பொழுதுபோக்கு என்கின்ற பெயரில் இவர்கள் செய்யும் வேலைகளுக்கு அளவில்லாமல் போனது. பாகிஸ்தானின் பிரபல நடிகையான வீனா மாலிக் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசாத் பஷீர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் வீணா மாலிக் தன் திருமண நிகழ்ச்சியை தொலைகாட்சியில் ஒளிப்பரப்பியுள்ளார் (கணவருடன் நெருக்கமாக நடனமாடியுள்ளார்). இதில் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்ட பாடல் ஒன்று ஒலிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு வீணா மாலிக், அவரது கணவர் ஆஷிர் பஷீர் மற்றும் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விணா மாலிக் உள்பட நால்வருக்கும் 26 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இளம்பெண்களை சமூக வலைதளங்களை பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் ஈர்த்து விபச்சாரத்தில் தள்ளுவதாக ஐரோப்பா பொலிஸ் ஏஜென்சியான யூரோபோல் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா பொலிஸ் ஏஜென்சியான யூரோபோலின் தலைவர் ராப் வெய்ன்ரைட் இதனை தெரிவித்துள்ளார்.
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்கள் அவர்களை ஈர்க்க, குழந்தைகளை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்பது போல ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனர். இந்த விளம்பரங்களை பார்த்து தொடர்புகொள்ளும் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிவிடுகிறார்கள்.
இப்படி பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளுவதன் மூலம் சமூக விரோத கும்பல்களுக்கு ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கிறது.
இந்த கும்பல்களிடம் சிக்கிய பெண்கள் ரோமானியா, பல்கேரியா, ஹங்கேரி, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
மேலும், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று ராப் வெய்ன்ரைட் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உறைபனியில் சிக்கிய விமானத்தை கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பயணிகள் தள்ளிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவாக உள்ளதால், திரும்பும் திசை எல்லாம் பனிக்காடாக உள்ளது. இந்நிலையில் சைபீரியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று, ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து புறப்பட்டபோது ஓடுதளத்தில் உள்ள உறைபனியில் சிக்கிக்கொண்டது.
அப்போது அங்கு பதிவாகியிருந்த மைனஸ் 61 டிகிரி குளிரையும் கண்டுக்கொள்ளாமல் விமானத்திலிருந்த 74 பயணிகளும், உடனடியாக கீழே இறங்கி விமானத்தை திருப்பும் அளவுக்கு சில மீட்டர் தூரம் விமானத்தை தள்ளியுள்ளனர்.
இதன்பின் அதிகாரிகள் விமானத்தை பழுதுபார்த்து சரி செய்ததையடுத்து, விமானம் பறந்து சென்றுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பனி அதிகமாக இருந்ததால் விமானத்தின் சாஸிஸ் பிரேக் உறைந்துவிட்டதாகவும், விமானத்தை இழுவை வாகனத்தால் நகர்த்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது யார் என்ற விவரத்தை தெரிவிக்குமாறும் சீனிவாசனை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய அணியின் அணித்தலைவராக உள்ளவர் பி.சி.சி.ஐ. தலைவருக்கு சொந்தமான நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பது பற்றியும் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.
ஐ.பி.எல். உருவாக்கியுள்ள விதிப்படி, மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் எந்த அணியாவது ஈடுபடுமானால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 வயது பாடசாலை சிறுவன் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஊவாபரணகம – பம்பரபன பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்ததும் மாணவனை வீட்டுக்குச் அழைத்துச் செல்லும் அதிபர் தொடர்ச்சியாக வல்லுறவு புரிந்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றுமொரு சிறுவன் மூலம் தகவலை வெளியில் சொல்லியதோடு பின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெற்றோர் நேற்றைய தினம் பாடசாலை முடியும்வரை நடப்பது என்ன என்பதை மறைந்திருந்து அவதானித்துள்ளனர். பாடசாலை முடிந்ததும் அதிபர் மாணவனை வழமைபோல் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதிபரை பின் தொடர்ந்த பெற்றோர் மாணவன் மீது வல்லுறவு இடம்பெறப்போவதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டு வீட்டுக்குள் புகுந்து அதிபரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான அதிபர் ஊவாபரணகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவன் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை வெருகல் துறைமுகத்துவாரம் பகுதியில் குழி ஒன்றினுள் விழுந்து இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும், இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றுமே குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது சுமார் மூன்று அடி ஆழமுள்ள குழிக்குள் இன்று காலை எட்டு மணியளவில் விழுந்துள்ளனர்.
குழியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள் ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இது குறித்த மேலதிக தகவல்களை சேருநுவர பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
வவுனியாவில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் 414 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் ரி.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று பெய்த மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செட்டிகுளம் பகுதியில் 17 குடும்பங்களும், வவுனியா வடக்கில் ஒரு குடும்பமும், வவுனியாவில் 396 குடும்பங்களுமாக 414 குடும்பங்களைச் சேர்ந்த 1446 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் செட்டிகுளம் பகுதியில் உள்ள வேப்பங்குளமும் வவுனியாவில் பாலாமைக்கல் குளமும் உடைப்பெடுத்துள்ளது.
இதேவேளை இடம்பெயர்ந்தவர்களை தங்கவைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.சூரியராஜா தெரிவித்தார்.
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றதாக கூறப்படும் உணவு மோசடிக்கு நீதியான விசாரணை நடாத்தப்படவேண்டும் என பழைய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பழைய மாணவர் சங்கம் விடுத்த ஊடக அறிக்கை வருமாறு..
தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் அணிகள் கடந்த 24ம் திகதி சிட்னியில் மோதின.
இப்போட்டியில் தெற்கு அவுஸ்திரேலிய அணி வீரர் பிலிப் ஹியுஸ் 63 ஓட்டங்களைக் கடந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபாட் வீசிய பவுன்சரை, ‘புல்’ ஷொட் அடிக்க முயன்றார்.
அப்போது, பந்து அவரது இடது காதின் மேலே தலை பகுதியில் பலமாக தாக்கியது. ஹெல்மட் பாதுகாப்பை கடந்து தாக்கியதால் ஹியுசின் தலையில் இரத்தம் கொட்டியது. சில வினாடிகளில் அப்படியே சுருண்டு கீழே விழுந்தார்.
இதைக்கண்ட வார்னர் உள்ளிட்ட சக வீரர்கள், மைதான ஊழியர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மருத்துவ வசதிகள் அடங்கிய ‘ஹெலிகப்டர்’, ‘அம்புலன்ஸ்கள்’ வரவழைக்கப்பட்டன.
வைத்தியர்கள் ஜோன் ஆர்ச்சர்ட், ஹியுசுக்கு மூச்சை கொண்டு வர முயன்றார். இதற்கு பலன் கிடைக்க, ‘அம்புலன்ஸ்’ மூலம் உயர் சிகிச்சைக்காக, செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு ஹியுஸ் கொண்டு செல்லப்பட்டார்.
‘ஸ்கேன்’ செய்யப்பட்டதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
மூளைக்கு அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க, ஊசிகள் செலுத்தி மருந்துகள் உதவியுடன் கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவர் மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் அவரின் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் அனுதாபங்களை தெரிவித்தும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ள 25 வயதான ஹியூக்ஸக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி 26 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு டில்சான், பெரேரா ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 18.5 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது. இலங்கை அணி 22.2 ஓவரில் 120 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது பெரேரா 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். அவர் 2 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
3 ஆவது விக்கெட்டுக்கு டில்சானுடன் ஜெயவர்தன ஜோடி சேரந்தார். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்களை குவித்தது. 88 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் டில்சான் ஆட்டமிழந்தார்.
ஜெயவர்தன தன் பங்குக்கு 58 பந்தில் 55 ஓட்டங்களை எடுத்தார். அணித் தலைவர் மெத்தியூஸ் 24 பந்தில் 33 ஓட்டங்களையும் மெண்டிஸ் 14 பந்தில் 30 ஓட்டங்களையும் குவிக்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.
318 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை எடுத்தது 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொயின் அலி 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் டில்சான் தெரிவுசெய்யப்பட்டார்.
7 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வவுனியாவில் தொடர்ந்தும் பெய்து வரும் கன மழையினால் இதுவரை 15 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.சூரியராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று பெய்த கடும் மழையினால் வவுனியா செட்டிக்குளத்தில் 14 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்களது வீடுகளும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் புளியங்குளத்தில் ஒரு குடும்பமும் இடம்பெயர்ந்துள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் கலாபோகஸ்வௌ கிராமத்திலும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலும் மழையின் காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை செட்டிகுளம் வேப்பங்குளம் உடைப்பெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவிதார். இதேவேளை வவுனியாவின் தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளதுடன் பிரதான போக்குவரத்து மார்க்கங்களிலும் நீர் தேங்கி நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
வவுனியா – மன்னார் பிரதான வீதியின் காமினி மகா வித்தியாலத்திற்கு அருகிலும் வவுனியா- யாழ்ப்பாணம் பிரதான வீதியின் தாண்டிக்குளம் பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் வாகன போக்குவரத்திற்கும் பெரும் தடையேற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மக்களது இயல்பு வாழ்வு பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மீட்கப்பட்ட வடகிழக்கு மக்களின் தங்கம் மீண்டும் அந்த மக்களுக்கே வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2379 பேருக்கு தங்கம் பிரித்து வழங்கப்படும் என கொழும்பில் நேற்று (26.11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
அதன்படி மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மீள அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மக்களுக்கு தங்கம் வழங்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈஸ்வரி புரத்தில் வசிக்கும் 34 வயதுடைய துஷ்யந்தினி மேசன் வேலைக்கு முல்லைத்தீவு சென்ற கணவன் கருப்பண்ணன் முத்துசாமிபிள்ளை 2009 யுத்தத்தில் எறிகணை வீச்சில் இறந்து விட மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளானார்.
கணவரின் சடலம் கூட கிடைகாதநிலையில் இறப்பு சான்றிதழ் கொடுக்க பட வாழ்வில் செய்வதறியாது தனது ரச்னிகா என்ற 10 வயது மகளுடன் ஈஸ்வரிபுரத்தில் வசித்து வருகிறார் .
தனது மகளை காப்பாற்ற கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த போது தைரோக்சின் வருத்தத்தால் பாதிக்க பட்டு அடிகடி கால்கள் வீங்க கிளினிக் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட மிகுந்த வறுமையுடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .
அதே போல் ஈஸ்வரி புரத்தில் வசிக்கும் புஸ்பகுமாரி வயது 31 தனது கணவர் கருப்பையா ரவி 38 வயதிலேயே சிறுநீரகம் பாதிக்க பட்டு 2014.06.17 இல் இறந்து விட கயிந்தா வயது 13 ,மிருசா வயது 10, தனோயா வயது 05 இந்த 3 பெண் பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்ட பட்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது .
மூன்றும் பெண்பிள்ளைகள் அவர்களை வீட்டில் தனிமையில் விட்டு கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலையில்
துஷ்யந்தினியும் ,புஸ்பகுமாரியும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் உடன் 5 நாட்களாக தினமும் தொடர்பு கொண்டு தமக்கு குறைந்த பட்சம் அரிசி ,மா உட்பட்ட சாப்பாடு சாமான்கள் வாங்கி தரும்படி கேட்டு கொண்டார்கள்.
அதன் பிரகாரம் சுவிஸ் இல் வசிக்கும் அமரர் மு.சொக்கலிங்கம் குடும்பத்தை தொடர்பு கொண்ட தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் மு.சொக்கலிங்கம் அவர்களின் குடும்பத்தின் நிதி அனுசரணையில் அவரின் 7ம் ஆண்டு நினைவாக அரசி, மா, பருப்பு, கிழங்கு, டின் மீன், அங்கர், சீனி, தேயிலை, வெங்காயம் என இரு குடும்பத்துக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகள் 24.11.2014 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
அமரர் மு.சொக்கலிங்கத்தின்7ம் ஆண்டு நினைவாக நினைவாக அவரின் குடும்பத்தினரால் வழங்க பட்ட இந்த உதவியை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,சமூக ஆர்வலர் சர்மிலன் ஆகியோர் நேரடியாக சென்று வழங்கி இருந்தனர் .
எமக்கு தக்க தருணத்தில் உதவிய அமரர் மு.சொக்கலிங்கம் குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொண்ட இருவரும், எங்கள் இருவருக்கும் பெண் பிள்ளைகள் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் .எமது பெண் பிள்ளைகளின் நிலை கருதி எமக்கு ஒரு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு தாங்கள் தமிழ் விருட்சத்திடம் மட்டும் அல்ல, புலம் பெயர் உறவுகள், உதவும் மனம் கொண்டவர்களிடம் கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.
ஆச்சாரங்கள் எப்போதும் விஞ்ஞானத்துடன் பின்னி பிணைந்திருப்பவை. அதனை அனுசரித்து செயல்பட்டால் மட்டுமே பலனும் கிடைக்கும்.
சபரிமலைக்கு செல்லும்போது கறுப்பு ஆடை அணிவது ஏன் என்பது குறித்து கேள்விகள் அனைவருக்கும் இருக்கும்.
சபரிமலைக்கு செல்லும்போது சில பிரதான ஆசாரங்களை கடைபிடித்தாக வேண்டும். அது இல்லாமல் போனால் சாதாரண மலையேறுவது போன்றாகிவிடும்.
கறுப்பு ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் உடன் பலன் உண்டாகும்.
மனிதருள் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் உள்ளன. இதனை தேவ, அசுர குணங்கள் என்று கூறுவர்.
மனிதரில் எதிர்மறையான சிந்தனைகள் மாறி மனசாந்தியும், சமாதானமும் கிடைக்க ஜெபம் நல்லதாகும். ஜெபிக்கும்போது கறுப்பு ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலை அணிவதும் ஜெபத்தின் சக்தியை அதிகரிக்க செய்யும்.
ருத்ராட்ச மாலை அணியும்போது 108, 64, 54, 48 என்ற அடிப்படையில் அதன் எண்ணிக்கை இருக்க வேண்டும். ருத்ராட்ச மாலை அணியும் முன்னர் சிவன் கோயிலிலோ, ஐயப்பன் கோயிலிலோ பூஜித்து அணிய வேண்டும்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த தொடரில் மழை ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால் தொடர் சரியாக நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
பயிற்சி போட்டிகளில் கூட மழை குறுக்கிட்டது. 2வது பயிற்சி போட்டி விளையாடாமலே கைவிடப்பட்டது.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டியிலும் மழை குறுக்கிடலாம் எனத் தெரிகிறது.
இந்திய தொடரில் ஏற்பட்ட நெருக்கடியை இங்கிலாந்து தொடரில் சரிசெய்ய இலங்கை அணி தீவிரம் காட்டும். புதிய வீரர்களின் வருகை அணிக்கு கைகொடுக்கலாம்.
கடைசி முறை 3-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து பதிலடி கொடுக்க காத்திருக்கிறது என்று இங்கிலாந்து அணித்தலைவர் குக் கூறியுள்ளார்.
தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள இலங்கை அணியுடன், 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து மோதவுள்ளது.