்டவுடன் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படும் என வினோத் தெரிவித்துள்ளார்.

எவரெஸ்ட் மலையேறிய இருவர் மரணம் : இருவரைக் காணவில்லை!!

Mt._Everest

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த சில நாட்களில் அங்கு நிகழ்ந்த இரண்டாவது மரணமாகும்.

கடந்த சனிக்கிழமை அன்று மரியா ஸ்ட்ரிடோம் மலை உச்சியிலிருந்து கீழே திரும்பிக் கொண்டிருந்தபோது, ரத்தத்தில் பிராணவாயு அளவு குறைந்ததால் உயிரிழந்தார். இதற்குமுன், ஹாலந்து நாட்டை சேர்ந்த மலை ஏறுபவரான எரிக் ஆரி அர்னால்ட் உயிரிழந்தார்.

சுபாஷ் பால் என்ற இந்தியர் ஒருவர் கடந்த திங்களன்று உயிரிழந்தார். ஷெர்பா வழிகாட்டிகள் அவரை மலையிலிருந்து கீழே கொண்டு கொண்டுவர உதவிக்கொண்டிருந்த போதே அவர் உயிர் பிரிந்தது.

இச்சூழலில், அங்கு மேலும் இரு இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது.

பரீஷ் நாத் மற்றும் கவுதம் கோஷ் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள நேபாளா மலையேற்ற முகாமிலிருந்து வாங்சூ ஷெர்பா என்பவர் ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் 18 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டாண்டுகள் கழித்து தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் முதல் மலை ஏறும் பருவம் தொடங்கியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் நிலவும் நல்ல பருவ நிலை மலை ஏறுபவர்களுக்கு ஏதுவாக இருப்பதால் கடந்த மே 11 ஆம் திகதியில் இருந்து இதுவரை 400 பேர் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த வார இறுதியில் ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள், உலகின் மிக உயரமான சிகரத்தின் ஆபத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

வவுனியாவிலிருந்து போக்குவரத்துச் சபையினால் வற்றாப்பளை ஆலயத்திற்கு விசேட பேருந்துச் சேவை!!

 
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(23.05) திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த பொங்கல் விழாவிற்குச் செல்லும் அடியார்களின் நன்மைகருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்தார்.

இச் சேவையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாகவும், போக்குவரத்து சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு கொள்ளுமாறு தெரிவித்தார்.

வவுனியா சாலை 024 222 3449

P1200645 P1200646 P1200647

வவுனியாவில் 14வது அனைத்துலக தமிழ் உரைநடை ஆய்வு மாநாட்டு கருத்தரங்கு!!(படங்கள்,வீடியோ)

 
தமிழ்நாடு திருவையாறு ஐயா கல்வி நிலையம், வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் அனுசரணையோடு 14 வது அனைத்துலக தமிழ் உரைநடை ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கு நேற்று (22.05.2016) ஞாயிற்றுகிழமை காலை ஒன்பது(9.00) மணியிலிருந்து வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் அனைத்துலக உரைநடைத் தமிழ் மாநாட்டின் இலங்கைக்கான இயக்குனர் பேராசிரியர் முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் தலைமையில் மாலை 7.00 மணிவரை இடம்பெற்றது.

காலையில் தமிழ்நாட்டிட்லிருந்து வருகைதந்த பேராசிரியர்கள் மற்றும் தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் மங்களவாத்தியம் முழங்க வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

நேற்றைய அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வரவேற்புரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார். தொடர்ந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் பற்றிய விளக்கவுரையை பகிர்ந்து கொண்டு நேற்றைய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.

தொடர்ந்து இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் எ.நடராஜன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. தொடர்ந்து இலங்கையில் எழுதப்பட்ட பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனின் அறிவொளிமாலை மற்றும் பன்மொழி புலவர் சரவணமுத்து செல்லத்துரையின் நினை மான்மியம் ஆகிய நூல்கள் வெளியீடு செய்யப்பட்டு பேரசிரியர் சண்முகலிங்கம் மற்றும் கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோரால் அறிமுக உரைகள் நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றிய சான்றோரை வாழ்த்தி விருதும் பாராட்டு பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து கவிஞர் நாக.க.துரையரசு தலைமையில் மக்களுடன் பெரும் செல்வாக்குடன் திகழ்வது உரைத் தமிழே என முனைவர் இரா.திராவிட இராணியும் மக்களிடம் பேருண் செல்வாக்குடன் திகழ்வது இசைத் தமிழே என முனைவர்.தங்க மலர்கொடி அவர்களும் வாதிட்ட விவாத அரங்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து பிற்பகல் நிகழ்வுகள் மதிய உணவைத் தொடர்ந்து இரண்டு மணியளவில் கருத்தரங்கம் ஆரம்பமாகி தனில் நாடிலிருந்து முனைவர் பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் தங்களதுதமிழ் மொழி உரைநடை மொழிபெயர்ப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

தொடர்ந்து நேற்றைய நிகழ்வின் முதன்மை விருந்தினரான யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் உயர்திரு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் தமிழ்நாடிலிருந்து வருகைதந்த அனைத்துலக தமிழ் உரைநடை மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட அறிஞர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையொன்றை பதினான்காவது அனைத்துலக தமிழ் உரைநடை மாநாட்டில் பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி அருளகத்தில் அண்மையில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்யப்பட்ட மாணவிகளில் நடன நிகழ்வுடன் இறுதியில் தேவாரதிருமுறை ஓதலுடன் நிறைவு பெற்றது.

-வவுனியா நெற் நிகழ்வுகளுடன் கஜன்-

DSC_0002 DSC_0018 DSC_0026 DSC_0037 DSC_0041 DSC_0042 DSC_0046 DSC_0051 DSC_0056 DSC_0059 DSC_0066 DSC_0071 DSC_0078