மரணித்த மனைவிக்காய் பேஸ்புக்கில் தாஜ்மஹால் கட்டிய ஊடகவியலாளர்!!

FB Taj

மரணித்த மனைவிக்காய் ஒரு பேஸ்புக் பக்கம் உருவாக்கி, அதனை தனது மனைவியின் ஞாபகார்த்தமாய் பராமரித்துவரும் ஆச்சரியமான ஊடகவியலாளர் ஒருவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

கொழும்பு, மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் என்பவர் வானொலி, பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக செயற்படுகின்றார்.

அத்துடன் முஸ்லிம் ஐக்கிய முன்னணி, ஊழலுக்கு எதிரான அமைப்புகள் போன்றவற்றிலும் அங்கம் வகிக்கும் இவர், பொதுமக்களுக்கு எதிரான அநீதிகளின் போது நண்பர்களைத் திரட்டி அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முன்னின்று செயற்படுகின்றார்.

இந்த நிலையில் கொலன்னாவை பிரதேசத்தில் திருமணமாகி இனிமையாக கழிந்து கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் எதிர்பாராத பேரிடியாக இவரது மனைவியின் மரணம் நிகழ்ந்துள்ளது.

இதனையடுத்து தனது மனைவியின் ஞாபகங்களை மறக்க முடியாத கலீலுர் ரஹ்மான், அவரது பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் உருவாக்கி மனைவியின் ஞாபகங்களை அதில் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிக் கொண்டிருக்கின்றார்.

மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு தினங்களில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் இவர், தனது ஒவ்வொரு வெற்றி மற்றும் மகிழ்ச்சியான தருணங்களையும் மனைவியின் பேஸ்புக் பக்கத்துடனும் பகிர்ந்து கொள்கின்றார்.

அது மாத்திரமன்றி தன் மனைவியின் பெயரால் ஒரு நற்பணி மன்றம் அமைத்து தன்னாலான வகையில் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

ஊடகப் பிரபலம் கிடைத்தவுடன் மனைவிக்குத் தெரியாமல் மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் மீது நாட்டம் கொண்டு மனைவிமாரின் அகால மரணத்துக்குக் காரணமாக அமையும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கலீலுர் ரஹ்மானின் செயற்பாடுகள் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மனைவியின் ஞாபகமாய் தாஜ் மஹால் கட்ட வசதியில்லாத இந்த ஏழைப்பங்காளன் ஊடகவியலாளன், தனக்குப் பழக்கப்பட்ட எழுத்துத்துறை மூலமாய் மனைவிக்காய் ஒரு நவீன தாஜ்மஹாலைக் கட்டிக் கொண்டிருப்பதை காணும் போது அம்பிகாபதி- அமராவதி, லைலா-மஜ்னு, ஷாஜஹான்- மும்தாஜ் நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

வடமாகாண சுகாதாரத் துறை அபிவிருத்திக்கு 4000 மில்லியன் ரூபாய் : ப.சத்தியலிங்கம்!!

Sathiyalingam

வடக்கு மாகாணத்தின் சுகாதார துறையின் அபிவிருத்திக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உடனான சந்திப்பின்போதே இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த திங்கள் கிழமை கொழும்பில் நடைபெற்ற மாதாந்த மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாட்டில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் பல்வேறு திட்டமுன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

இதில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை மேம்படுத்தும் முகமாக சுகாதார துறைசார்ந்த உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள், மருத்துவமனைகளை தரமுயர்த்தல், மாகாண அமைச்சின் ஐந்தாண்டு திட்ட நடைமுறை, ஆளணி அதிகரிப்பு போன்ற திட்ட முன்மொழிவுகள் மாகாண சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்டன.

இதில் குறிப்பாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கான குழந்தை மருத்துவ பிரிவு அமைத்தல், வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய நோய்களுக்கான சிகிச்சை பிரிவினை விரிவுபடுத்தல், யாழ்ப்பாணத்தில் பிராந்திய சுகாதார பயிற்சி நிலையம் நிறுவுதல், வவுனியாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தாதியர் பயிற்சிக்கல்லூரி அமைத்தல், சாவகச்சேரி வைத்தியசாலையில் பாரிசவாத நோயாளர்களுக்கான விசேட நரம்பியல் பிரிவினை அமைத்தல்.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கான மருத்துவ விடுதி அமைத்தல், பருத்தித்துறை தளவைத்தியசாலையில் உளநலமருத்துவ பிரிவுக்கான விடுதி அமைத்தல் போன்ற திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் ஒஸ்ரிய நாட்டின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தின் வைத்தியசாலைகளின் உட்கட்டுமான வசதிகள் மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஒஸ்ரிய நாட்டு அமைப்புகளுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாகவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சரித்திரத்தில் முதல் முறையாக யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை!!

 
அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை இலங்கை கடற்படையினர் சுழியோடி குழுவினர் மீட்டுள்ளனர்.

நிலாவரை கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க உதவி வழங்கினர். அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் இப்பகுதி யாழ் குடா நாட்டின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

40மீற்றர் ஆழத்தில் உள்ள பாறையின் முகட்டில் சிக்குண்டு காணப்பட்ட இறந்தவரின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் நீருக்கடியில் ரிமோட் கருவி மூலம் இயக்கப்படும் வாகனத்தைப்பயன்படுத்தி கண்டறிந்தனர்.

இவ்வாறு கண்டறியப்பட்ட சடலத்தை கடற்படை சுழியோடிகள் குழுவின் இரு சுழியோடிகளின் துணிகரச் செயலின் மூலம் ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வாறான ஆழமான கிணறு ஒன்றிலிருந்து இலங்கை கடற்படையினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை இது என்பது குறிப்பிடுகின்றனர்.

135 அடியில் சடலம் இருந்தபோதும் அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடிக்கு ஒரு குகை இருப்பதாகவும் அது எங்கே போய் முடிகின்றது என்று தெரியாது எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

1 3 2

பாடப் புத்தகங்களை வழங்குவதாக ஏமாற்றி மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர்!!

Abuse

இரத்தினபுரி – குட்டிகல பிரதேசத்தில் மாணவர் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 16ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குட்டிகல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் சில பாடப் புத்தகங்களை பெற்று கொள்வதற்காக ஆசிரியர் விடுதிக்கு சென்றுள்ளார். இதன் போது அதிபர் ஒரு புத்தகத்தை பெற்று கொடுத்து இன்னும் சில புத்தகங்களை பெற்று தருவதாக கூறி மாணவனை அறைக்குள் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அந்த அறையில் வைத்து மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் கற்கும் 15 வயதான சிறுவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சந்தேக நபரான அதிபர் குட்டிகல காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவேற்றுவதாக மிரட்டி மாணவியை கடத்த முற்பட்ட சாரதி!!

FB

பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் 17 வயது பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்த முச்சக்கர வண்டி சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

பொகவந்தலாவ பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பொகவந்தலாவ குயினா தோட்டப் பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே கடத்த முற்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

முச்சக்கர வண்டி சாரதி, தன்னுடைய புகைப்படத்தை வைத்து கொண்டு முகப்புத்தகத்தில் பதிவேற்றுவதாக கூறியுள்ளதுடன், அவ்வாறு செய்யாமல் இருக்க தன்னோடு வரவேண்டுமென தன்னை மிரட்டியதாகவும் குறித்த மாணவி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியின் மிரட்டலுக்கு பயந்து நேற்று (26.04) செவ்வாய் கிழமை மாலை மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு முச்சக்கர வண்டி சாரதியோடு சென்ற மாணவியை பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கர வண்டியோடு பலாங்கொட மாரதென்ன பகுதியில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் காப்பற்றபட்ட சிறுமிபொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு குறித்த மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

எனவே தப்பி ஒடி தலைமறைவாகியுள்ள முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!!

Urin

சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.

நீங்கள் அப்படிப்பட்டவரா? அப்படியெனில் இந்த கட்டுரையை தவறாமல் படிக்க வேண்டும். ஏனெனில் இங்கு சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

எத்தனை முறை வீட்டில் உள்ளோர் கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் பலர் சிறுநீரை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இக்கட்டுரை தெளிவாக விளக்கும்

அசௌகரியம் மற்றும் வலி

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

கவனச்சிதறல்

சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. உதாரணமாக, பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால், சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்று

வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சிறுநீரக நோய்

சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.

மேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில், எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க தயங்குபவராக இருப்பின், வெளியே இருக்கும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர்ப்பை விரைவில் நிறைந்துவிடும்

1000 ஆண்டு பழமையான பள்ளிவாசலுக்கு பெண்களும் செல்ல அனுமதி!!

mosque_2

இந்தியாவின் கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் 1000 ஆண்டு பழமையான தாழத்தங்காடி ஜும்மா பள்ளிவாசலுக்குள் பெண்களும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்ககூடாது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழுந்து உள்ளது.

குறிப்பாக கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரி மலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்க படாதது தொடர்பான பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதுபோல பல்வேறு வழிபாட்டு தலங்களில் வழிபாடு தொடர்பாக கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளது.

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் தாழத்தங்காடி ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்த பள்ளிவாசல் அழகிய வேலைபாடுகளுடன் கேரள பாணியில் கட்டப்பட்டதாகும். இந்தியாவில் உள்ள புராதன பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஏராளமானோர் தினமும் வருகை தருகிறார்கள்.

ஆனால் இந்த பள்ளிவாசலில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்படாத நிலை இருந்து வந்தது. தற்போது இந்த முறை மாற்றப்பட்டு பள்ளிவாசலுக்குள் பெண்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முதல் பெண்கள் இந்த பள்ளிவாசலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்றனர். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பெண்களுக்கு இந்த பள்ளிவாசலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்கள் பிரார்த்தனை செய்யக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது

 

சட்டவிரோத ஆயுதங்களை கையளிக்கும் பொது மன்னிப்பு காலம் மே 06 வரை!!

swmod25lhpfl

அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வழங்கப்பட்டுள்ள காலஎல்லைக்குள் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் ஒப்படைக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் மாதம் 25ம் திகதி காலை 09.00 மணி முதல் மே மாதம் 6ம் திகதி மாலை 04.00 மணி வரை இவ்வாறு அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைக்கும் பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 6ம் திகதியின் பின்னர் நாட்டிலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றும் விஷேட வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க பாதுகாப்பு தரப்பு எதிர்பார்த்துள்ளது. சட்டவிரோத துப்பாக்கி பாவனையை குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

டுபாயில் திருட்டு வாகன விற்பனையில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு சிறை!!

640x392_53582_104886

டுபாயில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றில் 11 கார்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்த இலங்கை பணியாளர்கள் மூவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

குறித்த வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வெளிநாடு சென்றிருந்த போது, 2.8 மில்லியன் டினார் பெறுமதியான 11 மோட்டார் கார்களை சட்டவிரோதமான முறையில் இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மூவரையும் குற்றவாளிகளாக இணங்கண்ட அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் 150,000 டினார் தண்டமும் விதித்துள்ளது. இவர்களுடைய சிறைக் காலம் நிறைவு பெற்றதும் மூவரையும் நாடுகடத்துமாறு அந்நாட்டு நீதிமன்ற உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது : 13 யாழ்.பல்கலை மாணவர்கள் படுகாயம்!!(படங்கள்)

acci

யாழில் இருந்து பதுளைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.குறித்த விபத்தினுள் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.இவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த சமயம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைத் தூக்கம் காரணமாக திருப்பத்தில் பேரூந்து தடம்புரண்டதாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

13087676_10206345946308516_1140563200646835898_n 13076527_10206345956468770_5090501854051599810_n 13082659_10206345946428519_7629592619721494996_n 13051719_10206345946348517_189383981339016739_n13077190_1724574921095918_1910469381_n 13090055_1724574831095927_880479446_n 13090306_1724574891095921_32277556_n 13090413_1724574874429256_967715659_n 13090456_1724574864429257_1076279272_n 13101218_1724574884429255_545146950_n 13101384_1724574894429254_470674105_n 13115732_1724574851095925_1056408069_n

 

ராஜபக்ச விமானநிலையம் தனியார் மயம்!!

mattala-rajapaksa-airport

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமானத்தளம் இந்த வருட இறுதிக்குள் தனியார்மயப்படுத்தப்படவுள்ளது.இந்த தகவலை உள்ளூர் சிவில் விமானசேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.இதற்காக பல நிறுவனங்களிடம் இருந்து கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.

எனினும் விமான நிலையத்தை அமைத்த சீனாவில் இருந்து கேள்விகள் சமர்ப்பிக்கப்படவில்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்தளை விமான நிலையத்தை அமைத்தபோது பெறப்பட்ட கடன்கள் தற்போது கட்டுநாயக்கவிமானநிலையத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டே ஈடுசெய்யப்பட்டு வருகிறது.

இந்த விமானநிலையம் 209 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2013மார்ச் மாதம் திறக்கப்பட்டது.இதில் சீன அரசாங்கம் 190 மில்லியன் டொலர்களைவழங்கியது.

 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் மக்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
இன்று (27.04.2016) காலை 9.00 மணிமுதல் இராணுவத்தால் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளுக்கு எதிராகவும், அவைகளை விடுவிக்க கோரியும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த பொதுமக்களுக்கான பதினேழு ஏக்கர் காணி, சுதந்திரபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகள், நாயாறு பிரதேசத்தில் உள்ள காணிகள் என பல காணிகளை இராணுவம் அடாவடித்தனமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிராக மக்கள் உண்ணாவிரத போராட்டத்திலும், பெருந்திரலான மக்கள் தமது உரிமைகளை கோரி அகிம்சை வழியில் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் மற்றும் வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் திரு.அன்ரனி ஜெகநாதன் என பல பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

1 2 3 4 5

இந்த வருடத்துக்குள் இரண்டு உள்ளூர் விமானத்தள அமைப்பு பணிகள் ஆரம்பம்!!

TLS-13th-June-Mattala-Rajapaksa-International-Airport-to-be-Developed-as-Aircraft-Repairing-Center

இலங்கையில் இரண்டு உள்ளுர் விமானத்தளங்களை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருடத்தில்ஆரம்பிக்கப்படவுள்ளன.உள்ளூர் விமானசேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி பண்டாரவளை மற்றும் பாலாவி ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமையவுள்ளனஇதன் ஒருக்கட்டமாக அமைச்சர் நிமால் சிறிபால நேற்று விமான நிலையம் அமைக்கப்படவுள்ளபண்டாரவளை நாயபெத்த பெருந்தோட்ட பகுதிக்கு விஜயம் செய்தார்.இந்த விமானத்தளம் 1.5 கிலோதமீற்றர் தூரத்தையும் 20 மீற்றர் அகலத்தையும்கொண்டதாகவும் அமையவுள்ளது.

இதற்காக 1.3பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன. இந்தநிலையில் நிர்மாணம் இந்த வருடத்துக்குள் முடிக்கப்படும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது.விமானத்தளத்துக்காக 75 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.ஓடுபாதையின் தன்மைக்கு ஏற்ப இந்த விமானத்தளத்தில் 45 பேரைக்கொண்ட விமானம்தரையிறங்க முடியும்.

முன்னதாக இந்த விமானத்தளம் ஹப்புத்தளையில் அமைக்கப்படவிருந்தபோதும்தொழில்நுட்பக் காரணங்களால் பின்னர் அது பண்டாரவளைக்கு மாற்றப்பட்டது.பண்டாரவளை, பாலாவியை தவிர கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலும் உள்ளூர் விமானத்தளங்கள் அமைக்கப்படவுள்ளன.

 

கோடையில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த இயற்கை வழிகள்!!

1 (35)

சருமம் உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம் என்று 3 வகையானது. இதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலம் மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்க செய்யும். இதனால் முக அழகு கெடும். எண்ணெய் பசை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளது.

எண்ணெய் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர் கடலைமாவு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும். வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஒட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

 

கடல் அலைகளின் இயங்காற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய முறை கண்டுபிடிப்பு!!

Sea

கடல் அலைகளின் இயங்காற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய முறையிலான மின் உற்பத்தியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

உலகளவில் மின்சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது இந்த தேவையை ஈடுசெய்ய அனல் மின்சாரம், புனல் மின்சாரம், சூரியஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற மரபுசார்ந்த மின்சார உற்பத்தியையும் கடந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அணுசக்தி மூலமாகவும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கடல் அலைகளின் இயங்காற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய முறையை டென்மார்க் நாட்டை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

கடலின் நடுவே, படகுபோன்ற ஒரு மிகச்சிறிய நிலையத்தை அமைத்து, அதில் 10 மீட்டர் சுற்றளவு கொண்ட 20 பிளாஸ்டிக் மிதவைகள் இணைக்கப்படுகின்றன.

கடல் அலை உந்து சக்தி ஆற்றலுக்கு ஈடுகொடுத்து மேலும் கீழுமாக அசையும் இந்த மிதவைகள் கடல் அலைகளின் இயங்காற்றல் மூலம் கிடைக்கும் சக்தியை மின்சாரமாக அருகாமையில் உள்ள முனையத்துக்கு கடத்துகின்றன.

இவ்வகையில், கடத்தப்படும் மின்னாற்றல் அந்த முனையத்தில் இருந்து வேறொரு பகிர்மான நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் 20 பிளாஸ்டிக் மிதவைகளை கொண்ட ஒவ்வொரு நிலையமும் நாளொன்றுக்கு 6 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

இப்படி, ஒரு நிலையத்தின் இயக்கம் வாயிலாக 24 மணிநேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் மட்டும் சுமார் 4000 வீடுகளின் மின்சார தேவையை பூர்த்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது என இந்த நவீன கருவியை உருவாக்கியுள்ள ’வேவ் ஸ்டார்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே முறையில், உலகம் முழுவதும் கிடைக்கும் கடலைலைகளின் இயங்காற்றலில் ஒரு சதவீதத்தை கிரகித்துக் கொண்டாலே உலகின் தற்போதைய மின்சார தேவையை விட ஐந்து மடங்கு அதிகமான மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம் எனவும் இந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அது மட்டுமன்றி, கடலில் அமைக்கப்படும் இந்த சிறிய நிலையங்களின் மூலமாக அலைகளில் இருந்து மட்டுமல்ல சூரிய சக்தியின் மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் ஒரே வேளையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.

மாடு­க­ளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம்!!

cattle-marriage

இந்­தி­யாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடு­க­ளுக்கு ஆடம்­பர திரு­மண வைப­வத்தை நடத்­தி­யுள்ளார். குஜராத் மாநி­லத்தின் பவ்­ந­கரில் கடந்த வியா­ழக்­கி­ழமை இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது. அஹ­ம­தாபாத் நகரைச் சேர்ந்த வர்த்­த­க­ரான விஜய் பர்­சனா என்­ப­வரே இந்த ஆடம்­பர திரு­ம­ணத்தை நடத்­தினார்.

உடற்­ப­யிற்சி நிலை­யங்கள் (ஜிம்) பல­வற்றை நடத்­தி­வரும் விஜய் பர்­சனா, அறக்­கட்­ட­ளை­யொன்­றையும் நடத்தி வரு­கிறார். இவ­ருக்குச் சொந்­த­மான பண்­ணை­யொன்றில் உயர்­ர­கத்­தை சேர்ந்த இரு பசுக்கள் உள்­ளன. ராதா, பூனம் என இப்­ப­சுக்­க­ளுக்கு அவர் பெய­ரிட்­டுள்ளார். இப்­ப­சுக்­க­ளுக்கு இரண்­டரை வருட வய­தா­ன­வுடன் அவற்றை காளை­யொன்­றுடன் ஜோடி சேர்த்­து­வைக்க விஜய் பர்­சனா விரும்­பினார்.

இதற்­காக “அர்ஜூன்” எனும் காளை தெரிவு­செய்­யப்­பட்­டது. இந்த நிகழ்வை ஆடம்­பர திரு­மண வைப­வ­மாக அவர் நடத்­தினார். இசை நிகழ்­ச­சிகள், ஊர்­வலங்கள் சகிதம் இவ்­வை­பவம் நடை­பெற்­றது. ஆயி­ரக்­க­ணக்­கான கிரா­ம­வா­சிகள் இந்த “திரு­மண வைப­வத்தை” காண்­ப­தற்கு திரண்­டி­ருந்­தனர். இது குறித்து விஜய் பர்­சனா (44) கருத்துத் தெரி­விக்­கையில், “பசுக்­கள் தான் எம்மை முன்­னேற்ற முடியும்.

நான் ஃபிட்னஸ் துறையில் இருப்­பவன் என்ற வகையில், எமது ஆரோக்­கி­யத்­துக்கு பசுப்பால் தயா­ரிப்­புகள் ஏற்­ப­டுத்தும் சிறந்த விளை­வு­க­ளுக்கு நான் சாட்­சி­யாக உள்ளேன். ஒவ்­வொரு வீட்­டிலும் பசு­வொன்று வளர்க்­கப்­பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த செய்தியை பரப்புவதற்காக பூனத்தின் திருமணத்தை ஒரு பொது நிகழ்வாக நான் கொண்டாடினேன் எனத் தெரிவித்துள்ளார்.