யாழில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்!!

escape

யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கிளிநொச்சியில் வைத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை நேற்று சனிக்கிழமை, நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் அழைத்து வந்தனர்.

இதன்போது அதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். மற்ற இளைஞரை நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தியதுடன், தப்பி ஓடி கைதி பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ரங்கன ஹேரத் ஓய்வு!!

Herath

ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அவரது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து மலிங்க நீக்கப்பட்டுள்ளார்!!

Malinga

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர் விளையாட முடியாது என தெரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, எதிர்வரும் இங்கிலாந்து இலங்கைத் தொடரில் இருந்தும் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, லசித் மலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை அவரை குறித்த நிபுணர் குழுவின் முன் ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா மன்னார் வீதியில் இன்று (17.04.2016) சற்று முன் ஏற்ப்பட்ட மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கிச் சென்ற துவிச்சக்கரவண்டி மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கர வண்டியின் பின் பக்கமாக மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டர் சைக்கிலில் பயணித்தவர் பாதுகாப்புக் கவசத்தின் பட்டி அணியாது அதிக வேகத்தில் பயணித்த பொழுது தலைக்கவசம் காற்றில் தூக்கி ஏறிய முயன்ற சமயத்தில் தலைக்கவசத்தில் ஒரு கையை பிடித்தவாறு சென்று துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மீது மோதியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

P1200308 P1200309 P1200310 P1200312 P1200316 P1200317

வவுனியாவில் மின்னல் தாக்கில் இருவர் படுகாயம் : வீடுகளும் சேதம்!!

Minnal

வவுனியாவில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளன.

நேற்று முன்தினம் மாலை இடி மின்னல் காற்றுடன் கூடியதாக மழை பெய்து கொண்டிருந்த போதே அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவ் வீடு சேதமடைந்துள்ளதுடன் அருகில் இருந்த வளாகத்தில் குப்பை எரித்துக் கொண்டிருந்த ஆ.சு.நவாஸ் (வயது 52) என்பவர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி படுகாயமடைந்ததுடன் அவருக்கு அருகில் இருந்த நிசாம்தீன் (வயது 60) என்பவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினால் அருகருகே இருந்த இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

வவுனியா முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும்!!(படங்கள்)

வவுனியா  செட்டிகுளம் முகத்தான்குளம்  அருள்மிகு ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர்   ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா நேற்று காலை காலை 15.04.2016 வெள்ளிகிழமையன்று  முகத்தான் குளக்கரையில்   இடம்பெற்றது.

தொடர்ந்து  மாலையில் சித்தி விக்னேஸ்வர பெருமான் வசந்தமண்டபத்தில் திரு ஊஞ்சலில் எழுந்தருளி பூஜைகள் இடம்பெற்று  கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது.

படங்கள் :அருண் சர்மா

11219436_512938652242870_2016959254791260919_n 11219436_512938748909527_6865255358803116014_n 12592357_512938822242853_2773983834514953704_n 12670910_512669715603097_6446048271470111329_n 12963426_512669772269758_6907352441340043961_n 12963739_512938862242849_5435211735121048778_n 12974309_512939072242828_6105494121276451709_n 12998508_512938935576175_4601298384232199498_n 13001046_512669612269774_5103169921643704584_n 13001120_512938785576190_1592216923546713808_n 13001170_512669642269771_1440081736299267478_n 13006537_512669552269780_8182063918777114691_n 13010769_512669842269751_7884662786924019437_n 13012801_512669578936444_2195505107626298978_n 13012885_512669455603123_1449370876052880477_n 13015624_512938968909505_1121378441269407354_n 13043556_512938918909510_3308748310788574648_n

வவுனியாவில் முதியவரொருவர் தூக்கிட்டு தற்கொலை!!(படங்கள்)

P1200306

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (16.04.2016) தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா சாந்தசோலை வீதி, பூந்தோட்டத்தில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவகுமார் (68 வயது) என்பவரே தனது வீட்டில் தூக்கில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி யாழ்ப்பாணத்தில் வசித்துவருவதாவும் இவர் தனிமையில் வீட்டில் வசித்து வந்ததாகவும் கிராம சேவையாளர் தெரிவித்தார்.

-சம்பவ இடத்திலிருந்து எமது விசேட நிருபர்-

உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு இணைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய தீர்ததோற்சவமும் கொடியிறக்கமும்!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா நேற்று காலை காலை 15.04.2016 வெள்ளிகிழமையன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில்  இடம்பெற்றது.

 

தொடர்ந்து  மாலையில் வினாயகபெருமான் வசந்தமண்டபத்தில் திரு ஊஞ்சலில் எழுந்தருளி பூஜைகள் இடம்பெற்று  கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது.

12963391_1111956802180696_7856730301091407305_n

1936378_1111957058847337_6593058138920008218_n 12718016_549193021921188_6960463736867186416_n 12961515_549193288587828_7995927005826323730_n 12963391_1111956802180696_7856730301091407305_n 12963850_1111957552180621_1108891821106207659_n 12963863_1111957085514001_1704629064758712650_n 12974253_1111957698847273_2228514625453873396_n 12974308_1000430830043780_9019163736862860152_n 12974443_1111957142180662_7466341175895587843_n 12985449_1000430886710441_2859197720802614665_n 12985498_1000430863377110_5411875960561751218_n 12990879_1111957732180603_2077702764971496156_n 12993475_1000430603377136_2262868332155470087_n 12994339_1000430776710452_3809590769206736172_n 12998560_1111957242180652_5931835505468870521_n 12998569_549193098587847_8929567929810524886_n 13000278_1000430583377138_3403539117447065217_n 13001236_1000430703377126_433392665320766696_n 13001328_1111956775514032_5442133315051260652_n (1) 13001328_1111956775514032_5442133315051260652_n 13006602_1111958052180571_4741089835157299994_n 13010692_1111957298847313_8905500914191430133_n 13010705_1000430666710463_4727533872212734192_n 13010823_1111956958847347_7315131817862605049_n 13012781_1111957335513976_7477981680115740052_n 13015418_1111957815513928_50774943837813297_n

வவுனியாவில் கடும்வெப்பத்தை தணிக்க கொட்டும் மழை!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையினால் பல மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவி வருகின்றது.

வவுனியாவிலும் கடும் வெப்பம் மக்களை வாட்டிவந்த நிலையில், வவுனியாவில் இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இத் தீடீர் மழையினால் வெப்பம் தணிந்ததுடன், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

P1200283 P1200284 P1200285 P1200286 P1200287 P1200288

வவுனியா கலைமகள் விளையாட்டுக் கழகம் நடாத்திய 32வது சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டி!!

 
வவுனியா கலைமகள் சனசமூக நிலையமும் கலைமகள் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய 32வது சித்திரைப் புதுவருடவிளையாட்டுப் போட்டி நேற்று (14.04.2016) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மன்னார் வீதியில் உள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் தவைர் க.ஸ்ரீசங்கர் தலைமையில் நடைபெற்றது.

சு.தவசீலன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இன்நிகழ்வின் பிரதம விருந்தினராக ப.சத்தியலிங்கம் (வடமாகாண சுகாதார அமைச்சு) மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, உள்ளராட்சி உதவி ஆணையாளர் பி.எம்.அயங்க காஞ்சண குமார, நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திரா, பிரதி நீர்பாசண பொறியியலாளர் ந.ஸ்ரீஸ்கந்தராசா, சித்த ஆயள்வேத வைத்தியர் ப.சத்தியநாதன், பகுதிக் கிராம சேவையாளர் தி.கனகலிங்கம் மற்றும் பலஅரசஅரசசார்பற்ற திணைக்களங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள் விளையாட்டுக் கழகங்களை உடைய விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வின் விளையாட்டு நிகழ்வுகளாக 60 மைல் துவிச்சக்கரவண்டி ஓட்டம், கரபந்து சுற்றுப்போட்டிகள், தலையணைச் சண்டை, கயிறுஇழுத்தல் போன்ற பல சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12) 01 (13) 01 (14) 01 (15) 01 (16) 01 (17) 01 (18) 01 (19) 01 (20) 01 (21) 01 (22) 01 (23) 01 (24) 01 (25) 01 (26) 01 (27) 01 (28) 01 (29)

வவுனியா கோவில்குளம் ரொக்கற் விளையாட்டுக் கழகத்தின் புதுவருட விளையாட்டு விழா!!

 

வவுனியா கோவில்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியையும், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா கோவில்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று (14.04) மாலை 3 மணியளவில் கழகத்தின் தலைவர் க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பொருளாளர் கே.தனபாலசிங்கம், சமூக சேவையாளர் சி.சரவணமுத்து ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபரும், கோவில்குளம் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவருமான சி.வையாபுரிநாதன், கோவில்குளம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத் தலைவர் எஸ்.ஜொயெல் நிரோசன், சமூக ஆர்வலர் ர.சிவசுப்பிரமணியம், கழகத்தின் முன்னாள் தலைவர்களான நீ.பாலசுப்பிரமணியம், செ.தவச்செல்வன் ஆகியோருடன் பெருந்திரளான மக்களுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன், மாணவர்களை மகிழ்விக்கும் குதூகல விளையாட்டுகளும், மைதான நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றதுடன், இம்முறை பரீட்சைகளில் திறமை காட்டிய மாணவர்களுக்கான கெளரவிப்புடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_5912 IMG_5915 IMG_5918 IMG_5921 IMG_5936 IMG_5942 IMG_5945 IMG_5950 IMG_5953 IMG_5955 IMG_5958 IMG_5959 IMG_5960 IMG_5961 IMG_5962 IMG_5963 IMG_5965 IMG_5973 IMG_5976 IMG_5981 IMG_5990 IMG_5991 IMG_6019 IMG_6026 IMG_6039 IMG_6043 IMG_6049 IMG_6054 IMG_6063 IMG_6067 IMG_6069(1) IMG_6069(2) IMG_6069(3) IMG_6069 IMG_6070  (1) IMG_6070  (2) IMG_6070  (3) IMG_6070  (4) IMG_6070  (5) IMG_6070  (6) IMG_6070  (7) IMG_6070  (8) IMG_6070  (9) IMG_6070  (10) IMG_6070  (11) IMG_6070  (12) IMG_6071

ஆசியாவில் இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறை நாட்கள்!!

Holiday

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் வருடத்தில் 25 நாள் பொதுவிடுமுறை என்ற விடயம்பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறை நாட்கள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களே விடுமுறை வழங்கப்படுகின்றன. ஜப்பானில் 17 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றன.

தாய்லாந்தில் 19 மற்றும் 20 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்களும் பொதுவிடுமுறையாகஉள்ளன.

எனினும் இலங்கையில் மதங்களின் அடிப்படையில் இந்த விடுமுறைகள் ஓதுக்கப்பட்டுள்ளமையால்அதிக விடுமுறைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பௌத்தர்கள் புனித நாளாக கருதும் 12 பௌர்ணமி தினங்கள், வருடம் ஒன்றில்விடுமுறையாக்கப்பட்டுள்ளன.

போர் காலத்தின் போது ஒவ்வொரு வருடமும் இலங்கையில் பல பில்லியன் டொலர்கள் செலவுஏற்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டது.இதனை நிவர்த்திக்கும் வகையில் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அதிக விடுமுறையானது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றுபொருளாதாரத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நீரின் பாவனை அதிகரிப்பு!!

Water

பண்டிகைக்காலப் பகுதியில் நீர் பாவ​னை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உயர்வான பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பின் அளவை தற்போது 1.8 மில்லியன் மீற்றர் கனவளவாக உயர்த்தியுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி பாவனையாளர்களுக்கு நீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகல நீர்த்தேக்கங்களினதும் நீரை விநியோகிக்கும் பம்பிகள் முழுஅளவில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உயர்வான பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு பவுசர்கள் மூலமாக போதுமானளவு நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிசய தீர்ப்பு!!

High

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றால், அது உலக மகா அதிசயம் என்று கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த மணி- உஷா தம்பதிக்கு (பெயர்கள் மாற்றம்) 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2008ல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மணி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “தன் மனைவி தன்னை மன ரீதியாக கொடுமை செய்கிறார். தன்னுடைய குடும்பத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டுகிறார்.

கடந்த 2005ம் ஆண்டு பணம் கொடுக்க மறுத்த போது, மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். எனவே, மன ரீதியாக கொடுமை செய்யும் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவிற்கு பதில் அளித்த உஷா, “தன் கணவர் எந்நேரமும் கோபத்தில் பேசுவார். நான் இதுநாள் வரை அமைதியாகத்தான் வாழ்ந்து வருகிறேன்.

கடந்த 2005ம் ஆண்டு வீட்டின் பல்கனியில் நின்று கொண்டிருந்த போது, கையில் வைத்திருந்த வளையல் கைதவறி கீழே விழுந்தது. அதை பிடிக்க முயற்சித்த போது கீழே விழுந்து விட்டேன். இதனால் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

கணவன் வீட்டில் இருந்த போது, என்னை யாரும் பார்க்காததால் தற்போது பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். என் கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், உஷா தற்கொலைக்கு முயன்று, ராஜாவுக்கு மனரீதியான கொடுமைகளை செய்துள்ளார். தற்போது அவர் உடல்நலம் சரியில்லை. சக்கர நாற்காலியில் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். மாற்றுத்திறனாளியாகி விட்ட அவருக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கவும் தயார் என்று மணி உத்தரவாதம் அளித்துள்ளார்.

எனவே, மனரீதியான கொடுமை செய்வதால், இவர்களது திருமணத்தை ரத்து செய்து, விவாகரத்து வழங்கப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தார்.

கடந்த 2011ல் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ஒரு குடும்பம் என்றால், குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கம்தான். அப்படி கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றால், அது உலக மகா செய்தியாகும்.

இந்த வழக்கில், கணவன், மனைவிக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த பல முறை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தீர்வு ஏற்படவில்லை.

கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனைவி உறுதியாக இருக்கிறார். எங்களை பொறுத்தவரை, திருமண பந்தம் தொடர வேண்டும். முறிவு ஏற்படக்கூடாது. எனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்த குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ஜப்பானில் நில நடுக்கம் காரணமாக 09 பேர் உயிரிழப்பு!!

Jappan

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது கயூஷில் தீவில் உள்ள குமாமோட்டோ நகரின் கிழக்கே பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஜப்பானில் அதிவேகமான இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நிலநடுக்கத்துக்கு பின்னர் சுமார் நூறுமுறை நில அதிர்வு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சில கட்டிடங்களில் தீப்பிடித்து எரிந்தன. 700-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 44 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். 650-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பூகம்பத்தால் குமட்டோ பகுதியில் உள்ள 16 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.

நிலநடுக்கம் மையம் கொண்ட கயூஷ் தீவு மற்றும் அருகில் உள்ள ஷிகாகோ பகுதியில் 3 அணுமின் நிலையங்கள் உள்ளன. நிலநடுக்கத்தினால் அந்த அணுமின் நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அணு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கு கடல் பகுதியில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு அணுமின் உலையில் பாதிப்பு ஏற்பட்டதும், நிலநடுக்கத்தின் விளைவாக சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதும் நினைவிருக்கலாம்

சித்திரைப் புத்தாண்டிற்கு வாழ்த்து கூறிய பிரித்தானியப் பிரதமர்!!

David-Cameron

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கொள்வதன் பெறுமதியை தான் அறிந்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வழங்கும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதாக பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த துறைகளில் தற்போது அடைந்திருக்கும் குறிப்பிடத்தக்க விருத்தியை தான் அறிந்து கொண்டிருப்பதாக தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார்.