வாயு வெளியேற்றச் சோதனையில் 25 வருட மோசடி ஒப்புக்கொண்டது மிட்சுபிஷி கார் கம்பனி!!

Car

தங்கள் கார்களின் வாயு வெளியேற்ற புள்ளிவிபரங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மோசடி இடம்பெற்றுள்ளமையை ஜப்பானிய கார் நிறுவனமான மிட்சுபிஷி ஒப்புக்கொண்டுள்ளது.

புள்ளிவிபரங்களில் மோசடி செய்வதற்காக கடந்த காலங்களில் குறிப்பிட்டதொரு பொறிமுறையைக் கையாண்டு வந்துள்ளது மிட்சுபிஷி கார் தயாரிப்பு நிறுவனம்.

1991 ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பானின் உள்ளூர் சந்தையில் தங்களின் சில கார் வகைகளில் இந்த பொறிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக மிட்சுபிஷி நிறுவனத்தின் தலைவர் டெட்சுரோ ஆய்க்காவா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் வெடித்த இந்த மோசடி சர்ச்சையால் பங்குச்சந்தையில் மிட்சுபிஷி நிறுவனத்தின் மதிப்பில் அரைவாசி அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையின் மனித நேயம் : விக்ரம் வெளியிட்டுள்ள பாடலில் நடிகர்கள் பலர் பங்கேற்பு!!(வீடியோ)

vikram

சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை முன்வைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம், சென்னையில் பெய்த கன மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். உணவு, உடையின்றி அவதிப்பட்டார்கள்.

சோகத்தில் தத்தளித்த ஆயிரக்கணக்கானோருக்கு அரசின் நிவாரண உதவிகளோடு, முகம் அறியாதோர்களின் உதவிகள் கிடைத்தன. உலகின் பல மூலை முடுக்குகளிலிருந்தும் மக்களுக்கான உதவிகள் வந்து குவிந்தன.

அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் வெள்ள நிவாரணப் பணிகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டார்கள்.
சமூகவலைத்தளங்கள் வழியாக சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி போன்ற நடிகர்களும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக தங்களை ஈடுபடுத்தினார்கள்.

ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் வழியாக சென்னை மக்களுக்கு உதவுகிறவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.

சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை முன்வைத்து சென்னை மக்களின் மனிதநேயத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஸ்பிரிட் ஆஃப் சென்னை (SPIRIT OF CHENNAI) என்றொரு பாடலை இயக்கி வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம்.

மதன் கார்க்கி, ரோகேஷ், கானா பாலா ஆகியோர் பாடலை எழுதியுள்ளார்கள். கிரிநாத் இசையமைத்துள்ளார். எஸ்.பி.பி., சங்கர் மகாதேவன், ஹரிஹரன், கார்த்திக் போன்ற பல பிரபல பாடகர்கள் பாடியுள்ளார்கள்.

அபிஷேக் பச்சன், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, நித்யா மேனன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்கள் பலர் இந்தப் பாடலில் பங்கேற்றுள்ளார்கள்.

மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள் எவை தெரியுமா : ஆய்வில் கண்டுபிடிப்பு!!

Bugs

மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள் என்றும் வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்றும் தெரியவந்துள்ளது.

வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின் அளவிலான சிறிய கூடாரங்கள் இருந்த பெட்டகம் ஒன்றுக்குள் மூட்டைப் பூச்சிகள் அனுப்பப்பட்டுள்ளன.

மிகவும் அடர்த்தியான நிறங்களையே அந்த மூட்டைப் பூச்சிகள் தேடிச் சென்றுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகின்றது.

துணிகளிலும், படுக்கைகளிலும், சுவரின் துளைகளிலும், மரப் பொருட்களின் இடுக்குகளிலும் ஒட்டிக்கொண்டு வாழும் இந்த மூட்டைப் பூச்சிகள், சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களைத் தவறுதலாக சக மூட்டைப் பூச்சிகள் என்று நினைத்துவிடுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இலவச வைஃபை வசதியுடன் நூறு கழிவறைகள் அமைக்கத் திட்டம்!!

Wifi

இலவச வைஃபை வசதியுடன் கூடிய நூறு நவீன கழிவறைகளை அமைக்க பீஜிங் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக அங்கு இந்த ஆண்டுக்குள் இலவசமாக வைஃபை இண்டர்நெட் வசதியுடன் கொண்ட நூறு நவீன கழிவறைகளை கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த வைஃபை கழிவறைகள் நிறுவப்படுகிறது.

இதுதவிர, இந்நகரத்தில் ஆங்காங்கே ஏ.டி.எம் இயந்திரங்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித்தர திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், கழிவறைகளுக்கு அருகிலேயே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்காக ´பேபி சிட்டிங்’ வசதியும் செய்து தரப்படவுள்ளது.

ஒவ்வொரு கழிப்பறையும் சுமார் ஒரு லட்சம் யுவான் திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரயிலில் மோதுண்டு யுவதிகள் இருவர் பரிதாபமாகப் பலி!!(CCTV வீடியோ)

dehiwala

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த 19 வயதான செரோன் செவ்லின் மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த இமேசி யசாரா என்ற 19 வயதான யுவதியுமே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம்!!

Strom

நாட்டில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காய்ங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது

எனவே கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை சூறாவளி காற்றாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி தர்சன சமில் பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.

மேகங்களுடன் மேலே அல்லது கீழே இந்தக் காற்று பலமாக வீசக்கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். மழை பெய்வதற்கு முன்னதாக கடுமையான குளிர் ஏற்படலாம், பத்து நிமிடங்கள் வரையில் பலத்த காற்று வீசலாம்.இந்த வகை மேகங்கள் காணப்படும் 3 முதல் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு மட்டும் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

சூறாவளி காற்று தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க முடியாது என்ற போதிலும் இடி மற்றும் கடும் மழை பற்றிய எதிர்வு கூறல்கள் வெளியிடப்படும் பகுதிகளில் அவதானமாக இருப்பதன் மூலம் திடீரென ஏற்படக்கூடிய சூறாவளித் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட புதுமணத் தம்பதி!!

Sucide

திருப்பதி தேவஸ்தான விடுதி அறையில் புதியதாக திருமணம் செய்து கொண்ட ஆணும், பெண்ணும் அறை எடுத்து தங்கினர். இன்று காலை அவர்களது அறை திறக்கப்படாமல் இருந்தது.

சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தனர். அப்போது மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் அந்த ஆணும், பெண்ணும் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர்.

இது குறித்து திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தூக்கில் பிணமாக தொங்கிய பெண்ணின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த தாலிக் கயிறு புதியதாக இருந்தது. எனவே தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் புதுமண தம்பதிகளாக இருக்கலாம் என தெரிகிறது.

பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சம்பத்குமார் (வயது 25), சத்யவாணி (25) என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் உண்மையில் திருமண தம்பதிகளா அல்லது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து பொலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

இலங்கையில் மரண தண்டனையில் இருந்து தப்பிய 83 பேர்!!

Hang

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.

நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிட்டியுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450க்கும் அதிகமான கைதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, 83 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு நீதி அமைச்சினால் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மனைவியை வெட்டிக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்!!

Murder

பிங்கிரிய – உடவெல பிரதேசத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக 36 வயதுடைய மனைவியை வெட்டிக் கொன்ற 52 வயதான குறித்த நபர் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!!

May 18

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். இன்று வவுனியா தாயக அலுவலகத்தில் வைத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உளப்பூர்வமாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடப்பட்டு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியா கலை மகள் விளையாட்டு மைதானத்தில் மே 18ம் திகதி மாலை 4 மணிக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன் அன்று காலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத் தலங்களிலும் யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் பொது அமைப்புகள் மற்றும் ஏனைய கட்சிகளும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்து யுத்தத்தில் இறந்த அனைவருக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு வருமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பேஸ்புக்கின் குழுக்களுக்கிடையிலான குரல் வழி அழைப்பு சேவை விஸ்தரிப்பு!!

Calling

சமூக வலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் தன்னை முதன்மையாக நிறுத்திக்கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.இவ்வாறான செயற்பாட்டின் ஒரு அங்கமாக சிலவாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் குழுக்களில்உள்ளவர்கள் தம்மிடையே குரல் வழி அழைப்பினை(Group Voice Calling) ஏற்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும் இவ் வசதி குறிப்பிட்ட சிலநாடுகளுக்கு மட்மே கிடைக்கக்கூடியதாக இருந்தது.ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும்உள்ள பேஸ்புக் பயனர்கள் இவ் வசதியினை பெற்றுக் கொள்ளமுடியும்.அத்துடன் குழுவில் உள்ளவர்களில் உச்ச பட்சமாக 50 பேர்வரை இந்த அழைப்பில் ஒரே நேரத்தில் இணைந்துகொள்ள முடியும்.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனத்தல் பணியாற்றும் David Marcus என்பவர் தெரிவித்துள்ளார்.இவ் வசதி கிடைக்கப் பெறாதவர்கள்தமது பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை இற்றைப் படுத்துமாறு (Update) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டு விழா!!

 
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா நெடுங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 19.04.2016 அன்று நடைபெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு K.K.மஸ்தான் அவர்களின் மாவட்ட இணைப்பாளர், வவுனியா மாவட்ட விளையாட்டு அதிகாரி M.B.பர்சூக்,

வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் செல்வி நிவேதிகா பேரின்பநாயகம், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பா.நாகேஸ்வரபாலா, வவுனியா வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ராகினி ஜெயராஜ், திணைக்களங்களைச் சேர்ந்த தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

13062060_487499034773126_7759391494520245351_n13043626_487499001439796_7453343294650997298_n13043450_487499471439749_7623359141188933226_n  13087860_487499681439728_3876694239264023428_n13055584_487499684773061_2571194408884427743_n  13062203_487500024773027_2036717347890121177_n 13083267_487500198106343_936294688294482572_n 13094207_487499974773032_4196105931776565252_n13087523_487501084772921_2382617768153356862_n  13094154_487501401439556_6278639380908051761_n  13102714_487501471439549_4774554408095044331_n 13103323_487501181439578_3451024813583480593_n12524151_487519891437707_2005261205239808879_n 13010609_487519661437730_4747617800031412736_n 13043345_487519384771091_1632598977237822228_n 13051765_487519604771069_2859782366881190777_n 13055342_487519751437721_6513979877593404374_n 13055455_487520094771020_4908950582095231692_n 13055585_487516008104762_6261408021157665594_n 13062206_487519524771077_1010308119483395129_n 13062381_487520914770938_93650748332774993_n 13062418_487519464771083_8164881444432668861_n 13076546_487519028104460_7777021678568936835_n 13076823_487519381437758_537510091770005114_n 13082610_487518654771164_8890223392971204753_n 13082627_487519514771078_373108062837490119_n 13082734_487520598104303_6645888976754985861_n 13087341_487519954771034_2321284973983729211_n 13087342_487515791438117_4602452365701812172_n 13087374_487520898104273_149340773554102693_n 13087398_487518614771168_8400830244113716703_n 13087540_487520164771013_4080965311719235241_n 13087684_487518761437820_8460208360206775933_n 13087695_487519201437776_6218101334728369951_n 13087854_487520041437692_44902296069211309_n 13092041_487519334771096_5615287978503702589_n 13092108_487519881437708_5570626476671806071_n 13092153_487520354770994_5485146773703651105_n 13094141_487520031437693_7032684060590564870_n 13094315_487514571438239_7044958188371983125_n 13096112_487518658104497_797202090568884302_n 13096306_487519708104392_2551342754484617124_n 13100706_487518818104481_4486428308336881558_n 13102740_487518771437819_4240579387772422611_n 13103312_487519204771109_2716810422595477919_n

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் விபத்து!!

 
இன்று (26.04.2016) மாலை வவுனியா பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் சிறிய விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது.

சிறிய ரக கென்டர் வாகனம் ஒன்று பாதசாரிகள் கடவையில் நிறுத்த முற்பட்ட மோட்டார் சைக்கிளை பின்புறமாக மோதியது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் பின்புறம் சேதமடைந்ததுடன் ஓட்டுனர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

-கீதன்-

13059468_1253004918062563_2076639911_n 13059691_1253004874729234_959952238_n 13059864_1253005181395870_1760494468_n 13077170_1253004958062559_1765118969_n 13077372_1253004718062583_1875602392_n 13081648_1253004758062579_723287022_n 13082123_1253004688062586_906329595_n 13082161_1253005108062544_1941006479_n 13084065_1253004668062588_2074111010_n 13090308_1253004734729248_173849306_n 13101158_1253004944729227_495727471_n

அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை!!

Apple

நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம்.

தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது.

அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும்.

இதை நன்கு அறிந்து கொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர்.

அதில்“உங்கள் Apple ID செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டது, அதனை தடுப்பதற்கு பின்வரும் இணைப்பில் சொடுக்கவும்”என்று இணைப்பும் ஒன்று தரப்பட்டுள்ளது.

ஆனால் இதில் கிளிக் செய்து Apple ID ஐ புதுப்பிக்க முயலும்போது தனிப்பட்ட தரவுகள், அல்லது பணம் பறிபோவதற்கான சாத்தியம் இருப்பதாக அப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே அவ்வாறான குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு தனது பயனர்களுக்கு அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான குறுஞ்செய்திகள் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சில பயனர்களை சென்றடைந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

App

வவுனியாவில் தந்தை செல்வாவின் 39வது சிரார்த்த தினம்!!

 
தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் 39வது சிரார்த்த தினம் இன்று (26.04.2016) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இன் நிகழ்வுகளுக்கு முன்னர் தூய ஆவியானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் குருமன்காட்டிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகமான தாயகத்தில் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

20160426_090952 20160426_091012 20160426_091027 20160426_091043 20160426_091423 20160426_091451 20160426_091518 13091952_1006839596071887_1291193417751286905_n20160426_091549 13096110_1006839962738517_1047546814669821673_n20160426_092208 20160426_092211 20160426_104940 20160426_104946 20160426_104953 20160426_104957 20160426_105525 13051764_1006840462738467_6418928750905914226_n

பிரபல நடிகர் அஜய் கிருஷ்ணன் தற்கொலை!!

Ajay

நான்கு கோடி ரூபாய் செலவு செய்து தயாரித்த படத்தின் பிரிவியூவை பார்த்துவிட்டு மலையாள நடிகரும் படத் தயாரிப்பாளரான அஜய் கிருஷ்ணன் தற்கொலை செய்துக்கொண்டது திரையுலைகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மனையில்குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அஜய் கிருஷ்ணன்(28). இவர் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த மெம்மரீஸ், ‘சீன் 1 நம்முடைய வீடு’ உள்பட சில மலையாள படங்களிலும், தொலைகாட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், பிரபல நடிகர் ஆஸிப் அலியை கதாநாயகனாக வைத்து ‘அவருடே ராவுகள்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வந்தார். அஜய் தயாரித்த முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், வர்கீஸ், வினய், ஹனி ரோஸ், லீனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டன. அடுத்தமாதம் படத்தை வெளியிட அஜய் கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இவர் 23ம் திகதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் முதல்மாடி அறையில் தங்கியிருந்தார்.

சனிக்கிழமையன்று மாலை வரை அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அஜய் கிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர் தற்கொலைக்குக் காரணம் இவர் தயாரித்த படம்தான் என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் ‘அவருடே ராவுகள்’ படத்தின் பிரிவியூ ஷோ திரையிடப்பட்டுள்ளது. படம் தயாரிப்பாளர் அஜய்க்கு திருப்தி அளிக்கவில்லை. 4 கோடி செலவு செய்து தான் தயாரித்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி அடையாதோ என்று அச்சமடைந்த அஜய், இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று அஜய் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தங்களது ஒரே மகனை பறிக்கொடுத்த அஜய்யின் பெற்றொர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தான் தயாரித்த மலையாளப் படத்தை வெற்றி பெறாது என்று தயாரிப்பாளர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.