அப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டில் முதலாவது iPhone ஐ அறிமுகம் செய்ததிலிருந்து iOS இயங்குதளங்களில் இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக கூகுளை தேர்வு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் 2010ம் ஆண்டில் இதற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன்படி 2015ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவடைகின்றது.
எனவே 2015ம் ஆண்டிலிருந்து Yahoo அல்லது Bing இனை அப்பிளின் மொபைல் சாதனங்களில் இயல்புநிலை தேடுபொறியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதேவேளை மைக்ரோசொப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள் அப்பிள் நிறுவனத்துடன் சிறந்த உறவைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த நாதன் (27) என்ற இளைஞர் தனது தந்தை ரொபின்சனை (48) துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை தொலைக்காட்சி ஸ்டாண்டாக உபயோகப்படுத்தியுள்ளார்.
இவர்கள் இருவரும் தங்கள் குடியிருப்பு கட்டடத்தில் ஒன்றாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையில் நடந்த மோதலில் இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
முதலில் தனது தந்தையை கொலை செய்யவில்லை மறுத்து வந்தாலும், தற்போது ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மொடல் அழகி ஒருவர், தனது உடல் விற்பனைக்கு என்று பேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்தவர் முன்னாள் மொடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர். அவரது தாய் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
தந்தை அண்மையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து படுத்தபடுக்கையாக உள்ளார். வறுமையில் வாடும் சாந்தினியால் பெற்றோரை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அவர் தனது உடல் விற்பனைக்கு என்று பேஸ்புக்கில் துணிச்சலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சாந்தினி கூறுகையில், என் பெற்றோரை காப்பாற்ற பணம் இல்லை. உதவி கேட்கவும் ஆள் இல்லை. பிறகு நான் என்ன செய்ய முடியும். இந்த அறிவிப்பை பார்த்து பலர் என்னை தொடர்பு கொண்டார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர உதவ யாரும் முன் வரவில்லை என்று கூறியுள்ளார்.
சாந்தினி பற்றி குஜராத் மாநில பெண்கள் ஆணைய தலைவர் லீலாபென் அன்கோலியா கூறுகையில், குஜராத்தில் உள்ள பொது மருத்துவமனைகளில் அவரது பெற்றோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. சாந்தினிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர் எங்களை அணுகலாம் என்று கூறியுள்ளார்.
ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட், பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த தலைகவசத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்றார்.
இவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வரலாற்றில் பல சோகமான சம்பவங்கள் நடந்துள்ளன. வேகமான பவுன்சரால் தான் ஒரு வீரர் தாக்கப்படுவார் என்று கிடையாது. சுழற்பந்தால் தாக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு.
* 1870ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் நடந்த முதல்தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் வீரர் ஜார்ஜ் சம்மர்ஸ் (25) துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த போது, ஷாட் பிட்ச்சாக வந்த பந்து தாக்கியதில் படுகாயமடைந்தார். 4 நாள் கழித்து அவர் உயிரிழந்தார்.
* 1959ம் ஆண்டு பாகிஸ்தான் முதல் தர கிரிக்கெட்டில் அப்துல் அஜீஸ் (17) என்ற விக்கெட் கீப்பர் நெஞ்சில் பந்து தாக்கியதில் சுயநினைவை இழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
* 1998ம்ஆண்டு வங்கதேசத்தில் நடந்த முதல்தர லீக் கிரிக்கெட்டில் இந்திய முன்னாள் டெஸ்ட் வீரர் ராமன் லம்பா (38) பங்கேற்ற போது, துடுப்பாட்டக்காரர் அடித்த ஷாட்டில் அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த இவரது நெற்றியை பந்து தாக்கியதில் கோமா நிலைக்கு சென்றார். மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
* தென்ஆப்பிரிக்க முதல்தர கிரிக்கெட் வீரர் டேரின் ரான்டால் கடந்த ஆண்டு உள்ளூரில் நடந்த போட்டியின் போது பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.
* தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர் அவுஸ்திரேலியாவின் பிலிப் ஹியூக்ஸும் பந்து தாக்கியதில் மரணத்தை தழுவியிருக்கிறார்.
வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களின் புனரமைப்புக்காக 375000.00 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் இவ் அபிவிருந்தி வேலைகளுக்கு வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் (வவுனியா) பூரண ஒத்துழைப்பை வழங்கி செயற்திட்டத்தை நிறைவு செய்துள்ளமையையிட்டு வடமாகாண சபை உறுப்பினர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
இவற்றில் சமளங்குளம் வேலைத்திட்டம் தவிரந்த ஏனையவை மீள்குடியேற்றப் பிரதேசங்களைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின்குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‘
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்த பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி தலீபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது எழுந்த பயங்கர சத்தத்தை அடுத்து ரெசா குல் என்ற பெண்மணி தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ளார்.
இதன்பின் அவர் கிராம பகுதியில் அமைந்த சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு சென்று தனது மகனை தேடியுள்ளார்.
அங்கு தனது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியாகி கிடப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து தீவிரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.
இவருடன் சேர்ந்து இவரது கணவர், மகள், இளைய மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து குல் உடைய மகள் பாத்திமா கூறுகையில், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு குடும்ப போரை நாங்கள் நடத்தியுள்ளோம் என்றும் துப்பாக்கியின் கடைசி குண்டு தீரும் வரை நாங்கள் போரிட்டோம் எனவும் கூறியுள்ளார்.
சிறந்த சேவையாற்றிய ஆசிரியர்களை கௌரவிக்குமுகமாக வருடந்தோறும் ஜனாதிபதியால் வழங்கப்படும் “ஆசிரியர் பிரதீபா பிரபா” விருது வழங்கும் வைபவம் கடந்த 06.10.2014ம் திகதியன்று கொழும்பு தேசிய கல்வி நிறுவக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றபோது.
இதன் போது வவுனியா இந்துக்கல்லூரி ஆசிரியர் திருமதி.சிவகுமார் செல்வமலர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடமிருந்து சிறந்த ஆசிரியருக்கான “ஆசிரியர் பிரதீபா பிரபா” என்ற விருதைப் பெற்றுக் கொண்டார்.
தலையில் பந்து பட்டதால் உயிரிழந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸூக்கு இலங்கை வீரர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதன்படி நாளை சனிக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை வீரர்கள் பிலிப் ஹியூக்ஸூக்கு மரியாதை செலுத்தும் முகமாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
மேலும் துக்கத்தை கடைப்பிடிக்கும் முகமாக கறுப்புப் பட்டி அணியும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
போட்டி நடுவரிடம் இருந்து முறையான அனுமதிக்காக காத்திருப்பதாக, இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிலிப் ஹியூக்ஸின் அகால மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தாருடன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் நிஷாந்த ரணத்துங்க குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் போட்டி ஒன்றின் போது பவுன்சர் பந்து தலையில் பயங்கரமாக தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற, 25 வயதான அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸ் நேற்று உயிரிழந்தார்.
இதனால் வீரர்கள், இரசிகர்கள், நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வைத்தியசாலைக்கு வந்திருந்த டேவிட் வார்னர், மாத்யூ வேட், பிராட் ஹேடின் உள்ளிட்ட வீரர்கள் துக்கம் தாங்காமல் அழுதனர்.
வைத்தியசாலைக்கு முன்பு திரண்டிருந்த இரசிகர்களும் கண்ணீர் விட்டனர். பிலிப் ஹியூக்ஸ் உடலுக்கு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், இரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலிய தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சிட்னி மைதானத்தில் வெளியே பிலிப் ஹியூக்ஸ் படம் வைக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதி உயர் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை வைத்திருந்த மூன்று நபர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக முச்சக்கர வண்டியில் வைத்து குறித்த வெடி மருந்துகளைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில் கச்சேரிக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர்களை, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான புலனாய்வாளர்கள் கைதுசெய்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த வூபர் செட்டிற்குள் இருந்து, 130 கிராம் நிறையுடைய 286 வெடி மருந்து கம்பிகள் மற்றும் 6 செட் வயர்கள், உள்ளிட்ட பல்வேறு வெடி மருந்து வகைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தற்போது, பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும்த கடும் மழை காரணமாக வவுனியா குளம் உட்பட்ட பெரும்பாலான குளங்களில் வான் பாய்கிறது.
இதனால் பூந்தோட்டம் பாதையூடான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை, தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மேலும் வவுனியாவின் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகளில் அதிகளவான மழை நீர் தேங்கிநிற்பதால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடும் மழையால் 1446 பேர் இடம்பெயர்வு..
வவுனியாவில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் 414 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் ரி.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று பெய்த மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செட்டிகுளம் பகுதியில் 17 குடும்பங்களும், வவுனியா வடக்கில் ஒரு குடும்பமும், வவுனியாவில் 396 குடும்பங்களுமாக 414 குடும்பங்களைச் சேர்ந்த 1446 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் செட்டிகுளம் பகுதியில் உள்ள வேப்பங்குளமும் வவுனியாவில் பாலாமைக்கல் குளமும் உடைப்பெடுத்துள்ளது.
இதேவேளை இடம்பெயர்ந்தவர்களை தங்கவைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.சூரியராஜா தெரிவித்தார்.
வவுனியா நகரில் தோணிக்கல், தாண்டிக்குளம், யேசுபுரம், வெளிக்குளம் ஆகிய இடங்களில் பல வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்ட திருடன் பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவு எ.டி.பி.ஜெயதிலக தலமையிலான 7 பேர் கொண்ட குழுவினரால் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களும், கைபேசிகள்,மடிகணனி,பணம் போன்றன கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வயது 42 எனவும் திருகோணமலை, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வெவ்வேறு பெயர்களில் நடமாடி திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் பல பிரதேசங்களில் இந்நபர் மேல் பல வழக்குகள் இருப்பதுடன் இந்நபர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக தொழில் புரிவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள்.
ஐதராபாத்தில் விபச்சார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஹோட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார்.
நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் போலீசார் விபசார வேட்டை நடத்தினார்கள். இதில் விபசாரத்தில் ஈடுபட்ட பலர் கைது ஆனார்கள். அவர்களில் ஒருவர் தெலுங்கு டி.வி நடிகை ஆவார். அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை.
கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிய போது முகத்தை துணியால் மூடிக்கொண்டார். சமீபகாலமாக ஐதராபாத்தில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது பெருகி உள்ளதாகவும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா என வரிசையாக ஹிட் அடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இவர் தற்போது பென்சில், காக்கிசட்டை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், இவர் பிரபலம் ஆவதற்கு முன்னால் இரண்டு சின்னப் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இப்படங்களில் தற்போது நடிக்க மறுப்பதால் தயாரிப்பாளர்கள் இவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
ஸ்ரீதிவ்யா தரப்பில் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது அவர்கள் கூறிய குற்றச்சாட்டு மிகவும் தவறானது என கூறியுள்ளார்.இந்த படங்களில் அவர் நடிப்பாரா அல்லது அவர் தரப்பிலிருந்து ஏதும் புகார் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்