அந்த நடிகரை மட்டும் நேரில் பார்த்தால்? ஜாக்குலின் கலக்கல் பதில்!!

maxresdefault

சின்னத்திரையில் தற்போது தொகுப்பாளராக கலக்கி வருபவர் ஜாக்குலின். இவரை ஒரு ஷோவில் கலாய்க்காதவர்கள் யாரும் இல்லை, இருந்தாலும் அசராமல் இவர் செய்யும் கலாட்டாவை ரசிக்காதவரும் யாரும் இல்லை.இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க, ‘கமல் சாரை மிகவும் பிடிக்கும், அவரை பார்த்தால் காலில் விழுந்து ஆசி வாங்குவேன்.தற்போது தனுஷை மிகவும் பிடிக்கும், அவரை நேரில் பார்த்தால், என்ன செய்கிறேன் என்பதை அங்கு பாருங்கள்’ என கலகலப்பாக கூறியுள்ளார்.

 

15 வயதில் கட்டாய திருமணம் : இன்னல்களை வென்று அழகு ராணியாக அவதாரம் எடுத்த புதுமைப் பெண்!!

rubie_uk_003

சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த பெண் இன்று அழகு ராணியாக அவதாரம் எடுத்து வாழ்க்கையில் சாதித்து காட்டியுள்ளார்.இந்த சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக மாற்றி சிகரம் தொடும் பெண்கள் ஏராளம்.அப்படி, தனக்கு வாழ்வில் நேர்ந்த கொடுமைகளை, ஏணிப்படியாக மாற்றியமைத்துள்ளார் Rubie Marie.

இங்கிலாந்தை சேர்ந்த இவருக்கு வங்கதேசத்தை சேர்ந்த நபருடன் 15 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது, பள்ளிப்பருவ காலத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துக்கொண்டிருந்த இவரின் சிறகினை உடைக்கும் விதமாக வந்தது திருமண பந்தம்.

தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து Rubie கூறியதாவது, நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த காலம் அது, எனது படிப்பை பற்றி சிந்தித்துக்கொண்டும், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டும் இருந்த எனக்கு திருமணம் என்றால் என்னவென்றே தெரியாது.

ஒரு நாள் எனது தந்தை, உணவினை வைத்து அதன் முன்னால் என்னை அமரவைத்து, நீ திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் எனக்கூறினார், உடனே நான் என் முன்னால் இருந்த உணவுகள் அனைத்தையும் தூக்கி எறிந்தேன்.

ஆனால், எனது தந்தை என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை, எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்னைவிட 15 வயது மூத்தவர்.அவர் என்னிடம், இந்த திருமணம் குறித்து எந்த மாதிரி உணர்கிறாய்? என்று கேட்டார், ஆனால் அவருடைய கேள்விக்கு நான் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

“என்னை விட்டால் நான் அப்படியே காற்றில் பறந்துவிடுவேன்” என்று எனக்குள் தோன்றியது, ஆனால் அது நடக்காத விடயம் என்று தெரிந்தது.உற்றார் உறவினர்கள் புடைசூழ எனக்கு திருமண நடைபெற்றது.திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள்ளேயே நான் கர்ப்பமடைந்துவிட்டேன், கர்ப்பமாக இருந்த காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் கூட குடிக்காமல் சிரமப்பட்டேன், மேலும் மருத்துவரை அனுகி மருந்துகூட நான் பெற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில் எனது தயார் 7 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், ஆனால் அந்த 7 குழந்தைகளையும் பெற்றுக்கொள்வதற்கு மருத்துவரின் உதவியை நாடியதில்லை என்று தெரிவித்தார், அதுபோலவே என்னையும் மருத்துவரிடம் அழைத்துச்செல்லவில்லை.

ஆனால், எனது கணவர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவரிடம் சென்ற அனுபவம் இருந்த காரணத்தால், என்னை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்.இறுதியில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை நோயுடன் பிறந்தது, Cytomegalovirus பாதிப்பும் இருந்தது.

ஏனெனில் எனக்கும் இந்த வைரஸ் பிரச்சனை இருந்துள்ளது, என்னிடமிருந்து எனது குழந்தைக்கும் பரவியுள்ளது, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேளாமை மற்றும் ஏதேனும் விடயங்களை கற்றுக்கொள்வதில் இடர்பாடு இருக்கும்.

இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன், மேலும் மருத்துவர்கள், உங்கள் குழந்தை ஊனமுற்று தான் இருக்கும் எனக்கூறினர், ஆனால் காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என எடுத்துக்கொண்டேன்.எனது மகளுக்கு 2 வயது இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேறினேன், எனது இந்த முடிவு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்த பெற்றோர், என்னுடனான தொடர்பினை துண்டித்தனர்.

வீட்டை விட்டு வெளியேறிய நான், இங்கிலாந்தில் எனது 24 வயதில், GCSE படிப்பினை படித்தேன், அதுமட்டுமல்லாமல் மறுபக்கம் மொடலாக ஆகுவதற்கான முயற்சியினையும் எடுத்து வந்தேன்.இந்த முயற்சிக்கு எல்லாம் வெற்றி கிடைக்கும் விதமாக பிரித்தானியாவில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற Ms Galaxy UK போட்டியில் கலந்துகொண்ட எனக்கு வெற்றி கிடைத்தது.

இதில், 30 வகையான போட்டிகள் நடைபெறும், அதில் ஒன்றுதான் விளம்பர மொடல் போட்டி.இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட ரூபி வெற்றிக்கனியை ருசித்துள்ளார், இந்த போட்டியில், அழகு ராணியான தெரிவு செய்யப்பட்ட இவர், விளம்பர மொடலாக அறிவிக்கப்பட்டார்.

இந்த பட்டத்தால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கும் ரூபிக்கு, மேலும் சந்தோஷம் தரும் விதமாக Karma Nirvana அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.கட்டாய திருமணம் மற்றும் வன்முறை சார்ந்த செயல்களை தடுப்பதினை நோக்கமாக கொண்டு இந்த Karma Nirvana அமைப்பு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரூபியின் மகளுக்கு தற்போது 16 வயதாகிறது, மேலும் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஐபோன் வாங்குவதற்காக 18 நாள் குழந்தையை ஒன்லைன் மூலம் விற்ற தம்பதி!!

FB-41

ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக 18 நாட்களான பெண் குழந்தையை 3,530 டாலர்களுக்கு இந்தத் தம்பதியினர் விற்றுள்ளனர்.

சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் சியாவோ மேய் என்பவர் நிறைய பகுதி நேர வேலைகளைச் செய்து வருகிறார். தந்தை துவான் எப்போதும் இண்டெர்நெட் கஃபேக்களில் நேரத்தை செலவிட்டு வருபவர்.சமூகவலைத்தளம் QQ-வில் கொடுத்த விளம்பரத்தை அடுத்து ஒருவர் குழந்தையை வாங்க முன் வந்தார். அவர் 23,000 யுவான்கள் தொகையை இவரிடம் அளித்துள்ளார்.

இந்தத் தொகையைக் கொண்டு ஐபோன் மற்றும் மோட்டார் பைக் ஒன்றை வாங்க அவர் திட்டமிட்டிருந்தார். குறித்த தம்பதி 2013-ம் ஆண்டு சந்தித்து காதல் வலையில் விழுந்தனர். இவர்கள் இருவருமே திருமண வயதை எட்டாத நிலையில் உறவு மலர்ந்ததில் அந்தப் பெண் கருத்தரித்துள்ளார்.இதனையடுத்து இந்தக் குழந்தையினால் சுமைதான் அதிகமாகும் என்று இருவரும் முடிவெடுத்து குழந்தையை விற்க தீர்மானித்துள்ளனர்.

 

சிட்டுக்குருவி ஜோடிக்கு நடந்த வினோத திருமணம்!!

sparrow_002

உத்தரப்பிரதேசத்தில் சிட்டுக்குருவிக்கும், சிட்டுக்குருவிக்கும் நடந்த திருமணத்தில் சுமார் 500 கிராமவாசிகள் கலந்து கொண்டுள்ளனர். சர்வதேச சிட்டுக்குருவி தினம் வரும் 20-ம் திகதி கொண்டாடப்படும் நிலையில் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுக்காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திருமணம் செய்யப்பட்டுள்ளது.

மோஹன்பூர் கலாரி கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த் பட்டேல்-சுமன்லதா தம்பதியர், இந்த சிட்டுக்குருவி திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியுள்ளனர்.மாப்பிள்ளை சிட்டுக்குருவியை வளர்த்துவரும் உள்ளூர் ஆசிரியரிடம் பெண் சிட்டுக்குருவியை யஷ்வந்த் பட்டேல் தாரைவார்த்துள்ளார்.

சுமார் 500 கிராமவாசிகள் கலந்து கொண்ட இந்த திருமணத்தில், விருந்து நிகழ்ச்சியும் நடந்துள்ளது.மேலும், இந்த திருமண விழாவில் மாவட்ட வனத்துறையை சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.

 

2 பேருந்துகளுக்கு இடையில் சிக்கி வாலிபர் பலி! எதிர்பாராமல் நடந்த துயர சம்பவம்!!

Avadi-Bus-Station

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவர் ஒருவர் 2 பேருந்துகளுக்கு இடையில் சிக்கி பலியாகியுள்ளார்.நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.பொலிசார் இதுபற்றி கூறுகையில், நேற்று இரவு 8.30 மணியளவில் வடசேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு பேருந்து ஒன்று அண்ணா பேருந்து நிலையத்துக்குள் வந்தது.அந்த பேருந்து, நிலையத்துக்குள் நுழைந்தபோது ஒரு வாலிபர் பேருந்தில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.

அப்போது பேருந்து நிலையத்தில் 1-வது நடைமேடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்கும், கன்னியாகுமரி சென்ற பேருந்துக்கும் இடையில் வாலிபர் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார்.இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பேருந்துகளின் இடையில் சிக்கிய வாலிபர், நசுங்கியபடி உயிருக்காக போராடிய நிலையில், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.அவர்கள் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் அந்த வாலிபரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.இதுபற்றிய தகவல் அறிந்த பொலிசார் விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் வைத்திருந்த சோதனையிட்டதில், அவர் தடிக்காரன்கோணம் பால்குளத்தை சேர்ந்த மோகன் மகன் அனில்குமார்(22) என்பது தெரியவந்துள்ளது.

 

மனைவிக்கு விலை அறிவித்த கணவன்: பேஸ்புக்கில் நூதன பதிவு!!

1 (70)

பேஸ்புக்கில் தனது மனைவியை விற்க முன்வந்த கணவர் மீது மனைவி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த திலிப் என்பவர் வாங்கிய கடனை திருப்பி அளிக்க எடுத்த நூதன முடிவு பொலிஸ் வழக்கில் முடிந்துள்ளது.

திலிப் வாங்கிய கடனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் மனைவி மற்றும் 2 வயது மகள் புகைப்படத்தையும் இணைத்து பதிவு செய்த திலிப்,கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி அளிக்க இருப்பதால், தமது மனைவியை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஆர்வம் உள்ள நபர்கள் தமது கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.இதனை தனது உறவினர் மூலம் அறிந்த அந்தப் பெண், தனது கணவர் திலிப் மாலி மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.கடனை திருப்பி அளிக்க மனைவியை விற்க கணவன் முன்வந்த சம்பவம் இந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பேஸ்புக்கில் கோளாறு : கண்டுபிடித்த இளைஞருக்கு 10 லட்சம் பரிசு!!

fb_hacker_002

பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிளிப்கார்ட்டில் பணிபுரிந்து வருகிறார்.இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.

பேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட வாய்ப்புள்ளது.இந்த குறையை கண்டுபிடித்த அவர் அதனை பேஸ்புக்கிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து பேஸ்புக்கில் இருந்த அந்த குறை சரி செய்யப்பட்டதோடு, ஆனந்த் பிரகாஷ்க்கு பேஸ்புக் நிறுவனம் 15000 டொலர் பரிசை அறிவித்துள்ளது.

 

ஜன்னல் மீது உதித்தவர் குருதி வெளியேறியதனால் உயிரிழப்பு!!

glass_cut_leg

ஜன்னல் கண்ணாடியொன்றினால் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் நபரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.ஜன்னல் மீது தாக்குதல் நடத்தியதாலேயே குறித்த நபருக்கு வெட்டுக்காகயம் ஏற்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் குறித்த நபரை கடுமையான வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் அதிக குருதி வெளியேறிக்கொண்டிருந்த போது மீட்டுள்ளதையடுத்து அவரை மீரிகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 60 வயது நிரம்பிய ரங்பண்டா என்றும் மீரிகம அண்ணாசிவத்த பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் தமது வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். குடும்பத்தவர் எவரும் நீண்ட நேரம் வீட்டில் இல்லாமையினால் ஏற்பட்ட முன்கோபத்தினை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் வீட்டு ஜன்னல் கண்ணாடியை காலால் உதைத்துள்ளார்.அதனால் அதிகம் இரத்தம் வெளியேறியுள்ளதையடுத்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

ஒட்டுசுட்டானில் கத்திகுத்து சம்பவம் : மூவர் படுகாயம்!!

Kathi

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கத்திகுத்து சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணத்தை கண்டித்து ஒட்டுசுட்டான் வர்த்தகசங்கம் கதவடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் படுகாயமடைந்த மூவர் வியாபாரிகள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகாயமடைந்த வியாபாரிகள் முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவலகள் கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஒட்டுசுட்டன் வர்த்தகநிலையத்தில் இனந்தெரியாத நபர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏட்பட்டுள்ளதாகவும் அதன் காரணத்தால்தான் குறித்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை!!

Saudi

போதைப் பொருளை கடத்திச் சென்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை பெண்ணொருவருடன் மூன்று இந்திய பிரஜைகளுக் குவைத் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இலங்கை பெண்ணுடன் இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று இந்தியர்களும் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர்களில் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கு எதிராக போதைப் பொருள் விநியோக குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனினும், மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய இவர்களுக்கு 30 நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மாமன்றத்தின் ‘விளை நிலம்’ தொடர் நிகழ்வு அழைப்பிதழ்!!

12821593_1040046966059234_4270613728962455188_n - Copy

கலை இலக்கிய துறையில் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வருகின்ற வவுனியா தமிழ் மாமன்றம், இன்னொரு முயற்சியாக, ‘ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம்’ என்ற தொனிப்பொருளில் “விளை நிலம்” என்கின்ற ஓர் தொடர் நிகழ்வை நடாத்த உத்தேசித்துள்ளது.

கலை இலக்கிய ரீதியில் ஆர்வமுள்ள, திறமையுள்ளவர்களுக்கான சரியான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களின் திறமைகளுக்கான அங்கீகாரத்தை வழங்குவதுடன், அவர்களின் திறமைகளை மேலும் மெருகேற்றி, அத் துறைசார் ரீதியில் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல் நோக்கத்தின் அடிப்படையில், இந் நிகழ்வினை தமிழ் மாமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

‘விளை நிலம்’ எனும் இந்நிகழ்வின் முதலாவது களம் எதிர்வரும் 13.03.2016, ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணிக்கு வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில், ‘போருக்கு பின்னரான தமிழரின் செல்நெறியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் விடயப்பரப்பு எது?’ என்ற தலைப்பிலான தமிழ் மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினர் திரு. இரா. இராஜேஸ்வரன் அவர்கள் தலைமையிலான சுழலும் சொற்போர் இடம்பெறவுள்ளது. இவ் சுழலும் சொற்போரில், ‘பொருளாதார மீள் எழுச்சி’ என க.அனுஷா அவர்களும், ‘அதிகரித்துவரும் குற்றங்களும் சீர்கேடும்’ என சி.விதுர்சன் அவர்களும், ‘புலம்பெயர்ந்தவர்களின் சிந்தனை மாற்றம்’ என கு.சிரஞ்சீதன் அவர்களும், ‘தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு’ என சு.வினோத் அவர்களும், ‘சுயநிர்ணயம் மீதான நம்பிக்கையீனம்’ என கி.கிஷாந் அவர்களும் வாதிடவுள்ளனர்.

அத்துடன், ‘கால ஓட்டத்தில் கரையாத சுவடுகள்’ எனும் பொருளில், தமிழ் மாமன்றத்தி;ன் மேற்சபை உறுப்பினர், திரு.செ.மதுரகன் தலைமையிலான கவியரங்கமும் இடம் பெறவுள்ளது. இக் கவியரங்கில், ‘ஏழ்மையின் கல்வி’ என ஜெ.கோபிநாத் அவர்களும், ‘வீரர்தம் விழுப்புண்’ என த.மோகனரங்கன் அவர்களும், ‘இணையத்தில் எழுத்துக்கள்’ என ச.கஜன் அவர்களும், ‘கவிஞனின் வார்த்தைகள்’ என வே.முல்லைதீபன் அவர்களும் கவி புனையவுள்ளனர்.

மேலும், தமிழ் மாமன்றம் வாசிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக நடாத்தி வருகின்ற வாசிப்பும் அனுபவப்பகிர்வும் – நூலக நிகழ்வினுடைய 7வது நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில், போராசிரியர் சிவத்தம்பி நினைவு ஆவணப்பட விருது 2014 கிடைக்கப்பெற்ற, மொரட்டுவை பல்கழைக்கழக பொறியியல் பீட மாணவன், மோகனரங்கன் தயாபரன் அவர்கள் இயக்கிய, “TEARS OF BLOOD” எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கின்ற ‘விளை நிலம்’ மற்றும் ‘வாசிப்பும் அனுபவப்பகிர்வும்’ எனும் நிகழ்வுகளில் கலை இலக்கிய துறைசார் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் மாமன்றம் அழைக்கின்றது.

‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’

1913574_1040046986059232_3756807143528522816_n 12821593_1040046966059234_4270613728962455188_n

இ-மெயிலை கண்டுபிடித்தது நான் : அங்கீகாரம் வேறொருவருக்கா : தமிழர் சிவா அய்யாதுரை ஆதங்கம்!!

Siva

இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டொம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி நிறுவனங்களும் புகழாரம் சூட்டியுள்ளன. ஆனால் அந்த அங்கீகாரம், கௌரவம் தனக்குச் சொந்தமானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார்.

இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது..

என்னுடைய 14வது வயதில் மின்னஞ்சலுக்கான மென் பொருளை உருவாக்கினேன். அதற்கு இ-மெயில் என்று பெயர் சூட்டினேன். அதற்கு முன்பு ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் நேரடி இணைப்பின் மூலம் தகவல் அனுப்பும் சேவை இருந்தது. அதில் வெறும் வார்த்தை களை (டெக்ஸ்ட் மெசேஜ்) மட்டுமே அனுப்ப முடியும். அதைதான் ரேமண்ட் கண்டுபிடித்தார்.

நான்தான் முதன்முதலில் கணினி மூலம் தகவல்களை அனுப்பும் மென்பொருளை உருவாக்கினேன். நான் கண்டுபிடித்த இ-மெயில், டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. இ-மெயிலில் உள்ள இன் பொக்ஸ், அவுட் பொக்ஸ், சிசி, பிசிசி, டேட்டா, பொவொட், ரீப்ளை உட்பட அனைத்தையும் நான்தான் உருவாக்கினேன்.

அதற்கான காப்புரிமையை 1982ல் பெற்றேன். ஆனால் எனக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம் நான் இந்தியன், கருப்பு நிறத்தவன், புலம் பெயர்ந்தவன். இன்று சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது உண்மை, நீதியின் தினம். உண்மைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அய்யாதுரைக்கு ஆதரவாக பலர் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

எச்.ஐ.வி வதந்தியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கல்வியைத் தொடர வழி கிட்டியது!!

1553241195Untitled-1

குளியாபிடிய சிறுவனை கண்டி டிரினிடி கல்லூரியில் அனுமதிப்பது தொடர்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. குளியாபிடிய பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனின் தந்தை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எயிட்ஸ் நோய் இருந்ததாகவும் அதனால், குறித்த சிறுவனும் எச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் வதந்தி பரவியது.

இதனையடுத்து, அவர் கல்வி கற்று வந்த பாடசாலையில், தொடர்ந்து கற்றல் செயற்பாடுகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கருதி குறித்த பாடசாலையிலுள்ள மற்றைய மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்ததே இதற்குக் காரணம்.

இதனையடுத்து, இது குறித்து அவதானம் செலுத்திய கல்வி அமைச்சு, தற்போது அவரை கண்டி டிரினிடி கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கண்டி டிரினிடி கல்லூரி அதிபர் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

 

சிறுமி மீது பாலியல் வல்லுறவு- சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!!

1 (26)

ஐந்து வயதுச் சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டையவரென சந்­தே­கிக்­கப்­படும் 78 வய­து­டைய ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஹிதோ­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

ஹிதோ­கம பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஹல்­மில்­ல­குளம் கிரா­மத்­தி­லுள்ள பௌத்த விகா­ரையில் அண்­மையில் சிர­ம­தா­ன­மொன்று இடம்­பெற்­றது. இச் சிர­ம­தா­னத்தில் கலந்து கொள்ளச் சென்ற தாய் தன்­னுடன் 5 வயது மக­ளையும் கூட்டிச் சென்­றுள்ளார். சிறு­மியை விளை­யா­டு­மாறு கூறி­விட்டு விகாரை வள­வினுள் இடம்­பெற்ற சிர­ம­தானப் பணியில் குறித்த தாய் ஈடு­பட்­டுள்ளார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் சிறு­மியை ஏமாற்றி கூட்டிச் சென்ற சந்­தே­க­நபர் புத்தர் சிலை வைக்­கப்­பட்ட பகு­தியில் வைத்து சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார். சிர­ம­தானம் முடி­வுற்­றதும் இது பற்றி பாதிக்­கப்­பட்ட சிறுமி தனது தாயிடம் கூறி­யுள்­ள­துடன் குறித்த குற்­றத்தைச் செய்த நப­ரையும் இனங்­காட்­டி­யுள்ளார். உடன் ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் தாய் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வெளிநாட்டு வாழ் 1500 இலங்கையர்களுக்கு 15ம் திகதி இரட்டைக் குடியுரிமை!!

sri-lanka-passport

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1500 இலங்கையர்களுக்கு 15ம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.இந்த ஆண்டு பூர்த்தியாவதற்கு முன்னதாக 18000 வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.இரட்டைக் குடியுரிமை வழங்கும் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்தியாகியுள்ளன.

மூன்றாம் கட்டத்தின் அடிப்படையில் இந்த மாதம் 15ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1500 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களாவர்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருந்தது.எமது அரசாங்கம் இந்த அநீதியை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது என அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.

 

மத்தள விமான நிலையத்தில் 300 யானைகள், 1000 மான்கள்!!

Mattala-airport-DSC_1412

மத்தள சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் 300 காட்டு யானைகளும், 1000 மான்களுக்கு நிர்கதியாகியுள்ளதாக நிரந்தர அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஹம்பாந்தோட்டை அரசியல்வாதிகள், விமான நிலைய அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்களை நடாத்த எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.