வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் 07.03.2016 திங்கட்கிழமை மகா சிவராத்திரி சிறப்பாக அனுசஷ்டிக்கபட்டது.
சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் அபிசேகஆராதனைகள் இடம்பெற்றது .மற்றும் கோவிலில் உள்ள தங்கமுலாமிலான சிவலிங்கம் மற்றும் பார்வதி அம்பாள் ஆகியோருக்கு விசேட ஷ்நாபனஅபிசேகங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட ஆயுள்வேத மசாஜ் நிலையம் மீது இனந்தெரியாதநபர்கள் நேற்று (07.03.2016) இரவு தீ வைத்துள்ளனர்.
வவுனியா, நெளுக்குளம், குளுமாட்டுச்சந்திப் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகாமையில் புதிதாக திறக்கப்பட்ட மசாஜ் நிலையம் தொடர்பில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் மசாஜ் நிலையத்தின் கதவுகள், கதிரைகள் என்பன தீயில் எரிந்துள்ளன.
குறித்த நிலையம் எரிவதைக் கண்டவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தீ வேகமாக பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று(08.03.2016) காலை 9.30 மணியளவில் இனைஞர் சேவைகள் நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி வவுனியா மத்திய பேரூந்து நிலையம ஊடாக யாழ்வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்து மாவட்ட செயலாளர் திரு. ரோகன புஸ்பகுமார அவர்களிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
நீதிக்கான பயணம், அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பு, வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு, பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த பெண்கள் விழப்புணர்வு மகளிர் தின நிகழ்வில் கலந்த கொண்டவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதரான பாதாதைகளை ஏந்தியவாறு வாயை கறுப்புத் துணியினால் கட்டியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்கமாட்டோம்.
பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்களை மாற அனுமதிக்கமாட்டோம்
பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்க மாட்டோம்
பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம்.
போன்ற கோசங்களை எழுப்பியவாறு சென்ற பேரணியினர் வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றபோது அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கான மகஜரினை கையளித்தனர்
மூன்று கோரிக்கைகள் அடங்கிய அம் மகஜரின் விபரம் வருமாறு,
1. பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைக்கான துரித நீதி வேண்டும்
2. பெண்கள், சிறு பிள்ளைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தேசிய பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்கவேண்டும்
3. சட்டமாதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள இவ் வன்முறைகளுக்கெதிராக வழக்குகள் விசாரணைக்கு உடனடியாக வரும் வகையில் விசேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்படவேண்டும்.
என்பதை தங்களிடம் எமது கோரிக்கையாக முன்வைக்கின்றோம். மேலும் இதற்கான பதிலினையும் தங்களிடமிருந்து மிக விரைவாக எதிர்பார்கின்றோம் என்றும் அம் மகஜரில் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமது உறவுகளுக்காக வவுனியா நகர சபை பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு முன்பாக இன்று (08.03.2016) காலை 8 மணிக்கு அடையாள உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் அடையாள உண்ணாவிரதம் அரசியல் கைதிகளின் உறவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . பிற்பகல் 4 மணிவரை இவ் அடையாள உண்ணாவிரம் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் வவுனியா சங்கம் என்பன இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைவருக்குமே பெற்றோர்கள் கடவுள் போன்றவர்கள். அத்தகைய பெற்றோர் நன்கு இளமையாக இருக்கும் போது, குழந்தைகளை நல்ல நிலைமையில் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வயதானால், அவர்களால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு இருப்பார்கள்.
அவ்வாறு அவர்களுக்கு வயதாகிவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியும். அந்த மாதிரி ஏதாவது மாற்றங்களை கவனிக்கும் போது, மாற்றங்கள் தென்பட்டால், அப்போது அவர்களுக்கு உதவி தேவை என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்.
பொதுவாக வயதான பெற்றோர்களை பராமரிப்பது என்பது ஒரு எளிதான பணியல்ல. ஏனெனில் அன்றாட வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டே, வயதான பெற்றோரை கவனிப்பது என்பது சற்று கடினம் தான். ஆனால் அத்தகைய வேலைகளை எளிதாக்க சில வழிமுறைகள் உண்டு. ஆகவே இப்போது வயதான பெற்றோரை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வழிமுறைகள்:
1. பெற்றோர்களுடன் நல்ல கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். வயதானவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், அதனால் அவர்களது அந்த நிலைமையிலும், தாங்கள் நல்ல நிலையில் உள்ளோம் என்பதை உணரும் படி அவர்களோடு கலந்து பேசுவது முக்கியமாகும்.
2. பெற்றோர்கள் மருத்துவரிடம் செல்லும் போது அவர்களுடன் செல்லவும். மருத்துவரிடம் செல்லும் போது, அவர்களுடன் யாராவது இருந்தால், அவர்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கும். இதனால் அவர்களது உடல் நலத்தைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளலாம்.
3. பெற்றோர்களை கவனிக்கும் போது அவர்களுக்கென்று ஒரு அட்டவணையை வைத்துக் கொள்ளவும். அந்த அட்டவணையில் அவர்களின் நியமனங்களை எழுதி, அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை நினைவில் வைத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு அவற்றைச் செய்வார்கள்.
4. பெற்றோர்களுடனும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும். என்ன தான் பிற வேலைகளில் மும்முரமாக இருந்தாலும், அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இதற்காக அவர்களுடன் சிரித்து பேசி விளையாடவோ அல்லது நடப்பதற்காக வெளியே செல்லவோ முயற்சி செய்யலாம். இது உறவை இன்னும் மேம்படுத்தும்.
5. பெற்றோர்களுக்கு என்று தனியாக ஒரு அறையை கொடுக்க வேண்டும். அதுவும் அவர்களுக்கு உரியது என்று உணரும் வகையில் பிரத்தியேகமான அறையை ஒதுக்கித் தர முயற்சி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் உதவி கேட்கும் போது மட்டுமே உதவி செய்யவும்.
6. பெற்றோர்களை கவனிப்பதற்கு என்று ஒரு பராமரிப்பாளரை நியமிக்கலாம். இவ்வாறு நியமித்தால், வாழ்க்கையானது மிகவும் எளிதாக்கப்படும்.
மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டதால், விமானத்தை மோதவிட்டு பயணிகள் அனைவரையும் கொல்வேன் என்று விமானி ஒருவர் பயமுறுத்திய விவகாரம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட ஒரு பயணிகள் விமானம் தயாராக இருந்தது. மொத்தம் 200 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர்.
அந்நிலையில், அந்த விமானத்தை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விமானியின் செல்போனில் இருந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு தகவல் வந்தது.அதில் “எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக கூறிவிட்டாள். நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறேன். விமானத்தை எங்கேயாவது மோத செய்து, நானும் இறந்து போவேன்” என்று கூறியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தை புறப்படவிடாமல் தடுத்தனர். மேலும், தற்கொலை மிரட்டல் விடுத்த விமானியை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். மற்றொரு சக விமானியை விமானத்தை இயக்கு அனுமதித்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.இந்த விமானியிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.
நுவரெலியா – தெரிபெஹெ பிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையால் இந்த குற்றசெயல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தாயின் பாதுகாப்பில் இருந்த குழந்தையை சந்தேக நபர் தூக்கி சென்றுள்ளார். பின்னர் சந்தேக நபர் பல மாதங்களாக குறித்த குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர், நுவரெலிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காற்சட்டைப் பைக்குள் வைக்கப்படும் கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சால் ஆண்களின் இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்ற நிலையில், மேற்படி மின்காந்த கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பைத் தரும் உள்ளாடையொன்றை ஜேர்மனிய ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
23 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ‘கிறவுண் ஆபரண உள்ளாடை’ என அழைக்கப்படும் இந்த உள்ளாடை கதிர்வீச்சைத் தடுக்கக் கூடிய வகையில் வெள்ளி உலோக நாரால் பின்னப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. முனிச் வர்த்தகப் பாடசாலையைச் சேர்ந்த பீர் போய் மத்தியஸென் ( 34 ), டானியல் ஹேர்டர் ( 31), நிக் கியபென்பேர்க் ( 31 ) மற்றும் பெர்னோ டெலியஸ் ( 31) ஆகிய ஆராய்ச்சித் துறை மாணவர்கள் கூட்டிணைந்து இந்த உள்ளாடையை வடிவமைத்துள்ளனர்.
மேற்படி உள்ளாடையில் வெள்ளி நார் அதி தொழில்நுட்ப செயற்கிரமங்கள் மூலம் உடலுக்கு இதமளிக்கக் கூடிய வகையில் மென்மையானதாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் ரசிகர்கள் வெள்ளித்திரையை ரசிப்பது போலவே சின்னத்திரையையும் ரசிக்கின்றனர்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பார்த்த சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி தான்.இதில் நடித்த செந்தில்-ஸ்ரீஜா இருவரின் பகுதி முடிந்த சில மாதங்களில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் அந்த சீரியல் இரண்டாம் பாகமாக சென்று கொண்டு தான் இருக்கிறது.ரேடியோ தொகுப்பாளரான செந்தில் சினிமாவில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனால் ஸ்ரீஜா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது இருவரும் இணைந்து விரைவில் சின்னத்திரைக்கு வரப்போகிறோம் என்று முகநூலில் பதிவிட்டுள்ளனர்.இந்த செய்தி இவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவுடன் நடிக்கும் ஹீரோயின்கள் பலரும் சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால், அதையே வைத்து திரைத்துறையில் உச்சத்தையும் தொட்டு விடுவார்கள்.அந்த வகையில் அடுத்து வாலு இயக்குனர் விஜய் சந்தர் சிம்புவை இயக்கும் படத்திற்கு ஹீரோயின் வேட்டை நடந்து வருகின்றது.
இதில் முதல் ஆளாக காஜல் அகர்வால் பெயர் தான் அடிப்படுகின்றதாம். 90% இவர் தான் நடிப்பார் என கூறுப்படுகின்றது.
இந்தியாவின் மும்பையில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த முதல் குழந்தையான ஹர்ஷா சவ்தாஷா தற்போது தனது 29வது வயதில் இயற்கையாகவே ஆண் குழந்தை ஒன்றை திங்களன்று பிரசவித்தார்.ஹர்ஷா சவ்தாஷாவின் பெற்றோர்ருக்கு உதவிய அதே டாக்டர்கள் குழுவினர் தான் ஹர்ஷாவின் பிரசவத்தின் போதும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். 1986-ல் செயற்கை கருத்தரித்தல் நுட்பங்களை பயன்படுத்தி பெற்றெடுத்த குழந்தை தான் ஹர்ஷா சவ்தாஷா.
தற்போது அவர் திருமணமாகி 29 வயது ஆகின்றது. அவரது பெற்றோர்கள் போலல்லாமல், ஹர்ஷா மற்றும் திவ்யபால் ஷாவால் இயற்கையாகவே கருத்தரிக்க முடிந்தது. இது குறித்து ஹர்ஷா மற்றும் அவரது கணவர் திவ்யபால் ஷா கூறுகையில், சிவராத்திரி நல்ல நாளில் குழந்தை பிறந்துள்ளது கடவுள் தந்த பரிசு என்று கூறினர்.
ஜேர்மனி நாட்டில் குடியேறுவதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் பெற்றோர்களிடம் மீண்டும் இணைந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.துருக்கி நாட்டை சேர்ந்த இப்ராகிம் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஜேர்மனி நாட்டில் குடியேற கடந்தாண்டு தொடக்கத்தில் புறப்பட்டுள்ளார்.துருக்கி கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் புறப்பட்டபோது, சில கி.மீ தொலைவிற்கு பிறகு அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியுள்ளது.
உயிர் பிழைத்த பெற்றோர் தனது 10 வயதான மகதி ரபானியை தேடியுள்ளனர். ஆனால், சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை.மூழ்கிய படகில் தனது ஆசை மகனும் இறந்துவிட்டான் என வேதனை அடைந்த பெற்றோர் பெரும் துயரத்துடன் துருக்கி நாட்டிற்கு திரும்ப சென்றுள்ளனர்.சில நாட்களுக்கு பிறகு, இப்ராகிம் தனது குடும்பத்தினருடன் ஜேர்மனிக்கு புறப்பட்டு அங்குள்ள Lower Saxony மாகாணத்தில் குடியேறியுள்ளனர்.இந்நிலையில், ஜேர்மனியை சேர்ந்த செஞ்சிலுவை சங்கம் சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அப்போது, பேர்ன் நகரில் இறந்ததாக கருதப்பட்ட 10 வயது சிறுவனான மகதி ரபானி ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டு குடும்பத்தினருடன் வசித்து வந்ததை கண்டுபிடித்தனர்.இதனை உடனடியாக மகதியின் பெற்றோருக்கு தெரிவித்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர்.சிறுவனை ஜேர்மனி நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முடிந்த நிலையில், நேற்று ஹேனோவர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.இறந்ததாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் திரும்ப கிடைத்ததை கண்டு, மகனை வாரி அணைத்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியே இப்ராகிம், ‘எங்களது மகன் திரும்ப கிடைத்த இந்த நிகழ்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை. செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.திரும்ப கிடைத்த தங்களது மகனை உடனடியாக பள்ளியில் சேர்க்க உள்ளதாக பெற்றோர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் ரொட்டி துண்டு விநியோகிக்கப்பட்டபோது, அதனை பெறுவதற்கு அகதிகள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்ட பரிதாப காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேற வரும் அகதிகளில் ஆயிரக்கணக்கானோர் தற்போது கிரீஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிரீஸில் உள்ள இடோமெனி என்ற கிராமத்தில் உள்ள இந்த முகாமை சேர்ந்த அகதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.ஐரோப்பாவிற்கு குடியேற வரும் அகதிகளின் நலனிற்காக தங்களுடைய நாடுகளின் எல்லைகளை திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த சூழலில் அகதிகளுக்கு உணவு பரிமாரப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஒரு சிலருக்கு ரொட்டி துண்டுகள் கிடைக்காமல் போகவே திடீரென கலவரம் மூண்டுள்ளது.அகதிகளில் சிலர் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். சிலர் கற்களை எடுத்து மற்றவர்கள் மீது வீசி ரத்தக் காயங்களை ஏற்படுத்தினர்.
விரைந்து செயல்பட்ட எல்லை பாதுகாப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கினர்.எனினும், இந்த தாக்குதலில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கலவரம் நிகழ்ந்த இந்த முகாமில் மட்டும் சுமார் 13,000 அகதிகள் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக உணவுத்திட்டம் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கான உணவை அதிபர்களோ ஆசிரியர்களே களவாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்ககூடாது என வவுனியா நகரக்கோட்டத்தின் உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.வரதகுமார் தெரிவித்தார்.
சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் தினம் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் அதிபர் சிறிதரன் தலைமையில் கொண்டாடப்பட்டபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உரையாற்றினார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்
உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் மூலம் வறிய மாணவர்கள் பயன்பெற்று தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்கிறார்கள். யுத்த அவலங்களை சந்தித்த மாணவர்களின் குடும்பங்கள் பலர் வறுமையாக வாழ்கின்றார்கள். வறுமையால் வாடும் குடும்பங்களின் பிள்ளைகள் காலை உணவை அருந்தாமலே பாடசாலைக்கு வருகிறார்கள்.
இவ்வாறு வரும் மாணவர்கள் பாடசாலையில் உணவருந்தி படிக்கும் சூழ்நிலையை உலக உணவுத்திட்ட நிறுவனத்தினர் வழங்கியுள்ளமை எமக்கு கிடைத்த வரப்பிரசாதமே. இவ்வாறு வரும் உணவுகளை சில அதிபர்கள் திருட முட்படுகின்றனர். ஆசிரியர்கள் சிலர் திருட முட்படுகின்றனர். இது எவ்வளவு கொடுமையான செயற்பாடு. இதனைத் தடுக்க பாடசாலைச்சமூகம் முன்வரவேண்டும்.
பச்சை மரக்கறிகளின் விலை சந்தையில் அதிகமாக உள்ளது இதனால், அரசாங்கத்தினால் பச்சை மரக்கறி கொடுப்பனவை தலா மாணவர் ஒருவருக்கு 8 ரூபாவால் அதிகரிக்க வேண்டும். இல்லையேல சிறந்த போசாக்கான மரக்கறியை மாணவர்களுக்கு வழங்குவது கடினமான காரியமாகவே இருக்கும்.
இதே போல் சமைப்பதற்கு விறகை பெறுவதிலும் அதிபர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பிரச்சினைகளை அரசாங்கமே தீர்க்க முன்வரவேண்டும். இதற்காக மாணவர்களிடம் பணம் அறிவிடமுடியாது. மாணவர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன இந்நிலையில் பணம் அறவிடலாமா என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
இவ் உலக உணவுத்திட்ட உணவு வழங்கும் செயற்திட்டமூலம் ஆரோக்கியமான கிராமப்புற மரக்கறிகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் கொள்வனவு செய்வதால் கிராமப்புற விவசாயிகள் பயன்அடைகின்றனர்
வாரத்தில் ஒரு முறையாவது இலைக்கஞ்சியை பாடசாலைகள் வழங்குவது உடல் ஆரோக்கியத்திற்கும் அறிவு விருத்திக்கும் உகந்தது என்றார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறத்திலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பாடசாலையில் உலக உணவுத்திட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் உணவை உண்பதன் ஊடாக தமது பசியைப்போக்கி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மையை நான் அறிந்துள்ளேன் என்று வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டபணிப்பாளரும் உலக உணவுதிட்ட கண்காணிப்பாளருமான திருமதி கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரக்கோட்டதினால் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் தினம் சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜாவித்தியாலயத்தில் அதிபர் வரதராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டபோது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
இன்று சில பாடசாலைகளில் உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்படும் உணவை சரியாக பயன்படுத்துவதில்லை. அதற்காக நாம் வருத்தப்படுகின்றோம். இன்று பிள்ளைகள் பாடசாலைக்கு வரும்போது வீட்டில் சாப்பிடும் உணவைவிட பாடசாலையில் வழங்கப்படும் உணவை விரும்பி உண்கிறார்கள். வீட்டில் எல்லோருக்கும் போசாக்கான உணவு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. இன்று வடமாகாணத்தின் பொருளாதாரம் அப்படியான வறுமையில் உள்ளது.
போருக்குப் பின்பும் அதன் தாக்கம் உள்ளது. அரச உத்தியோகக்காரர் காலைவேளை பிள்ளைக்கு தேவையான சத்துணவை வழங்குதில் அவர்களுக்கு நேரம் இல்லை. வேலைக்கு போகும் அவதியில் பாணை பணிசை வேண்டிகொடுக்கிறார்கள். இது எந்தளவு தூரம் ஆரோக்கியமான உணவாகும். பிள்ளையொன்று பாடசாலையில் 75 கிராம் அரிசி 20 கிராம் பருப்பு 15 மில்லிலீற்றர் எண்ணெய் 15 கிராம் மீன்ரின் என்பன சமைக்கப்படுகிறது.
இதனால் பிள்ளையின் உடல் மட்டுமல்ல அறிவும் விருத்தியடைகின்றது. கட்டிடங்கள் கட்டுவதோ அல்லது வீதியை போட்டபின்போ நாம் வெளிப்படையாக அதன் தரத்தை மதிப்பிடுவது வெளிப்படையானதும் இலகுவானதுமாகும். ஆனால் பாடசாலை மாணவணுக்கு ஊட்டச்சத்து உரியவாறு கிடைக்கின்றதா என்பதை அறிவது கடினமானது.
ஒரு பாடசாலையின் கல்வி பெறுபேற்றில் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் உணவு செல்வாக்குச் செலுத்துகின்றது. சிறிநாகராஜா வித்தியாலயத்தில் ஒரு மாணவனைத் தவிர ஏனைய மாணவர்கள் கா.பொ.த சாதாரன பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை இந்த உணவை மாணவர்கள் உண்பதன் ஊடான வெளியீடு என்பதை அறிய முடிகிறது.
கிராமப்புற பாடசாலைகளின் கல்வியில் உணவூட்டலின் தாக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது. பெற்றோர்கள் பாடசாலையில் வந்து இந்த உணவை சமைத்து கொடுக்க முன்வரவேண்டும். கட்டிடங்கள் கட்டுவது வீதியை போடுவதை விட பிள்ளைக்கு சாப்பாடு போடுவது சிறந்ததொரு சேவை. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் மட்டும் இந்தப் பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் வழங்கப்படுகிறது. எமது பிரதேசத்தில் இந்தச் சேவையை செய்யும் உலக உணவுத்திட்டத்தினரை பாராட்டுகின்றேன்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் திருமதி சிவகுமாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் இளையதம்பி, வவுனியா நகரக்கோட்ட உலக உணவுத்திட்ட இணைப்பதிகாரி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் வரதகுமார், வவுனியா தெற்கு கல்விவலய ஆசிரிய ஆலோசகர் பத்மநாதன், வவுனியா தெற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன் சந்திரன், சிறி நாகராஜா வித்தியாலயத்தின் உலக உணவுத்திட்ட செயற்றிட்ட பொறுப்பாசிரியர் பிரகாஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்
இத்தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்று பெற்றோர் பங்களிப்புடன் போசாக்கான உணவு வழங்கப்பட்டது.
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (09.03.2016)புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது ..