சுற்றுலாப்பயணியின் செல்பி மோகத்தினால் நிகழ்ந்த மற்றுமொரு பரிதாப உயிரிழப்பு!!

 
பல்கேரியாவில் செல்பி மோகத்தில் இளம்பெண் ஒருவர் ஏரியில் இருந்த அன்னப்பறவையை அதன் இறக்கையைப் பிடித்துத் தூக்கி, அது உயிரிழக்க காரணமாக அமைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் உள்ளது ஓரிட் ஏரி அன்னப்பறவைகள் நிறைந்த ஒரு ஏரி.

இந்த ஏரியை பார்வையிடுவதற்காக தினமும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அந்தவகையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர், அந்த ஏரிக்கரையில் அன்னப்பறவையுடன் செல்பி எடுக்க விரும்பியுள்ளார். இதற்காக ஏரியில் இருந்த அன்னப்பறவை ஒன்றை, அதன் இறக்கைகளைப் பிடித்து வெளியே தூக்கியுள்ளார்.

இதில், அந்த அன்னப்பறவை பலத்த காயமடைந்துள்ளது ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் செல்பி எடுத்துவிட்டு, அந்த அன்னப்பறவையை அப்படியே கரையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த அன்னப்பறவை பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பெண் அன்னப்பறவையை அதன் இறக்கைகளைப் பிடித்து தூக்கும் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் பரவி வருகின்றது. பறவைகள் நல ஆர்வலர்கள் அப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் செல்பி மோகத்தால் ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகிறது அதிலும் குறிப்பாக ஆபத்தான் இடங்களில், விலங்குகளுடன் படமெடுக்க முயற்சிக்கும் போது இத்தகைய விபத்துகள் நடக்கின்றன. கடந்தாண்டு விஷமுள்ள பாம்புடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை, அப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி அண்மையில் இது போன்று சுற்றுலாப்பயணிகளின் செல்பி மோகத்தினால் டொல்பின் குட்டி ஒன்று உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 2 3

மின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடுகள்!!

Email

மின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வர்த்தகர்களை இலக்குவைத்து இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கணனி துரித நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் மற்றைய தரப்பினருக்கு நிதியை பரிமற்றும் போது வேறொரு புதிய வங்கிக் கணக்கிற்கு வைப்பீடு செய்யுமாறு மின்னஞ்சல் ஊடாக தகவல் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறிப்பாக இறக்குமதியாளர் ஒருவராயின், அவரது இறக்குமதிக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு முற்படும் சந்தர்ப்பங்களில், புதிய கணக்கொன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வைப்பீடு செய்யுமாறும் சூட்சுமமான முறையில் திசைதிருப்பப்படுவதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறியியலாளர் கூறினார்.

இத்தகைய நிலைமையின்போது கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் நபருடன் அல்லது நிறுவனத்துடன் தொடர்புகொண்டு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பணக் கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பது சிறந்ததாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களின் மின்னஞ்சல் கணக்கை பாதுகாப்பான முறையில் பேணுவதன் மூலம் இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு வழியேற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

12 இலக்க அடையாள அட்டை அனைத்து நடவடிக்கைகளுக்கும் செல்லுபடியாகும்!!

IC

12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அனைத்து நடவடிக்கைகளுக்கும் செல்லுபடியாகும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் ரஞ்சனி ஜயக்கொடி சிங்கள பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி விளக்குகையில்..

12 இலக்கங்களைக் கொண்டு புதிதாக விநியோகம் செய்யப்படும் அடையாள அட்டையானது இலங்கையில் எந்தவொரு கருமத்திற்காகவும் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய அடையாள அட்டைகளை புதுப்பித்தவர்களின் புதிய அடையாள அட்டைகளில் பழைய அடையாள அட்டை இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 இலக்க அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அதிகாரசபை, மத்திய வங்கி, செல்லிடப்பேசி விற்பனை நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இது பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய அடையாள அட்டையின் தொடரிலக்கத்தின் முதல் இரண்டு இலக்கங்களும் பிறந்த ஆண்டை குறிக்கின்றது.

இந்த அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் குழந்தைகள் பிறப்பதனால் இவ்வாறு பிறந்த ஆண்டின் இறுதி இலக்கங்கள் இரண்டு மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் தற்போது நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் குழந்தைகள் பிறப்பதனால் பிறக்கும் ஆண்டின் நான்கு இலக்கங்களையும் உள்ளடக்கி தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படுகின்றது.

12 இலக்க தேசிய அடையாள அட்டையில் பழைய அட்டையில் காணப்பட்ட ஆங்கில எழுத்து நீக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய அடையாள அட்டையை எந்தவொரு அலுவலகத் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ரஞ்சனி ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு!!

Flour

இன்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 7.20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா ஹரிஸ்ணவி வன்புணர்வுக் கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

vavuniya_court

வவுனியாவில் 14 வயது மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேக நபர் முற்படுத்தப்பட்ட போது சந்தேக நபரின் விளக்கமறியலை மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் நடிகர் மரணம் : மற்றொரு நடிகர் கவலைக்கிடம்!!

39688

சென்னை தி. நகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சினிமா துணை நடிகர் பரிதாபமாக பலியாகி உள்ளார். மற்றொரு துணை நடிகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தி. நகர் சீனிவாசா தெருவில் வசித்து வந்தவர் செல்வ குமார் (58).
ரமணா உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தொலைகாட்சித் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகானா சபாவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், இரவு 8. 30 மணி அளவில் துணை நடிகரும் தனது நண்பருமான கோவை செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

ஆழ்வார்பேட்டை டி. டி. கே சாலையில் இருந்து தி. நகர் பர்கிட் சாலை வழியாக பைக் சென்று கொண்டு இருந்தது. மோட்டார் சைக்கிளை செல்வகுமார் செலுத்தியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் வீதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

கோவை செந்தில் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஸ்பீடா மீட்டர் வயர் அறுந்து அந்த வயர் முன் சக்கரத்தில் சிக்கியதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

மேலும் உயிர் இழந்த செல்வகுமார் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் தப்பி இருக்கலாம் என்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலில் ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிப்பது எப்படி!!

270211_228535107180442_156897774344176_744733_4762564_n1
ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. இரண்டுமே அவர்களது பலகீனமே.அதாவது, பொய் மற்றும் நண்பர்கள்.இந்த இரண்டில் தெளிவாக இருந்தால் இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து தவிர்த்துவிடலாம்.இவர்கள் கூசாமல் நிறைய பொய் சொல்வார்கள். முன்னர் சொன்ன பொய்யை, அப்படிச் சொல்லவே இல்லை என்று சாதிப்பார்கள்.

அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவார்கள். கண்டுபிடித்துக் கேட்டால், அதை ஒரு குற்றம் மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது பரிசு கொடுத்து அல்லது மீண்டும் சில பொய்கள் சொல்லி சமாளிப்பார்கள். பொய்கள் எண்ணிக்கை உயரும் பொழுது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் இவர்களது நோக்கத்தினை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இவர்கள் நட்பு என எவரையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள். நீங்கள் யாரையாவது அறிமுகப்படுத்த விரும்பினாலும் சாமர்த்தியமாக தட்டிக் கழிப்பார்கள்.மிக புத்திசாலித்தனமாக நடப்பவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை மட்டும் நாடகத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்துவார்கள். இவர்கள் ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் நேரங்களில் மட்டும் ஆஜராகி மிக அற்புதமாக அவற்றைத் தீர்த்துவிட்டு விலகுவார்கள்.

அம்மாவிடம் இந்த வாரம் கூட்டிப் போகிறேன் என மிக உறுதியாக வாக்குறுதி கொடுப்பார்கள். கடைசி சில நிமிடங்களில் உடல் நலம் சரியில்லை, ஊருக்குப் போய்விட்டார்கள் என நடிப்பார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் என்றால், அதனை அனுபவித்த பின்னர் விலகுவார்கள் அல்லது சுய ரூபத்தைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்கள். பணம் அல்லது சொத்து என்றால் அவசரக் கல்யாணம் வரை போவார்கள்.

பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கவில்லை என்று நாடகமாடுவார்கள். திருமணத்திற்குப் பின் தேவையானதை சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள். அல்லது காதல் வேண்டாம் காசு வேண்டும் என சுய ரூபத்தைக் காட்டுவார்கள்.இப்படிப்பட்ட நபர்களும் நம் சமூகத்தில் கலந்து இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு விலக வேண்டியது மிக முக்கியம்.

 

தற்கொலை செய்ய நினைத்தேன் : சுரேஷ் ரெய்னா!!

Raina

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு T20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்நிலையில் தான் தற்கொலை தற்கொலை செய்ய நினைத்தமை குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

எனக்கு 13 வயது இருக்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் தூங்கும்போது ஏதோ என் தோளில் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழித்தேன்.

என் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஒரு சிறுவன் என் நெஞ்சு மீது அமர்ந்து என் முகத்தில் சிறுநீர் கழித்தான். ஒரு வகையாக அவனை கீழே தள்ளினேன்.

லக்னோவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் இருக்கையில் மிகவும் சிரமமாக இருந்தது. அங்கு பலர் என்னை வம்பிழுத்துக் கொண்டே இருந்தனர். இதனால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.

விளையாட்டு வீரர்கள் விடுதியில் ஒரு முறை என்னையும், என் நண்பனையும் ஹொக்கி ஸ்டிக்கால் அடித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த என் நண்பன் கோமாவுக்கு சென்றுவிட்டான்.

இந்த விடுதி வேண்டவே வேண்டாம் என்று நினைத்து அங்கு சேர்ந்த ஒரே ஆண்டில் வீட்டிற்கு ஓடிவிட்டேன். ஆனால் என் சகோதரரின் அறிவுரையின் பேரில் 2 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாட்டு வீரர்கள் விடுதிக்கு சென்றேன் என தனது கசப்பான வாழ்க்கை அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

சூர்யா, தனுஷை அடுத்து விஜய் சேதுபதி!!

Vijay-Sethupathi-Biodata

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அனேகன். தனுஷ், அமைரா தஸ்தூர் நடித்த இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.இப்படத்திற்கு பிறகு கே.வி. ஆனந்த் யாரை அடுத்து இயக்குவார் என பல கேள்விகள் எழும்பின.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் சொன்ன ஒரு கதை பிடித்துபோக அக்கதையில் நடிக்க ஒப்புக கொண்டுள்ளாராம் விஜய் சேதுபதி.ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

முல்லைத்தீவு விவசாயிகள் வீதியில் படுத்துறங்கும் அவலநிலை!!

 
முல்லைத்தீவு மாவட்டமானது கடந்த காலயுத்தத்தினால் பாரிய அழிவை சந்தித்து மீண்டெழுந்து வரும் மாவட்டமாகும்.

இந்நிலையில் பாரியளவில் அபிவிருத்தி காணவேண்டிய முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகள் வீதிகளில் படுத்துறங்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது எனவே உரியஅதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே மக்களின் எதிர்பாப்பாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயமாக காணப்படுகின்றது. இந்த விவசாயத்தினை மேற்கொள்ளும் விவசாயிகள் செல்லெனா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நெல்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாரிய கஸ்ரங்களின் மத்தியில் கடன்பட்டு நகைகளை அடகு வைத்து நெற்செய்கையை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களது வயல்நிலங்களை இயற்கை அழித்தது ஒருபுறமாக இருக்க காட்டுயானைகள் அட்டகாசம் புரிந்து ஒருபகுதி வயல்நிலங்களை அழிக்க பாரிய துன்பப்பட்டு காப்பாற்றி எடுக்கின்ற நெல்லினை உரியவிலையில் விற்கமுடியாத திண்டாட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அவ்வாறில்லையெனில் அந்த நெல்லினை காயவைத்து உரிய விலைக்கு விற்பதாயின் தமக்கு நெல்லு காயவிடக்கூடிய இடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரிதாக இல்லை எனவே விவசாயிகள் வீதியில் கொண்டுவந்து நெல்லினை காயவிட்டு வெய்யிலில் தாங்களும் காய்ந்து அந்த இடத்திலிருந்து நெல்லை காயவிட்டு எடுத்து செல்லும் வரை இரவு பனியிலும் வீதியில் படுத்துறங்கி நெல்லினை காயவைத்து எடுத்து சென்றும் நெல்லினை விற்பதற்காக வீதிகளில் தவம் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு வீதியில் நெல்லினை காயவிடுவது வீதியால் செல்பவர்களுக்கு இடையூறாகவும் வீதி விபத்துக்களுக்கு காரணமாகவும் அமைகிறது.

எனவே இந்த அவலநிலையினை கருத்தில் கொண்டு காட்டுயானைகளை கட்டுப்படுத்த முயற்சி எடுப்பதோடு நெல்லினை காயவிடுவதற்காக தளங்களை அமைத்து தருவதோடு உரிய காலத்தில் விளைகின்ற நெல்லினை நியாய விலையில் கொள்வனவு செய்து விவசாயிகளை வாழவைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

21 22 23 24

சிறுவர்களுக்கான பலூன்களை பயன்படுத்தி தனது எதிரிகளை கண்காணிக்கும் ஐ. எஸ்!!

maxresdefault

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஆளற்ற விமா­னங்­க ளைப் பயன்­ப­டுத்­து­வ தற்கு தமக்கு வச­தி­யில்­லா­ததால் ஹீலியம் வாயு நிரப்­பப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­கான வாயு பலூன் ­களை தமது கண்­கா­ணி ப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்தி வரு­வது அறி­யப்­பட்­டுள்­ளது.

தமது பிராந்­தி­யத்தில் கண்ணைக் கவரும் வடி­வ­மைப்­பி­லான பலூன் கள் வானில் பறப்­பதைக் கண்டு சந்­தேகம் கொண்ட குர்திஷ் பெஷ்­மெர்கா படை­யினர், அந்த பலூன்­களில் ஒன்றை சுட்டு வீழ்த்­திய போது அத­னுடன் புகைப்­ப­டக்­க­ரு­வி­யொன்று பொருத்­தப்­பட்­டுள்­ளதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இத்­தனை மலி­ வான தொழில்­நுட்­ப­மு­றை­மை­யொன்றைப் பயன்­ப­டுத்தி தம்மை கண்­கா­ணிப்­பார்கள் என்பதை தாம் சிறிதும் எதிர்பார்த்திருக்கவி ல்லை என அந்தப் படையினர் கூறுகின்றனர்.

 

விமானத்தில் கைப்பையில் மறைத்துவைத்து ஒரு வயது குழந்தையை கொண்டுசென்ற பெண்!!

1 (2)

துருக்­கிய இஸ்­தான்புல் நக­ரி­லி­ருந்து பிரான்ஸின் பாரிஸ் நகரை நோக்கிப் பய­ணித்த எயார் பிரான்ஸ் விமா­னத்தில் பெண்­ணொ­ருவர் தனது கைப்­பையில்­ ஒரு வயது குழந்­தையை மறைத்து வைத்து எடுத்துச் சென்­றமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பாரிஸ் சார்ள்ஸ் டி கோலி சர்­வ­தேச விமான நிலை­யத்தை மேற்­படி விமானம் நெருங்­கிய சம­யத்தில் குறிப்­பிட்ட பெண் தனது அளவில் பெரிய கைப்­பையை திறக்க முயற்­சித்த போது, அதற்குள் ஏதோ அசை­வதைக் கண்டு சந்­தேகம் கொண்ட அவ­ரது ஆச­னத்­துக்கு அருகில் இருந்­தவர் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து விமான உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ரது கைப்­பையை சோத­னை­யிட்­டுள்­ளனர்.

இதன்­போது அதற்குள் குழந்­தையொன்று இருப்பதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்­துள்­ளனர்.அந்தப் பெண் மேற்­படி குழந்­தை­யை­ வி­மா­னத்தில் அழைத்­து­வ­ரு­வ­தற்கு விமான பயணச்­சீட்டு எத­னையும் அவர் பெற்­றி­ருக்­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இந்­நி­லையில் இந்த சம்பவம் தொடர் பில் பிரான்ஸ் அதிகாரிகள் தீவிர விசார ணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

கடந்த வருடம் மாயமான ஆசிரியையும் மாணவனும் கைது!!

Teacher

கடந்த வருடம் மாணவனுடன் மாயமானதாக தேடப்பட்டு வந்த ஆசிரியை, குறித்த மாணவனுடன் திருப்பூரில் வைத்து பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்வபம் கடந்த ஆண்டு தென்காசியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார்.

மத்திய பொலிஸ் படையில் பணியாற்றி வரும் இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுடைய 15 வயது மகன் தென்காசி ஈனாவிலக்கு பகுதியிலுள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்று வந்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற குறித்த மாணவன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த பெற்றோரின் புகாரின் பேரில் கடையநல்லூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மாயமான மாணவனும் அவனுடைய வகுப்பு ஆசிரியையான செங்கோட்டை காலாங்கரை பகுதியைச் சேர்ந்த கோதைலட்சுமியும் (29) காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் ஊரை விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இந்நிலையில், சிவசுந்தரபாண்டியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ‘என் மகனை அவர் படிக்கும் பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியை கோதை லெட்சுமி (29) கடத்திச் சென்றுள்ளார். அவரால் என் மகனின் உயிருக்கு ஆபத்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆசிரியை கோதைலெட்சுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தையும் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஆசிரியையும் மாணவனையும் 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியை கோதையும் அம்மாணவரும் தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு சென்று வருவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக திருப்பூருக்கு விரைந்து சென்ற கடையநல்லூர் பொலிஸார் இன்று அதிகாலை மாணவனையும் ஆசிரியரையும் கைது செய்துள்ளனர்.

3 தமிழ் வீரர்களுடன் மலேஷியா பயணமாகியது இலங்கை அணி!!(படங்கள்)

 
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு எமது ஆதரவினையும் உந்துசக்தியையும் வழங்கி அவர்களை தேசிய அணியில் இடம்பெறச் செய்வேண்டும். இந்நிலையில் ஏனைய வீரர்களும் குறிப்பாக தமிழ் வீரர்களும் பல சாதனைகள் புரிந்து எமது தாய்நாட்டை உயர்த்த வேண்டும்.

மலேசியாவில் 9 நாட்கள் இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது. இதில் 3 ஒருநாள் போட்டிகளும் 2 இருபதுக்கு – 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான ரிஷாந்த் ரியூட்டரும் மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவனான ஜெயசூரியன் சஞ்சீவனும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களான சஜித் இந்திரரத்ன, ரமேஷ் நிமந்த, பந்துல உடுபிஹில ( அணித் தலைவர் ), உதித் மதுவன்த, டில்ஷான் சந்துருவன், சனுக்க, நிபுன் சதுரங்க, சண்டீப் நிஸன்சல, கஜித் கொட்டுவெகொட, நிவன்த கவிஷ்வர, இலங்கசிங்க, அத்தநாயக்க, அவிஷ்க பெர்னாண்டோ, சனோஜ் செனவிரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

11 12 13 14 15 16 17

கணவர் விடுமுறை எடுக்காததால் மனைவி தற்கொலை!!

suicide

உத்தரபிரதேசத்தில் திருமண நாளை கொண்டாட கணவர் விடுமுறை எடுக்காத வருத்தத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம் பால், இவரது கணவர் பிரஜேஷ் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களது முதலாம் ஆண்டு திருமண நாள் சமீபத்தில் வந்துள்ளது. இதனை கொண்டாடுவதற்காக ஒருநாள் விடுமுறை எடுக்கும்படி கணவரிடம் பூனம் கூறியுள்ளார்.இதனால் சம்பவத்தன்று வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடுவேன் என கூறி விட்டு பிரஜேஷ் பணிக்கு சென்றுள்ளார்.

ஆனால் வழக்கம் போலவே அலுவலகம் முடிந்து பிரஜேஷ் வீட்டிற்கு வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.பிரஜேஷின் தாயார் காய்கறி வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ள நிலையில், வீட்டில் முதல் தளத்தில் பூனம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுபற்றி தனது குடும்ப உறுப்பினர்களிடம் பூனம் தகவல் தெரிவித்துள்ளார், அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.அவரது குடும்பத்தினர் ஒருவர் மீதும் புகார் அளிக்கவில்லை என்பதால் அவரது உறவினர்கள் யாரிடமும் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

 

அதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்!!

smartphone_obsessed_002

சீனாவில் அதீத மொபைல் மோகம் காரணமாக சிறுவன் ஒருவன் தனது விரலை துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சூழோ நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 11 வயதான பெங். இவருக்கு அவரது தந்தை புது மொடல் மொபைல் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.

அந்த மொபைலில் எந்த நேரமும் சிறுவன் பெங் விளையாடி பொழுதை கழித்து வருவது அவரது தந்தைக்கு கோபத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தினிடையே சிறுவன் தனது சுண்டு விரலை துண்டித்துள்ளான்.

பதறிப்போன அவரது தந்தை உடனடியாக அந்த துண்டிக்கப்பட்ட விரலுடன் சிறுவன் பெங்கையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.3 மணி நேரம் நீண்ட அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை அந்த சிறுவனின் கையுடன் இணைத்துள்ளனர்.

வெற்றிகரமாக தற்போது இணைத்துள்ளதாக கூறிய மருத்துவர்கள், இனி மேல்தான் இணைக்கப்பட்ட அந்த விரலுடன் உடல் ஒத்துழைக்குமா என்பது தெரியவரும் என்றனர்.மேலும் இணைக்கப்பட்டுள்ள விரல் குணமடையும் வரை அழுத்தம் தராமல் இருந்தால் மட்டுமே விரைந்து குணமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தந்தையுடன் ஏற்பட்ட கோபத்தால் விரலை துண்டித்த சிறுவன் இனி மொபைல் விளையாட்டை நீண்ட நாளுக்கு ஆட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.