2020 ஒலிம்பிக் போட்டிக்கான இலட்சணைகள் வெளியிடப்பட்டன!!

Olympic

2020 ஆம் ஆண்டு நடைப்பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி மற்றும் பராஒலிம்பிக் போட்டி என்பனவற்றின் இலச்சினைகளை மீண்டும் ஜப்பான் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை ஜப்பானில் 2020 நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இலச்சினை கடந்தவருடம் வெளியிடப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது.

கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலச்சினை பெல்ஜியத்தை சேர்ந்த ஓவியர் தம்மால் வரையப்பட்ட ஓவியத்தை ஒத்ததாக இருப்பதாக தெரிவித்த முறைப்பாட்டினை அடுத்தே அந்த இலச்சினை ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலில் கழிவுகளை வீசும் 20 முன்னிலை நாடுகளில் 5 ஆவது இடத்தில் இலங்கை!!

Carbage

கடலில் ப்ளாஸ்டிக் உட்பட்ட கழிவுகளை வீசும் 20 நாடுகளுள் இலங்கை ஐந்தாவது இடத்திலுள்ளது. இன்டர்நாஷனல் ப்ஸ்னஸ் ரைம்ஸ் சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வுகளின்படி இது தெரியவந்துள்ளது.

கடலில் கழிவுகளை வீசும் 192 நாடுகளில், அதிகளவில் கழிவுகளை கடலுக்குள் வீசும் 20 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. இந்த இருபது நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்திலுள்ளது.

கடலில் கழிவுகளை வீசும் நாடுகளில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் ஆகியன உள்ளன.

இந்த ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையில் ஒருவருடத்திற்கு சுமார் 1.59 மெக்ரிக்தொன் கழிவுகள் கடலுக்குள் இடப்படுகின்றன.

இங்கிலாந்தில் 171 ஓட்டங்கள் குவித்து அசத்திய குமார் சங்கக்கார!!

Sanga

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் சர்ரே அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று தொடங்கிய சோமர்செட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அசத்திய குமார் சங்கக்கார சதம் விளாசினார். அவர் 176 பந்துகளில் 24 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் உட்பட 171 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தவிர, தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 80 ஓட்டங்களையும், ஜாசன் ரோய் 85 ஓட்டங்களையும் குவித்தனர். இதனால் சர்ரே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு394 ஓட்டங்களை குவித்தது.

பெண்கள் மட்டுமே வணிகர்களாக கொண்ட 500 ஆண்டுகள் பழமையான சந்தை!!

 
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள பழமையான சந்தை ஒன்று தான் பெண்கள் மட்டுமே வணிகர்களாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

மணிப்பூரில் Ima Keithel என அறியப்படும் இந்த சந்தையானது 4000 பெண் வணிகர்களால் நிர்வகிக்கப்படுகிறது. 500 ஆண்டுகள் பழமையான இந்த சந்தையில் மக்களுக்கு தேவையான அனைத்துவகை பொருட்களும் ஒருங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Ima Keithel என்றாலே தாயாரின் சந்தை என்பது பொருள். பெண்கள் மட்டுமே வணிகர்களாக கொண்ட இந்த சந்தையானது ஆசியாவிலேயே பாரிய சந்தை என கூறப்படுகிறது. உலகிலேயே மிகபெரும் சந்தை இதுவாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இதன் தோற்றம் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 16 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர், நாட்டை காக்க ஆண்கள் அனைவரும் அணித்திரள வேண்டும் என அப்போதைய அரசர் அழைப்பு விடுத்ததால்,

வணிகம் விவசாயம் உள்ளிட்டவைகளை பெண்களே முன்னெடுத்து நிர்வகிக்கும் நிலை ஏற்பட்ட Lallup காலகட்டத்தில் இந்த சந்தை துவங்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

இந்த சந்தையின் சிறப்பு என்னவெனில் இங்கு வணிகம் செய்ய திருமணம் செய்துகொண்ட பெண்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

விவசாய குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக இதையே கடைபிடித்து வருகின்றனர் என்பதும் இதன் சிறப்பு.

ஆணாதிக்கம் சமையங்களில் அச்சுறுத்தலை அளித்தாலும் அதையும் துணிவுடன் கடந்து வந்து இதுநாள் வரை இந்த சந்தை துடிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

கடந்த ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த சத்தைப் பகுதியையும் பாதித்துள்ளது. அதில் இங்கிருந்த 9 பேர் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி சந்தையின் சிலபகுதிகள் இடிந்து தரைமட்டமானது.

இப்பகுதிக்கு சுற்றுலா வருவோரை பாரம்பரிய கைவினைப் பொருட்களையும் நவநாகரிக ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் அளித்து இங்குள்ள வணிகர்கள் வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 1 4 2

புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!!

Aravind Swamy

தளபதி படத்தில் அறிமுகமாகி, ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா உள்ளிட்ட படங்களில் நடித்த அரவிந்த்சாமி, பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

அதன்பின் கடல் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு மீளவும் வந்தார், தனிஒருவன் படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

இந்நிலையில், தற்போது தமிழிலும், இந்தியிலும் வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும், தொடர்ந்து வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அதில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியில் டியர் டாட் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு தற்போது இயக்குனராகும் ஆசை துளிர் விட்டிருக்கிறது. தான் இரண்டு கதைகள் உருவாக்கி வைத்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றை விரைவில் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் அல்லது இந்தி என ஏதாவது ஒரு மொழியில் படமாக்குவார் என்று தெரிய வருகிறது.

பர்கருக்குள் முழுக் கோழியின் தலை : அதிர்ச்சியில் ஆழ்ந்த இளைஞன்!!

Chicken

பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் ஓடர் செய்த பர்க்கர் ரொட்டிக்குள் ஒரு முழுக் கோழியின்தலை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள Montpellier நகரில் Quick என்ற துரித உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் வசித்து வரும் Mounir Bessaïh என்ற பெயருடைய இளைஞர் சில தினங்களுக்கு முன்னர் உணவு அருந்துவதற்காக அந்த உணவகத்திற்கு சென்றுள்ளார்.

கோழியின் இறக்கை சேர்க்கப்பட்ட பர்க்கரை அவர் ஓர்டர் செய்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தட்டில் பர்க்கர் வைக்கப்பட்டதும், அதனை ஆர்வமாக அவர் கடித்துள்ளார்.

ஆனால்,ஏதோ ஒன்று உள்ளே கடினமாக இருந்ததால் அதனை அவரால் கடிக்கமுடியவில்லை.

உள்ளே கோழியின் இறக்கையில் உள்ள எழும்பு தான் இருக்கிறது என நினைத்த அவர் மீண்டும் கடித்துள்ளார். ஆனால், அப்போதும் அவரால் கடிக்க முடியவில்லை.

சந்தேகம் அடைந்த அவர் பர்க்கரை பிரித்து பார்த்தபோது, உள்ளே ஒரு முழுக்கோழியின் தலைப்பகுதி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக அந்த கோழி தலையை தூக்கிகொண்டு உணவகத்தின் மேலாளரை சந்தித்துள்ளார்.

பர்க்கரில் தவறுதலாக கோழியின் தலை சேர்க்கப்பட்டுள்ளதற்கு மன்னிப்பு கோரிய அவர் அந்த இளைஞருக்கு இழப்பீடும் கொடுத்துள்ளார்.

அதாவது, இலவச உணவு, மில்க் ஷேக்மற்றும் தேனீர் கொடுத்து இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

நபரும் இலவச உணவை சாப்பிட்டுவிட்டு இதுகுறித்துஎந்த புகாரையும் அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால், கோழியின் தலையை ஏற்கனவே வீடியோ எடுத்திருந்த அவர் அதனை யூடியூப்பில் வெளியிட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியில் இணைத்த பவர் ஸ்டார் சீனிவாசன்!!

Power Star

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசன் பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனை முன்னிட்டு பிரபலமான நடிக, நடிகையர் பலரும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை நமீதா முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் தற்போது பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசனின் அரசியல் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”உடன்பிறப்புகளே!உங்களுக்காக நான். உங்களுக்காகவே நான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சீனிவாசன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்தவர்.

மேலும் பல்வேறு மோசடி வழக்குகளுக்காக சீனிவாசன் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இமான் அண்ணாச்சி, விந்தியா, செந்தில், நமீதா வரிசையில் பவர்ஸ்டாரும் பட்டையைக் கிளப்புவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு!!

Pig

வவுனியா பறநட்டாங்கல் வெள்ளையான்குளம் பகுதியில் பணிக்கர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரான வில்வராசா விஜியசீலன் 29வயது கூலி தொழிலாளியானவர் நேற்று இரவு இளைஞர்களுடன் குளத்தில் மீன் பிடிப்பதற்குச் சென்றுள்ளார்.

குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பதாக கூறி குறித்த குடும்பஸ்தரும் அவருடன் நண்பரும் சேர்ந்து சிறிது தூரத்திலிருக்கும் வயலிலுள்ள கிணற்றில் குடிநீர் எடுப்பதற்கு சென்றபோது அக் கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்சார கம்பியில் அகப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் சென்ற அவரின் நண்பரும் அவ்விடத்தை விட்டு அவரின் உறவினருக்குத் தகவல் கொடுப்பதற்குச் சென்றுள்ளார். எனினும் அதிகாலை ஒரு மணியானதில் வயலைச்சுற்றி பன்றிக்கு மின்சாரம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற காரணத்தில் வயலில் யாரும் செல்லவில்லை.

காலையில் ஓமந்தைப் பொலிசாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதுடன் திருட்டு மின்சாரம் பெறப்பட்டு பன்றிக்கு வைத்ததாக சந்தேகத்தில் ஒருவரை கைது செய்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரின் உதவியுடன் நகர திடீர் மரண விசாரணை அதிகாரி கே.அமிர்தலிங்கம் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் மரண விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன்,

மரண மருத்துவப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலத்தினை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபை குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட ஊழியர்களின் ஆவணங்கள்!!

 
வவுனியா நகரசபையில் இன்று காலை நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை நகரசபையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபையில் எற்கனவே ஏழு பேரின் ஆவணங்கள் ஊழியர்களின் கோவைகள் காணமற்போயுள்ளதாக அண்மையில் நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையிலே இன்று காலை வேலைக்குச் சென்ற ஊழியர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை அங்கிருக்கும் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதுடன் இது தொடர்பாக விசாரணை நடைபெறவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்கள் தினம் நெருங்கும் வேளையில் இவ்வாறு ஊழியர்களின் ஆவணங்கள் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது ஊழியர்களின் தினத்தினையே அவமதிக்கச் செய்துள்ளதாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைச் செயலாளர் தர்மேந்திரா அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரின் பதிலினைப் பெறமுடியவில்லை.

image-1b83c3a55fe906f00543292cf3bd0ee03e3958da89e2b3cf956efc5979a8bd12-V image-5ab1f3b2c883c501f2cf10fd04522e108c4495ed53d011ad0135c083ddd2d120-V image-33a952498c01ca491bc545aa5e3c90baa71ed2487d1fef45985f302e0007caa9-V

 

சிசுவை பிறசவித்து மலசல கூடத்தில் இட்டுக் கொன்ற பெண்!!

Baby

சிசுவொன்றைப் பிறசுவித்து அதனைக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிரிந்திவல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இரத்தப் போக்கு காரணமாக நேற்று வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் சிசுவொன்றை பிறசுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி, அவர் குறித்த சிசுவை துணியொன்றில் சுற்றி மலசலகூடத்தில் வீசியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா!!

 
வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா நேற்று (24.04.2016) வவுனியா வேப்பங்குளம் வங்கி வளாகத்தில் இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக கணக்காளர் திரு.ஜெயபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வங்கி தலைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார், வவுனியா மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.பால்ராஜ், வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளர் (வேப்பங்குளம்) செல்வி ப.ஜானகி, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

943748_1065780303483974_3649058873475490100_n 13043391_1065780536817284_2533258881020875991_n 13043615_1065779806817357_5497678020100400581_n 13062338_1065781046817233_430709574215179417_n 13062484_1065779996817338_3396620360020223265_n 13076857_1065779993484005_8539873144235109594_n 13076865_1065781333483871_5710638455522343524_n 13087467_1065780136817324_4277543657225847520_n 13087472_1065782510150420_2176554844734276466_n 13094296_1065780800150591_4353417096275495989_n 13096114_1065781176817220_9170998588744395919_n 13096182_1065780420150629_4046210988612867581_n 13100958_1065782326817105_4577413385921619151_n

வவுனியாவைவிட்டு பொருளாதார வர்த்தக மையம் மாற்றப்படாது : முதலமைச்சர் நம்பிக்கை!!

 
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார வர்த்தக மையம் சம்பந்தமாக த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை வவுனியாவில் நடைபெற்றது.

இத்திட்டத்திற்கான காணியைத் தெரிவு செய்வதற்கான சர்ச்சையை முதலமைச்சரை சந்திப்பதனூடாக தீர்ப்பதெனவும், வவுனியாவைவிட்டு இத் திட்டம் மாற்றப்படாதிருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுக்க கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து வவுனியா பொருளாதார வர்த்தக மையம் சம்பந்தப்பட்ட விடயமாக நேற்றைய முடிவின் பிரகாரம் கூட்டமைப்பு பிரதிநிதிகளும், வர்த்தகர்களும் வடக்கு முதலமைச்சர் மற்றும் வட மாகாண விவசாய அமைச்சர் ஆகியோரை இன்று(25.04.2016) கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

இப் பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியாவில் நிறுவுவதற்கும், வவுனியாவைவிட்டு மாற்றப்படாதிருப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதன்போது முதலமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா வரத்தகர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5WP_20160425_10_35_42_Pro WP_20160425_10_45_46_Pro WP_20160425_10_47_25_Pro WP_20160425_10_47_33_Pro WP_20160425_10_57_38_Pro

என் கண்ணன் வரும் நேரம்..

THoli

விண் மீன்கள் வழி பார்த்து
கடல் மீன்கள் வளம் பார்த்து
என் கண் மீன்கள் துயர் தீர
வரும் நேரம் தோழி என் கண்ணன் வரும் நேரம் தோழி.

ஊர் உறங்கும் சாமத்தில் என் கண் உறங்கா ஏக்கத்தில் உயிர் வாங்கிச் சென்றான் தோழி.
உயிர் மீட்டு வருகிறான் தோழி என் உயிர்
மீட்டு வருகிறான் தோழி.

கடற் காற்றில் உயிர் கொடுத்து– நான்
கட்டி வைச்ச காதல் கோட்டை
அலைகடல் அழித்திடுமா தோழி
அந்த ஆழ் கடலும் பெண்தானே தோழி.

மன அலையில் உயிர் மோதி
தூக்கம் கெட்டு துடித்தெழுந்த
நினைவலையை மீட்ட மச்சான் தோழி.
என் நினைவலையை மீட்ட மச்சான் தோழி.

ஆசையெல்லாம் பொத்தி வைச்சு
ஆழ்கடலில் அனுப்பி வைச்சு
நான் காத்திருக்கும் பொன் நேரம் தோழி
ஆராத்தி எடுத்திடவா தோழி.

விண் மீன்கள் வழி பார்த்து
கடல் மீன்கள் வளம் பார்த்து
என் கண் மீன்கள் துயர் தீர வரும் நேரம் தோழி.
என் கண்ணன் வரும் நேரம் தோழி.

-குமுதினி ரமணன்-

வவுனியாவில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி!!

 
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா பண்டாரிகுளம் பொலிஸ் பிரிவினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.

மேலும் இப்போட்டியானது நேற்று (24.04.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 6 அணிகள் கொண்ட போட்டியாக அமைந்தது.

இப்போட்டியில் சூப்பர் ஸ்டார் A அணி முதலாமிடத்தையும் சூப்பர் ஸ்டார் B அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. இப் போட்டித் தொடரின் சிறந்த ஆட்ட வீரராக ஜெ.றுசாந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

FullSizeRender IMG_9977 IMG_9978 IMG_9979 IMG_9980 IMG_9982

 

இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஆடு!!

homage_goat_002.w540

மனிதனை மனிதனே மதிக்காமல் போட்டி, பொறாமை குணத்தோடு இருக்கும் இந்த நவீன காலத்தில், ஆடு ஒன்று சாதி, மதம் வேறுபாடின்றி துக்க வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறது. அதோடு நில்லாமல், இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்வரை அந்த வாயில்லா ஜீவன் சுடுகாட்டிலேயே நின்று, காரியம் முடிந்தபிறகு கிராம மக்களோடு திரும்பி வருகிறது.

இந்த சம்பவம் இந்தியாவில் மைசூரு தாலுகா பெலவாடி கிராமத்தில் நடந்துள்ளது.

மைசூரு தாலுகா பெலவாடி கிராமத்தை சேர்ந்தவர் புட்டராமா. விவசாயியான இவர் தனது வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி அமைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விசேஷ குணம் உள்ளது. அதாவது, பெலவாடி கிராமத்தில் யார் இறந்தாலும், அதனை அறிந்து கொள்ளும் இந்த வாயில்லா ஜீவன், முதல் ஆளாக அங்கு ஆஜராகி விடுகிறது.
அங்கு செல்லும் இந்த ஆடு, தனது சைகைகள் மூலம் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறது. பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு சுடுகாடு செல்கிறது. அங்கு இறந்தவரின் உடலுக்கு காரியம் முடியும் வரை, அந்த ஆடு சுடுகாட்டிலேயே சுற்றி வருகிறது.

மேலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும்போது, தனது காலால் மண்ணை வாரி போட்டு அஞ்சலி செலுத்துகிறது. பின்னர் கிராம மக்களோடு, சேர்ந்து வீட்டுக்கு திரும்பி வருகிறது. இதுவரை இந்த வாயில்லா ஜீவன் பெலவாடி கிராமத்தில் 500–க்கும் மேற்பட்டோரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உள்ளது.

ஆட்டின் இந்த செயல் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அந்த ஆடு வலம் வருகிறது. மேலும் பெலவாடி கிராம மக்கள், கடவுளுக்கு இணையாக அந்த ஆட்டை வணங்கி வருகிறார்கள்.
அந்த ஊரில் ஏதாவது திருவிழா நடந்தால் இந்த ஆட்டையும் அலங்கரித்து அதற்கு படையலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் இந்த ஆட்டை அந்த பகுதி மக்கள் எந்த குறையும் இல்லாமல் தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பாவித்து கவனித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்த பக்கத்து கிராமத்தில் உள்ள மக்களும் அந்த ஆட்டை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் புட்டராமா கூறுகையில், நான் வளர்த்து வரும் மற்ற ஆடுகளை போலவே இந்த ஆட்டையும் வளர்த்து வந்தேன். ஆனால், அந்த ஒரு ஆட்டிற்கு மட்டும் ஏதோ ஒருவித சக்தி இருப்பதாக உணருகிறேன். மற்ற ஆடுகளில் இருந்து இது வேறுபட்டு காணப்படுகிறது. இந்த ஆடால் தான், நான் முன்னேற்றம் அடைந்ததாக கருதுகிறேன்.நான், கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக தான் இந்த ஆட்டை வளர்த்து வந்தேன். ஆனால் அதனிடம் விசேஷ சக்தி இருப்பதை உணர்ந்தவுடன், அந்த ஆட்டை பலியிடும் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ‘இது ஒரு அதிர்ஷ்டமான ஆடு‘ என்று மக்கள் கூறுகிறார்கள். இந்த ஆடால் நான் பெருமை அடைந்துள்ளேன் என்றார்.

 

பாத்ரூமில் மொபைல்போன் பயன்பாட்டால் காத்திருக்கும் ஆபத்துக்கள்!!

Mobile

பாத்ரூமில் மொபைல்போன்களை பயன்படுத்துவதால் உங்களுக்கு சில ஆபத்துக்கள் காத்ருக்கின்றன. அவைகளைப் பற்றிய தொகுப்பே இது.

முக்கியமான அழைப்புக்கள், வட்ஸ்அப் மெசேஜ், இமெயில், பேஸ்புக் நோட்டிபிக்கேஷன் என எதுவாக இருப்பினும் சரி பாத்ரூம்களில் மொபைல்போன் பயன்படுத்தும் பழக்கத்தை இன்றோடு முடிந்த வரை தவிர்க்கவேண்டும் இல்லையெனில், சில விளைவுகள் உங்களுக்காகவே காத்ருக்கின்றன.

பார்க்க மட்டும் தான் உங்கள் பாத்ரூம் மிகவும் சுத்தமாக இருக்கும், ஆனால் உண்மையில் உங்கள் பாத்ரூமில் கிருமிகள் மிக அதிகம், அதனுள் கொண்டு செல்லபடும் உங்கள் மொபைல்களில் கிருமிகள் மிக எளிதில் தொற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் வயிற்றுப்போக்கு தொடங்கி சிறுநீர் பாதை நோய் தொற்று வரையிலாக பல உடல்நல கோளாறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

அது மட்டுமின்றி எசரிக்கியா கோலை (Escherichia coli) மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் (Flu Viruses) பரவும் ஆபத்துகளும் உண்டு, எசரிக்கியா கோலை என்பது சிறுகுடலில் காணப்படும் ஒரு கிராம் நெகட்டிவ் கோல-வடிவமுள்ள பக்டீரியமாகும்.

சரி.. வேறு வழியே இன்றி பாத்ரூமில் மொபைல் பயன்படுத்திவிட்டேன் எப்பொழுது என்ன செய்யவேண்டும் என்று கேட்டால், பாத்ரூம் பயன்பாட்டிற்கு பின்பு உங்கள் கைகளை நன்கு கழுவிய பின்பு, ஒரு உலர்ந்த துணியை வைத்து உங்கள் மொபைலை நன்றாக துடைத்து சுத்தம் செய்திடுங்கள்.