இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன தற்போது அணியுடன் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட தொடர் தோல்வியால் அரவிந்த டி சில்வா தலைமையில் புதிய தெரிவுக் குழு உருவாக்கப்பட்டது. இதில் உறுப்பினராக முன்னாள் வீரர் சங்கக்காரா இடம்பெற்றிருந்தார்.
அதேபோல் ஜெயவர்த்தனேவும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
இது தொடர்பாக ஜெயவர்த்தன டுவிட்டரில் கூறுகையில், ”இந்த தகவல் எங்கிருந்து வந்தது. நான் வர்ணனை பணியில் மட்டுமே ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இலங்கை அணியுடன் இல்லை” என்று கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக வவுனியாவில் கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகின்றது. மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதுடன் வெயிலின் அளவு கடந்தாண்டுகளை விட அதிகமாகவே காணப்படுகின்றது.
இதனால் குழந்தைகள் முதியோர் உட்பட தொழிலின் நிமித்தம் வெளியே செல்வோரும் வெயிலின் வெப்பத்தை தாங்கமுடியாமல் கடும் சிரமங்களுக்கும் முகம்கொடுக்கின்றனர்.
இன்று இலங்கையிலேயே அதிகளவாக வவுனியாவில் 36.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதாகவும்,அனுராதபுரத்தில் 35 பாகையும், கொழும்பில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வெப்பக் காலநிலையானது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் மக்கள் அதிகமாக நீர் பருகவேண்டும் எனவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீர் பருக வேண்டும் என்றும் காலநிலை மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அநேகமான பிரதேசங்களில் அதிகளவான வெப்பமான காலநிலையால் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெப்பக் காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இந்த அறிவித்தலை காலநிலை மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை மருத்துவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பகல் பொழுதுகளில் உடற்பயிற்சி அல்லது விளையாடுவது கட்டாயம் என கருதினால் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமானதொன்று என விளையாட்டுத் துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லால் ஏக்கநாயக்க
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த கடும் வெப்பத்தை தாங்குவதற்கு சிறுவர்கள் மிகவும் அவதியுறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் மக்கள் அதிகமாக நீர் பருகவேண்டும் எனவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீர் பருக வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மழைவீழ்ச்சி இன்மையே அதிக வெப்பத்திற்கு காரணம் எனவும் இன்னும் ஒரு மாதத்தில் எதிர்பார்த்தளவு மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் காலநிலை திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.ஜே.பிரேமலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா பிரதேசத்தில் அதிகமாக 36.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதாகவும்,அனுராதபுரத்தில் 35 பாகையும், கொழும்பில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்படுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில், T20 உலகக்கிண்ணத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை அப்ரிடி புரிந்துக்கொண்டுள்ளார்.
அவர் பதவி விலகாத பட்சத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும், அவர் ஒரு வீரராக மட்டும் அணியில் நீடிக்க விரும்பினால், அவரை தேர்வு செய்வதா வேண்டாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும்.
அதேபோல் பயிற்சியாளரை பொருத்தவரை ஒரு வெளிநாட்டவரை புதிய பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுரேஸ்காந்தன் ஜனார்த்தனன் (18 மாதங்கள்) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தத்தித் தத்தி நடந்து வெளியே வந்து நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பாத்திரம் ஒன்றிற்குள் குப்புற விழுந்துள்ளது.
பெற்றோர் குழந்தையை மீட்டு உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அக்குழந்தைக்கு ஏற்கெனவே உயிர் பிரிந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem என்ற விமான நிலையத்தில் சற்று முன்னர் இரண்டுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வெடிக்கும் பலத்த ஓசை எழுந்ததை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
இந்த பயங்கர வெடிவிபத்தில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தை மூடியதுடன், அங்கிருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.
Maalbeek, Schuman என்ற ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இந்த ரயில் நிலையங்களின் அருகில் ஐரோப்பிய ஆணையத்திற்கு சொந்தமான சில அலுவலகங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தலைநகரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்ததாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த பெல்ஜியம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உலக நீர் தினத்தை முன்னிட்டு யுனோப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையில் வவுனியா நகரசபையின் ஒழுங்கமைப்பில் வீதியோட்டப்போட்டி நடைபெற்றது.
வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவினால் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த இப்போட்டியானது வவுனியா நகரசபையில் இருந்து ஆரம்பமாகி இறம்பைக்குளம் பாடசாலை வழியாக வைத்தியசாலை சுற்றுவழி, பூங்கா வீதியின் வழியாக வவுனியா நகரசபையில் நிறைவு பெற்றது.
இவ் வீதியோட்டப்போட்டியில் வயது வேறுபாடு இன்றி அனைத்து வயதினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில், தேசிய தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் கையடக்கத்தொலைபேசி சேவைகள் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளின் போது, பாகிஸ்தான் ஆயுதப்படையின் பிரமாண்ட அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதனால், பாதுகாப்பு காரணம் கருதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் கையடக்கத்தொலைபேசி சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோன்று, தேசிய விழா நடைபெறும் நாளை கையடக்கத்தொலைபேசி சேவைகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தனது 2 வயது மகளை சமையலறை ஒவன் உபகரணத்தில் வைத்து கடும் எரிகாயத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை இடம் பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிளன் ரோஸ் நகரைச் சேர்ந்த தஷா ஹட்சர் (35 வயது) என்ற மேற்படி பெண், தனது சின்னஞ்சிறு மகளை ஒவன் உபகரணத்துக்குள் வைப்பதை அவதா னித்த ஒருவர் அது தொடர்பில் பொலி ஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு உட னடியாக வந்த பொலிஸார் குழந்தையை ஒவன் உபகர ணத்திலி ருந்து வெளி யில் எடு த்து மருத்துவ மனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததுடன் தஷாவை கைதுசெய்துள்ளனர்.
அந்தப் பெண் எதற்காக மேற்படி கொடூர நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளி யிடப்படவில்லை.
கடும் எரிகாயங்களுக்கு உள்ளான குழந்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
தனது சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தன்னிடமும் தவறாக நடக்க முயன்ற தந்தையை, அவரின் மகள் தீ வைத்து எரித்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் காராச்சி நகரில் பிராபத் எனும் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது மகள்களுக்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பயத்தின் காரணமாக அதை அவர்கள் வெளியே சொல்லவில்லை. இதைக்கண்டு கோபமடைந்த அவரின் இரண்டாவது மகள் ஆயிஷா, தனது தந்தையை கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன்படி, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்தார். அவர் நன்றாக தூங்கியதும், அவரை தரதரவென இழுத்துச் சென்று தீ வைத்து எரித்து விட்டார். அதன்பின் ஆயிஷா பொலிஸாரிடம் சரண் அடைந்தார்.
இதுபற்றி ஆயீஷா பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “என் தந்தை எனது மூத்த மற்றும் இளைய சகோதரிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். என்னையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதனால்தான் அவரை எரித்துக் கொன்றேன்” என்று கூறியுள்ளார்.
இதனால், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆயிஷா, கராச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ்லாந்து நாட்டில் இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாலியல் தொழிலாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிஸின் பேசல் நகரில் பாலியல் தொழில் புரியும் மையமொன்றை சேர்ந்த 3 பாலியல் தொழிலாளிகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியே சென்று சாலையில் நின்றவாறு இளைஞர்களை தம்வசம் மயக்கி அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, மூவரும் மீதும் மோகம் கொண்ட 5 வாலிபர்கள் அவர்களுடன் சென்றுள்ளனர்.
பாலியல் மையத்திற்கு சென்றவுடன், ‘உங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றால், நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும். இல்லையெனில், நீங்கள் இங்கே வந்ததை உங்கள் உறவினர்களுடன் தெரிவித்து விடுவோம்’ எனக் கூறி மிரட்டியுள்ளனர்.
ஆனால், 3 பெண்கள் கேட்ட பணம் வாலிபர்களிடம் இல்லை எனவே வெளியே சென்று பணம் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொண்ட மூவரும் இளைஞர்களிடமிருந்து விலை உயர்ந்த கை கடிகாரம், வீட்டு திறப்பு உள்ளிட்டவைகளை அடமானமாக வாங்கியதோடு இளைஞர் ஒருவரிடம் ’15,000 பிராங்க் தரவேண்டும்’ என மிரட்டி உறுதிப்பத்திரமும் கையெழுத்திட்டு வாங்கி வைத்துள்ளனர்.
வெளியே வந்த 5 பேரும் தலா 2,000 பிராங்க் பணம் ஏற்பாடு செய்ய முடியாததால், உடனடியாக பொலிஸாரிடம் புகார் கூறியுள்ளனர்.விரைந்து வந்த பொலிஸார் இளைஞர்களை மிரட்டிய பாலியல் தொழிலாளிகள் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இளைஞர்களின் பொருட்களை மீட்டனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில் ‘இருவர் 29 மற்றும் 34 வயதுடைய நைஜீரியா நாட்டு பெண்கள் என்றும் மற்றவர் 54 வயதான பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
எனினும், இப்பாலியல் பெண்களால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்துள்ள பொலிஸார் சிறையில் அடைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
முல்லைத்தீவில் இருந்து நேற்று இரவு 8 மணியளவில் வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று 3ம் கட்டை வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் கேப்பாப்பிலவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை விஜியகுமார் (26) என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருடன் வந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் மது போதையில் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அகதி முகாம் ஒன்றில் வசிக்கும் கே.தயாபரராஜ் என்ற இலங்கை அகதி சாகும் வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை முதல் இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இராமநாதபுரம், மண்டபம் முகாமில் தமது குடும்பம் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்தே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
தமது மனைவியான உதயகலாவும் மூன்று பிள்ளைகளும் மண்டபம் முகாமில் உரிய பணவசதிகள் இன்றி உறவினர்களை பார்க்க முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மனைவியின் உடல்நிலையை கவனிக்கும் அதிகாரிகள் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு தாம் படகு மூலம் தமிழகம் வந்ததும் கியூ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமது குடும்பத்தினர் மீது கடவுச்சீட்டு மீறல் குற்றம் சுமத்தப்பட்டு அதற்காக நீதிமன்றம் ஒருவருட சிறைத்தண்டனையை விதித்தது.
எனினும் இந்த தண்டனை முடிவடைந்த பின்னரும் தாம் திருச்சி முகாமுக்கும் தமது குடும்பம் மண்டபம் முகாமுக்கும் அனுப்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை அகதி குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6102 மாணவர்கள் 9A சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்ட 6102 மாணவ மாணவியர் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 274,324 பாடசாலை பரீட்சார்த்திகளில் 189,428 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்க தகுதிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 69.33 வீதமான மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், 83,796 மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில செய்களை நீங்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பார்க்க முடியாது. அவை இந்தியாவில் மட்டுமே காணக் கிடைக்கும் அற்புத செயல்கள். இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் செயல்களே சில எக்கச்சக்கமாக எரிச்சலூட்டும் வகையில் அமைந்துவிடுகிறது.
அண்ணாசிக் கடைகளில் சில்லறை மிகுதிக்குப் பதிலாக தரும் மிட்டாயில் ஆரம்பித்து, பேருந்தில் இடம் பிடிக்க முண்டியடிப்பது, கோவிலில் செருப்பை திருடுவது என இந்தியாவில் மட்டுமே நிகழும் எரிச்சலூட்டும் செயல்பாடுகள் நிறைய இருக்கின்றன….
சீட் பிடிப்பது – பேருந்து, ரயில் பயணங்களில் சீட் பிடிக்க மற்றவை தள்ளி, முட்டி மோதி முண்டியடித்துக் கொண்டு ஓடுவது.
வரிசை – சினிமா டிக்கட், பேருந்து நிலையம், அரசு நியாவிலை கடைகள் என எங்குமே ஓர் சீரான வரிசையை காண்பது மிக அரிய நிகழ்வாக தான் இந்தியாவில் காணப்படும்.
சில்லறை – பெரிய மால்களில் இருந்து அண்ணாசிக் கடை வரை எங்குமே ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்கள் மீத சில்லைறை தருவதாய் வழக்கமே இல்லை. மிட்டாய்கள் கொடுத்து நாமம் போட்டு விடுவார்கள்.
செருப்பு – இந்தியாவில் நடக்கும் பெரிய திருட்டுகளில் ஒன்று செருப்பு திருட்டு. குறைந்தபட்சம் இந்தியாவில் இருக்கும் அனைத்து கோவிலிலும் ஒருமுறையாவது இந்த சம்பவம் நடந்திருக்கும்.
பேரம் பேசுவது – தான் விரும்பிய பொருளை தான் பேரம் பேசிய விலையில் கிடைக்காமல் போனால் இந்தியர்கள் கடுப்பாகி விடுவார்கள். அதிலும் பெண்கள், நாலு தெருக்கள் கடக்கும் வரை அந்த வியாபாரியை வசைப்பாடிக் கொண்டே தான் வருவார்கள்.
பரிசு – சிறப்பாக வேலை செய்ததற்கோ அல்லது வேறு ஏதோ காரணத்திற்கு அலுவலகத்தில் பாராட்டி பரிசுக் கொடுத்திருப்பார்கள். ஆசையாக திறந்து பார்த்தல், சாப்பாடு டப்பா அல்லது சோப்பு டப்பாவாக இருக்கும். இது கண்டமேனிக்கு எரிச்சலூட்டும் ஒன்றாகும்.
ரயில் டிக்கெட் – இந்தியாவில் எது மிகவும் கடினமான காரியம் என்றால், கண்ணை மூடிக் கொண்டு கூறிவிடலாம். அது இந்திய ரயில்வே துறை இணையத்தில் டிக்கெட் புக் செய்வது தான் என்று.
கிரிக்கெட் போட்டி – இந்தியாவில் கிரிக்கெட் என்பது தனி மதம். இந்தியர் அனைவரையும் இது ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடுவே யார் வந்தாலும் இந்தியர்கள் கடுப்பாகிவிடுவர்கள்.
ஓசி வை-பை – நமது வை-பையை பக்கத்து வீட்டுகாரர் ஓசியில் பயன்படுத்து வருகிறார் என்பதை அறியும் போது வயிறு வாய் எல்லாம் பத்திக்கொண்டு வரும். போடா, வாடா என்றால் கூட யாரும் கோபப்பட மாட்டார்கள். ஆனால், தனது டேட்டாவில் ஒரு எம்பி பயன்படுத்திவிட்டலும் செம கடுப்பாகிவிடுவார்கள்.
ஸ்பூன் – இட்லி, தோசை போன்ற உணவுகளை கூட இத்தாலியில் பிறந்து வளர்ந்தது போல ஸ்பூனில் குத்தி, குத்தி உண்பதை பார்க்கும் போது இந்தியர்களுக்கு கடுப்பாவதுண்டு.
கைதிகளுக்கு வசதியாக பயன்படுத்தக் கூடிய வகையிலான மெத்தைகளை பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தூங்குவதற்காக தற்போது பாய்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்காக மெத்தைகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளையே கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தாலேயே தயாரிக்கவும், இதன் முதல் கட்ட நடவடிக்கையை கொழும்பு வெலிகடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பாய்களுக்கு பதிலாக மெத்தையையே பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.