காதலால் வந்த வினை : தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலையில் முடிந்தது!!

Crime

பெண் ஒருவர் மீதான காதலால் இரு இளைஞர்களுக்கிடையே கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து 22 வயது இளைஞர் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12.04) இரவு இடம்பெற்றுள்ளது. இதில் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமான் லெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை காதல் செய்துவரும் இருவருக்கு இடையில் கையடக்க தொலைபேசியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான நேற்று இரவு 9.00 மணியளவில் நண்பர்கள் இருவருடன், உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று அவரின் நெஞ்சுப்பகுதியல் ஸ்கூட்டுறைவரால் குத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து சந்தேகநபர்கள் மூவரும் தப்பி ஓடியுள்ளதுடன், படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

துர்முகி புதுவருட சுப நேரங்கள்!!

NEW

பிறகின்ற துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என வவுனியா நெற் இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று 13ம் திகதி இரவு 6.36 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய காலமாகும்.

சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

திருக்கணித பஞ்சாங்கமோ இன்று 13ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு பிறப்பதாக கணித்துள்ளது. அன்று பிற்பகல் 3.48 மணி தொடக்கம் இரவு 11.48 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசுக்கு வேப்பம் இலையும் காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ்- வருஷமாகும்.

இருபது ஆண்டு யுத்தத்தின் பின் மீள் எழுச்சிபெறும் பணிக்கர் புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயம்!!

 
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சுமார் இரண்டு தசாப்தத்திக்கு மேலாக இடம்பெயர்ந்து மீண்டும் மீள் குடியமர்த்தப்பட்ட நிலையில் பழமை வாய்ந்த மிகவும் சக்திவாய்ந்த பணிக்கர்புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 08.04.2016 அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமாணசபையின் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜா, கலாசார உத்தியோகத்தர், வவுனியா சிவன்கோவில் பரிபாலன சபை, பறநாட்டாங்கல் தேவாலயத்தின் பங்குத்தந்தை மற்றும் கிராமசேவகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

01 (47) 01 (51) 01 (52) 01 (60) 01 (74)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம்!!

 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று (12.04.2016) நண்பகல் 2 மணியளவில் நடந்த முச்சரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-கோபி-

12980860_568617213297703_1425301704_o 12986415_568617229964368_1408157260_o 12986756_568617283297696_4877752_o 12986905_568617269964364_872092290_o 12999487_568617299964361_1072366335_o 13016445_568617253297699_270214584_o

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் உதவி!! (படங்கள்)

 
சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 08.04.2016 அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு தேவையான சத்திர சிகிச்சைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) கலந்து கொண்டு சத்திர சிகிச்சைப் பொருட்களை முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கையளித்தார்.

இன் நிகழ்வில் வைத்திய கலாநிதி திரு எஸ்.மணிவண்ணன், வன்னி மேம்பாட்டு பேரவைத் தலைவர் தவராசா, தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் எஸ்.கஜூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

001 006 007 008

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் உதவி!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா தெற்கு வலய பூவரசங்குளம் மகாவித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா தெற்கு வலய பூவரசங்குளம் மகாவித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்தியக்கருவி வழங்கி வைக்கப்பட்டது.

01 02 03 IMG_1283 IMG_1538

வவுனியா தாலிக்குளம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய ராம் பவுண்டேசன்!!

 
பூவரசங்குளம் தாலிக்குளத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 54 மாணவர்களுக்கு தாலிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு, தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கற்றல் உபகரணங்கள் கனடா வாழ் ராம் சிவாவின் ராம் பவுண்டேசன் மூலம் தாலிக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் வைத்து கடந்த 10.04.2016 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

தாலிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ப.அந்தோனிப்பிள்ளை (பாலன்)தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.அபயசிங்க, சிவில் பாதுகாப்புக் குழுச் செயலாளர் இ.புனிதவதி, உறுப்பினர்கள் சண்முகராஜா சி.மகேந்திரன், கவிந்தன், மு.நாகலிங்கம், ராமலிங்கம், கபிலேஸ்வரி, தாலிக்குளம் பிரிவு பொலிஸ் அதிகாரி ஆர்.குமாரசிறி உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSCN1813 DSCN1814 DSCN1815 DSCN1817 DSCN1821 DSCN1824 DSCN1835 DSCN1836 DSCN1841 DSCN1842 DSCN1845 DSCN1847 DSCN1850 DSCN1852 DSCN1854 DSCN1863

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலைக்கு ம.தியாகராசா உதவி!!

 
வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலைக்கு உதவி வழங்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலைக்குத் தேவையான அலுவலகத் தளபாடம் வழங்கி வைக்கப்பட்டது.

01 IMG_2155 IMG_2157

வவுனியா தாருல் உலூம் முஸ்லிம் வித்தயாலயத்தில் பாராட்டு விழா!!

 
வவுனியா சின்னச்சிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் வித்தயாலயத்தின் 2015 க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியெய்து பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று (12.04.2016) பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பரிசில்களை வழங்கி வைத்ததுடன் பாடசாலை சமூகத்தினால் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தனர்.

பிரதம விருந்தினர் உரையில் தன்னாலான அனைத்து உதவிகளையும் பாடசாலைக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.

குறித்த நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர், செட்டிகுளம் கோட்டக் கல்வி அதிகாரி ஜேசுதாசன், செட்டிகுளம் மக்கள் வங்கி முகாமையாளர் அரூஸ், ஆண்டியா மு.வி அதிபர் ஜின்னாஹ் உட்பட உயர் அதிகாரிகள், பெற்றோர்கள் மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களை விட தற்பொழுது இந்த பாடசாலை மாணவர்கள் சகல துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 12512735_551522445022539_2265116794896684952_n 12938339_551522178355899_4566465150904522665_n 12957219_551440871697363_367238318_n (1) 12963452_551522271689223_706415441716678781_n (1) 12963514_551522308355886_5707905047448340157_n 12968727_551439141697536_1834225247_n 12986959_551522345022549_5194347717824704280_n

குசல் ஜனித் பெரேரா தொடர்பான செய்தி பொய் : ஐ.சீ.சி!!

Kushal

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பவீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 வருடங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளிவந்த செய்தியை ஐ.சி.சி மறுத்துள்ளது.

இந்த விடயத்தை ஐ.சி.சி நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஸாமி உல் உசன் பீ.பீ.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், குசலின் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலயத்தின் மாம்பழத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று 11.04.2016  திங்கட்கிழமை  மாம்பழ  திருவிழா  இடம்பெற்றது . மேற்படி  உற்சவத்தில்  அந்தணர் ஒருவர்   முருகபெருமானுக்கும்  விநாயகருக்குமிடையில்    நாரதராக   வேடமணிந்து     மாம்பழ உற்சவத்தை    நிகழ்த்தியிருந்தார் .

மேற்படி ஆலயத்தின்  வருடாந்த தேர்திருவிழா  சித்திரை வருடப்பிறப்பான  நாளைய தினம் இடம்பெறும் .

 

12938280_1109518379091205_8719815436119292579_n 12963365_547854815388342_4873616353913202973_n (1) 12963365_547854815388342_4873616353913202973_n 12985348_1109518302424546_689387375301298147_n 12993336_1109518219091221_8983294932710207013_n 13006481_547854948721662_7392142464235813797_n 13007124_1109518239091219_3698499598610576480_n

தெறி ரிலிஸ் தள்ளிப்போகிறது?

THERI-NEW-POSTER-600X857

தெறி படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் ரிலிஸ் ஆகவிருந்தது.இந்நிலையில் ஒரு முன்னணி தெலுங்கு இணையத்தளத்தில் கூறுகையில், தெறி படத்தின் தெலுங்கு பதிப்பில் சில தொழில் நுட்ப பிரச்சனை இருக்கின்றதாம்.

இதனால், படம் தெலுங்கில் மட்டும் ஒரு நாள் தள்ளி ஏப்ரல் 15ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

 

ரஜினியை தர குறைவாக பேசிய இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்!!

rajini-shankar(1)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரை பற்றி ஏதும் தவறாக கூறினால் ரசிகர்கள் ஒரு போதும் சும்ம விடமாட்டார்கள்.எப்போதும் டுவிட்டரில் யாரையாவது வம்புக்கு இழுக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, சில நாட்களாகவே ஆந்திராவின் முன்னணி நடிகர் பவன் கல்யானை சீண்டிப்பார்த்தார்.

ஒரு கட்டத்தில் இவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் இவரை கடுமையான வார்த்தைகளால் திட்ட, பவனை புகழ்வதாக நினைத்துக்கொண்டு ரஜினி மற்றும் சிரஞ்சீவியை தர குறைவாக பேசியுள்ளார்.

 

விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை – கொலையாளி கைது!!

160411181544-new-orleans-saints-football-player-shot-killed-casarez-dnt-lead-00015324-large-169

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்துக்கு உட்பட்ட நியூ ஆர்லியான்ஸ் நகரைச் சேர்ந்தவர் வில் ஸ்மித் (வயது 34). பிரபல கால்பந்து வீரரான இவர், நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் கால்பந்து அணியில் முன்னணி வீரராக திகழ்ந்தார்.இந்த அணி கடந்த 2010-ம் ஆண்டு தேசிய கால்பந்து லீக்கில் சாம்பியன் பட்டத்தை பெற்றது. பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு இவர் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் வில் ஸ்மித், தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பிரெஞ்ச் குவார்ட்டர் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு வாகனம் இவரது காரில் மோதியது. இதில் வில் ஸ்மித்துக்கும், அந்த வாகன டிரைவரான கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கார்டெல் ஹெயிஸ், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வில் ஸ்மித்தை சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் வில் ஸ்மித்தின் மனைவிக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நியூ ஆர்லியான்ஸ் போலீசார், கார்டெல் ஹெயிசை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கு கார் விபத்து தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? எனவும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய இளவரசர்

prince-williams-kate-boman-kohinoor-india

மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் போமென் கோகினூர்.93 வயதான இவர் மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.இந்த ரெஸ்டாரன்ட் மும்பைவாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமானது.

தன்னை பிரிட்டன் அரச குடும்பத்தின் நம்பர் 1 ரசிகன் கூறிக் கொள்ளும் போமென், இரண்டாம் ராணி எலிசபெத்தின் உருவப் படத்தை மாட்டி வைத்துள்ளார்.மேலும் தனக்கு ராணி எழுதிய கடிதத்தையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தியா வந்திருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனை சந்திக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.இதனை அறிந்த நிறுவனம் ஒன்று வீடியோவாக தயாரித்தது, இதனை #WillKatMeetMe என்ற ஹாஷ்டேக்கின் மூலம் இணையதளவாசிகள் வைரலாக்கினர்.

இதனையடுத்து கடந்த 10ம் திகதி போமெனுக்கு திடீரென அழைப்பு வந்தது, தாஜ் ஹொட்டலில் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனை சந்தித்து பேசினார்.இதுகுறித்து போமென், இளவரசரை சந்தித்தேன், அவர்கள் மிக அன்பானவர்கள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஊடகவியலாளருக்கு மரண தண்டனை!!

1903728893death2

சோமாலியாவில் சக ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு இஸ்லாமியவாத குழுவான அல் ஷபாப்பிற்கு உதவிய முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் மொஹாடிஷுவில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கென்யாவிலிருந்து 2014 இல் சோமாலியாவிற்கு நாடு கடத்தப்பட்ட ஹசன் ஹனாஃபி சோமாலியாவை சேர்ந்த 5 ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு பிரதான சூத்திரதாரியாக இருந்தார் என்ற குற்றம் நிருபிக்கப்பட்டது.சோமாலியாவில் நன்கு அறியப்பட்ட ஒலிபரப்பாளரான அவர் பின்னர் அல் ஷபாப்புடன் இணைந்திருந்தார்.

ஊடகவியலாளர்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடாக சோமாலியா உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அங்கு 25 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அனேகமான கொலைகளை அல் ஷபாப் மேற்கொண்டுள்ளது.