வவுனியாவில் வரலாறு காணாத வெயில் : இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான 38.9 செல்சியஸ் பதிவு!!

Vavuniya

கடந்த சில வாரங்களாக வவுனியாவில் கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகின்றது. மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதுடன் வெயிலின் அளவு கடந்தாண்டுகளை விட அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனால் குழந்தைகள் முதியோர் உட்பட தொழிலின் நிமித்தம் வெளியே செல்வோரும் வெயிலின் வெப்பத்தை தாங்கமுடியாமல் கடும் சிரமங்களுக்கும் முகம்கொடுக்கின்றனர்.

நேற்று இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக வவுனியாவில் 38.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதாகவும், அதற்கடுத்து பொலநறுவையில் 36.9 பாகையும், குருநாகல் மற்றும் இரத்தினபுரியில் 36.2 பாகையும், பொத்துவிலில் 35.2 பாகையும் பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பின் சராசரி வெப்பநிலை 33 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாகவும் இங்கு காற்றின் வேகம் மணிக்கு 16 கிலோமீற்றர்களாகக் குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும் கூறிய சரத் பிரேமலால்,

வசதி வாய்ப்புள்ள கொழும்பு வாசிகள் இந்தக் கோடை காலத்தை சமாளிப்பதற்காக நுவரெலியா போன்ற மலைப் பிரதேசங்களில் முற்றுகையிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமை, வானத்தில் மேகங்கள் குறைந்துள்ளமை, சூரியன் பூமிக்கு சரி நேராக சஞ்சரித்தல் போன்ற காரணங்களாலேயே இந்த அதி உஷ்ண காலநிலை தோன்றியிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் மக்கள் அதிகமாக நீர் பருகவேண்டும் எனவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீர் பருக வேண்டும் என்றும் காலநிலை மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வகுப்பறையில் தூங்கிய மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனையை கொஞ்சம் பாருங்கள்!!

Teacher

பெரும்பாலான வீடுகளில் காலை நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் சகஜம் தான். படுக்கையில் இருந்து குழந்தைகளை எழுப்ப, தாய் படும்பாடு சற்று சிரமம் என்றால் அது மிகையாகாது.

இரவு நீண்டநேரம் விழிப்பதால் காலையில் சீக்கிரமாக தூக்கத்தில் இருந்து எழ முடியாமல் தவித்து வருவார்கள் அதனால் பள்ளி அல்லது கல்லூரி வகுப்பறையில் சென்று ஆசிரியர் பாடம் எடுக்கும் பொழுது தூங்கி விடுவார்கள்.

அவ்வாறு தான் இங்கு ஒரு மாணவனும் செய்துள்ளான். ஆசிரியர் பாடம் எடுக்கும் நேரத்தில் இந்த மாணவன் சற்றும் கவனிக்காமல் அசந்து தூங்கும் பொழுது ஆசிரியர் அவருக்கு கொடுத்த அதிர்ச்சித் தண்டனையை பாருங்கள்.

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலை!!

temperature

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமை, வானத்தில் மேகங்கள் குறைந்துள்ளமை, சூரியன் பூமிக்கு சரி நேராக சஞ்சரித்தல் போன்ற காரணங்களாலேயே இந்த அதி உஷ்ண காலநிலை தோன்றியிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அதிகூடிய வெப்பநிலையான 38.9 பாகை (செல்சியஸ்) வவுனியாவிலும் அதற்கடுத்து பொலநறுவையில் 36.9 பாகையும், குருநாகல் மற்றும் இரத்தினபுரியில் 36.2 பாகையும், பொத்துவிலில் 35.2 பாகையும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பின் சராசரி வெப்பநிலை 33 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாகவும் இங்கு காற்றின் வேகம் மணிக்கு 16 கிலோமீற்றர்களாகக் குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும் கூறிய சரத் பிரேமலால்,

வசதி வாய்ப்புள்ள கொழும்பு வாசிகள் இந்தக் கோடை காலத்தை சமாளிப்பதற்காக நுவரெலியா போன்ற மலைப் பிரதேசங்களில் முற்றுகையிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்திலும் இரத்த பரிசோதனை செய்ய நடவடிக்கை!!

health-cube-medical-check-up-2

அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்திலும் இரத்த பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.புதுவருடத்தின் பின்னர் சுப நேரத்தில், சுகாதார அமைச்சில் கடமைகளை ஆரம்பித்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் இரத்த பரிசோதனை நடாத்தக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.ஆசிய பிராந்திய வலயத்தில் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் சுகாதாரத் துறை மேம்படுத்தப்படும்.நாட்டு மக்களுக்கு தரமான ஓர் மருத்துவ சேவையை வழங்க நடவடடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டில் தட்டுப்பாடு இன்றி அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் மருந்துப் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் சில அரசாங்க வைத்தியசாலைகளில் இரத்த பரிசோதனை செய்யக்கூடிய வசதிகள் கிடையாது.தனியார் ஆய்வு கூடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த அறிக்கைகளை அரசாங்க வைத்தியசாலைகளில் சமர்ப்பிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பெற்ற மகனை கொடூரமாக நடாத்திய தாய் தந்தையருக்கு சிறைத்தண்டனை!!

Hummer

பெற்ற மகனை மிகவும் கொடூரமாக நடாத்திய தாய் மற்றும் தந்தைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் அண்மையில் இந்த தண்டனையை விதித்துள்ளது.

14 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை தாயும் தந்தையும் மிகவும் கொடூரமான முறையில் தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெற்றோருக்கு இரண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை பத்தாண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன், 5000 ரூபா அபராதம் செலுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் ஜானகீ ஜயரட்ன இந்த தண்டனையை விதித்துள்ளார்.

கே.ஏ. சுதேஸ் லக்மால் என்ற தரம் 8ல் கல்வி கற்று வந்த மாணவரை பெற்றோர் கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடகமுவ உடவெல வீதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த பெற்றோர் இருவரும் கடுமையாக சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு உணவு சாப்பிட முன்னதாக சட்டவிரோத மதுபானம் வாங்கிக் கொண்டு வந்து தருமாறு தரம் 8ல் கல்வி கற்ற மாணவரை பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.

இதனை மறுத்த மாணவரின் கை கால்களை கட்டிய பெற்றோர் கம்பி ஒன்றை சூடாகி கால்களை சுட்டு, உப்பு தடவி வீட்டைச் சுற்றி இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் மாணவர் மடம்பெல்ல பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்று வந்துள்ளார், மறுநாள் குறித்த மாணவர் சம்பவத்தை பாடசாலையின் அருட்சகோதரி ஒருவரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிகளவு எண்ணெய் உணவுகளை உண்டவரா நீங்கள் : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

Sweet

தமிழ் சிங்கள புதுவருட காலத்தில் அதிகளவு எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுப் பண்டங்களை உட்கொண்டிருந்தால் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக புதுவருட பண்டிகைக் காலத்தில் அதிகளவு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு திண் பண்டங்களான பலகாரங்கள், கொகீஸ் போன்றவற்றை மக்கள் உட்கொள்கின்றனர்.

இவ்வாறு அதிகளவில் எண்ணெய் மற்றும் இனிப்பு சுவை கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டவர்கள் அதற்கு பரிகாரமாக உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும் அல்லது உடலை வருத்தி வேலை செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

பண்டிகைக் காலத்தில் அதிகளவில் இனிப்பு சுவை அல்லது எண்ணெய் உணவுகளை உட்கொண்டவர்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நாள் ஒன்றுக்கு உடலை வருத்தி வேலை செய்யவோ அல்லது உடற் பயிற்சி செய்யவோ வேண்டுமென இலங்கையின் பிரபல்யமான போசாக்கு நிபுணத்துவ மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ கொழும்பு ஊடகமொன்றின் ஊடாக கோரியுள்ளார்.

இனிப்பு சுவை மற்றும் எண்ணெய் தன்மையுடன் கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பலர் அதிகளவு உடலை வருத்தி வேலை செய்வதோ அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுவதோ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான உணவுப் பொருட்களை உட்கொண்டு எந்த வேலையயும் செய்யாமல் இருக்கக் கூடாது எனவும், உடலை வருத்தி வேலை செய்யாவிட்டால் நீரிழிவு போன்ற நோய்கள் தாக்கக் கூடும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளின் எந்தவொரு நேரத்திலேனும் குறைந்த பட்சம் அரை மணித்தியாலம் உடற்பயிற்சி அல்லது உடலை வருத்தி வேலை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்று மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள்!!

69416_resized_aids_ribbon

கடந்த 3 மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.மேலும் ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 100க்கு 70 வீதமானோர் ஆண்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் 25 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

 

500-வது கோல் அடித்து சாதனை படைத்த மெஸ்சி!!

Messi

ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்சிக்கு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் மெஸ்சி 63வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதன் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் 500 கோல்களை அவர் எட்டியிருக்கிறார். 28 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 450 கோல்களும், அர்ஜென்டினாவுக்காக 50 கோல்களும் அடித்திருக்கிறார். மெஸ்சி இடது காலால் 406 கோல்களும், வலது காலால் 71 கோல்களும் உதைத்திருக்கிறார். 21 கோலை தலையால் முட்டித் தள்ளியிருக்கிறார். இதர வகையில் கிடைத்த கோல் எண்ணிக்கை 2.

இந்த தோல்வியால் மெஸ்சியின் பார்சிலோனா அணி மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பார்சிலோனா அணி தொடர்ந்து சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். கடந்த 13 ஆண்டுகளில் பார்சிலோனா தொடர்ந்து 3 தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும். புள்ளி பட்டியலில் பார்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் தலா 76 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றன.

45 நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறைவாகியிருந்த தந்தை கைது!!

Baby

பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 14ம் திகதி பிறந்த 45 நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறைவாகியிருந்த தந்தையை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த 14ம் திகதி மது போதையில் வந்து தகாத வார்த்தைகளால் பேசி தன்னையும் தனது சிசுவையும் கடுமையாக தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்ததாக சந்தேகநபரின் மனைவி கடந்த 15ம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

தாக்கப்பட்ட சிசுவும் தாயும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (19) செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

24ம் திகதி முதல் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!

University-Grants-Commissio

புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்த விண்ணப்பங்களை இணையம் மற்றும் எழுத்து மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க மாணவர்களுக்கு முடியும். கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதேவேளை, புதிய கல்வி ஆண்டு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்த அனுமதிப் பத்திர கையேடு எதிர்வரும் 22ம் திகதி வௌியிடப்படவுள்ளது.

இது தொடர்பில் நாளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கியில் கொள்ளை : 8 இலங்கையர்கள் உட்பட 20 பேருக்கு சிக்கல்!!

Robbery

பங்களாதேஷ் நாட்டின் மத்திய வங்கியில் கொள்ளையிட்டதாக கூறப்படும் எட்டு இலங்கையர்கள் உட்பட 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்தநாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வங்கியின் கணனி கட்டமைப்பில் இரகசியமாக ஊடுருவி பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பணத்தை பிறிதொரு வங்கிக் கணக்குக்கு மாற்றிய சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதி நடைபெற்றது.

குறித்த பணம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையிலுள்ள சில கணக்குகளுக்கே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட, விசாரணைகளின் படி இந்த சம்பவம் தொடர்பில் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் நேற்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் 12 பேர் பிலிப்பையின்ஸ் நாட்டினர் எனவும் எட்டுப் பேர் இலங்கையர் எனவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எது எவ்வாறு இருப்பினும் சந்தேகநபர்கள் இந்தக் குற்றத்தை எவ்வாறு இழைத்தனர் என்பது குறித்து தகவல் வௌியிடப்படவில்லை.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு அனுப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொள்ளை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிப்பது எப்படி?

Sun

இந்த வருடத்தின் அதீத வெயில் தாக்கத்தால் வீட்டின் மொட்டை மாடியில் ஒம்லட் போடும் அளவிற்கு அனல் பறக்கிறது. இதனால் உடல் சூடு அதிகரிக்கிறது, உடலில் நீர்வறட்சி உண்டாகிறது. எனவே, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்க வேண்டியது தலையாய கடமையாகிவிட்டது.

இல்லையேல், மயக்கம், நீர் வறட்சியின் காரணமாக உண்டாகும் உடல் உறுப்புகளின் செயற்திறன் குறைபாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்…

உடற்பயிற்சி

அதிகப்படியான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது உடலில் நீர்வறட்சி உண்டாக்க கூடும். முடிந்த வரை விளையாட்டின் மூலம் பயிற்சி செய்யுங்கள். இதனால், உடலில் வியர்வை நன்கு சுரந்து உடலை சுறுசுறுப்பாக உணர உதவும்.

நீராகாரம்

கடினமான உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகள், பிட்சா, பர்கர் போன்ற உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்து. நீராகாரம் நிறைய உட்கொள்ளுங்கள். பழைய சோறு, இளநீர், பதநீர் போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள்.

குளிர்பானங்கள்

வெப்பம் அதிகமாக இருக்கிறது, தாகமாக இருக்கிறது என கூல் ட்ரிங்க்ஸ் பருக வேண்டாம். உண்மையில் கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடல் வெப்பம் அதிகரிக்க தான் செய்யும். எனவே, இயற்கை பானங்கள், பழங்களை தேர்வு செய்து உண்ணுங்கள்.

பானை நீர்

ஃப்ரிட்ஜில் வைத்து தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, பானையில் நீர் சேமித்து குடித்து வாருங்கள். இது உடலுக்கு நல்லது, உடல் சூட்டை தணிக்கும். மேல் கூறியவாறு கூலான நீர், பானங்கள் குடிப்பதால் உண்டாகும் உடல் சூடு அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

பருத்தி உடைகள்

சுட்டெரிக்கும் வெயிலில் ஃபேஷன் என்ற பெயரில் ஜீன்ஸ், பொலிஸ்டர் போன்ற துணிகளால் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டாம். பருத்தி உடைகளை தேர்வு செய்யுங்கள்.

மெத்தை

மெத்தை பயன்படுத்துவதை தவிர்த்து, வெறும் தரை அல்லது லேசான போர்வை விரித்து உறங்குங்கள். இதனால், இரவு அதிகப்படியாக உடல் வெப்பம் அதிகரிக்காமல் இருக்கவும், நல்ல உறக்கம் பெறவும் முடியும்.

கயிற்றுக்கட்டில்

கட்டிலில் படுத்தால் உறக்கம் வரும் என்பவர்கள் கயிற்றுக்கட்டில் பயன்படுத்தலாம். இது, உடலுக்கும் இலகுவாக இருக்கும், உடல் சூட்டையும் அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

காலை, மாலை

காலை மட்டுமின்றி, மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் இன்னொரு முறை குளியுங்கள். இதனால், வேர்வை காரணமாக உண்டாகும் நச்சு தொற்று, உடல் சூட்டை போக்க முடியும். மற்றும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை : விராட் கோஹ்லி!!

Virat

தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது ரோயல் சலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பேசிய ரோயல் சாலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி, தோல்வியை ஒப்புகொள்ள கடினமாக உள்ளது.

கிறிஸ் கெயிலின் பார்மை நினைத்து கவலைப்படவில்லை. அவர் சரியான நேரத்தில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார்.

நாங்கள் வட்சன் விக்கெட்டை விரைவாக இழந்துவிட்டோம். மேலும், 10 முதல் 15 ஓட்டங்கள் நாங்கள் குறைவாக எடுத்துள்ளோம்.

டெல்லி அணியினர் நன்றாக துடுப்பாடினர். அதிலும் குறிப்பாக டி- கொக் சிறப்பாக விளையாடி, ஆட்டத்தை அவர்கள் பக்கம் இழுத்து சென்றுவிட்டார். மேலும் கருணும் சிறப்பாக விளையாடினார்.

நாங்கள் 200 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியதால் எங்களால் ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.

ஷமி, மோரிஸ், பிரத்வைட் என அனைவரும் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தினர் என பேசியுள்ளார்.

15 கோடி சொகுசுக் காரைப் புதைத்த கோடீஸ்வரர் : காரணம் என்ன?

Car

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான 10 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று.

இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் 10 லட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன திகதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர்.

பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர். பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது. சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர்.

விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர்.

அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார். நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா, உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்தியாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார்.

என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் 10 லட்சம் யூஎஸ் டொலர்தான். இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள். இதயம், கண், நுரையீரல், கிட்னி, தோல் என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,

இலட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள், அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம். பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.

மாணவியின் உயிரைப் பறித்த கேக்!!

Cake

சித்திரை புத்தாண்டு பண்டிகை காலத்தில் அனுராதபுரத்தில் வீடொன்றில் இடம் பெற்ற விருந்துபசாரத்தின் போது கேக் சாப்பிட்ட பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தது அனுராதபுரம் மத்திய கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவி கேக் சாப்பிட்ட பின்னர் சுயநினைவிழந்ததையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

எமது இனத்தின் அடையாளம் கலாச்சாரம் : கலாச்சார நிகழ்ச்சியில் வன்னி பா.உ சி.சிவமோகன்!!

 
வன்னிகுறாஸ் கலாச்சாரப் பேரவையின் ஒழுங்குபடுத்தலுடன் நாள் முழுவதும் காத்தவராயன் சிந்துநடை கூத்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் துணுக்காய் தமிழ் தாய் கலாமன்றம், பெரிய புளியங்குளம் சுந்தராலய கலாமன்றம், கூழாமுறிப்பு அண்ணா கலாமன்றம், முள்ளியவளை பொன்நகர் பாரதி கலாமன்றம், முள்ளியவளை பொன்நகர் இளந்தளிர் கலாமன்றம், புதுக்குடியிருப்பு சிறி முத்துமாரி கலாமன்றம் மற்றும் வேனாவில் கலைமகள் கலாமன்றம் ஆகிய 07 மன்றங்கள் கலந்து கொண்டன.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவுடனும், வன்னிகுறாஸ் கலாச்சாரப் பேரவையின் ஒழுங்குபடுத்தலுடனும் நடைபெற்றது.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த டாக்டர் சிவமோகன்..

உலகின் ஒவ்வொரு இனமும் தனது அடையாளத்தை நிலை நிறுத்த பாவிக்கும் ஆயுதம் இனத்தின் கலாச்சாரமாகும். தமிழ் நாட்டு மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் பாலமாக அமைவது கலாச்சாரமே. பணத்தால் என்றும் விலைபேச முடியாதது எமது கலாச்சாரம்.

முள்ளிவாய்கால் முடிவின் பின் தமிழரின் அனைத்தும் அழிந்துவிட்டது என எக்காளம் இட்டது சிங்கள அரசு. இன்று எமது கையில் எஞ்சியிருப்பது எமது கல்வியறிவும் கலாச்சாரமுமே. எஞ்சியிருப்பதனை வைத்துக்கொண்டு மீண்டெழுவான் தமிழன் என்பதனை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது இந்த நிகழ்வு.
தொடர்ந்து பேசிய அவர்..

அதிகார துஸ்பிரயோகம், பணமோசடிகள் செய்தவர்கள் பணமோசடிக்காரர்கள்தான். ஆட்கடத்தல் கொலைகளை தங்கள் சுயநலத்துக்காக செய்தவர்கள் சமூக விரோதிகள்தான். 2009 க்கு பின்னான காலத்தில் தமிழ் தேசியத்தினுள் உள்வாங்கப்பட்ட பின் தங்கள் பழைய வரலாறுகளை மறந்தவர்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தப் பார்க்கிறார்கள். எமது மக்களின் மறதி நோய் அவர்களின் ஏமாற்று வேலைகளுக்கு சந்தர்ப்பமாக அமைகிறது. வாய் கூசாத அறிக்கைகள் மூலம் தங்களை தேசியவாதிகளாக காட்ட முனைகின்றனர் என்றார்.

இந்த வன்னி மண்ணை ஒரு கலாச்சார பூமியாக்குவது, அரிய வகை மரங்கள் நிறைந்த சோலையாக்குவது மட்டுமே என் இலட்சியம். அதை செய்து முடிக்க எனக்கு அரசியல் தேவையில்லை. என் வாழ் நாளில் வன்னி மண்ணில் எதை சாதிக்கலாம் என்பது மட்டுமே என் இலட்சியமாக இருக்கும்,

மருத்துவம்தான் எனது அரசியல் ஆரம்பம். நோயாளிகளாக என்னிடம் வந்த மக்களே எனது ஆதரவாளர்கள். அது முல்லை மாவட்டத்துடன் நின்று விடாமல் மன்னார், வவுனியா வரை வியாபித்திருக்கின்றது. அந்த மருத்துவத்தின் புதிய வன்னிநில பரிமாணம் உங்கள் கண்ணின் முன் எதிர்காலத்தில் பரிணமிக்கும் என்றார்.

DSC_1910 DSC_1924 DSC_1925 DSC_1950 DSC_1952 DSC_1983 DSC_1989 DSC_1992 DSC_2030 DSC_2042