பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 1 ஓட்டத்தால் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி!!

IND

டி20 உலக கிண்ணம் தொடரின் சூப்பர் 10 ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

டி20 உலக கிண்ணம் தொடரில் பெங்களூரூவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா விளையாடியது.
நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், தவானும் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை குறையவாக இருந்தது. இந்நிலையில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரோகித் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே தவானும் ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 23 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து களமிறங்கிய கோலியும், ரெய்னாவும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

இதனால் இந்திய அணி 11 ஓவர் முடிவில் 73 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 24 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பாண்டியா 2 பவுண்டரி மற்றும் 1சிக்ஸர் அடித்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டிகள் சரியாக விளையாடாத ரெய்னா இந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆடினார். இந்நிலையில் 1 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உட்பட 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ஓட்ட வேகம் குறைந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை மட்டுமே இந்தியா குவித்தது.

டோனி 13 ஓட்டங்களிலும் அஸ்வின் 5 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேசம் துடுப்பெடுத்தாட தொடங்கியது. முகமது மித்துன் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாலும், தமிம் இக்பால் மற்றும் சபீர் ரஹ்மான் இருவரும் சிறப்பாக ஆடினர்.

இதனால் வங்க தேசத்தின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தமிம் இக்பால் ஆட்டமிழந்தார்

இதையடுத்து சாகிப் அல் ஹாசன் களமிறங்கினார். இருவரும் இந்திய வீரர்களின் பந்து வீச்சை திறமையான சமாளித்து ஆடினர்.

அணியின் எண்ணிக்கை 69ஆக இருந்த நிலையில் சபீர் ரஹ்மான் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொர்டாஷா 6 ஓட்டங்களிலும், சாகிப் 2 சிக்ஸர் உட்பட 22 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 12 ஓவர்களில் 95 ஆக இருந்தது. வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கு சம அளவில் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முகமதுல்லா மற்றும் சவும்யா சர்கார் இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவிக்க முயன்றனர். அவர்களை வெளியேற்ற இந்திய வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தனர். எனினும் ஐந்து ஓவர்களுக்கு பிறகே இதற்கு பலன் கிடைத்தது.

1 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சவும்யா சர்கார் ஆட்டமிழந்தார். 6 பந்துகளுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தால் வங்கதேசம் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.கடைசி ஓவரை பாண்டியா வீசினார்.

அந்த ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்த ரஹிம் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் முகமதுல்லாவும் ஆட்டமிழந்தார்.

எனவே இறுதிப் பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டத்தின் கடைசி பந்தை சிறப்பாக வீசிய பாண்டியா சுவகட்டாவை ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு!!(படங்கள்)

 
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் இன்று (23.03.2016 புதன்கிழமை இடம்பெற்றது.

காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக ஹொரவப்பொத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி தீமிதித்து சென்றனர் .

வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கபடுவது வழமையாகும்.

984109_1177019928984625_2132962566824689283_n 995305_1177011068985511_4400339241486094220_n 1001021_1177021935651091_8691121053545867269_n 1916232_1177011555652129_7890885081411681240_n 1931271_1177011035652181_384337346051761750_n 1934563_1177010962318855_4128336465911327692_n 1934937_1177022062317745_784767971155897809_n 1936470_1177011515652133_7630520315179554888_n 10274305_1177011198985498_3706937353217628330_n 10329207_1177011008985517_3869185504484788137_n 10366073_1177011812318770_3483815582479394915_n 10391366_1177011618985456_8862147042967619339_n 10570277_1177019712317980_3178679227468954792_n 12049644_1177013118985306_4544438555937771618_n 12108755_1177011768985441_7870071186665401938_n 12523853_1177021208984497_9110086711341719103_n 12524428_1177020995651185_9137387476060287635_n 12670797_1177011328985485_1839567274756560864_n 12800247_1177018265651458_1989317746064529643_n

‘மீன்களை பாதுகாப்போம்’ : மீன்களைக் கொண்டு நிர்வாண புகைப்படங்கள்!!

 
கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதாவது மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே எம்மா தோம்சன் மற்றும் அவரின் கணவர் கிரெக் வைஸ் ஆகியோர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து இவ்வாறு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

1 2 4 5 6 7 8 3272CE2F00000578-0-Gary_Avis-m-24_1458644595872

சூனியக் கடவுளின் கோவில் உடைப்பு : வீடுகள் தீப்பற்றுவதால் மக்கள் பீதி!!

fire

வீடு ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சூனிய கடவுளுக்குரிய கோவிலை உடைத்தநிலையில், குறித்த கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டினுள் ஆங்காங்கு மர்மமான முறையில் தீப்பற்றுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் வென்னப்புவ லுனுவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கோவிலை உடைத்த பின்னரே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இதனால் பிரதேச மக்கள் பீதியடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தானாபுர பிரதேசத்தில் 7ஏ, இல.109 இல் அமைந்துள்ள கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டின் உரிமையாளர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் , இந்நிலையில் குறித்த வீட்டை மற்றுமொரு குடும்பத்தினருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளனர்.

வாடகைக்கு குடியேரியவர்கள் வீட்டின் அருகில் சூனியக்கடவுளுக்கு சிறிய கோவில் ஒன்றை அமைத்து வழிப்பட்டு வந்துள்ளனர். இதனை அவதானித்த வீட்டின் உரிமையாளர் குறித்த கோவில் தமது ஆகமத்துக்கு எதிரானது எனவும் இதனால் கோவிலை உடைக்குமாறும் கோரி பலவந்தமாக உடைத்து அதனை அகற்றியுள்ளார்.

இதனையடுத்தே குறித்த வீட்டினுள்ள இவ்வாறான மர்ம சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நேற்று முன்தினம் சமைப்பதற்காக அரிசியை கையில் எடுத்த போது அரிசி திடீரென தீப்பற்றிக்கொண்டுள்ளதாகவும் குறித்த வீட்டில் உள்ள பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒரு நாளைக்கு பத்து தடவைகளுக்கு மேல் இவ்வாறு தீப் பற்றிகொள்வதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நிர்வாணத்தைக் கண்டு அஞ்சாமல் பெண்களுக்காக போராடும் சிறுமி!!

Girl

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி ஒருவர் தன்னுடைய நிர்வாண படங்களை வெளியிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை பெரிது படுத்தாமல் தன்னை போல பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தனது முகத்தை வெளிப்படையாக காட்டி போராடி வருகின்றார். அவரது இச் செயல் உலகவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆபிரிக்காவின் சாட் நாட்டைச் சேர்ந்த சொகவுரா என்ற 16 வயது சிறுமி பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது காரில் வந்த 5 பேர்கொண்ட கும்பல் அவரை கடத்தியுள்ளது. பின்னர் ஊருக்கு வெளியில் உள்ள இடத்தில் வைத்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களில் வாரிசுகள் ஆவர். இதனால் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத சொகவுரா தாம் முன்னரே வசித்த பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

மேலும் தனக்கு நேர்ந்த சம்பவத்துக்கு நீதி வேண்டி அவர் போராட தொடங்கினார். எனவே, இந்த பலாத்கார சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளிப்படையாக பேசினார். மேலும் தனது முகத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவரது செயல் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாலியல் துஷ்பிரயோகத்தின் போது எடுத்த சொகவுராவின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

எனினும் நிர்வாண கோலத்தில் தனது மானத்தை காப்பாற்றுவதற்காக கதறி அழும் சொகவுராவின் புகைப்படங்கள் பார்ப்பவர்களில் மனதை பெரிதும் பாதித்துள்ளது.

இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சொகவுரா கூறியதாவது, என்னை போன்ற பல சிறுமிகளும் பெண்களும் இவ்வாறு பலாத்காரத்துக்கு உள்ளாகுகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவு நடைபெற்று வருகின்றன. போதிய கல்வியறிவு இன்மை, மூட பழக்க வழக்கங்கள் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

Body - Copy

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதன்டி பிரதேச காட்டுப் பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.காசல்றீ நீர்தேக்கத்திலிருந்து விமலசுரேந்திர நீர்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் பகுதியிலுள்ள சிறிய நீரோடையிலிருந்து குறித்த எலும்புக் கூட்டினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திற்கு விறகு சேகரிப்பதற்கு சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கமைய ஹற்றன் பொலிஸார் குறித்த எலும்புக் கூடுகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ,குறித்த எலும்புக்கூடு யாருடையது என்பது தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Body

வவுனியாவில் முகப்புத்தகத்தில் காதலின் பெயரில் கொள்ளையடித்த இளைஞன் கைது!!

Facebook

முகப்புத்தகம் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடம் காதல் வலைவீசி நகைகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் இன்று(23.03.2016) தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் முகப்புத்தகம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி தன்னை ஒரு பணக்காரனாக காட்டி அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்து நகைகளை அபகரிக்க முற்பட்டவேளை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகனாகவும், கோடீஸ்வரனாகவும் முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தி பல பெண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை நம்பி வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்று குறித்த இளைஞனை சந்தித்த போது அந்த யுவதியிடம் இருந்த நகைகளை புதிதாக்குவதாக ஆசைவார்த்தைகளை கூறி நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு யுவதியை ஏமாற்றி நகைகள் திருடுவதற்காக வவுனியாவுக்கு வந்த வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து யுவதிகளால் பறிகொடுக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதுடன், அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இதேவேளை குறித்த நபர் நெல் கொள்வனவு செய்து வரும் தனியார்களிடம் கூடுதலான விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக கூறி மில் உரிமையாளர்களிடம் அழைத்துச் சென்று அவற்றை இறக்கிவிட்டு மில் உரிமையாளர்களிடம் குறைந்த விலையில் பணத்தை பெற்றுக் கொண்டு அவற்றை நெல்லினை கொண்டு வந்தவர்களுக்கு கொடுக்காது தலைமறைவாகியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் குறித்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்ததுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் விசேடதேவையுடையவர்களுக்கு மலசலகூடங்கள் அமைப்பதற்கு நிதி வழங்கல்!!

 
வவுனியா வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் குடும்பங்களுக்கான விசேட மலசலகூடங்கள் அமைப்பதற்கான நிதியுதவி வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி 30 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

ஏற்கனவே வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடையவர்களில் 217 குடும்பங்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக மேலும் 321 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின் உதவிச்செயலாளர் திரு.ஜெனிற்றன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.பரந்தாமன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.வாசன், மாகாண சுகாதார அமைச்சரின் வடக்கு பிரதேச இணைப்புச்செயலாளர் திரு. சஜீவன் உட்பட வடக்கு செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

IMG_0379 IMG_0385 IMG_0387 IMG_0388

வவுனியாவில் மதுபானச்சாலைகளை மூடுமாறு கோரி நகரெங்கும் சுவரொட்டிகள்!!

IMG_8922

கிராமங்களில் மக்களின் வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள மதுபானக்கடைகளை இழுத்து மூடுமாறு கோரி மத்திய, மாகாண அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கும் சுவரொட்டிகள் சமூக விழுப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் வவுனியா நகர் மற்றும் கிராமப் புறங்களில் இன்று (23.03.2016) ஒட்டப்பட்டுள்ளது.

இச்சுவரொட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஊடக பேச்சாளர் எஸ்.சதீஸ்குமார்..

2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எமது பிரதேசத்தில் நடைபெறும் குற்றச்செயல்களான சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள், கொலை, கொள்ளை மற்றும் விபத்து போன்ற அனைத்து குற்றச்செயல்களுக்கும் மூல காரணமாக போதைப்பொருள் பாவனை அமைந்துள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தை இலக்கு வைத்து கிராமப்புறங்களை நோக்கி சாராயக்கடைகள் உருவாகிவருவதாக குற்றஞ்சாட்டிய அவர் எமது மக்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கும் நோக்கோடு இவை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

எனவே இதை ஒரு தேசிய பிரச்சனையாக கருதி கிராமப்புறங்களிலுள்ள மதுச்சாலைகளை மூடுமாறும் புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய, மாகாண அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றும்வரை மக்களை அணி திரட்டி எமது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

IMG_8905

பரீட்சையில் சித்தியடையாத விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

Hang

வெளியான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் திருப்தி இல்லாமையால் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

புஸ்ஸல்லாவை, நயாப்பனை தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளின்படி குறித்த மாணவன் சித்தியடையாத காரணத்தினாலேயே இந்த முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

கலாபவன் மணி மரணத்திற்கு மாமனார் காரணமா : விசாரணையில் திடீர் திருப்பம்!!

Kalabhavan-Mani

கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது மாமனார் காரணமாக இருக்கலாம், என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.

மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் தற்கொலையா இல்லை திட்டமிட்ட கொலையா என்று கேரள பொலிசார் விசாரித்து வருகிறது. இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மணியின் மரணத்திற்கு அவரது உடலில் இருந்த பூச்சிகொல்லி மருந்துதான் காரணம் என்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மணியின் மாமனார் சுதாகரன் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தான் விவசாயம் செய்யவே அந்த மருந்துகளை வாங்கியதாக சுதாகரன் தெரிவித்திருக்கிறார்.

மணியின் உடலில் கண்டறியப்பட்ட குளோரோபைரிபோஸ் பூச்சிகொல்லி மருந்தும் அவரது மாமனார் வாங்கியதாக கூறப்படும் மருந்தும் ஒன்றுதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இது தொடர்பாக அவரது மாமனாரிடம் பலமுறை விசாரணை நடத்தியும், போதுமான தகவல்களைப் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மற்றொருபுறம் மணியின் மரணத்தால் யாருக்கு லாபம் என்றும் பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.

12 வீடுகள் மற்றும் ஏக்கர் கணக்கிலான நிலங்களுக்கு மணி சொந்தக்காரராக இருந்துள்ளார். எனினும் அவரது பெயரில் 1.5 கோடிகள் மட்டுமே வங்கி இருப்புத் தொகையாக இருந்துள்ளது.

சொத்துக்கள் மணியின் பெயரில் இருந்தாலும் கூட கொடுக்கல், வாங்கல் விவரங்கள் அனைத்தும் அவரது மாமனார் பெயரிலேயே இருந்துள்ளன. முதலில் மணியின் மனைவி பெயரில் இருந்த சொத்துக்கள், நாளடைவில் அவரது மாமனார் மேற்பார்வைக்கு வந்துள்ளன.

சந்தேகத்தின் பெயரில் மாமனார் சுதாகரன், மனைவியின் உறவினர் மற்றும் மணியின் நெருங்கிய நண்பர் விபின், ஆகியோரை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இறப்பதற்கு முன் மணி கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக, அவரது உதவியாளர்கள் விபின், முருகன், மற்றும் அருண் ஆகியோர் கூறியுள்ளனர்.

கல்லீரல் தொடர்பான சிகிச்சைக்குப் பின்னர் மணி மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்ததாகவும், தங்களை வேறு வேலைக்கு செல்லும்படி அவர் கூறியதாகவும் இம் மூவரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எனினும் உதவியாளர்கள் மூவரையும் மணி வேறு வேலை தேடச் சொன்னதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா என்ற ரீதியிலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

6 தனிப்படை அமைத்தும் மணியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது, காவல்துறைக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞர் கைது!!

Abuse

13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தளம், முல்லிபுரம் பிரதேசத்தில் வசிக்கக்கூடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேகநபரின் அயல்வீட்டில் வசித்து வருவதுடன், தேவையொன்றின் நிமித்தம் குறித்த சிறுமி சந்தேகநபரின் வீட்டிற்கு சென்ற போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தனது மகளுக்கு இடம்பெற்ற சம்பவத்தை தெரிந்து கொண்ட தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பிரசல்ஸ் தாக்குதலையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

Katunayake

பிரசல்ஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு சம்பந்தமாக வெவ்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் எனினும் நேற்றைய தினம் முதல் விமான நிலையத்திற்கு மேலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகார சபை கூறியுள்ளது.

பயணிகளின் அனைத்துப் பயணப் பொதிகளும் பல இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் மூலம் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்பில் தாம் மனம் வருந்துவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கைது!!

12

பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று செவ்வாய்க் கிழமையன்று நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய ஊடகங்கள் கூறுகின்றன.

விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் செவென்டம் (Zaventem) விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

விமான நிலையத்திலும் மெட்ரோ நிலையத்திலும் நடந்த இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கிளிநொச்சியில் மாணவியை பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற அதிபர் கைது!!

 
கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை நேர வகுப்பு தொடர்பில் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார்.

ஆனால் குறித்த மாணவியின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளமையினால் அந்த தகவலை அதிபருக்கு தெரியப்படுத்த மாணவி பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போதே தனிமையில் இருந்த அதிபர் குறித்த ஒன்பதாம் ஆண்டு மாணவியை தனது மடியில் இருத்தி பெண்களுக்குரிய உடல் அங்கங்களை பிடித்து வருடியதோடு முத்தமும் கொடுத்துள்ளார்.

இதனால் மாணவி குழப்பமடைந்து அதிபரின் பிடியிலிருந்து விடுப்பட்டு வெளியேறிய போது 1500 பணத்தை வழங்கி வெளியில் தகவலை கூறவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மாணவி பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதேவேளை நேற்று செவ்வாய் கிழமை விடுமுறை நாளன்றும் அதே பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஏழு மாணவன் ஒருவரிடம் குறித்த மாணவியை பாடசாலைக்கு வருமாறு அதிபர் தகவல் அனுப்பியுள்ளார். ஆனால் மாணவி செல்லவில்லை.

இந்த நிலையில் குறித்த மாணவி சக மாணவிகளிடம் அதிபர் இவ்வாறு தன்னோடு நடந்துகொண்டதாகவும் எனவே உங்ளையும் அதிபர் அழைத்தால் செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அத்தோடு நேற்று செவ்வாய்க்கிழமை தனது பெற்றோர்களிடம் காரணம் தெரிவிக்காமல் இனி பாடசாலைக்கு செல்லமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதன் போதே குறித்த சம்பவம் பற்றி மாணவியின் நண்பி ஒருவரினால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டமையினை அடுத்து இன்று பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் ஒன்று திரண்டதோடு பொலிஸாருக்கும் தகவல் அனுப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் பாடசாலை அதிபரான சந்தேக நபர் நாகராசா உதயகுமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் கரைச்சி கோட்டக் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் ஆகியோரும் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்துள்ளனர்.

-தமிழ்வின்-

1 2 3 4

மசாஜ் நிலையங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்!!

slider_img4

மசாஜ் நிலையங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மசாஜ் நிலையங்களை சோதனையிடுவது தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதால், புதிய சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.குறித்த சட்டமூலம் தொடர்பான வரைவு சட்ட வரைவு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், குறுகிய காலத்திற்கு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மசாஜ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மஹிபால குறிப்பிட்டுள்ளார்.