ரயிலில் பயணப்பெட்டியை தவற விட்ட வாலிபர்: பெட்டியை மீட்க எடுத்த விபரீத முடிவு!!

german-rail-overview-3

ஜேர்மனி நாட்டில் பயணிகள் ரயில் ஒன்றில் பெட்டியை தவற விட்ட வாலிபர் ஒருவர் அதனை மீட்பதற்காக எடுத்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேற்கு ஜேர்மனியில் உள்ள Hamm என்ற ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று புறப்பட தயாராக இருந்துள்ளது.ஆனால் ரயில் நின்றதுக்கு சற்று முன்னர் 20 வயதான வாலிபர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கியுள்ளார்.

அப்போது, பயணப்பெட்டிகளை ரயிலிலேயே தவற விட்டுவிட்டோமே என திடீரென ஞாபகம் வந்துள்ளது, ரயிலை நோக்கி வாலிபர் திரும்ப ஓடியபோது அந்த ரயிலின் கதவுகள் மூடப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றுக்கொண்டு இருந்துள்ளது.இருப்பினும் முயற்சியை கைவிடாத அந்த வாலிபர் ரயிலை பின் தொடர்ந்து ஓடிச்சென்று, ரயிலின் பின்புறத்தில் உள்ள ஒரு இரும்பு கம்பியின் மீது ஏறி நின்றுள்ளார். ரயில் வேகம் பிடித்துள்ளது. வாலிபர் அசராமல் இரும்பு கம்பியில் தொங்கியவாறு தனது பிடியை விடாமல் தொடர்ந்து சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு, அருகில் உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பயணமாகியுள்ளது.அப்போது, அந்த ரயிலின் ஓட்டுனர் எதிரே உள்ள ரயிலின் பின்புறத்தில் ஒருவர் தொங்கிக்கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த ரயிலின் ஓட்டுனருக்கு தகவலை அனுப்பியுள்ளார்.

தகவலை பெற்ற அந்த ஓட்டுனர் உடனடியாக அவசரகால பிரேக்கை(Break) செயல்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார்.பொலிசாருக்கு தகவலுக்கு அனுப்பப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். ‘பயணப்பெட்டியை எடுக்க தான் இவ்வாறு ரயிலின் பின்புறத்தில் நின்றுக்கொண்டு சென்றதாக’ வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.எனினும், பிற பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்ற குற்றத்தின் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ராஜஸ்தானில் கொடூரம்: 5 வயது சிறுவன் தரையில் அடித்து கொலை, சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!!

1 (67)

ராஜஸ்தானில் 5 வயது சிறுவன் கொடூரமாக தரையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 5 வயது சிறுவனை மர்ம நபர் ஒருவர் தரையில் அடித்துக் கொலை செய்து உள்ளான்.

இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. சிறுவனை தூக்கி சென்று மர்ம நபர் தரையில் அடித்துக் கொன்று விட்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.சிறுவன் தலையில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கும் காட்சி பதபதைக்க செய்து உள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.

பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து, கொலையாளியை தேடிவருகின்றனர்.

 

பிரித்தானிய மகாராணிக்கு விண்வெளியில் இருந்து வந்த பிறந்த நாள் வாழ்த்து!!

1 (46)

விண்வெளியில் இருந்து பிரித்தானிய நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துதெரிவித்து மகாராணியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.பூமியில் இருந்து 386 கி.மீ தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது.

இந்த ஆய்வு மையத்தில் ரஷ்யாநாட்டை சேர்ந்த 3 வீரர்கள், அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் பிரித்தானிய நாட்டைசேர்ந்த ஒரு வீரர் என 6 வீரர்கள் தற்போது தங்கி ஆய்வுசெய்து வருகின்றனர்.பிரித்தானிய நாட்டு வரலாற்றிலேயே சர்வதேச ஆய்வு மையத்தில் டிம் பீக் என்ற அந்த விண்வெளி வீரர் தான் முதன் முதலாக அங்கு தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த ஏப்ரல் 21ம் திகதி தனது 90-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.விண்வெளியில்உள்ள டிம் பீக் தனதுநாட்டு மகாராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துசெய்தி அனுப்ப எண்ணி, ‘Happy Birthday Your Majesty’( மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள்மகாராணி) என ஒரு அட்டையில்எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்போது, ‘Science is Great Britain’(அறிவியல் என்றால் பிரித்தானியா தான்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட மேலாடையை அவர் அணிந்திருந்தார்.விண்வெளியில் இருந்து வந்த இந்த பிறந்தநாள் வாழ்த்து மகாராணிக்கு தெரிவிக்கப்பட்டதும், உற்சாகம் அடைந்த மகாராணி டி.பீக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.இது மட்டுமின்றி, டிம் பீக் முதன்முதலாக கடந்த டிசம்பர் 15ம் திகதி விண்வெளியில் இறங்கியபோது, ‘God save thequeen’(கடவுளே, மகாராணியை ஆரோக்கியமாக வைத்திரு’என்ற தகவலை எழுதி டுவிட்டரில்வெளியிட்டார்.

இந்த தகவலை பார்த்த மகாராணியும்‘பிரித்தானிய நாட்டின் சார்பாக விண்வெளியில் ஆய்வுமேற்கொண்டு வரும் டிம் பீக்நமது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் ஒரு உந்து கோலாகஇருக்கிறார்’என வாழ்த்து செய்தியை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல நடிகை செய்த பாரிய நிதி மோசடி!!

914073-hemamalini___-1435902282

பிரபல நடிகையும் பா.ஜ., எம்.பி.,யுமான ஹேமமாலினி தனது நடன பள்ளிக்காக ரூ.70 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.1.75 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) வாங்கியதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் இந்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்காக ஹேமமாலினி முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அரசு சார்பில் ரூ.8.25 இலட்சம் அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

5 வயதுச் சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய நபர் கைது!!

Film

5 வயதுச் சிறுமிக்கு ஆபாசக் காணொளியைக் காண்பித்து துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்ட சந்தேக நபரை நேற்று பேசாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் மன்னார் பேசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சிறுமி பிரத்தியேக வகுப்பொன்றிற்காக சென்றிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் ஆபாச காணொளியை சிறுமியிடம் காண்பித்து துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற வேளை சிறுமி தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதுதொடர்பில் சிறுமி பெற்றோரிடம் கூறியதை முன்னிட்டு சிறுமியின் பெற்றோர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததன் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வெட்டிய மரத்தில் இருந்து உயிருடன் வெளிவந்த பாம்பு!!(வீடியோ)

Thum

அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார்.இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிவந்த பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரத்தின் மையத்தில் ‘வைரம்’ என்றழைக்கப்படும் நடுப்பகுதியில் இருந்து மண்ணொளியான் பாம்பைப்போல் கறுகறுவென வெளியாகும் அந்த தலையில்லா பாம்பை பார்த்தவுடன் அந்த மரத்தை வெட்டியவர் பயத்தில் கூச்சலிடும் வீடியோ யூடியூப்பில் வெளியாகி நான்கே தினங்களில் சுமார் 80 இலட்சம் மக்கள் பார்த்துள்ளனர்.

40 இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்!!

ISIS_TRAIL_OF_TERROR_16x9_992

40 இலங்கை முஸ்லிம்கள் சிரிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக பிரபல பயங்கரவாத தடுப்பு குறித்த சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த முஸ்லிம்கள் சிரியா மற்றும் ஈராக்கிற்கு சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இவர்களில் சிலர் போரில் உயிரிழந்துள்ளதாக பேராசிரியர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கை முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் மீளவும் தாய் நாடு திரும்ப விரும்புகின்றனர்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து நாடு திரும்பும் நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

 

கடலில் மூழ்கி பல்கலை மாணவன் பலி!!

1 (6)

திருகோணமலை நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அநுராதபுரம் ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 4ம் வருட மாணவனே நேற்று (24) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 12 மாணவர்களுடன் நிலாவெளி – புறாமலை பகுதியில், குறித்த மாணவன் குளிக்கச் சென்றதாகவும் இதன்போது நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நீரில் மூழ்கிய மாணவனை அப் பகுதியில் உள்ள சுழியோடிகள் காப்பாற்றி நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

திருமணம் முடித்து இரண்டு மாதமேயான இளம் குடும்பஸ்தர் பலியான பரிதாபம்!!

1 (5)

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கதிரவெளி நாவலர் வீதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமான இளம் குடும்பஸ்தரான கிருபைரெட்ணம் நிரோஜன் (19) என்ற நபர் தாமரைக் காய் பறிப்பதற்காக குளத்தில் இறங்கியுள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் தான் வீட்டை விட்டு குறித்த குளத்தடியில் வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

வீட்டை விட்டு வந்த கணவரைக் காணவில்லை என தேடிய மனைவி நேற்று மாலை சுமார் ஐந்து மணியளவில் குளத்தடிப் பக்கமும் சென்று தேடிய நிலையில் கணவர் கிடைக்கவில்லை.பின்னர் இன்று காலை உறவினர்களுடன் குளத்தடியில் வந்து தேடிய போது அவர் அணிந்திருந்த செருப்பு மற்றும் பை என்பன கிடைந்துள்ளதை அவதானித்துள்ளனர்.அதனையடுத்து குளத்துக்குள் இறங்கி தேடிய போது உயிரிழந்த நிலையிலுள்ள சடலத்தை மீட்டு அடையாளம் கண்டதும், வாகரை பொலிசாருக்கு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த குளத்தில் அதிகமான தாமரைகள் இருந்துள்ள நிலையில் அதிலுள்ள காயை பறிப்பதற்காக குளத்தில் இறங்கும் போது குளத்தில் நீர் மற்றும் சேறு நிரம்பி இருந்தமையினால் காய் பறிக்கும் போது சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இங்கிலாந்தில் அசத்தப் போகும் இலங்கை அணி இதுதான்!!

Eng

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் விபரம்:-

மத்யூஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (துணைத் தலைவர்), தசுன்சானக, தமிங்க பிரசாத், தனஞ்சய டி சில்வா, தில்ருவான் பெரேரா, திமுக் கருணாரட்ன, துஷ்மன்த சமீர, ஜெப்ரி, வெண்டர்சி, கசுன் ராஜித,கெளஷால் சில்வா, குஷால் மெண்டீஸ், மிலிந்த சிறிவர்த்தன, நிரோஷன் திக்வெல்ல, நுவான்பிரதீப், ரங்கன ஹேரத், சமிந்த எரங்க, சுரங்க லக்மல், தரங்க பரணவிதானா, விஷ்வ பிரனாந்து.

யாழில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 இளைஞர்கள் கைது!!

arrest (1)

இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளையில் நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமாக நின்ற எட்டுப் பேர், மதுபோதையில் நின்ற அறுவர் உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

கிளிநொச்சி மக்களை வதைக்கும் கடும் வெப்பம் : 5 நிமிடங்களில் வீதியில் தயாரான ஒம்லெட்!!

Omle

கிளிநொச்சியில் தற்போது அதிக வெப்பநிலை 37 பாகை செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்பத்தின் வீரியத்தை வெளிப்படுத்தும் வகையில், அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர், பரந்தன் முல்லை ஏ35 வீதியில் முட்டையை ஊற்றி ஒம்லெட் போட்டுள்ளார்.

தீவிரமடையும் வெப்ப நிலை மக்கள் மத்தில் பல சஞ்சலத்தை ஏற்படுத்தியதுடன். சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

100 பாகை செல்சியஸ் ஒம்லெட் ஆகும் முட்டை சுமார் 5 நிமிடத்தில் ஏ35 தார் வீதியில், ஒம்லெட் ஆகினால் கிளிநொச்சி மக்களின் நிலைமை என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் செல்ல நேரிடும் – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

Ilancheliyan1

யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். போதை வஸ்து வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும் பொற்றோருக்கான அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனிமனித நலனைவிட சமூக நலனே நீதிமன்றத்திறகு முக்கியம். எனவே, ரவுடித்தனத்திலும் தெரு சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்களுக்கு, அவர்கள் மாணவர்கள் என்ற ஈவிரக்கம் நீதிமன்றத்தினால் காட்டப்படமாட்டாது. எனவே, தெரு ரவுடிகளாகச் செயற்படும் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோர்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டும்.

சமூகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒழுக்கத்தில், அவர்கள் இறுக்கமான ஒழுக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.ஒழுக்கசீலர்களாக மாணவர்களை மாற்றுவதற்கு அச்சப்படும் ஆசிரியர்கள் அச்சமில்லாத இடங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்வது நல்லது. சமூகத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து எந்த அதிபரும் ஆசிரியரும் தவறக் கூடாது.

மண்ணின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள மாணவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்கி, தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. எனவே, ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு சிறை வாழ்க்கை நிச்சயம் என்பதை மறந்துவிடக் கூடாது.யாழ் மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களும் தெரு ரவுடித் தனமும் கொள்ளைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

யாழ் குடாநாட்டு நீதிமன்றங்கள் வாள்வெட்டு வழக்குகளில் சிறைத் தண்டனைத் தீர்ப்புக்கள் வழங்கி வருகின்றன. அதேநேரம் பாரிய குற்றச் செயல்களுக்கு பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்கள். யாழ் மேல் நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை என பாரிய குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கி வருகின்றது. போதை வஸ்து வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடந்த ஒரு வருட காலமாக, யாழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கவில்லை.

யாழ் குடாநாட்டு சமூகத்தையும் மாணவர்கள் இளைஞர்களையும் போதை வஸ்து என்ற கொடூரப் பிணியில் இருந்து காப்பாற்றுவதற்காக நீதிமன்றங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும். சில நபர்கள் தெரு ரவுடித் தன்தையும் வாள் வெட்டுக்களையும் கைவிடுவதாக இல்லை.

பெற்றோர் இவ்விடயத்தில் முதல் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றார்கள். தெரு ரவுடித் தனத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று பெறுமதி;மிக்க ஐபோன் என்ற கைத்தொலைபேசி ஒன்றும் பெற்றோர்களினால் வாங்கிக் கொடுக்கப்படுகின்றது. தனது மகன் வெளியில் சென்று என்ன வேலை செய்கின்றான் என்று தெரியாத வகையில் பெற்றோர் காணப்படுகின்றார்கள். இத்தகைய மாணவர்கள், இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை செய்கின்றது.

சமூகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடன் கடும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவிகளுக்குப் பின்னால் செல்லும் மாணவர்கள், இளைஞர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அடாவடித்தனம் செய்யும் தெரு ரவுடிகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாலை 6 மணியில் இருந்து 9 மணிவரையில் வீதிகளில் சட்டவிரோதமாகக் கூடும் இளைஞர்களைக் கைது செய்து அலைந்து திரிவோர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும்.

குறிப்பாக, பாசையூர் சென் அந்தனிஸ் விளையாட்டரங்கு, புதிய செம்மணி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, கோப்பாய் சந்தி, கொக்குவில் சந்தி, சுன்னாகம் சந்தி போன்ற இடங்களில் ரவுடிகள் அதிகமாகக் கூடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த இடங்களில் சந்தேகத்த்pற்கு இடமான முறையில் கூடுபவர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்க பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச் செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்ற பிரதேசங்கள், சமூகக் குற்றச் செயல்களின் மையங்கள் என்ற சந்தேகத்திற்குரிய இடங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்துகளை நடத்தப்பட வேண்டும். கண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையில் பொலிஸ் வாகன ரோந்துகளை அதிகரிக்க வேண்டும். யாழ் இந்துக் கல்லூரி சுற்றடல் பகுதி முழு நாளும் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பிரபல கல்லூரிகளில் பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்கள் ரவுடித் தனத்தில் ஈடுபடக் கூடாது. வாள் வெட்டு சம்பவங்களில் சம்பந்தப்படக் கூடாது. வீதிகளில் மாணவிகளைப் பின்தொடரக் கூடாது. தமது எதிர்கால வாழ்க்கை நாசமாகும் வகையில் சட்டவிரோத போதை வஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற காரணத்திற்காகக் கைது செய்யப்படும் எந்த ஒரு மாணவனுக்கும் நீதிமன்றத்தினால் பரிவு இரக்கம் காட்டப்படமாட்டாது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்குக் கூட செல்ல முடியாத வகையில் சிறைத் தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்படும்.எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் தமது பிள்ளைகளை சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

 

திறைசேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் இனி இல்லை – அரசு அதிரடி அறிவிப்பு!!

Treasury-Bills_lbo

எதிர்வரும் காலத்தில் நகர்புற குடியிருப்புக்கள் மற்றும் கிராம புற குடியிருப்புக்கள் உருவாக்கும் திட்டம் தொடர்பாக அரச திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரசு தீர்மானித்துள்ளது.மேலும் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகளினால் மட்டுமே நகர மற்றும் கிராமிய குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குடியிருப்புக்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டும் நிலங்கள் அரசின் மூலம் வழங்கப்படுவதுடன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் முதலீட்டாளர்கள் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்தானித்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் கொழும்பில் குறைந்த வருமானத்தில் வாழ்வோருக்கு 50,000 குடியிருப்புக்கள் உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார கண்காணிப்புக்குழுவின் மூலம் இச்செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது.

 

ஈழக் கொள்கைக்கு இடமில்லை – ஜனாதிபதி!!

1 (67)

நாட்டில் “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை. அது முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியைப் பலப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு இன்று தடைகள் போடப்ப்படுகின்றன. இதனை கண்டு நான் அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.அம்பலாங்கொடை தர்ம அசோக மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

எந்தவிதமான தடைகள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அனைத்து பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலமிக்க கட்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான எனது பயணம் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படும்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் பலாத்காரமாக பறித்தெடுக்கவில்லை. அனைவரது விருப்பத்துடனேயே தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டேன். எனவே கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு கட்சியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன்.

இதனைத் தடுப்பதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. ஆனால் சுதந்திரக் கட்சி மீது அன்பு கொண்ட நான் எந்தத் தடைகளையும் கண்டு அஞ்சமாட்டேன். அனைத்திற்கும் முகம் கொடுக்க தயாராகவே உள்ளேன்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் இன்றைய முக்கிய கடமை கட்சியை பலப்படுத்தி முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதே ஆகும். அதை விடுத்து கட்சியை பிளவுபடுத்தி அவசரமாக அரசாங்கமொன்றை அமைப்பது அல்ல.

இன்று நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவது புதிய அரசாங்கமல்ல. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இரண்டாம் இடத்தை வழங்கி நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். அத்தோடு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது அனைவரதும் கடப்பாடாகும்.

நல்லதொரு அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு முதலாவதாக நல்லதொரு கட்சி இருக்க வேண்டும். அதற்காக நல்லதொரு ஒழுக்கமாக கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும்.2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கும் அன்றைய உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தன.

நாட்டை பிரிக்கும் ஈழக் கொள்கைக்கு இடமில்லை. முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். அனைவரும் சகோதரத்துவத்தடன் வாழக்கூடிய நிலையான ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும். எமது மரபுரிமைகளை பாதுகாத்துக் கொண்டு எமது பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்துக் கொண்டு நாட்டின் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியை பறைசாற்றும் சுதந்திர மே தினத்திற்கு அனைவரும் காலி நகரில் அணிதிரள வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது பகிரங்க அழைப்பையும் விடுத்தார்.இந்நிகழ்வில் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால், அமைச்சர் சந்திர வீரக்கொடி, பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பியசேன கமகே, குணரத்ன வீரக்கோன், சஜிந்த வாஸ் குணவர்தன உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

தலையில் பந்துபட்டு கௌஷல் சில்வா காயம் : விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்!!

Kowsal

இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா பயிற்சியில் ஈடுபட்ட போது, தலையில் பந்து பட்டு காயமடைந்துள்ளார். இதனையடுத்து விஷேட விமானம் மூலம் பல்லேகல மைதானத்தில் இருந்து அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.

எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என இல்லை என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.