இந்த ஆண்டின் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.
எனினும் அது கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என்று சுவிட்சர்லாந்தின் இராஜாங்க செயலாளர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டின் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிய விண்ணப்பங்கள் 8315 மொத்தமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவ்வாறு புகலிடம் கோரி விண்ணோப்பம் செய்வோரின் அளவு குறைந்து கொண்டு செல்வதாக சுவிட்சர்லாந்தின் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினமான இன்று வவுனியாவில் ஒரு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
கனகராயன்குளம் பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள கனகராயன்குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஏழு வயது நிரம்பிய நிதுசன் என்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளான்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியா சமணங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா கழகத்தின் மைதானத்தில் நேற்று (13.04) காலை 10 மணியளவில் கழகத்தின் தலைவர் திரு க.சிம்சுபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மற்றும் சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், கௌரவ உறுப்பினர்கள், கழகத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன், மாணவர்களை மகிழ்விக்கும் குதூகல விளையாட்டுகளும், மைதான நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு முதன் முறையாக வவுனியா சமணங்குளத்தில் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.
வவுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டுக்கழகத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் நேற்று (13.04.2016) காலை வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டதுடன் ஆரம்ப நிகழ்விற்கு வருகை தந்த மஸ்தான் எம்பிக்கு கழகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அத்துடன் மஸ்தான் எம்பியினால் கழகத்தின் கொடியசைக்கப்பட்டு மரதன் ஓட்டபோட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பூவரசம்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நஞ்சருந்தி குடும்பப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பூவரசம்குளம் பகுதியில் வசித்து வந்த விக்கினேஸ்வரன் சரஸ்வதி என்ற 37வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயே நேற்று மாலை கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இவரை உடனடியாக பூவரசம்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் அங்கு காவு வண்டி இல்லாத காரணத்தினால் மோட்டார் சைக்கிலில் நஞ்சருந்தியவரை வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாவும் தெரியவருகின்றது.
மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் இறந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான இன்று 14.04.2016 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி காலை ஏழரை கொடிதம்ப பூசையை தொடர்ந்து எட்டரை மணியளவில் வசந்தமண்டபபூஜை நிறைவு பெற்று சித்தி விக்னேஸ்வரன்பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான காலை 9.15 மணியளவில் அடியவர்கள் வடம்பிடிக்க அரகரோகரா முழக்கத்துடன் எம்பெருமானது தேர் இழுக்கபட்டு பக்தர்கள் புடைசூழ திருவீதி வலம்வந்து 10.15 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார்…
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான இன்று 14.04.2016 வியாழக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி காலை ஏழரை கொடிதம்ப பூசையை தொடர்ந்து எட்டரை மணியளவில் வசந்தமண்டபபூஜை நிறைவு பெற்று பஞ்சமுக விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான தேங்காய்கள் உடைக்கபட்டு காலை 9.15 மணியளவில் அடியவர்கள் வடம்பிடிக்க அரகரோகரா முழக்கத்துடன் எம்பெருமானது தேர் இழுக்கபட்டு பக்தர்கள் புடைசூழ திருவீதி வலம்வந்து 10.15 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார்…
மலர்ந்துள்ள துர்முகி வருடத்தில் எமதுவாசகர்கள் வாடிக்கையாளர்கள் விளம்பரதாரர்ர்கள் அனைவருக்கும் நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் சப்பர திருவிழா நேற்று 13.04.2016 புதன்கிழமை இடம்பெற்றது.
சித்திரை புதுவருட பிறந்ததை தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து வழமையான வசந்த மண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் ஆதிவிநாயகர் சப்பரத்தில் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது .
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் வேட்டை திருவிழா நேற்று முன்தினம் 12.04.2016 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
மாலையில் ஆதிவினாயகப் பெருமான் வேட்டை ஆடுவதற்காக வவுனியா குருமன்காடு காளி கோவிலுக்கு சென்று அங்கு வேட்டை முடித்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து பிராயசித்த அபிசேகங்கள் இடம்பெற்று வழமை போல் மாலை பூஜைகள் இடம்பெற்று ஆதி விநாயகப்பெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மீட்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.
இவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார், இராணுவ சிவில் நிர்வாகத்தின் முல்லைத்தீவுப் படையணியில் பணிபுரிந்துவந்தவர் என்றும் குறிப்பிட்டனர்.
தொடங்கொட- கினகஸ்மான- ருவன்கம பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாகவும் சடலத்தின் மீது அசிட் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே குறித்த நபர் கொல்லப்பட்டார் என சந்தேகம் கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 50 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்யுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமாகிய காதல் மரணத்தில் முடிந்த சம்பவம் ஒன்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதியை காதலித்த இளைஞன், அந்த யுவதி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிந்து கொண்ட பின்னர், கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் மாரவில மஹாவெவ பகுதியில் மரமுந்திரி மரத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாரவில பொலிஸாரினால், இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொட்டுகச்சி சசதயாய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 21 வயதான புஷ்பகுமார அழகக்கோன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் காற்சட்டை பையில் இருந்த புத்தகம் ஒன்றில் காணப்பட்ட தொலைபேசி இலக்கம் ஊடாக மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொலைபேசி இலக்கத்துடன் பொலிஸார் தொடர்பு கொண்டதை அடுத்து, மாரவில பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணொருவரும், யுவதி ஒருவரும் சம்பவத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த யுவதி மஹாவெவ நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார்.
உயிரிழந்த இளைஞன் பேஷ்புக் மூலம் அறிமுகமாகியதாகவும் அவருடன் தொலைபேசியில் தொடர்புகளை வைத்திருந்தாகவும் யுவதி கூறியுள்ளார்.
திருமணம் செய்யுமாறு இளைஞன் தன்னிடம் யோசனை முன்வைத்தாகவும் அதனை தான் மறுத்த பின்னர், மீண்டும் சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு யோசனை முன்வைத்தாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை மட்டும் தன்னிடம் கூறியதாகவும் அந்த இளைஞன் தனது மகளை திருமணம் செய்வதை தான் விரும்பவில்லை எனவும் யுவதியின் தாய் கூறியுள்ளார்.
அதேவேளை, உயிரிழந்த இளைஞன் தன்னை தொடர்ந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால், தான் தொலைபேசி இலக்கத்தை மாற்றியதாகவும் விரைவில் தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தான் இளைஞனிடம் கூறியதாகவும் யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தம்மால் பொறுப்பேற்க முடியாது என்றும் அவரது குடும்ப விபரங்கள் தனக்கு தெரியாது எனவும் யுவதியும் அவரது தாயும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற கை நீள ரி சேர்ட்டையும் அணிந்து காணப்படுவதாகவும் அவரது பயண பொதியில் இருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன் வயிட்ஹாலில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகம் அமைந்திருக்கும் கட்டடத்தில் எலித் தொல்லை அதிகமாகிவிட்டதால் பூனை ஒன்று வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது.
பிரிட்டனின் முக்கிய அமைச்சரும், ராஜதந்திரிகளும் பணியாற்றும் அந்தக் கட்டடத்தில் பாமெஸ்டோன் என்ற அந்தப் பூனையும் இனிப் பணியில் இருக்கும். ஆனால், இந்தப் பூனைக்கு மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்படாது என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தப் பூனை லண்டன் வீதிகளில் திரிந்துகொண்டிருந்தது. சாப்பிட உணவின்றி, குறைந்த எடையுடன் திரிந்த இந்தப் பூனையில் மைக்ரோ சிப்பும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அதனால், இந்தப் பூனை யாருடையது என்பதும் தெரியவில்லை.
பிரிட்டனின் முன்னாள் பிரதமரான பாமெஸ்டோன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 71வது வயதில் பிரதமரான பாமெஸ்டோன், பிரிட்டனின் மிகவும் வயதான பிரதமர்களில் ஒருவர் என்றாலும் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தவர்.
பிரதமராவதற்கு முன்பாக 15 ஆண்டுகள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். பிரிட்டனின் அரசு அலுவலகங்கள் பலவற்றில் இம்மாதிரி பூனைகள் வளர்க்கப்படுகின்றன.
பிரதமரின் இல்லமான 10, டவுனிங் ஸ்ட்ரீட்டிலும் லாரீ என்ற பூனை வளர்க்கப்படுகிறது. இந்தப் பூனைக்கென அதிகாரபூர்வமற்ற முறையில் ஒரு ட்விட்டர் கணக்கும் இருக்கிறது. அந்தக் கணக்கை 47,500 பேர் பின்தொடர்கிறார்கள்.
நிதியமைச்சர் ஜோர்ஜ் ஆஸ்பர்ன் வீட்டிலும் ஃப்ரேயா என்ற ஒரு பூனை வளர்க்கப்படுகிறது. ஆனால், அந்தப் பூனை மிகவும் துடுக்குத்தனம் மிக்கது. ஒரு முறை வீட்டைவிட்டு ஒரு மைல்தூரம் சென்றுவிட்டது.
மற்றொரு முறை ஒரு காரின் குறுக்கே சென்று அடிபட்டுவிட்டது. ஆனாலும் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை.
12 வயதுடைய மகளை பல்வேறு தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 52 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாத்தாண்டிய – கிழக்கு வீரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மாரவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 08ல் கல்வி கற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமியின் தாய், அண்ணன் மற்றும் சகோதரி ஆகிய மூவரும் நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தந்தையால் தான் பாலியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை சகோதரியிடம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.
சகோதரி தாயிடம் கூறவே சம்பவம் குறித்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஒருநாள் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, தொடர்ச்சியாக பல தடவைகள் தந்தையால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸ் நிலையத்தில் கூறியுள்ளார்.
சிறுமி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.