காட்சிப் பொருளாகிறது தங்கத்தில் கழிப்பறை – பயன்படுத்தவும் முடியும்!!

1461263369588

அமெரிக்க நியூயார்க் நகரில் கக்கன் ஹேம் அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தால் ஆன கழிப்பறை விரைவில் நிர்மானிக்கப்பட உள்ளது.இதை பார்வையிடுவதற்கு மட்டுமின்றி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அருங் காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் மொல்லி ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

மவுரிஸியோ கேட்டிலன் என்ற சிற்பக்கலைஞர் பணியிலிருந்து ஓய்வு அறிவிக்கும் முன் தனது இறுதிப் படைப்பாக இதனை வடிவமைத்துள்ளார்.இந்தக் கழிப்பறைச் சிற்பத்தைப் பாதுகாக்க முழுநேர பாதுகாவலர் நியமிக்கப்பட உள்ளார்.

 

வவுனியா நொச்சிமோட்டை விவேகானந்த சனசமூக நிலையத்திற்கு உதவி!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா நொச்சிமோட்டை விவேகானந்த சனசமூக நிலையத்திற்கு உதவி வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா நொச்சிமோட்டை விவேகானந்த சனசமூக நிலையத்திற்கு கட்டிட புணரமைப்பிற்கான நிதி உதவி வழங்கப்பட்டது.

3 2 1

ஐரோப்பாவிலிருந்து ஆபிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து இளம்பெண் சாதனை

Swim

ஜேர்மனி நாட்டை சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை ஒருவர் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.ஜேர்மனியில் உள்ள Marburg என்ற நகரை சேர்ந்த Nathalie Pohl(21) என்ற இளம்பெண் தான் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.நீச்சல் போட்டிகளில் அபார ஆர்வம் உள்ள அவர் ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு குறுகிய நேரத்தில் நீச்சல் அடித்து செல்லவேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், நேற்று முன் தினம் ஸ்பெயின் நாட்டில் உள்ள Tarifa என்ற கடற்கரை பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்கியுள்ளார்.14 டிகிரி அளவில் வெப்பம் கொளுத்திய நிலையிலும் தனது முயற்சியை கைவிடாத அவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் உள்ள Point Cires என்ற பகுதியை சென்றடைந்தார்.அதாவது, 15 கி.மீ தூரம் உள்ள தொலைவினை 2 மணி நேரம் 53 நிமிடங்களில் கடந்து முந்திய சாதனையை முறியடித்துள்ளார்.இதன் மூலம் முந்திய அவுஸ்திரேலிய நாட்டு வீரரின் சாதனையை 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே கடந்து தற்போது உலகசாதனையை படைத்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், இந்த இளம் பெண் பல்வேறுநீச்சல் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார்.இவரது அடுத்த முயற்சியாக 32 கி.மீ தொலைவுள்ள இங்கிலீஷ் கால்வாயை கடந்து சாதனை படைக்கதற்போது திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் சாய்பாபாவின் நினைவு தினம்!!

 
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா மனித உருவில் அவதரித்த அவதாரம். சர்வ வல்லமை பொருந்திய பரம்பொருள் கடவுள் மனிதனாக வாழ்ந்த காலத்தில் நாழும் வாழ்ந்திருக்கின்றோம்.

இவ் அவதாரம் 24.04.2011 ஆம் ஆண்டிலிருந்து தூல சரீரத்தை விட்டு சூட்சும சரீரத்துள் பிரவேசித்தார். அதாவது வடிவம் தாங்கி வந்த பரம்பொருள் தனது வடிவத்தை விட்டு எல்லையற்ற பிரபஞ்சத்திற்குள் இரண்டறக் கலந்துள்ளார்.

இவர் பிரபஞ்சத்திற்குள் கலந்த நாளினை உலகில் எல்லா இடங்களிலுள்ள சாயி பக்தர்களினால் சாயி நிலையங்களில் நினைவு கூர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்திலும் ஆராதனா மகோற்சவம் சிறப்பாக இடம் பெற்றது.

அதனை முன்னிட்டு தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் தாக சாந்தி சேவையும், 24.04.2016 ஆம் திகதி அன்று சாயி நிலையத்தில் இந்தியாவிலுள்ள வடிவத்தை ஒத்த ஸர்வ மத தூபி ஒன்று இலங்கையிலேயே முதல் முறையாக வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டு இலங்கை சத்ய சாயி சேவா நிலையங்களின் மத்திய இணைப்புக் குழுவின் உப தலைவர் வி.மனோகரன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பஜனை நிகழ்வும் மாலை விசேட பஜனையும் இடம் பெற்றது. தொடர்ந்து நேற்று (25.04.2016) ஆம் திகதி அன்று வவுனியா வலுவிழந்தோர் புணர்வாழ்வு நிலையத்தில் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுடன் பஜனையும், அவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்குரிய உதவியும் வழங்கப்பட்டு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவினுடைய ஆராதனா மகோற்சவம் நினைவு கூறப்பட்டது.

20160420_114452 20160420_114459 20160420_114510 20160424_180234 20160424_180440 DSC_0035 DSC_0080 DSC_0097 DSC_0099 DSC_0106 DSC_0117 DSC_0121 DSC_0137 DSC_0156 DSC_0162 DSC_0215 photo 1 (4) photo 2 (4) photo 3 (2)

நான் எப்படி காதலில் விழுந்தேன்; அதிக விலைக்கு ஏலம்போன ராணியின் காதல் கடிதம்!!

queen_2199253b

‘நான் எப்படி காதலில் விழுந்தேன்’ என்ற தலைப்பில் பிரிட்டன் ராணி எழுதிய கடிதம் எதிர்பார்க்கப்பட்டதையும் விட 18 மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் போனது.

பிரிட்டன் ராணியாக பதவிவகித்து வரும் இரண்டாம் எலிசபெத் ராணி, தனது 21 ஆவது வயதில் கடந்த 1947-ல் எழுதிய இரண்டு பக்க காதல் கடிதம், அவரது 90 ஆவது பிறந்த நாளையொட்டி, ஏலத்துக்கு விடப்பட்டது. அந்த கடிதம் 800 முதல் 1,200 பவுண்டுகள் வரை ஏலம்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் மீறி 18,000 பவுன்டுகளுக்கு ஏலம் போனது.

 

கனவுக்கன்னியாக இருப்பதையே விரும்புகிறேன்: ஹன்சிகா பேட்டி!!

1 (56)

இந்த வருடம் ஹன்சிகா நடித்து ‘அரண்மனை-2,’ ‘போக்கிரி ராஜா’ ஆகிய 2 படங்கள் இதுவரை திரைக்கு வந்துள்ளன. அடுத்து இவர் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ‘மனிதன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி, நிருபருக்கு ஹன்சிகா பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹன்சிகா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரசிகர்கள், ‘கனவுக்கன்னி’ என்று சொல்கிற மாதிரி எல்லா படங்களிலும் காதல் நாயகியாக நடிப்பது உங்களுக்கு அலுப்பு தட்டவில்லையா, தேசிய விருது வாங்குகிற மாதிரி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இல்லையா?

பதில்:- ‘கனவுக்கன்னி’ அந்தஸ்தை பெறுவதுதான் ஒவ்வொரு கதாநாயகியின் கனவாக இருக்கும். அது கிடைக்குமா? என்று ஏங்குகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அது கிடைத்ததை வரமாக கருதுகிறேன். ரசிகர்கள் என்னை, ‘‘கனவுக்கன்னி’’ என்று அழைப்பதில், வருத்தம் இல்லை. விருது நடிகை என்று சொல்வதை விட, கனவுக்கன்னியாக இருப்பதில், சந்தோஷம்தான். அதே நேரத்தில், நடிப்புக்காக விருது பெறும் கதாபாத்திரம் வந்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.

கேள்வி:- ‘நம்பர்-1’ கதாநாயகி என்ற இடத்தை பிடிக்க என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?

பதில்:- ஒரு கதாநாயகியாக நான் என் வேலையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களை திருப்தி செய்யும் கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். ‘நம்பர்-1,’ ‘நம்பர்-2’ என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த விளையாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. இப்போது இருக்கிற மாதிரி எப்போதும் எனக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தால் போதும்.

கேள்வி:- உங்களுக்கு போட்டியாக யாரை கருதுகிறீர்கள்?

பதில்:- போட்டியாக யாரையும் நினைக்கவில்லை. என்னுடன் மட்டுமே நான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு படத்தை விட, இன்னொரு படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கேள்வி:- ‘மனிதன்’ படத்தில், உங்களுக்கு என்ன வேடம்?

பதில்:- பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு ஆசிரியையாக நடிக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், ப்ரியா. இது, வழக்கமான வேடமாக இருக்காது. அழுத்தமான வேடம். இந்த படத்தை அடுத்து இப்போது ஜெயம் ரவியுடன், ‘போகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து இன்னொரு படத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கேள்வி:- ஓவிய கண்காட்சி நடத்தப் போவதாக முன்பு கூறியிருந்தீர்கள். அதை எப்போது நடத்தப் போகிறீர்கள்?

பதில்:- நான் இதுவரை 15 ஓவியங்களை வரைந்து இருக்கிறேன். கண்காட்சி நடத்த வேண்டுமானால், 50 ஓவியங்களாவது இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். ஓவியம் வரைய ஆரம்பித்தால் நான் பசி-தூக்கம் மறந்து விடுவேன். ஆறு அல்லது ஏழு மணி நேரம் தொடர்ந்து வரைந்து கொண்டிருப்பேன். அதை முடித்து விட்டுத்தான் வெளியே வருவேன்.’’

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

 

நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன்: அனுஷ்கா!!

anushka_3_0_0

நடிகர்-நடிகைகள் தங்கள் படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை வைத்தே வெற்றி தோல்வியை கணிக்கிறார்கள். ரசிகர்கள் ஏராளமாக தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்து வசூலும் அதிகமாக இருந்தால் அதை வெற்றிப்படமாக கருதுகிறார்கள். வசூல் இல்லை என்றால் தோல்விப்படம் என்கிறார்கள்.

ஆனால் என்னைப் பொருத்தவரை நான் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்பதை அந்த படம் வெளியாகும் முன்பே கணித்து விடுவேன். கதையை கேட்கும்போதே படத்தின் தரத்தை தெரிந்து கொள்வேன். படம் ஓடுமா? ஓடாதா? என்பது அப்போதே எனக்கு புரிந்து விடும். ஓடக்கூடிய நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நடிப்பேன்.

நான் நடிக்கும் படம் தயாராகும் போதே வெற்றி பெறும் என்பது எனக்கு தெரிந்து விடும். படம் வெளிவந்த பிறகு 95 சதவீதம் நான் நினைத்தது போலத்தான் நடந்து இருக்கிறது. படத்தில் நடிக்கும் போதே இந்த படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடன் நடிக்க வேண்டும். அப்போதுதான் மனது உற்சாகமாக இருக்கும். பணம் வருகிறது என்பதற்காக மோசமான கதைகளில் நடிக்க கூடாது. எனக்கு இதுவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களாகவே அமைந்துள்ளன.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத்தான் நடித்து இருக்கிறேன். என்னை மனதில் வைத்து கதைகளை எழுதுகிறார்கள். அருந்ததி, பாகுபலி, ருத்ரமா தேவி ஆகியவை எனக்கு முக்கிய படங்களாக அமைந்தன. தற்போது நடிக்கும் பாகுபலி இரண்டாம் பாகம் படமும், சிங்கம்-3 படமும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகவே உள்ளன. பாக்மதி என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

 

மனநோயாளி வெறிச்செயல்: பத்து வயது சிறுவன் குத்திக் கொலை

1 (14)

கேரள மாநிலத்தில் இன்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர் பத்து வயது சிறுவனை 17 இடங்களில் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள கொச்சி மாவட்டம், புல்லேப்பாடி பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவனான கிறிஸ்டி ஜான் இன்று காலை தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடையில் இருந்து பால் வாங்கிக்கொண்டு வந்தபோது வழிமறித்த அஜி தேவசியா(40) என்பவர் ஜானை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

உடலில் 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜானை உடனடியாக அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். எனினும், பத்து நிமிடங்களுக்குள் ஜான் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் புல்லேப்பாடி பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஜானை கத்தியால் குத்திக்கொன்ற அஜி தேவசியா கொடிய போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

 

இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள்! உயர்கல்வி அமைச்சர் தகவல்!!

ea6b2416c1fe2a0d0814e9e046e89e0a_XL

இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.அழகியல்கலைப் பீடம் மற்றும் சுதேச வைத்தியத்துறை பீடங்களுக்கான இரண்டு புதிய விடுதிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது .இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

வைபவத்தின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கிரியெல்ல,எமது அரசாங்கம் பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என்றில்லாது ஒட்டுமொத்த கல்வித்துறைக்கும் பாரிய நிதியொன்றை ஒதுக்கியுள்ளது.அதிலும் குறிப்பாக நாங்கள் உயர்கல்வித்துறை மீது கூடுதல் கரிசனை கொண்டுள்ளோம்.

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் மாணவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் தொழில் ஆற்றல்களைக் கொண்டவர்களாக வெளியாக வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கரிசனையுடன் செயற்படுகின்றார்.

எமது அரசாங்கத்தில் மாணவர்களுக்கு போதுமான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடின் றி பல்கலைக்கழக நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் பற்றாக்குறை குறித்தும் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில் துரிதகதியில் 60 விடுதிகட்டிடங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.இதன் மூலம் 2018ம் ஆண்டுக்குள் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப்பற்றாக்குறை பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் கிரியெல்ல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

 

வாக்காளர் இடாப்பில் திருத்தம்!!

elections_secretariat1

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய தேர்தல்கள் அதிகாரிகளாக செயற்படும், கிராம சேவையாளர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

25 மாவட்ட தேர்தல்கள் செயலகங்களையும் மையப்படுத்தி இந்த தெளிவூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் இடாப்புகளை மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

காது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெரிய தவறுகள்!!

Ear

காது குடைவதில் என்ன பெரிதாக தவறு செய்துவிட போகிறோம். எப்படியும் தினமும் காது குடைந்து அழுக்கை எடுத்துவிடுகிறோமே என்று கூறும் நபரா நீங்கள்? இதுவே பெரிய தவறு தான்.

நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். காது சரியாக கேட்கவில்லையா? முதலில் இதைப் படித்துப் பாருங்கள்..

ஏனெனில், காதில் நீங்கள் அழுக்கு என்று எண்ணி சுத்தம் செய்பவை தான் உண்மையில் காதுகளை பாதுகாக்கும் அண்டி-பக்டீரியா ஆகும். எனவே, இதை முதலில் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, காதுக்குள் தினமும் உறங்கும் போது பஞ்சை வைத்துக் கொள்வது, கண்டதை விட்டு காதுகளை நோண்டுவதை தவிர்க்க வேண்டும்.

இது தவறு என்று தெரியாமலேயே நீங்கள் காதுகளை சுத்தம் செய்கிறேன் என ஐந்து தவறுகளை செய்து வருகிறீர்கள். அவை என்னென்ன என்று இனிக் காண்போம்.

தினமும் சுத்தம் செய்வது

நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காதில் பெரும்பாலும் இறந்த சரும செல்கள் தான் அழுக்கு போன்று படிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை, லைசோசைம் (lysozyme) எனப்படும் அண்டி-பக்டீரியல் என்சைம் ஆகும்.

உண்மையில் நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்வது காதுகளுக்கு நல்லது என எண்ண வேண்டாம். உண்மையில் இந்த லைசோசைம்கள் தான் காதுகளை பாதுகாக்கின்றன என மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் குளிக்கும் போது காதுகளின் மேற்புறத்தில் நீர் ஊற்றி கழுவி, மென்மையான துணியைக் கொண்டு காதின் மேற்புறத்தில் மட்டும் சுத்தம் செய்தாலே போதுமானது.

காதுகளில் பஞ்சு வைப்பது

சிலர் காதுக்குள் அழுக்கு போகாமல் இருக்கவும், குளிர் காலத்தின் போதும் கூட பஞ்சு வைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த பஞ்சு காதின் உட்பகுதிக்குள் சென்றுவிட்டால் அதை மருத்துவ முறையை கையாண்டு அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்.

மேலும், காதுக்குரும்பி (Ear wax) எனப்படுவதை இது காதினுள்ளே அடைப்பு போலே உண்டாக செய்கிறது. இது செவிப்பறையை பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குச்சி போன்ற பொருட்களை பயன்படுத்துவது

சிலர் காது குடைவதை சுகமான வேலையாக செய்து வருவார்கள். பேனா, கறிவேப்பிலை குச்சி, விரல் நகம், போன்றவற்றை பயன்படுத்தி காது குடைவார்கள். உண்மையில் இது சுகமாக இருப்பினும், காதின் உள்ளே இருக்கும் சருமத்தை அதிகமாக எளிதாக பாதிக்கின்றனர் என்பது தான் உண்மை.

நீரை உள்ளே ஊற்றுவது

சிலர் காதை நன்கு கழுவுகிறேன் என்ற பெயரில் காதினுள்ளே தண்ணீரை நேராக ஊற்றிக் கொள்வார்கள். இப்படி செய்வதில் எந்த தவறும். ஆனால், அதே சமயம் உள்ளே ஊற்றிய தண்ணீர் முழுதுமாக காய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படி நீரை நீராக காதினுள் ஊற்றி கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லவே இல்லை

பின்னூசி

காது குடைய பின்னூசி, பெண்கள் பயன்படுத்தும் ஹேர் பின் போன்றவற்றை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். இது செவிப்பறை மற்றும் காதின் உட்பகுதியில் இருக்கும் மிர்துவான சருமத்தில் எளிதாக கிழிசல் உண்டாக்கிவிடும்.

ஆற்றில் சடலமாக மிதந்த இளைஞர்!!

1 (44)

வாகரை – புதூர் பிரதேசத்திலுள்ள ஆற்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர் கதிரவௌி பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முச்சக்கர வண்டி தீக்கிரை!!

625.0.560.320.160.600.053.800.668.160.90

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட வை.எம்.எம்.ஏ. குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கராஜ் வேலை செய்யும் முச்சக்கரவண்டி உரிமையாளரான எச்.எம்.முஸம்மில் என்பவர் வழமை போன்று தனது கடமைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டுக்கு முன்னால் வீதியோரமாக முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

வீட்டுக்கு முன்னால் பெரிதாக வெளிச்சம் தெரிவதைக் கண்டு வெளியே வந்து பார்த்த போது தனது முச்சக்கர வண்டி தீப்பிடித்துக் கொண்டு எரிவதை அவதானித்துள்ளார்.உடனடியாக அயலவர்களின் உதவியுடன் தீயை அணைப்பதற்கு எடுத்த முயற்சி பயனின்றி முச்சக்கர வண்டி முற்றாக தீயினால் சேதமடைந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக முச்சக்கர வண்டி உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தெஹிவளையில் ரயிலில் மோதுண்டு யுவதிகள் இருவர் பரிதாபமாகப் பலி!!

Train

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த 19 வயதான செரோன் செவ்லின் மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த இமேசி யசாரா என்ற 19 வயதான யுவதியுமே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மொறட்டுவையில் 3 வாகனங்கள் ஒருடன் ஒன்று மோதி விபத்து : 15 பேர் படுகாயம்!!

Acc

மொறட்டுவ-கொரவெல்ல பகுதியில் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

சொகுசு பஸ், பாரவூர்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை, லுனுவில, பாணந்துறை வைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீரை அதிகமாகக் குடிப்பது நல்லதா?

Water

பொதுவாக எம்மில் பலருக்கும் இந்த தண்ணீரை குடிப்பது குறித்து ஏராளமான சந்தேகங்களை வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஆறு லீற்றர் தண்ணீர் அருந்தவேண்டும் என்று மருத்துவர்கள் எடுத்துரைப்பார்கள்.

ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களோ உங்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தண்ணீரை குடித்தால் போதுமானது என்பார்கள். வேறு சிலர் உங்கள் உடலிலிருந்து தினசரி மூன்று லீற்றர் சிறுநீர் வெளியேறவேண்டும் அதற்கேற்றாற் போல் தண்ணீரை அருந்துங்கள் என்பர்.

ஆனால் உண்மையில் எம்முடைய உடலுக்கு தண்ணீர் தேவையெனில் தாகம் எடுத்து எம்மிடமே கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. அதற்காக லீற்றர் லீற்றராக தண்ணீர் குடிக்கத் தேவையில்லை. இதே சமயத்தில் தாகமே எடுக்கவில்லை என்று யாராவது சொல்வாரேயானால் அவர் களுக்கு கபம் அதிகரிக்கிறது என்று பொருள்.

உடலியல் தேவையை விட அதிகமான தண்ணீர் அருந்தினால் செரிமானத்தில் சிக்கல் எழலாம். காரணம் வயிற்றில் உணவுப் பொருள் ஜீரணமாவதற்கு அக்னி தேவை. அதனை தண்ணீர் அருந்தி பலவீனமடைய வைத்து விடாதீர்கள்.

அதே போல் தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் இருந்தால், அவர்களின் உட லில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும் இதனால் சரும வறட்சி, தோல் சுருக்கம்,முடி உதிர்தல், கண்களுக்கு அருகே கருவளையம், கால் பாதங்களில் வெடிப்பு போன்றவைத் தோன்றக்கூடும்.

ஒரு சிலர் காலையில் எழுந்ததும் ஒரு குவளைத் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்த முடித்த பின்னரே அவர்களுக்கு காலை கடன்கள் முடிக்க பாத்ரூமிற்குள் செல்வர்.

இதனை பழக்கப்படுத்திக் கொண்டுவிட் டால் அவர்களின் உடலில் கழிவை அகற்றுவதற்காக இயற்கையாக சுரக்கவேண்டிய வாயுவின் உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம்.

இந்நிலையில் பலருக்கு மற்றொரு சந்தேகம் இருக்கிறது. வெந்நீர் நல்லதா? அல்லது சாதாரணத் தண்ணீர் நல்லதா? அல்லது மினரல் வாட்டர் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் தண்ணீர் நல்லதா? என்பதே.

அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு, நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு கோப்பை வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும். உணவும் செரித்து விடும்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்றால், ஒரு கோப்பை வெந்நீரை உடனே குடியுங்கள். மலப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். ஆனால் இதனை பழக்கப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை, குறையவும் வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் சுடுதண்ணீர் பருகினால், இதயத்துக்கு மிகவும் நல்லது.

ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல், கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உள்ளது. வீட்டில் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, உங்கள் கைகள் சுத்தமானதாக, ஆரோக்கிய மாக மாறிவிடும்.

உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள். நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும். மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.

வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால், கால் பாதங்கள் வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது, பெரிய பிளாஸ்ரிக் வாளி யில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, கொஞ்ச நேரம் அதில் பாதத்தை வைத்து எடுங்கள். கால் வலி குறையும்.

அதே போல் மூக்கு அடைப்பு ஏற்பட்டால் அதற்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு குணமாகும்.

அதே போல் சந்தையில் கிடைக்கும் மினரல் வாட்டர் போத்தல்களை பயன்படுத்த வேண்டாம். இதில் சத்து ஏதும் இல்லை என்று நிரூபணமாகியிருக்கிறது.

அதற்கு பதிலாக நிலத்தடி நீரை நன்றாக கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலை யில் குடிப்பதே சிறந்தது.

அதே சமயத்தில் ஒரு சிலர் கோப்பையில் சிறிதளவு வெந்நீரை எடுத்துக்கொண்டு, அதில் தேவையாள அளவிற்கு சாதாரண தண்ணீரை கலந்து பருகுவர். இதனை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இப்படி கலப்பதால் தண்ணீரில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. மாறாக இத்தகைய தண்ணீரை அருந்தினால் நோய் தொற்றும் ஏற்படக்கூடும்.