சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் : தந்தை உட்பட இருவர் கைது!!

Arrest

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி – ஆறாம் குறிச்சி பதுறியா பகுதியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத் தாய் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும், காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (11) தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரித்ததுடன், சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயிடமும் விசாரணை செய்தனர்.

பின்னர் சிறுமியை சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, தந்தையையும் தாயையும் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தாய் சுகவீனமுற்ற நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததால், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்படி முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் வளர்ப்புத் தாயிடம் வளர்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய கற்பகவிருட்ச காட்சி!!(படங்கள், வீடியோ)

 

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம்  நாளான 11-03 -2016 வெள்ளிக்கிழமை  காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.

மாலை கற்பகதரு காட்சிக்குரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  கற்பகதருக்காட்சி கொண்டு காமதேனு வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

படங்கள் :கஜன் 

DSC01147 DSC01154 DSC01159 DSC01167 DSC01173 DSC01186 DSC01192 DSC01196 DSC01207 DSC01223 DSC01227 DSC01231 DSC01246 DSC01252 DSC01262 DSC01275 DSC01289 DSC01291 DSC01296

 

வவுனியா விளையாட்டு வீரர்கள் ‘வடமாகாணத்தில் ஊரைத்தாண்டி ஓடும் போட்டியில்’ சாதனை!!

 
வடமாகாண சபையின் அனுசரணையுடன் இன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஊரைத்தாண்டி ஓடும் போட்டியில் வடமாகாணத்தில் ஆண்கள் பிரிவில் மாவட்ட ரீதியாக கிளிநொச்சி முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு பெண்கள் பிரிவும் வடமாகணத்தில் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

குறித்த ஊரைத்தாண்டி ஓடும் போட்டியில் வீராங்கனைகள் ரீதியில் வடமாகாணத்தில் முதல் நிலையை கிளிநொச்சியை சேர்ந்த தேவதாஸ் டென்சிகாவும் இரண்டாம் இடத்தை கிளிநொச்சியை சேர்ந்த எஸ். தமிழினியும் மூன்றாம் இடத்தை முல்லைத்தீவை சேர்ந்த எஸ். விதுசாவும் பெற்றுக்கொண்டனர்.

வீரர்கள் சார்பாக வவுனியாவை சேர்ந்த குமார் நவநீதன் முதாலாம் இடத்தையும் முல்லைத்தீவை சேர்ந்த ஜெனந்தன் இரண்டாம் இடத்தையும் கிளிநொச்சியை சேர்ந்த அனுஜன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மாவட்ட ரீதியாக ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை வவுனியா மாவட்டமும் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்டமும் பெற்றுக்கொண்டது.

இன்று காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அருகாமையில் வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டு பண்பாட்டலுவல்கள் அமைச்சர் குருகுலராஜாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் ஊரைத்தாண்டி ஓடும் போட்டியில் அங்கிருந்து வீரர்கள் கிளிநொச்சி மகாவித்தியாலயம் ஊடாக வட்டக்கச்சி பிரதான வீதி வரை சென்று வயல்கள் மற்றும் வாய்க்கால் பதைகளிநூடு கரடிப்போக்கு சந்திக்கு வருகைதந்து மீண்டும் கிளிநொச்சி பழைய கச்சேரியை வந்தடைந்தனர் வீரன்களைகளும் வட்டாக்கச்சி பிரதான பாதையில் வைத்து கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் போட்டியில் வீராங்கனைகளும் அப்பதையிநூடு வந்து கிளிநொச்சி பழைய கச்சேரியை அடைந்தனர்.

வெற்றி ஈட்டிய வீர , வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் பணப்பரில்சில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வெற்றி ஈட்டிய இவ் வீரவீரங்கனைகள் ஒன்பதாவது தேசிய விளையாட்டு விழாவில் பங்கு பற்ற உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிக்கு கிளிநொச்சி ,மன்னார்,முல்லைத்தீவு, வவுனியா யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கு பற்றி இருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13

மோட்டார் சைக்கிள் மோதியதில் பசுவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் பலி!!

Acci

வீதியின் குறுக்காக இருந்த பசு ஒன்றுடன், பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் பசுவும்,மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்பலத்த காயமடைந்த நிலையில் மெதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டது.

20 வயதுடைய பரஸன்கஸ்வேவை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சிறுமி சேயா படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் இன்று மீண்டும் போதைப்பொருளுடன் கைது!!

Arrest

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரசேங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரும் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு 15ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில், கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தவமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்து பின் விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சார்ஜர் இணைக்கப்பட்ட தொலைபேசியில் நீண்டநேரமாக உரையாடிய இளைஞர் உயிரிழப்பு!!

Charger

ஏறாவூர், மீராகேணி ஹிஸ்புல்லாஹ் நகர் பகுதியில் கையடக்க தொலைபேசியின் சார்ஜர் இணைக்கப்பட்டு, காதில் ஹெட்செட் இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் இன்று சனிக்கிழமை மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்துல் ஹாலிக் பௌமி எனும் 18 வயது இளைஞரே அவரின் வீட்டில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

உறங்கியவாறு நீண்ட நேரம் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் இறந்து விட்ட சம்பவம் பற்றி தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞன் கட்டிலில் சாய்ந்தவாறு நீண்ட நேரமாக கையடக்க தொலைபேசில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் குறித்த இளைஞன் அசைவற்று படுத்துக் கிடந்துள்ளதை அவதானித்த குடும்பத்தினர், அவரை தட்டி எழுப்பியபோது அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டிருந்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் ஒரு இருதய நோயாளி என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா கந்தசாமிகோவில் வீதியில் இன்று(12.03.2016) மாலை இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா கந்தசாமிகோவில் வீதியூடாகப் பயணித்த மோட்டார் சைக்கில் சூசைப்பிள்ளையார்குளம் சந்தியிலிருந்து சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கோபி-

10151635_553429178149840_2016003900_n 12788057_553428878149870_529931601_n 12833233_553429034816521_703612239_n 12833300_553429021483189_708173621_n 12833480_553429091483182_979633356_n 12834634_553429124816512_1288034300_n P1190767 P1190768 P1190771 P1190774 P1190776

வவுனியா புளியங்குளத்தில் விபத்து சாரதி படுகாயம்!!(படங்கள்)

 
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வான் வீதியிலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் புளியங்குளம் சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வானின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புளியங்குளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_0329 IMG_0330 IMG_0331 IMG_0332 IMG_0334 IMG_0335 IMG_0336 IMG_0337 IMG_0338

பெண்களை மெட்டியும், கொலுசும் வெள்ளியில் அணிவது ஏன்?

Girl Jewel

நமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், திருமணத்திற்குப் பின்னர் காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த அறிவியல் காரணங்களும் இருக்கின்றன.

என்னதான் பெரும் அந்தஸ்து மற்றும் வசதி இருந்தாலும் கூட கொலுசு மற்றும் மெட்டி வெள்ளியில் தான் அணிய வேண்டும் என்பது நமது சம்பிரதாயம். வெள்ளி பெண்களின் கால் நரம்பினை தீண்டும்படி இருப்பது அவர்களது காலில் இருந்து மூளைக்கு செல்லும் முக்கிய நரம்பை தூண்டுகிறது, இதனால் பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் விளைகிறது..

பாரம்பரியம் நகைகள் அணிவது என்பது நமது பாரம்பரியத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தங்கள், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

தங்கம்

தங்கம் என்று மட்டுமில்லாமல் முத்து, வெள்ளி போன்று பலவகையான நகை அணியும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

வெள்ளி நகை

வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி ஆரோக்கியமளிக்கிறது. பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி

ஆண்களை விட பெண்கள்அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள . வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெள்ளி கொலுசு அணிவதினால் அந்த நரம்பில் ஏற்படும் தூண்டுதல் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதியாகிறது. இதன் காரணத்தினால் தான் பெண்கள் வெள்ளிக் கொலுசு அணியக் கூறப்படுகிறது.

சம்பிரதாயம்

நமது திருமண சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது மெட்டி மாட்டுவது. முன்பு மெட்டி மாட்டுவது என்பது ஆண்களுக்கு மத்தியிலும் இருந்தது. காலப்போக்கில் ஆண்கள் மெட்டி மாட்டுவது மறைந்துவிட்டது.

அறிவியல் காரணம்

மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்திவிடவில்லை. மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி சில அறிவியல் காரணமும் இருக்கின்றன.

பொதுவாக மெட்டி இரண்டாவது விரல்லில் தான் அணிவார்கள், அந்த இரண்டாவது விரல்லில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது.

நன்மைகள்

இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் பெண்கள் கர்ப்பக் காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!!(படங்கள், காணொளி)

 
வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகாமையில் இன்று மதியம் 1 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகாமையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ராணி மில் சந்திக்கு அருகில் வளைவில் திரும்ப முற்பட்ட போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

தலைகீழாக கவிழ்ந்ததால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததுடன், அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் முச்சக்கர வண்டி முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இவ் விபத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

12626191_1168448849841733_387459770_n 12822153_1168448746508410_1627607117_n 12822913_1168448913175060_533197480_o 12825157_1168448889841729_1808972924_n 12825674_1168449009841717_1099402456_n 12834599_1168448819841736_227236182_n 22476079_1168448833175068_856226647_nnews (1) news (2) news (3) news (4) news (5) news (6)2016-03-12 13.04.03 2016-03-12 13.24.34 2016-03-12 13.24.40 2016-03-12 13.24.50

பெற்ற தாயாரின் பணியைப் பறித்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்!!

David Cameron with mother

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமரூனின் தாயார் மேரி கமரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் கமரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ள Chieveley மற்றும் Area என்ற இரு குழந்தைகள் மையத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் கமரூன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

நகரங்களில் உள்ள நிர்வாக கவுன்சில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது அளிக்கப்படும் நிதியை விட 24 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த கவுன்சிலின் கீழ் வரும் சில குழந்தைகள் மையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
கமெரூன் கூறிய குழந்தைகள் மையத்தில் தான் அவரது தாயாரான மேரி கமரூனும் பணியாற்றி வந்துள்ளார்.

தனது மகனான பிரதமரின் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த மேரி கமரூன் இந்த திட்டத்தை கைவிடுமாறு கவுன்சிலுக்கு மனுவும் அனுப்பியிருந்தார்.

ஆனால், பிரதமரின் அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, குழந்தைகள் மையம் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்போது மேரி கமெரூன் தனது பணியை இழந்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு மேரி கமெரூன் பேட்டி அளித்த போது,

குழந்தைகள் மையம் மூடப்படுவது எனக்கு கவலை அளிக்கிறது. ஆனால், நிதி பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் இதுபோன்ற முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பதிலளித்துள்ளார்.

குழந்தைகள் மையம் மூடப்படுவது குறித்து தனது மகனான கமெரூனிடம் நேரடியாக புகார் கூறினீர்களா என்ற கேள்விக்கு ‘மகனாக இருந்தாலும், பிரதமரின் பணியில் நான் தலையிட மாட்டேன்’ என மேரி கமெரூன் பதிலளித்துள்ளார்.

திருமண பந்தத்தில் இணைந்த நடிகரும் தொகுப்பாளினியும்!!

Chandran

கயல் பட நடிகர் சந்திரன் மற்றும் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் அஞ்சனா ஆகியோருக்கு சென்ற வருடம் நவம்பர் 29ம் திகதி நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 10) காலை இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.

விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வந்த சந்திரன், அதே தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அஞ்சனாவுக்கும் நட்பாகி பின்னர் அது காதலாக மாறியது. சில வருடங்களுக்கு பின்னர் இருவர் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

மீண்டும் நித்தியானந்தாவுடன் ரஞ்சித்தா!!

Nithiyanada

திருமலையில் உள்ள திருப்பதி எழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட 15 சீடர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

ரஞ்சிதா துறவி கோலத்தில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, விபூதி அணிந்து வந்திருந்தார். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைக் காண பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய தோற்றத்தில் சடை முடியுடன் காணப்பட்ட நித்யானந்தாவை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர்.அப்போது அவர் சிரித்து கொண்டே வெளியே சென்று விட்டார்.

நித்யானந்தா கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலிலும், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் நடிகை ரஞ்சிதா மற்றும் சீடர் புடைசூழ அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

நித்யானந்தாவின் சீடர்கள் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படுத்திய பரபரப்பு அப்பகுதியில் திரண்டிருந்த பக்தர்களை கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

கொரியாவிற்கு வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Korea

இலங்கையிலிருந்து தென் கொரியாவிற்கு தொழில் நிமித்தம் செல்வோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் அந்த நாட்டு வௌிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு தென்கொரியா இதன்போது இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 42,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தென்கொரியாவில் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் இரண்டு நாடுகளினதும் பொருளாதாரத்திற்கு சக்தியாக அமைந்திருப்பதாக அந்த நாட்டு வௌிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்!!

11

வட மாகாண பட்டதாரிகளிற்கான 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.

வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூத்திசெய்யும் வகையில், 111 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ரீதியில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் குறித்த பட்டதாரிகள் நியமணம் வழங்கப்பட்டது.

குறித்த ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வழங்கிவைத்தார்.

ஆசிரியர்களுக்கான நியமனம் பெறுவதில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டராக பணிபுரிந்த ஆசிரியர் ஒருவரும் மாற்றுவலுவுடைய பட்டதாரி ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் சிங்கள ஆசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உதவிக்கல்வி பணிப்பாளர்கள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

10

வவுனியாவில் மூன்று வருடங்களாக மின்சாரம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படும் கிராமத்தின் சோகக் கதை!!

 
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனந்தர்புளியங்குளம் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்குவதற்கான திட்டம் ஆரம்பித்தும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக 3 வருடங்களாக தமக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என அனந்தர்புளியங்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

eV_1 001

இது தொடர்பாக வவுனியாவின் முன்னாள் அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களுக்கு கமக்காரர் அமைப்பு கடிதம் மூலம் தெரிவித்ததுடன், பந்துல ஹரிச்சந்திர அவர்களால் வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளருக்கு கடந்த 24.04.2015 அன்று இக் கிராமத்திற்கு மின்சாரத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.

 ev3 001

இதனைத் தொடர்ந்து கடந்த 04.06.2015 அன்று மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரால் கமக்காரர் அமைப்பிற்கு கடிதம் ஒன்று எழுதப் பட்டுள்ளது. இக் கடிதத்தில் வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளரை தான் தொடர்புகொண்டு கேட்டபோது மின்சார இணைப்பு வேலையை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களின் காலதாமதத்தால் மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும், ஓரிரு மாதங்களுக்குள் மின் திட்டம் முழுமையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ev4 001

இருப்பினும் அவர் தெரிவித்து 8 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இக் கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கமக்காரர் அமைப்பு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இப் பிரச்சனை தொடர்பாக கடந்த 07.03.2016 கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன்,

President 001

அரசு வழங்கிய மின்சாரத்தை கடந்த 3 வருடங்களாக வழங்காது மக்களின் அடிப்படை உரிமையை மீறிக்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர், திட்ட பொறியியலாளர், திட்ட முகாமையாளர், ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என மனித உரிமை ஆணைக்குழுவைக் கேட்டு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

Human_Rights 001

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனந்தர்புளியங்குளம் கமக்காரர் அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனந்தர்புளியங்குளம் கிராமசேவகர் பிரிவில் (223A) அனந்தர்புளியங்குளம் எனும் பெயரில் அமைந்துள்ளதே எமது கிராமமாகும். இது பாரம்பரிய விவசாயக்கிராமமாக இருந்தபோதிலும் போரினால் மிகவும் பாதிப்படைந்த கிராமமாக காணப்படுகின்றது.

எல்லைக்கிராமமாக இருக்கின்றபடியினால் 1990 களில் இருந்தே அடிக்கடி இடம் பெயர்வுகளை சந்தித்த இக்கிராமம் 1997 இல் நடைபெற்ற ‘ஒப்பரேசன் ஜெயசிக்குறு‘ மூலம் பாரிய அழிவைச்சந்தித்தது அன்று இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 7 வருடங்களுக்கு பின்னர் 2004-2005 காலப்பகுதியில் மீளக்குடியேறினர்.

எனினும் மீன்டும் விரைவாக ஆரம்பித்த போரினால் 2008 இல் இடம் பெயர்ந்தவர்கள் 2010 இல் பாரிய அழிவுக்கு பின்னர் சிறிது சிறிதாக குடியேறிக் கொண்டிருக்கின்றனர். நீண்டகால இடப்பெயர்வினால் இங்கு வசித்த பலர் இலங்கையின் பல பாகங்களிலும் வெளிநாட்டிலும் குடியேறி விட்ட போதும் போரின் வடுக்களில் இருந்து தன்னை வடுவித்துக்கொள்ள கடுமையாக இக்கிராமம் கடுமையாக முயற்சிசெய்கின்றது. இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான மின்சார வசதியோ, போக்குவரத்து வசதியோ, வீதியோ இதுவரை கிடைக்கவில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கான மின்சார வசதிகள் ஏற்படுத்தும் திட்டம் வடக்கின் வசந்தத்தின் கீழ் அரசினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்படவில்லை. பிரதேச செயலாளர் உட்பட எந்த அரச அதிகாரிகளும் இது குறித்து அக்கறையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான மின்விநியோக அலுவலகத்திற்கு பலமுறை சென்ற எங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

ஒரு நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது கிராமங்களே என்ற உண்மை விளங்காத அதிகாரிகள் இருக்கும் வரை கிராமத்து மக்கள் எல்லாவற்றையும் போராடித்தான் பெறவேண்டும் என்பதை இச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இக் கிராம மக்களின் கடின உழைப்பினால் இலங்கை பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

இம் மக்கள் பின்வரும் விடைதெரியாத வினாக்களுடன் இருளில் தவிக்கின்றனர். ஒளி பெறுமா இவர்களின் வாழ்க்கை?

01. இந்த கிராமத்திற்கு இது வரை மின்சார வசதி ஏன் பூர்த்தி செய்யப்படவில்லை?
02. கால தாமதத்திற்கு ஒப்பந்தகாரர் தான் காரணமெனின் ஒப்பந்தகாரர் கறுப்புப் பட்டியலிடப்பட்டு வேறு ஒப்பந்தகாரர் மாற்றப்படாதது ஏன்?
03. இதுவரை இத்திட்டம் மேற்பார்வை செய்யப்படாதது ஏன்?
04. ஒப்பந்த காரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
05. இதில் ஏதாவது ஊழல் நடைபெற்று இருக்கிறதா?
06. அரச அதிகாரிகளை விட ஒப்பந்த காரர் அதிகாரம் மிக்கவரா ?
07. மக்களுக்கு தேவையான, நியாயமான அடிப்படை வசதிகளை போராடித்தான் பெற வேண்டுமா?
08. மாகாணசபை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
09. இந்த மின்சார விநியோக திட்டம் கணக்காய்வுக்கு உட்பட்டதா?

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Media_1 001Media_2 001

மேலும் இது குறித்து தெரிவித்த மக்கள், பிரதேச செயலாளர் உட்பட எந்த அரச அதிகாரிகளும் இது குறித்து அக்கறையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். வடக்கின் வசந்த திட்டத்தின் கீழான மின்விநியோக அலுவலகத்திற்கு பலமுறை சென்ற எங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதற்கு பொறுப்பான பொறியியலாளரை பலமுறை நேரில் சென்று கேட்ட போதும் அவர் இன்று, நாளை என நாட்களை கடத்திக்கொண்டே போகின்றார்.

இவரின் பொறுப்பற்ற நடவடிக்கையாலும், நிர்வாகத்திறன் அற்ற போக்கினாலும் ஏமாற்றமடைந்த நாங்கள் அடுத்து இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரை 4 தடவைகள் சந்தித்து எமது மின்சார விநியோகத்தை பெற்றுத்தர எழுத்து மூலமான கோரிக்கையைக் கமக்காரர் அமைப்பினூடாக விடுத்தபோதும், அவர்கள் மேற்படி திட்ட முகாமையாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்துவிட்டு இந்த திகதி முடிவடையும் அந்த திகதி முடிவடையும் என கடிதங்களை வழங்கினர்.

எனினும் விவசாயிகளாக இருக்கின்ற ஒரே காரணத்தினால் எமக்கு இது வரை மின்சாரா வசதியை ஏற்படுத்தி தர எவரும் முன்வரவில்லை.
இதனிடையே கிராமத்திற்கு வருகை தந்த இலங்கை மின்சார சபையினர் தாம் வீடுகளுக்கு மின்சார வசதியை தருவதற்கு தயாராக இருப்பதாகவும், வடக்கின் வசந்த மின்சார விநியோக அலுவலகம் தான் அக்கறை இல்லாது இருப்பதாகவும் இக் கால விரயத்தால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பல சலுகைகளும், பயன்களும் அற்றுப்போவதாகவும் சுட்டிக்காட்டிச் சென்றனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் திட்ட முகாமையாளர் திட்ட பொறியியலாளரையும், திட்ட பொறியியலாளர் ஒப்பந்த காரரரையும் காரணம் காட்டி எமது அடிப்படை வசதியான மின்சார வசதியை எமக்கு கிடைக்கவிடாது தடுத்து வருகின்றனர். எனவே இந்த விடயத்தை தங்களது மேலான கவனத்திலெடுத்து எமது கிராமத்திற்கான மின்சார வசதியை ஏற்படுத்தித் தந்து எமது மக்களின் வாழ்கை சிறப்புற உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.

இம் மக்கள் மின்சாரத்தைப் பெறுவதற்காக கடந்த 3 வருடங்களாக போராடி வருகின்றனர். உரிய அதிகாரிகளே, வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே, வடமாகாண சபை உறுப்பினர்களே இது உங்களின் கவனத்திற்கு.

DSC04381 DSC04382 DSC04384 DSC04385 DSC04387 DSC04391 DSC04391_1 DSC04393 DSC04395 DSC04396 DSC04398