குட்டித் தீவுகளுக்காக சீனாவுடன் முட்டி மோதும் அமெரிக்கா!!

Iland

தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த தீவுத் தொகுதியில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவும், அங்குள்ள ஸ்பிரேட்லி தீவுக்கு அருகே செயற்கை தீவு ஒன்றை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா மற்றும் பிற நாடுகள் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.

இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகள், அங்கு நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விடும்’ என்று கூறினார்.

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுனியிங் கூறுகையில், ‘அந்த தீவில் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் நலனுக்காகவே கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பொறுப்பற்ற விமர்சனங்களை வெளிசக்திகள் கூற உரிமையில்லை’ என்று கூறினார்.

65 வயது பாட்டியை கிண்டல் செய்த 85 வயது முதியவரை அடித்துக் கொலை செய்த கணவன்!!

murder

மதுரை மாவட்டத்தில் 65 வயது பாட்டியை கிண்டல் செய்த 85 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (85). இதே பகுதியைச் சேர்ந்தவர் தண்டீஸ்வரன் (65). இவரது மனைவி ருக்குமணி (62).

கடந்த 11ம் திகதி ருக்குமணியை குருசாமி கேலி, கிண்டல் செய்துள்ளார். இது குறித்து ருக்குமணி தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தண்டீஸ்வரன் மனைவியுடன் சேர்ந்து குருசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த குருசாமி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குருசாமி இறந்தார்.

இது குறித்து திருமங்கலம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து தண்டீஸ்வரன், அவரது மனைவி ருக்குமணியை கைது செய்தனர்.

யாழில் குறுந்தூர ரயில் சேவை ஆரம்பம்!!

jaff

யாழ்ப்பாணம் – கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 6.05 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயில் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் 8.05 மணிக்கு புறப்பட்டது. இதேபோன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் ரயில் மீண்டும் 5.55 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும்.

இந்த சேவை இன்றிலிருந்து கிரமமாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் பயணக்கட்டணமாக 90 ரூபா அறவிடப்படும் என்றும், இந்த ரயில் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான அனைத்து தரிப்பிடங்களிலும் தரித்து செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ரீதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலைமகள் முன்பள்ளி முதலிடம்!!

வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு பாலர் பாடசாலை மழலைகளுக்கிடையே நடாத்திய விளையாட்டு போட்டியில் வவுனியா கலைமகள் முன்பள்ளி மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தது.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 23.11.2014 அன்று கலைமகள் விளையாட்டு கழக செயலாளர் திரு.காந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.சிவபாலன், வவுனியா நகர இலங்கை வங்கி முகாமையாளர் றோய் ஜெயக்குமார், வைத்தியர் சத்தியநாதன் மற்றும் கலைமகள் சங்க தலைவர் திரு.செல்வராசா, கழக பொருளாளர், ஆசிரியர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

1 2 3 4

குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தந்தை!!

Baby

மன்னார் மடு பிரதேசத்தில் குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஷம் கொடுக்கப்பட்ட குழந்தை பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதான குழந்தையே இவ்வாறு உயரிழந்துள்ளது. விஷம் அருந்தியவர் குழந்தையின் தந்தை எனவும் அவர் பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இறந்து போன குழந்தையின் தாய் சில மாதங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தந்தை குழந்தைக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் குறித்து மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இவ்வருடத்தில் மாத்திரம் 13 பேருக்கு எயிட்ஸ்!!

AIDS

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 13 போ் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கானவா்களில் 3 போ் குழந்தைகள் எனவும் மற்றையவா்களில் பெரும்பாலோனோர் இளவயதுப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது யாழ் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான எயிஸ்ட் நோய் தொற்றுக்குள்ளானவா்கள் உலாவி வருவதாகவும் அவா்களுக்கே தெரியாது அவா்களிடம் எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதுவரை 70 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயாளா்களாக அடையாளப் படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!!

parlime

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஜே.வி. பி போன்ற கட்சிகள் வாக்களித்த நிலையில் ஆதரவாக ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வாக்களித்தன.

பொது வேட்பாளருடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய எவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.நாவாந்துறை பகுதியில் பதற்றம் : படையினர் குவிப்பு!!

jaffna

யாழ்.நாவாந்துறை பகுதியில் உதைபந்தாட்டப் போட்டியினால் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் மற்றும் வன்முறை காரணமாக பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்தும், பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் உள்ள நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றம் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள சென் நீக்ளஸ் மற்றும் சென் மேரிஸ் ஆகிய விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் காலத்திலிருந்தே முறுகல் நிலை இருந்து வருகின்றது

இந்நிலையில் மென்பான விற்பனை நிறுவனம் ஒன்று நேற்றைய தினம் யாழ்.மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான, சுற்றுப்போட்டியை நடத்திய நிலையில் சென் மேரிஸ் அணி வெற்றி பெற்றது.

அவர்கள் தமது வெற்றியை கொண்டாடிய நிலையிலேயே குறித்த மோதல் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் யார் மோதலை தொடக்கினர் என்பதற்கு இரு தரப்பும் ஒருவரயொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினமும் கடற்றொழிலுக்குச் சென்ற சென் நிக்ளஸ் பகுதி கடற்றொழிலாளர்கள் சென் மேரிஸ் பகுதி கடற்றொழிலாளர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் இன்று காலை தொடக்கம் பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அப்பகுதியில் இன்றைய தினமும் அமைதியான சூழல் உருவாகாத நிலையில் பதற்றமான சூழல் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற வன்முறையில் பல வீடுகள் உடைத்து நொருக்கப்பட்டுள்ளதுடன், கடற்கரை வீதி முழுவதும் குளிர்பான போத்தல்கள் உடைக்கப்பட்டு. கண்ணாடி போத்தல் ஓடுகளாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்றிரவும் மோதல் உருவாகலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மோதலை தடுக்கும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை தாம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி கே.ஏ.சுப்ரமணியத்தின் 25வது ஆண்டு நினைவுக் கூட்டம்!!

பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி என அழைக்கப்படும் கே.ஏ.சுப்ரமணியத்தின் 25வது ஆண்டு நினைவுக் கூட்டம் வரும் 29.11.2014 சனிகிழமை பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பு 6 இல் அமைந்துள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன் நிகழ்விற்கு முனைவர் சி.சிவசேகரம் தலைமை தாங்கவுள்ளதுடன் வரவேற்புரையை சோ.தேவராஜா அவர்களும், நூல் ஆய்வுரையை சிவ.ராஜேந்திரன் (பிடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி) அவர்களும் ஏற்புரையை சி.கா.செந்திவேல் அவர்களும், நினைவுப் பேருரையை பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

இன் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழர் கே.ஏ.சுப்ரமணியம் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுகின்றனர்.

1507082_935412689821221_4144492221594852220_n 1911758_935408239821666_5383123999802184460_n

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா வைரவபுளியங்குளம் கதிரேசு வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (24.11) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, வைரவபுளியங்குளம் கதிரேசு வீதி வழியாக வந்த முச்சகரவண்டியும் வைரவர் கோவில் வீதியில் இருந்து கதிரேசு வீதி நோக்கி வந்த மோட்டர் சைக்கிளும் சந்தியை கடக்க முற்பட்ட வேளை மோதி விபத்துக்குள்ளாகின.

வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளை மேதி பின்னர் வீதியோரமாக இருந்த வீட்டு மதிலுடன் மோதி தடம்புரண்டது. இதன் காரணமாக ஓட்டோ சாரதி மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதி ஆகிய இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

01 (2) 01 (3) 01 (5) 01 (6) 01 (7) 01 (8)

கோடிக்கு ஏலம் போன ஹிட்லரின் அழகிய ஓவியம்!!

அடல்ப் ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் தனது இளமை காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

அந்த ஓவியங்களை வியன்னா ஓவிய கல்லூரியில் ஹிட்லர் விற்பனைக்கு கொடுத் தபோது, அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதில் சில ஓவியங்களை அவரது தாத்தா கடந்த 1916ம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.

இதன்பின் ஹிட்லரின் ஓவியங்களை அவரது 2 சகோதரிகள் பொதுமக்களிடம் விற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ஜேர்மனின் பிராங்க்பர்ட்டில்(Frankfurt) உள்ள நியூரம்பர்க்(Nuremberg) நகரில், ஹிட்லரின் நீர்வண்ண ஓவியங்கள், வீட்லர் (Weidler) என்ற ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட்டன.

அப்போது அவரது பெரும்பாலான ஓவியங்களை பொதுமக்கள் விரும்பி ஏலத்தில் வாங்கியுள்ளனர். அதில் மூனிச் (Munich) நகரின் பழைமையான மண்டப நீர்வண்ண ஓவியத்தை, நபர் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி சென்றுள்ளார்.

hitler_paintings hitler_paintings1

பொலிவுட்டில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்!!

sreesanth

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ‘கேபரே’ என்ற இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதனால், ராஜஸ்தான் றொயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்துக்கு, கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இவர் ‘கேபரே’ என்ற இந்திப் படம் ஒன்றில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மலையாள அறிவுரையாளர் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடிக்கிறார். கேபரே நடனம் குறித்த படமாகும்.

ஏற்கனவே, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரமாதமாக நடனம் ஆடியதாக பாராட்டுகளைப் பெற்றவர் ஸ்ரீசாந்த். தற்போது நடனத்தோடு, நடிப்பாற்றலும் இருப்பதாலேயே ஸ்ரீசாந்த், நடிக்க ஒப்புக் கொண்டதாக இப்படத்தின் தயாரிப்பாளர் பூஜாபட் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமாவில் அவர் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாயின் சடலத்தை தோண்டி செல்பி எடுத்த மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

deadbody_selfie

லெபனான் நாட்டில் நபர் ஒருவர் தனது தாயின் பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காட்டுத் தீயை போல் உலகெங்கும் பரவிய இந்த செல்பி மோகம், சில நேரங்களில் வீபரித செயல்களிலும் மக்களை ஈடுபட வைக்கிறது.

மேலும் செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில் லெபனானில் உள்ள மயானம் ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வரும் டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்ற நபர், தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாக பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமான அவரது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்பி எடுத்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் மனநல மருத்துவரிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்தது. ஆனால் மரணங்கள் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை நான் நிராகரித்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இதுவரை நான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளேன் என்றும் ஆனால் தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் டெப்பிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறியபோதும், அவ்வாறு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை என அவரை பேட்டி எடுத்த மனநல மருத்துவர் கூறியுள்ளார்.

இறந்த மாணவன் உயிர் பிழைத்து மீண்டும் இறந்த சோகமான சம்பவம்!!

Boy

தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் இறந்த மாணவன் உயிர் பிழைத்து மீண்டும் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் மூர்த்தி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி வீட்டில் பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார், அதற்கு அவர்கள் தர மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காததால் மூர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு மூர்த்தியின் மூச்சு நின்றதால் அவர் இறந்துவிட்டதாக அவரது பெற்றோர்கள் கருதினர்.

இதனைத் தொடர்ந்து, தகவலறிந்ததும் உறவினர்களும் அங்கு திரண்டதையடுத்து, இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இறுதிசடங்குக்கு முன்பு அவரது தாய் மூர்த்திக்கு, ஆசையான தேநீரை தனது கையால் மூர்த்தியின் வாயில் ஊற்றியுள்ளார்.

அப்போது மூர்த்திக்கு நாடித்துடிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்த உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மூர்த்தியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் தீ!!

fireமுல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ, பரவியதால் வைத்தியசாலையின் கதிரியக்கப்பிரிவு (எக்ஸ்ரே) சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீயை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் வைத்தியசாலை ஊழியர்களும் உதவியதாகவும் தெரியவருகின்றது. இந்த தீயில் கதிரியக்கப் பிரிவில் இயந்திரமொன்று முற்றாக கருகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 21வது கலைவிழா!!

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 21 ஆவது கலைவிழா 22.11.2014 அன்று மக்கள் சேவைமாமணி திரு.நா.சேனாதிராசா அவர்களின் தலைமையில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 6 7 8 9 10 11