வவுனியாவைச் சேர்ந்த உதயகலா உண்ணாவிரதத்தை கைவிட்டார்!!

uthayakala

தனிமை சிறையில் இருந்து தன்னை போலீசார் விடுவித்ததை அடுத்து, உதயகலா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராஜ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அகதியாக தனுஷ்கோடிக்கு வந்தார்.

தயாபரராஜ், அவரது மனைவி உதயகலா மற்றும் 3 குழந்தைகளிடம் விசாரணை நடத்திய பொலிசார், தயாபரராஜ் மீது கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தயாபரராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உதயகலா மண்டபம் முகாமில் உள்ள தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தண்டனை முடிந்த தயாபரராஜ், திருச்சியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளார். ஆனால் உதயகலா தொடர்ந்து தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதனால், தனிமை சிறையில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உதயகலா, கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகவல் அறிந்த முகாம் அதிகாரிகள் மற்றும் போலீஸார், உதயகலாவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உதயகலாவோ, தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால், மண்டபம் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்த உதயகலாவை போலீஸார் விடுவித்தனர். மேலும், விடுவிக்கப்பட்ட உதயகலாவிற்கு, மண்டபம் முகாமில் மறுவாழ்வு துறையினர் தனி வீடு ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதையடுத்து உதயகலா தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

இலங்கை பெண்ணை போலித்திருமணம் செய்ய முயன்ற சிங்கப்பூர் பிரஜைக்கு சிறை!!

jail

இலங்கைப் பெண்ணை போலித் திருமணம் செய்ய உடன்பட்ட சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து சிங்கபூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

36 வயதான இந்த சிங்கப்பூர் பிரஜை, சிங்கப்பூரின் வதிவிட விசாவை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை பெண் ஒருவரை போலித்திருமணம் செய்துக்கொள்ள இணங்கியுள்ளார்.

இதற்காக குறித்த சிங்கப்பூர் பிரஜை எதிர்கொண்ட நிதிப்பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அவருக்கு உணவகம் ஒன்றை குறித்த இலங்கைப்பெண் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இந்தநிலையிலேயே சிங்கப்பூர் பிரஜை, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது!!

Hang

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்…

நீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளது.
அண்மைக் காலமாக மரண தண்டனை விதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறைச்சாலைகளில் இடப் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரண தண்டனை கைதிகளை தடுத்து வைத்திருப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் 600 பேர் வரையில் மேன்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 30 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் சில தசாப்தங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.

இதேவேளை, மரண தண்டனையை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMO ஆபத்தானதா?

IMO

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன. இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது.போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்திற்கு போட்டியான இன்று பல மென்பொருள் சந்தையில் விடப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது பலரின் கவனத்தை ஈர்ந்துள்ள முக்கிய மென்பொருளாக IMO மாற்றம் பெற்றுள்ளது.

முகப்புத்தகம் (Facebook), ஸ்கைப் (Skype), டுவிட்டர் (Twitter), வட்ஸ்அப் (Whats app), வைபர், (Viber) போன்று IMO மென்பொருளும் மிகவும் வேகமாகவும், பிரபலமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும்.

இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற மென்பொருட்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்.

உதாரணமாக நாம் உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும்.

இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது. குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே அழைப்பு சென்றுவிடும்.

இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக அழைத்தது என்று. மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் அழைக்க முயற்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது. எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்.

ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள். பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்.

இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர். invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்றுவிடும்.

இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்புத் தொகையிலிருந்தே (BALANCE) பணம் வசூலிக்கப்படும் விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்

எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

தினமும் முட்டை சாப்பிடுகின்றீர்களா : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

Egg

நாம் உண்ணும் முட்டையில் ஏராளமான சத்துகள் மற்றும் கொழுப்புக்களும் அடங்கியுள்ளது. அதே சமயம் முட்டை சாப்பிடுவது குறித்த பல சந்தேகங்கள் நமக்கு இருக்கிறது. அது பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானதாகும்.

சத்துகள் நிறைந்தது

முட்டையில் அயோடின், அன்டி-அக்ஸிடண்ட்டுகள், ஏ, பி2 மற்றும் டி விட்டமின்கள், கோலின் மற்றும் புரதங்கள் ஆகியவை உள்ளன. மேலும், ஒரு நாளுக்கு நமக்குத் தேவைப்படும் கொலஸ்ட்ராலில் பாதி அளவு முட்டையிலேயே கிடைக்கிறது.

எத்தனை முட்டை சாப்பிடலாம்?

வாரத்திற்கு ஆறு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்று ஒரு கருத்து நிலவியது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள் அவதானம்

பல முக்கிய ஓமோன்களின் உற்பத்திக்கும் அத்தியாவசியமானது கொலஸ்ட்ரோல் மட்டுமே. ஒரே கவலை என்னவென்றால், முட்டையில் அதிக கொலஸ்ட்ரோல் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதன் மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும்.

மூளை வளர்ச்சிக்கு உதவும்

உடல் எடை குறைவதில் முட்டையின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூளையின் வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதயம் பாதிக்குமா?

முட்டையில் அதிக அளவில் கொலஸ்ட்ரோல் இருப்பதாகவும், அதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு தவறான நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் நம் உடலில் கல்லீரல் உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான பொருளே கொலஸ்ட்ரோல் தான்.

வவுனியா மாவட்டத்தில் அரச அதிகாரிகள் மக்களை புறக்கணிப்பு செய்கின்றார்கள்!!

20160322_113555

நேற்று (22.03.2016) காலை 10 மணியளவில் வவுனியா வைரவப்புளியங்குளத்தில், வவுனியா மீள் குடியேறியோர் நலன் பேணும் அமைப்பின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைவர் மா.ரெனிதாஸ் ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்தார்..

வவுனியா மாவட்டத்திலுள்ள கிராமங்களில் குறைபாடுகளை இனங்கண்டு அதற்கான வேவைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வவுனியா மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்ததன் பிற்பாடு குடியேற்றப்பட்ட மக்கள் சில கிராமங்களில் ஒரு மலசலகூடம் இல்லாத நிலையில் கூட வாழ்ந்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை வழங்கி ஆசனங்களை கைப்பற்றிய பின்னர் மக்களை கண்டுகொள்வதில்லை.

கடந்த கால யுத்தத்தின் காரணமாக மக்கள் பயந்த நிலையிலேயே காணப்படுகிறார்கள். பெரும்பாலான கிராமங்களில் லஞ்சம், பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், இளைஞர்களின் மதுபோதை பாவனைகள், அரச அதிகாரிகளின் மக்கள் புறக்கணிப்பு தன்மைகள் எமது மாவட்டத்திலே மலிந்து காணப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை மக்கள் சந்திக்க முடியாத நிலமையே காணப்படுகிறது. இவ்வாறாக மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஓரங்கட்டப்படுவார்கள் என சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிந்தருக்கிறது ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பால் கணவர்களை இழந்த பெண்கள் மற்றும் அனாதை சிறுவர்களுக்கு எந்தவிதமான திட்டங்களும் தயாரிக்கப்படவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ளும் இலக்குடன் மாத்திரமே செயல்ப்படுகிறது மக்கள் நலனில் எந்தவிதமான அக்கறையும் செலுத்துவதில்லை என குற்றஞ்சாட்டினார்

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா  இன்று  செவ்வாய்கிழமை(22/03/2016) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது. தொடர்ந்து கலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர்  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து  ஒன்பது  மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி  இருப்புக்கு கலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது.

மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.  தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல்  ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மூன்றுமணியளவில் பிராயசித்த  அபிசேகமும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும்  தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

படங்கள் வீடியோ :கஜன்

DSC02643 DSC02660 DSC02674 DSC02693 DSC02702 DSC02705 DSC02712 DSC02741 DSC02750 DSC02754 DSC02767 DSC02785 DSC02788 DSC02797 DSC02811 DSC02833 DSC02844 DSC02847 DSC02852 DSC02853 DSC02881 DSC02883 DSC02884 DSC02903 DSC02912 DSC02913 DSC02916 DSC02920 DSC02922 DSC02924 DSC02938 DSC02942 DSC02947 DSC02964 DSC02975 DSC02995 DSC02998 DSC02999 DSC03000 DSC03011 DSC03013 DSC03018 DSC03022 DSC03024 DSC03026 DSC03027 DSC03029

வவுனியா கந்தன்குளத்தில் வசிக்கும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

 
வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளத்தில் வசிக்கும் 56 வறுமைகோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு அவர்களது கற்றல் செயற்பட்டை சிரமமின்றி கொண்டு செல்ல கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி கந்தன்குளம் சன்ஸ்டார் விளையாட்டு கழகம், தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக, வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்திடம் விடுத்த வேண்டு கோளுக்கு அமைவாக கடந்த 20.03.2016 அன்று கந்தன்குளத்தில் வைத்து பிரான்சில் வசிக்கும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழக உறுபினர்களின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழக தலைவர் எ.ரெக்ஸ்சன், உறுப்பினர் துவின்ஷன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், சன் ஸ்டார் விளையாட்டு கழகத் தலைவர் பெ.சிவானந்தன், பொருளாளர் நா.நந்தகுமார், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் மு.நாகலிங்கம் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள், சமுக அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

DSCN1609 DSCN1614 DSCN1619 DSCN1621 DSCN1628 DSCN1630 DSCN1632 DSCN1637 DSCN1638 DSCN1643 DSCN1646 DSCN1647 DSCN1654 DSCN1657 DSCN1660 DSCN1663 DSCN1666 DSCN1669 DSCN1676 DSCN1679

வவுனியா வடக்கு கொல்லபுளியங்குளம் ஸ்ரீராமகிருஸ்ண அ.த.க.பாடசாலையின் விளையாட்டுப் போட்டி!!

 
வவுனியா வடக்கு கொல்லபுளியங்குளம் ஸ்ரீராமகிருஸ்ண அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி.லோ.புஸ்பராணி தலைமையில் நேற்று முன்தினம் (21.03.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

01 02 03 4 6 8 9 10 IMG_1411 IMG_1420 IMG_1422 IMG_1427 IMG_1429 IMG_1435 IMG_1436 IMG_1442 IMG_1443 IMG_1445 IMG_1449 IMG_1450 IMG_1451 IMG_1455 IMG_1458 IMG_1465 IMG_1466 IMG_1468 IMG_1471

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!

NZ

டி20 உலக கிண்ணத்தின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதை தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து மார்டின் குப்திலும், அணி தலைவர் வில்லியம்ஸனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். குப்தில் அதிரடி காட்ட வில்லியம்ஸன் நிதானமாக விளையாடினார். குப்தில் அதிரடியால் நியூசிலாந்து 6 ஓவர் முடிவில் 58 ஓட்டங்களை குவித்தது.

இந்நிலையில் வில்லியம்ஸன் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய முன்றோ, அண்டர்ஸன், ரோன்ஞ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் 40 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குப்திலும் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி அதிக ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணறியது.

இறுதிகட்டத்தில் ரொஸ் டெய்லர் அதிரடி காட்ட நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷர்ஜீல் கான் மற்றும் அகமட் சேஷாத் களமிறங்கினர்.

இருவரும் பொறுப்புடன் விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இந்நிலையில் 9 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 47 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஷர்ஜீல் கான் ஆட்டமிழந்தார்.

அப்போது பாகிஸ்தான் 5.3 ஓவர்களில் 65 ஓட்டங்களை எடுத்திருந்தது. சிறிது நேரத்தில் சேஷாத்தும் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும் பின்னால் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் அந்த அணி தடுமாற தொடங்கியது. உமர் அக்மல் 24 ஓட்டங்களிலும் அப்ரிடி 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அரை இறுதிக்கும் அணி அந்த தகுதி பெற்றுள்ளது.

இலங்கையில் அறிமுகமானது Street View!!

Street view

இலங்கை பாதைப் படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்.

கூகுள் இன்று இலங்கையில் வெளியிட்டுள்ள இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவணைக்கு உள்ளது.

கிடைக்கும் பாதைப் படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம்(Google Maps) தெரிவிக்கிறது.

கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நிலை படங்களைக் அணுக முடியும், அல்லது வரைபடத்தின் கீழ் வலது மூலையிலிருக்கும் மஞ்சள் “pegman” Icon அழுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 21.03.2016 நேற்று  சப்பர திருவிழா இடம் பெற்றது. இன்றைய தினம் மாலை நான்கரை மணியளவில் யாக பூசையும் ஐந்தரை மணிக்கு தம்ப பூசையும் அதனை தொடர்ந்து வீ.கரன் குழுவினரின் சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி இடம்பெற்றது. அருளகம் சிறுவர்களது சிறப்பு பண்ணிசைகச்சேரிஇடம்பெற்றது.

தொடர்ந்து மாலை எட்டுமணியளவில் வசந்த் மண்டப பூசை இடம்பெற்று ஒன்பது மணியளவில் வெடியோசைகள் வானை பிளக்க எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலியோர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதுவும் வவுனியாவில் மிக உயர்ந்த வானுயர்ந்த சப்பரத்தில் திரு வீதி உலா வந்தனர்.

படங்கள் :கஜன்

DSC02634 DSC02632 DSC02631 DSC02625 DSC02619 DSC02614 DSC02598 DSC02591 DSC02586 DSC02569 DSC02565 DSC02546 DSC02545 DSC02538 DSC02536 DSC02533 DSC02531 DSC02524 DSC02523 DSC02507 DSC02506 DSC02498 DSC02496 DSC02493 DSC02484

வவுனியா பூந்தோட்டம் ம.வி, திருஞான சம்பந்தர் வித்தியாலயம், பரமேஸ்வரா வித்தியாலய பெறுபேறுகள்!!

 
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயம், திருஞான சம்பந்தர் வித்தியாலயம், அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.

20160321_150907

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

பீப் பாடல் விவகாரம் : மீண்டும் அனிருத்துக்கு சிக்கல்!!

Anirudh

பீப் பாடல் விவகாரம் தொடர்பான பிரச்சனை முடிந்தது என்று எதிர்ப்பார்த்த நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது. அண்மையில் தான் சிம்பு, அனிருத் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் பொலிசில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், கோவை 2வது நீதிமன்றில் கொங்குநாடு அருந்ததி பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் சிவாஜி ஆகியோர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் சிம்பு சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான ஆணையை உயர்நீதிமன்றத்தில் பெற்று இருப்பதாக கூறி, அந்த ஆணையை சமர்ப்பித்தார், அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

இசையமைப்பாளர் அனிருத் சம்மனை பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.

பின்னணிப் பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து மக்களை ஏமாற்றிய பிரபல தொலைக்காட்சி!!

Anand

அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று பிரம்மாண்ட குரல் தேடல் என்ற பெயரில் பாடல் நிகழ்ச்சி நடத்தியது. அதன் 5வது சீசனில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றி பெற்றார்.

ஆனால் இவர் ஏற்கெனவே ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

புதிய குரல்கள் அறிமுகப்படுத்தவே இந்த போட்டி என்று சொல்லிக் கொண்டு ஏற்கெனவே அறிமுகமாகி பல படங்களில் பின்னணியும் பாடிய ஆனந்தை அத்தொலைக்காட்சி தேர்வு செய்திருப்பது பெறும் மோசடி என்று பலர் தங்கள் வலைப்பகுதிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அவர் பாடிய பாடல்களின் விவரம் இதோ
இந்த வான்வெளி விடியாதோ – ஆரோகணம்
யார் வீட்டு மகனோ – நீர்ப்பறவை
10 எண்றதுகுள்ள – கானா கானா
இவன் வேற மாதிரி – தனிமையிலே

ஆபாசமாக வெளியான நடிகை ஜோதி கிருஷ்ணாவின் புகைப்படம்!!

Jyothi Krishna

போட்டோகிராப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை ஆபாசமாக புகைப்படம் வெளியிட்ட செயலுக்கு நடிகை ஜோதி கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள திரையுலகில் மிகப்பிரபல நடிகையான ஜோதி கிருஷ்ணா, சில பொலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

பொதுவாக தென்னிந்திய திரையுலகில், நடிகைகளை கொண்டு போட்டோஷீட்டுகள் நடத்தப்படுவது வழக்கம், இதனை பார்க்கும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தில் இருந்து நடிகைகளின் தலையை மட்டும் போட்டோகிராப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட் செய்து, நிர்வாணமாக இருக்கும் உடல்களில் இணைத்து சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

இதுபோன்றே, நடிகை ஜோதி கிருஷ்ணாவின் புகைப்படமும் ஆபாசமாக வெளியிடப்பட்டுள்ளது, இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய ஆபாசபுகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியானதை எனது நண்பர்கள் எனக்கு தெரியப்படுத்தினார்கள், எனது முகநூல் பக்கத்தினை 1.5 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.

இதுபோன்று நடிகைகளின் புகைப்படங்களை ஆபாசமாக வெளியிடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும், தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் வருத்தம் அடைந்தேன் என்று கூறியுள்ளார், கடந்த ஆண்டு நடிகை ஆஷா சரத் மற்றும் கேரள தொலைக்காட்சி நடிகையான காயத்ரி அருண் ஆகியோரின் புகைப்படத்தினை ஆபாசமாக வெளியிட்ட குற்றத்திற்காக இரண்டு வாலிபர்க கேரளாவில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.