பாணின் விலை அதிகரிப்பு!!

Bread

450 கிராம் பாணின் விலையை நான்கு ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் வாகீசன் 9A சித்தி பெற்று முதலிடம்!!

Vipulaananthaa

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி விபுலானந்தா கல்லூரி மாணவன் வாகீசன் 9A சித்தி பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

S.சதுர்சி 8A 1B
S.மிதுர்ஷன் 8A 1B
B.வினோதினி 8A 1C
S.சஜீவன் 8A 1க

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

வவுனியாவில் நடைபெற்ற யுத்த காலத்தில் மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

 
வவுனியா மாவட்ட பொலிஸ் பொதுமக்கள் நட்புறவு பிரிவினரின் ஏற்பாட்டில் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று(21.03.2016) வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யுத்த காலத்தில் மரணித்த பொலிஸ் வீரர்களின் நினைவாக, பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிகளுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது சேவைகள் நினைவுகூறப்பட்டன.

குறித்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஈ.எம்.மஹிந்த ஏக்கநாயக்க, வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகள், இறந்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு மடுக்கந்தையில் பொலிஸாரால் இரத்ததானம் முகாம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

news (1) news (3) news (4) news (5)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் 7 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

VTMMV

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் 7 பேர் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர். அத்துடன் 24 மாணவர்கள் 8A B சித்தியினைப் பெற்றுள்ளனர்

9A பெறுபேற்றை பெற்ற மாணவர் விபரம்

கனகரட்ணம் ரினுசான் 9A
வதனகுமார் மோகீசன் 9A
மகேஸ்வரன் தினோஜன் 9A
ஜெயபாலன் ஜனார்த்தனன் 9A
பாலசுந்தரம் துவாரகன் 9A
சச்சிதானந்தன் கௌரீசன் 9A
விவேகானந்தராசா டினோஜன் 9எ
8A பெறுபேற்றை பெற்ற மாணவர் விபரம்

பாலச்சந்திரன் அயியுக்தன் 8A B
அருட்செல்வம் உதிஸ்திரன் 8A B
சிவநேசன் செயேன் 8A B
து. யுகதீஸ்வரன் 8A B
தர்மராஜா திருவழகன் 8A B
யோகநாதன் தருணன் 8A B
சுபாஸ்கரன் துஷாரகன் 8A B
விஜேந்திரன் விவேகா 8A B
துரைராஜா யுகதீஸ்வரன் 8A B
சுந்தரலிங்கம் செந்தூரன் 8A B
மகாதேவன் கபிலன் 8A B
மகேந்திரராஜா யாதவன் 8A B
க.கி. ஜனார்த்தனன் 8A B
அன்ரனி ஜோர்ஜ் விக்டர்ராஜா ஜஸ்ரின் 8A B
முருகானந்தன் சங்கீரத்தன் 8A B
மகேந்திரராஜா அனுஜன் 8A B
பால்ராஜா அட்சயா 8A B
சிவகுமார் சபிஷன் 8A B
வரதராசா துவாரகீசன் 8A B
செந்தூர் முருகன் தர்சிகன் 8A B
குகநேசன் செந்தூரன் 8A B
செல்வராஜா பிரவீனன் 8A B
சிவாநந்தராசா பிரித்தியோமசர்மா 8A B
தவலிங்கரட்ணம் மயூரிகா 8A B

சிறப்பான பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமைசேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!!

 
வவுனியா வடக்கு பிரதேச சபையினால் உலக வங்கியின் நிதி அனுசரனையில் DFAT வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கென கலாசார மண்டபம் அமைப்பதற்கான வேலையின் அடிக்கல் நாட்டும் விழா நேற்று (21.03.2016) பிரதேச சபையின் செயலாளர் திரு.க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான M.தியாகராஜா, G.T.லிங்கநாதன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமன், நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள், பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

942883_767263823418457_4826298895957969084_n 1929761_767265616751611_7707295896171426609_n DSC_0409 DSC_0417 DSC_0421 DSC_0423 DSC_0426 DSC_0428 DSC_0430 DSC_0436

வவுனியா சிதம்பரபுரம் முகாம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம்!!

 
வவுனியா சிதம்பரபுரம் முகாமில் வசிக்கும் ஆண்டு 1 தொடக்கம் 11 வரை கல்வி கற்க்கும் 46 மாணவர்களுக்கு நகரசபை ஊழியரும், சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் கோவில் பொருளாளருமான கே.ரவிசந்திரன் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரான்சில் வசிக்கும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்களால் கற்றல் உபகரணங்கள் கடந்த 19.03.2016 அன்று சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் கோவிலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எ.ரெக்ஸ்சன், செயலாளர் அ.கிரிசாந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் கோவில் பொருளாளர் ரவிசந்திரன், பழனி முருகன் ஆலயத் தலைவர் அ.மாதவன் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

DSCN1542 DSCN1544 DSCN1546 DSCN1548 DSCN1551 DSCN1556 DSCN1559 DSCN1560 DSCN1563 DSCN1568 DSCN1570 DSCN1573 DSCN1576 DSCN1580 DSCN1582 DSCN1583 DSCN1584 DSCN1594 DSCN1598 DSCN1601 DSCN1603

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்திற்கு 330 கோடிக்கு காப்பீடு!!

Enthiran 2

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படம் 330 கோடி ரூபாவிற்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய திரை உலகில் அதிகபட்ச காப்பீட்டு வசதி பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இது பெறுகிறது.

இந்தியாவில் திரைப்படத்திற்கு காப்பீடு செய்யும் வழக்கத்தை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ் கய் ஆரம்பித்து வைத்தார். 1999 ஆம் ஆண்டில் வெளியான அவரது ‘டால்’ திரைப்படம் முதல் முறையாக காப்பீடு செய்யப்பட்டது.

திரைப்படத்திற்கு காப்பீடு என்பது படப்பிடிப்பு தொடங்கி, திரையரங்கில் வெளியாவது வரை நீடிக்கிறது. இதன்படி படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, பொருள்கள் சேதம் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது.

திரையுலகில் ஏற்கனவே பல படங்கள் பெரும் தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன தில்வாலே, ஏர்லிப்ட் ஆகிய படங்கள் 100 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டன. அமீர்கான் நடித்த பி.கே மற்றும் சல்மான் கானின் கிக் ஆகிய படங்கள் தலா 300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது.

இதுவரை அந்த இரண்டு படங்கள்தான் காப்புறுதி விடயத்தில் சாதனை அளவுகளை தொட்டிருந்தன. ஆனால் ரஜினியின் ‘எந்திரன் 2’ 330 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு முந்தைய சாதனை அளவுகளை முறியடித்திருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்க ‘எந்திரன் 2’ மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் ரஜினி ஜோடியாக எமி ஜக்சன் நடிக்கிறார். பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லன் பாத்திரம் ஏற்றுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஒரியண்டல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ‘எந்திரன் 2’ தயாரிப்பிற்கான காப்பீட்டு வசதியை அளித்திருக்கின்றன.

எந்திரன் 2 திரைப்படம் மற்றொரு அம்சத்திலும் புதிய சாதனை அளவை எட்டியிருக்கிறது. தமிழுடன் வேறு சில மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் மட்டும் 150 கோடி என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டில் இது திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது : குளத்திலிருந்து பொருட்கள் மீட்பு!!

 
வவுனியாவில் இடம்பெற்ற இருவேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா, ஹொரவப்பொத்தானை பகுதியில் உள்ள பிரபல தளபாட விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து ஒரு தொகை பணம், சீசீடிவி கமராவின் சேவர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கொள்ளையிடப்பட்டன.

அதேபோன்று கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா வேப்பங்குளம் பகுதியில் ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் சீசீடிவி கமராவின் சேவர், ஆவணப்பதிவு (மெமறிசிப்) உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் கொள்ளையிடப்பட்டன.

இது தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து சீசீடிவி கமராவின் சேவர் உள்ளிட்ட பகுதிகள் பண்டாரிகுளம் குளத்தில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

1 2

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்கள் 8 பேர் 9A சித்தி பெற்று வவுனியாவில் முன்னிலை!!

Rambaikulam

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் பாடசாலையில் எட்டு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ திறமைச்சித்தி பெற்றுள்ளனர். குறித்த மாணவர்களில் மூவர் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்கள்.

அஜந்தி யோகராஜா, மோஜிதா முத்துராசா, தட்சாயினி கணேசன், ஜதிநிலா பாஸ்கரன், பாத்திமா பைசா தௌபிக் ஆகிய மாணவர்கள் தமிழ் மொழிமூலம் 9 ஏ சித்திகளை பெற்றவர்கள்.

தர்சா சிவபாலராஜா, பூஜிதா ஜெயக்குமார், அபிரா ஸ்ரீஸ்கந்தராஜா ஆகிய மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, திவ்யா வேதநாதன், நிலக்சிகா ரஞ்சன், கஜலக்சி ராமச்சந்திரன், ஜதுர்சிகா யோகரட்ணம்,தனுசியா தவராஜா, பூஜா சபேசன், கம்சாயினி கண்ணன், மதுசா ஸ்ரீசேன, கேசாம்பவி கோடீஸ்வரன், டிலக்சனா சதீஸ்குமார், டிலக்சனா தயாபரன் ஆகிய மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்றுள்ளனர்.

தவதன்ஜா ரவிச்சந்திரன், ரஞ்சினி கமலதாசன், விதுட்சா வேலும்மயில் ஆகிய மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் சி சித்தியும் பெற்றுள்ளனர்.

சந்திமாலின் பிடியெடுப்பு, டில்ஷானின் எல்.பி.டபிள்யு : மஹேல, இயன் செப்பல் அதிருப்தி!!(காணொளி)

Evidence-confirms-Chandimal-catch-was-clean

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டில்சானின் ஆட்டமிழப்பு மற்றும் சந்திமாலின் பிடியெடுப்பு தொடர்பில் மஹேல ஜயவர்தன மற்றும் இயன் செப்பல் ஆகியோர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்தது. களத்தில் ரசல் நான்கு ஓட்டங்களுடனும் பிளெட்சர் 71 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

இதன்போது 16 ஓவரை துஷ்மிந்த சமிர வீசினார். ஓவரின் முதல் பந்தை பிளெட்சர் எதிர்கொண்ட பந்து மட்டையில் பட்டு சந்திமாலின் கைகளுக்கு சென்றது. அந்த பிடியெடுப்பில் சந்தேகம் நிலவ மூன்றாவது நடுவருக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

பந்து நேரடியாக சந்திமாலின் கைகளுக்குள்ளே சென்றது. எனினும் மூன்றாவது நடுவராக இருந்த சைமன் பிரை ஆட்டமிழப்பை வழங்கவில்லை. இதனை இயன் செப்பல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது களத்தில் உள்ள நடுவர்களால் இந்த பிடியெடுப்பு தொடர்பில் தீரமானம் எடுப்பது கடினம். எனினும் மூன்றாவது நடுவருக்கு இலகுவாக தீர்மானத்தை எடுக்கலாம்;. மேலும் டி.வி. தொழினுட்பம் தொடர்பில் அறிவும் அவசியம் என்பதோடு பந்து பவுண்ஸ் ஆகுவதும் தொடர்பிலும் பொதுவான அறிவு வேண்டும். இந்த தீர்மானம் நடுவரின் அசமந்த போக்கினாலே வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோன்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டில்சான் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பிரைத்வைட் வீசிய 3.1 ஓவரில் டில்சான் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டமிழப்பு மூன்றாவது நடுவர் ஊடாக பார்க்கப்பட்ட போது ஆட்டமிழப்பு இல்லை. எனினும் கள நடுவரால் முன்னதாகவே ஆட்டமிழப்பு வழங்கப்பட்டதால் டில்சான் அரங்குக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஆட்டமிழப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜயவர்தன..

டில்சானுக்கு எதிரான ஆட்டமிழப்பை ஏற்றுகொள்ள முடியாது. இந்த ஆட்டமிழப்பையடுத்து இலங்கை அணி தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை இழந்தது. இதனாலேயே இலங்கை அணி தோல்வியை தழுவியது எனவும் கூறலாம்.

டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் மீள் பரிசோதனை இருக்கும் போது ஏன் இருபது-20 போட்டிகளில் இந்த முறையை நடைமுறைப்படுத்த முடியாது. இருபது-20 தொடர் என்பது முக்கியமான ஒன்றாகும். கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் டில்சான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால். மேலும் நேற்றை போட்டியின் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை பெற்று கொடுத்தார்.

இந்த ஆட்டமிழப்பையடுத்து அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே இருபது-20 போட்டி கட்டாயம் மீள்பரிசோதனை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். மேலும் தான் இந்த தீர்மானத்தால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இருபது-20 போட்டிகளில் கட்டாயம் மீள்பரிசோனை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் இயன் செப்பலும் வலியுறுத்தினார்.

விமான விபத்தில் பலியானவர்னளுக்கு தலா 14 லட்சம்!!

Flight

டுபாய் விமான விபத்தில் பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.14 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

டுபாயில் இருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்ட்வ்– ஆன்டான் நகருக்கு துபாயை சேர்ந்த பிளை டுபாய் நிறுவன பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ரஷ்யாவில் ரோஸ்டவ்–ஆன்டான் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ஓடு பாதையில் தரையில் மோதி நொறுங்கி தீப்பிடித்தது.

அதில் 2 இந்தியர்கள் உள்பட 62 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 62 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.14 லட்சம் (20 ஆயிரம் அமெரிக்க டாலர்) உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தகவலை பிளை டுபாய் விமான நிறுவனம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மிக மிக மோசமாக சேதமடைந்திருப்பதாக ரஷ்ய விமானத்துறை துணைத் தலைவர் செர்ஜி ஷாய்கோ தெரிவித்துள்ளார்.

இதனால் விமானம் விபத்துக்குள்ளான காரணங்களை குறித்து தெளிவான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

பெண் சுட்டுக் கொலை : மேலும் இருவர் கைது!!

Shoot

செவனகல பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ம் திகதி செவனகல பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அவர் வழங்கிய தகவலின் படி, குறித்த இருவரும் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதோடு இவர்களை இன்று எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈழ அகதி தயன்ராஜை நாடு கடத்தினால் கிளர்ச்சி வெடிக்கும் : வைகோ!!

Vaiko

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமிலுள்ள தயன்ராஜை இலங்கைக்கு அனுப்பும் முடிவை கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தயன்ராஜ் என்ற ஈழத் தமிழ் இளைஞர் மீது இலங்கையில் சில குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கை அரசு, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஜெயலலிதா அரசும் உடந்தையாகச் செயல்படுகிறது.

தன்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி, திருச்சி முகாமில் ஐந்தாவது நாளாக அவர் உண்ணாவிரத அறப்போர் நடத்துகிறார். அவரது மனைவியும், மகளும் மண்டபம் அகதிகள் முகாமில் உண்ணா விரதம் இருக்கின்றனர்.

முன்னைய மத்திய அரசைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி அரசும் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிராக வஞ்சகம் செய்கிறது. இதற்கு ஜெயலலிதா அரசும் ஆதரவாகச் செயல்படுவதோடு, மத்திய அரசின் உளவுத்துறையும், தமிழக அரசின் உளவுத்துறையும் கூட்டுச் சதி செய்கின்றன.

ஈழத்து இளைஞர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்புகின்ற முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-மாலை மலர்-

பெற்றோரை இழந்து குடும்பக் கஷ்டத்தின் மத்தியிலும் 9A சித்திபெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி!!

20160321_132411

வெளியான கா.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி மதனமோகன் சுலக்ஷ்னா 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது வெற்றி குறித்து வவுனியா நெற் இணையத்திற்கு தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட அவர் பின்வருமாறு தெரிவித்தார்..

எனக்கு 2 வயது இருக்கும்போது எனது அப்பா என்னை பிரிந்து சென்றுவிட்டார். எனது அம்மாவும் எனக்கு 14 வயதினிலேயே என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். பெற்றோர் பாசம் எனக்கு சிறு வயதினிலேயே இல்லாமல் போய் விட்டது.

நான் தற்போது அம்மம்மாவுடன் தான் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு படிப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கு மேலதிக வகுப்புகளுக்கு (ரீயுசன்) சென்று படிக்க முடியவில்லை.

இருப்பினும் பாடசாலைச் சமூகத்தின் மூலம் சிறு உதவி கிடைக்கின்றது. கடந்த கா.பொ.த சாதாரண தரத்திற்கு மாத்திரம் மேலதிக வகுப்புக்களுக்கு சென்றேன்.

எனது வீட்டிலிருந்து 1 ½ கிலோமீற்றர் தொலைவீல் பாடசாலை காணப்படுகின்றது. தினசரி துவிச்சக்கர வண்டி மூலம் தான் செல்கின்றேன்.

எனது இந்த பரீட்சை பெறுபேற்றினை நான் யாரிடம் கொண்டுசென்று காட்டுவது. எனது பெற்றோர் என்னிடம் இல்லை என மன ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

பெற்றோரை இழந்த நிலையில் குடும்ப கஷ்டத்தின் மத்தியிலும் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இவருக்கு வவுனியா நெற் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ம.சுலக்ஷ்னா 9A சித்தி பெற்று முதலிடம்!!

P1190901

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி மதனமோகன் சுலக்ஷ்னா 9A சித்தி பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

20160321_130522

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் ம.கவிப்பிரியன் முதலிடம்!!

 
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் மகேந்திரராசா கவிப்பிரியன் 8A B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

20160321_124454 20160321_124502 P1190892 P1190895 P1190896 P1190897