உலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பின்படி, கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமையகங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சென் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை ஒட்டிய சொத்துக்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடம் சென் பிரான்சிஸ்கோவின் கடற்கரையில் 430,000 சதுரடியில் அமைந்துள்ளது. மிகவும் தாழ்வான பகுதியை தலைமையிடம் அமைக்க பேஸ்புக் நிறுவனம் தேர்ந்தெடுத்தது ஏன் என புரியவில்லை என கலிபோர்னியா வளர்ச்சி கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.6 அடி உயரத்திற்கு கடல்மட்டம் உயரக் கூடும் என்பதால் பேஸ்புக் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.
இதே போன்று கூகுள் நிறுவனத்தின் தலைமையிடம் மலைஅடிவாரத்திலும், சிஸ்கோ தலைமையகம் சான் ஜோஸ் பகுதியை ஒட்டிய கடல் பகுதியிலும் அமைந்துள்ளன. புவி வெப்பமயமாதலால் அன்டார்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால் கடல்மட்டமும் உயரத் துவங்கி உள்ளது.
இது 6 அடி வரை உயரும் போது இந்நிறுவனங்களின் தலைமையகங்கள் நீருக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூகுளும், பேஸ்புக்கும் தங்களின் தலைமையகங்களை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதே நல்லது.
ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவிக்காது. இடத்தை மாற்றுவது அவர்களின் ராடர்களை பாதிக்கும் என்பதால் சிக்கலான நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிறுவனங்கள் மட்டுமின்றி, கடுமையான புயலால் கடல் மட்டம் உயரும் போது கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுமார் 100 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தனுஷ் எல்லோரிடத்திலும் நட்பாக பழகக்கூடியவர். அவர் ஒருவரிடம் கோபப்படுகிறார் என்றால் நம்பவா முடிகின்றது, என நீங்கள் கேட்பது தெரிகின்றது.ஆனால், சில தினங்களுக்கு முன் ‘ஒரு புது இயக்குனர் படத்தில் நான் நடிக்கப்போகிறேன், அது யார் என்று கூறுங்கள்’ என தனுஷ் டுவிட்டரில் கேட்டார்.
பலரும் கார்த்திக் சுப்புராஜை நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இந்நிலையில் காமெடி நடிகர் கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் என கூற, சஸ்பென்ஸ் உடைந்து விட்டது, இது தனுஷிற்கு கோபத்தை ஏற்படுத்தியதாக பிரபல பத்திரிக்கையில் கூறியுள்ளனர்.
தெறி வெற்றியால் கொஞ்சம் சந்தோஷத்தில் உள்ளார் சமந்தா. ஏனெனில் தமிழில் இவர் நடித்து வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சினிமா நடிகைகள் என்றாலே மக்களுக்கு ஒரு தவறான கணிப்பு இருக்கின்றது,
ஹீரோயின்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்ற எண்ணம் உள்ளது.ஆம், அதிக பணம் கிடைக்கும் தான், ஆனால், கட்டு கட்டாக பணத்தை பீரோவில் சேர்த்து வைக்கும் ஆள் நான் இல்லை.என் தேவைகளுக்கு அதிகமான பணம் என்னிடம் உள்ளது, இனி நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்’ என கூறியுள்ளார்.
ஜேர்மனி நாட்டில் பயணிகள் ரயில் ஒன்றில் பெட்டியை தவற விட்ட வாலிபர் ஒருவர் அதனை மீட்பதற்காக எடுத்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேற்கு ஜேர்மனியில் உள்ள Hamm என்ற ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று புறப்பட தயாராக இருந்துள்ளது.ஆனால் ரயில் நின்றதுக்கு சற்று முன்னர் 20 வயதான வாலிபர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கியுள்ளார்.
அப்போது, பயணப்பெட்டிகளை ரயிலிலேயே தவற விட்டுவிட்டோமே என திடீரென ஞாபகம் வந்துள்ளது, ரயிலை நோக்கி வாலிபர் திரும்ப ஓடியபோது அந்த ரயிலின் கதவுகள் மூடப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றுக்கொண்டு இருந்துள்ளது.இருப்பினும் முயற்சியை கைவிடாத அந்த வாலிபர் ரயிலை பின் தொடர்ந்து ஓடிச்சென்று, ரயிலின் பின்புறத்தில் உள்ள ஒரு இரும்பு கம்பியின் மீது ஏறி நின்றுள்ளார். ரயில் வேகம் பிடித்துள்ளது. வாலிபர் அசராமல் இரும்பு கம்பியில் தொங்கியவாறு தனது பிடியை விடாமல் தொடர்ந்து சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, அருகில் உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பயணமாகியுள்ளது.அப்போது, அந்த ரயிலின் ஓட்டுனர் எதிரே உள்ள ரயிலின் பின்புறத்தில் ஒருவர் தொங்கிக்கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த ரயிலின் ஓட்டுனருக்கு தகவலை அனுப்பியுள்ளார்.
தகவலை பெற்ற அந்த ஓட்டுனர் உடனடியாக அவசரகால பிரேக்கை(Break) செயல்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார்.பொலிசாருக்கு தகவலுக்கு அனுப்பப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். ‘பயணப்பெட்டியை எடுக்க தான் இவ்வாறு ரயிலின் பின்புறத்தில் நின்றுக்கொண்டு சென்றதாக’ வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.எனினும், பிற பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்ற குற்றத்தின் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் 5 வயது சிறுவன் கொடூரமாக தரையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 5 வயது சிறுவனை மர்ம நபர் ஒருவர் தரையில் அடித்துக் கொலை செய்து உள்ளான்.
இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. சிறுவனை தூக்கி சென்று மர்ம நபர் தரையில் அடித்துக் கொன்று விட்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.சிறுவன் தலையில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கும் காட்சி பதபதைக்க செய்து உள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.
பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து, கொலையாளியை தேடிவருகின்றனர்.
விண்வெளியில் இருந்து பிரித்தானிய நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துதெரிவித்து மகாராணியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.பூமியில் இருந்து 386 கி.மீ தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது.
இந்த ஆய்வு மையத்தில் ரஷ்யாநாட்டை சேர்ந்த 3 வீரர்கள், அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் பிரித்தானிய நாட்டைசேர்ந்த ஒரு வீரர் என 6 வீரர்கள் தற்போது தங்கி ஆய்வுசெய்து வருகின்றனர்.பிரித்தானிய நாட்டு வரலாற்றிலேயே சர்வதேச ஆய்வு மையத்தில் டிம் பீக் என்ற அந்த விண்வெளி வீரர் தான் முதன் முதலாக அங்கு தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த ஏப்ரல் 21ம் திகதி தனது 90-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.விண்வெளியில்உள்ள டிம் பீக் தனதுநாட்டு மகாராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துசெய்தி அனுப்ப எண்ணி, ‘Happy Birthday Your Majesty’( மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள்மகாராணி) என ஒரு அட்டையில்எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்போது, ‘Science is Great Britain’(அறிவியல் என்றால் பிரித்தானியா தான்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட மேலாடையை அவர் அணிந்திருந்தார்.விண்வெளியில் இருந்து வந்த இந்த பிறந்தநாள் வாழ்த்து மகாராணிக்கு தெரிவிக்கப்பட்டதும், உற்சாகம் அடைந்த மகாராணி டி.பீக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.இது மட்டுமின்றி, டிம் பீக் முதன்முதலாக கடந்த டிசம்பர் 15ம் திகதி விண்வெளியில் இறங்கியபோது, ‘God save thequeen’(கடவுளே, மகாராணியை ஆரோக்கியமாக வைத்திரு’என்ற தகவலை எழுதி டுவிட்டரில்வெளியிட்டார்.
இந்த தகவலை பார்த்த மகாராணியும்‘பிரித்தானிய நாட்டின் சார்பாக விண்வெளியில் ஆய்வுமேற்கொண்டு வரும் டிம் பீக்நமது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் ஒரு உந்து கோலாகஇருக்கிறார்’என வாழ்த்து செய்தியை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையும் பா.ஜ., எம்.பி.,யுமான ஹேமமாலினி தனது நடன பள்ளிக்காக ரூ.70 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.1.75 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) வாங்கியதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் இந்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்காக ஹேமமாலினி முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அரசு சார்பில் ரூ.8.25 இலட்சம் அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
5 வயதுச் சிறுமிக்கு ஆபாசக் காணொளியைக் காண்பித்து துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்ட சந்தேக நபரை நேற்று பேசாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் மன்னார் பேசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சிறுமி பிரத்தியேக வகுப்பொன்றிற்காக சென்றிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதுதொடர்பில் சிறுமி பெற்றோரிடம் கூறியதை முன்னிட்டு சிறுமியின் பெற்றோர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததன் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார்.இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிவந்த பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரத்தின் மையத்தில் ‘வைரம்’ என்றழைக்கப்படும் நடுப்பகுதியில் இருந்து மண்ணொளியான் பாம்பைப்போல் கறுகறுவென வெளியாகும் அந்த தலையில்லா பாம்பை பார்த்தவுடன் அந்த மரத்தை வெட்டியவர் பயத்தில் கூச்சலிடும் வீடியோ யூடியூப்பில் வெளியாகி நான்கே தினங்களில் சுமார் 80 இலட்சம் மக்கள் பார்த்துள்ளனர்.
40 இலங்கை முஸ்லிம்கள் சிரிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக பிரபல பயங்கரவாத தடுப்பு குறித்த சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த முஸ்லிம்கள் சிரியா மற்றும் ஈராக்கிற்கு சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இவர்களில் சிலர் போரில் உயிரிழந்துள்ளதாக பேராசிரியர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கை முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் மீளவும் தாய் நாடு திரும்ப விரும்புகின்றனர்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து நாடு திரும்பும் நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அநுராதபுரம் ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 4ம் வருட மாணவனே நேற்று (24) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 12 மாணவர்களுடன் நிலாவெளி – புறாமலை பகுதியில், குறித்த மாணவன் குளிக்கச் சென்றதாகவும் இதன்போது நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நீரில் மூழ்கிய மாணவனை அப் பகுதியில் உள்ள சுழியோடிகள் காப்பாற்றி நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கதிரவெளி நாவலர் வீதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமான இளம் குடும்பஸ்தரான கிருபைரெட்ணம் நிரோஜன் (19) என்ற நபர் தாமரைக் காய் பறிப்பதற்காக குளத்தில் இறங்கியுள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் தான் வீட்டை விட்டு குறித்த குளத்தடியில் வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
வீட்டை விட்டு வந்த கணவரைக் காணவில்லை என தேடிய மனைவி நேற்று மாலை சுமார் ஐந்து மணியளவில் குளத்தடிப் பக்கமும் சென்று தேடிய நிலையில் கணவர் கிடைக்கவில்லை.பின்னர் இன்று காலை உறவினர்களுடன் குளத்தடியில் வந்து தேடிய போது அவர் அணிந்திருந்த செருப்பு மற்றும் பை என்பன கிடைந்துள்ளதை அவதானித்துள்ளனர்.அதனையடுத்து குளத்துக்குள் இறங்கி தேடிய போது உயிரிழந்த நிலையிலுள்ள சடலத்தை மீட்டு அடையாளம் கண்டதும், வாகரை பொலிசாருக்கு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த குளத்தில் அதிகமான தாமரைகள் இருந்துள்ள நிலையில் அதிலுள்ள காயை பறிப்பதற்காக குளத்தில் இறங்கும் போது குளத்தில் நீர் மற்றும் சேறு நிரம்பி இருந்தமையினால் காய் பறிக்கும் போது சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளையில் நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமாக நின்ற எட்டுப் பேர், மதுபோதையில் நின்ற அறுவர் உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சியில் தற்போது அதிக வெப்பநிலை 37 பாகை செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்பத்தின் வீரியத்தை வெளிப்படுத்தும் வகையில், அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர், பரந்தன் முல்லை ஏ35 வீதியில் முட்டையை ஊற்றி ஒம்லெட் போட்டுள்ளார்.
தீவிரமடையும் வெப்ப நிலை மக்கள் மத்தில் பல சஞ்சலத்தை ஏற்படுத்தியதுடன். சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
100 பாகை செல்சியஸ் ஒம்லெட் ஆகும் முட்டை சுமார் 5 நிமிடத்தில் ஏ35 தார் வீதியில், ஒம்லெட் ஆகினால் கிளிநொச்சி மக்களின் நிலைமை என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். போதை வஸ்து வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும் பொற்றோருக்கான அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தனிமனித நலனைவிட சமூக நலனே நீதிமன்றத்திறகு முக்கியம். எனவே, ரவுடித்தனத்திலும் தெரு சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்களுக்கு, அவர்கள் மாணவர்கள் என்ற ஈவிரக்கம் நீதிமன்றத்தினால் காட்டப்படமாட்டாது. எனவே, தெரு ரவுடிகளாகச் செயற்படும் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோர்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டும்.
சமூகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒழுக்கத்தில், அவர்கள் இறுக்கமான ஒழுக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.ஒழுக்கசீலர்களாக மாணவர்களை மாற்றுவதற்கு அச்சப்படும் ஆசிரியர்கள் அச்சமில்லாத இடங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்வது நல்லது. சமூகத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து எந்த அதிபரும் ஆசிரியரும் தவறக் கூடாது.
மண்ணின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள மாணவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்கி, தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. எனவே, ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு சிறை வாழ்க்கை நிச்சயம் என்பதை மறந்துவிடக் கூடாது.யாழ் மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களும் தெரு ரவுடித் தனமும் கொள்ளைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
யாழ் குடாநாட்டு நீதிமன்றங்கள் வாள்வெட்டு வழக்குகளில் சிறைத் தண்டனைத் தீர்ப்புக்கள் வழங்கி வருகின்றன. அதேநேரம் பாரிய குற்றச் செயல்களுக்கு பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்கள். யாழ் மேல் நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை என பாரிய குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கி வருகின்றது. போதை வஸ்து வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடந்த ஒரு வருட காலமாக, யாழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கவில்லை.
யாழ் குடாநாட்டு சமூகத்தையும் மாணவர்கள் இளைஞர்களையும் போதை வஸ்து என்ற கொடூரப் பிணியில் இருந்து காப்பாற்றுவதற்காக நீதிமன்றங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும். சில நபர்கள் தெரு ரவுடித் தன்தையும் வாள் வெட்டுக்களையும் கைவிடுவதாக இல்லை.
பெற்றோர் இவ்விடயத்தில் முதல் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றார்கள். தெரு ரவுடித் தனத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று பெறுமதி;மிக்க ஐபோன் என்ற கைத்தொலைபேசி ஒன்றும் பெற்றோர்களினால் வாங்கிக் கொடுக்கப்படுகின்றது. தனது மகன் வெளியில் சென்று என்ன வேலை செய்கின்றான் என்று தெரியாத வகையில் பெற்றோர் காணப்படுகின்றார்கள். இத்தகைய மாணவர்கள், இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை செய்கின்றது.
சமூகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடன் கடும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவிகளுக்குப் பின்னால் செல்லும் மாணவர்கள், இளைஞர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அடாவடித்தனம் செய்யும் தெரு ரவுடிகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாலை 6 மணியில் இருந்து 9 மணிவரையில் வீதிகளில் சட்டவிரோதமாகக் கூடும் இளைஞர்களைக் கைது செய்து அலைந்து திரிவோர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும்.
குறிப்பாக, பாசையூர் சென் அந்தனிஸ் விளையாட்டரங்கு, புதிய செம்மணி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, கோப்பாய் சந்தி, கொக்குவில் சந்தி, சுன்னாகம் சந்தி போன்ற இடங்களில் ரவுடிகள் அதிகமாகக் கூடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த இடங்களில் சந்தேகத்த்pற்கு இடமான முறையில் கூடுபவர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்க பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றச் செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்ற பிரதேசங்கள், சமூகக் குற்றச் செயல்களின் மையங்கள் என்ற சந்தேகத்திற்குரிய இடங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்துகளை நடத்தப்பட வேண்டும். கண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையில் பொலிஸ் வாகன ரோந்துகளை அதிகரிக்க வேண்டும். யாழ் இந்துக் கல்லூரி சுற்றடல் பகுதி முழு நாளும் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பிரபல கல்லூரிகளில் பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்கள் ரவுடித் தனத்தில் ஈடுபடக் கூடாது. வாள் வெட்டு சம்பவங்களில் சம்பந்தப்படக் கூடாது. வீதிகளில் மாணவிகளைப் பின்தொடரக் கூடாது. தமது எதிர்கால வாழ்க்கை நாசமாகும் வகையில் சட்டவிரோத போதை வஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற காரணத்திற்காகக் கைது செய்யப்படும் எந்த ஒரு மாணவனுக்கும் நீதிமன்றத்தினால் பரிவு இரக்கம் காட்டப்படமாட்டாது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்குக் கூட செல்ல முடியாத வகையில் சிறைத் தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்படும்.எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் தமது பிள்ளைகளை சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.