ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தலாம்!!

SL

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15 வரை கட்டுப்பணத்தை ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் செலுத்தலாம் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்னாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆணையாளர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும்.

தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் 50,000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். அத்துடன் ஏனைய சுயாதீன வேட்பாளர்கள் கட்டுப்பணமாக 75,000 ரூபாவை செலுத்த வேண்டும்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான சகல ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களாக ஒருகோடியே 54 இலட்சத்து 44ஆயிரத்து 490பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் மாதம் 8ம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வாள் வெட்டில் முடிந்த உதைப்பந்தாட்டப் போட்டி : பலர் படுகாயம்!!

Crime-Scene

யாழ்.நாவாந்தறைப் பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உருவான வாய்த்தாக்கம் வாள் சண்டையாக முடிந்த நிலையில் இளைஞர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை நாவாந்துறைப் பகுதியில் உள்ள இரு விளையாட்டு கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.

இதன்போது மேற்படி இரு கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையிலும் வாய்த்தர்க்கம் மூண்டுள்ளது. அதனையடுத்து, அது பெரும் வன்முறையாக மாறியதில் இரு தரப்பும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலான ஆயுதங்களுடன் மோதியிருக்கின்றனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு பெருமளவு பொலிஸார் மற்றும் படையினர் அழைக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

வவுனியாவில் இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி உதயம்!!

11

கிறிஸ்தவ மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வினைப் பெறும் முகமாக இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி உதயமாகியுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சனிக்கிழமை மாலை (22.11) ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

இன்று கிறிஸ்தவ மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களது பிரச்சனை தொடர்பில் கிறிஸ்தவ சமய மக்கள் பிரதிநிதிகள் கூட கவனம் செலுத்துவதில்லை. சுதந்திரமாக மதப் போதனைகளை செய்ய முடியவில்லை.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்கள், சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்கள் என இரு பகுதியினர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்றினைத்து இக் கட்சி உதயமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் கொஸ்லந்தை பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா வர்த்தசங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் பெறுமதியான நிவாரண பொருட்கள், பதுளை உறவுகளுக்காக நேற்றைய தினம்(22.11) வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.ரி.எஸ்.இராசலிங்கம் தலைமையிலான குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் இவ் நிகழ்வுகளில் பூனாகல பிரதேச செயலாளரும் கலந்து கொண்டிருந்தார். இக் குழுவில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) தலைவரும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் திரு.எஸ்.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),

வர்த்தக சங்கத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் வாடி வீடு அதிபர் கதிர்காமராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) நோர்வே அமைப்பாளர் ராஜன், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கழக உறுப்பினர் திரு ந.தினேஷ் ஆகியோருடன் நிகழ்வுகளில் பூனாகல பிரதேச செயலாளரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் சீற்றத்தால் உயிர்கள் உட்பட உடைமைகளையும் இழந்து சொல்லொனா துயரத்தில் வாடும் கொஸ்லந்த மீரியபெத்த உறவுகள் தங்க வைக்கப்பட்டுள்ள மாகந்த தொழிற்சாலைக்கு முதலில் தமது நிவாரண பொருட்களுடன் சென்ற குழுவினர், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 78 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்களை கையளித்தனர்.

தொடர்ந்து தியகல, மீரியபெத்த போன்ற பகுதிகளில் அபாய எச்சரிக்கை விடப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பூனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் உள்ள 72 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் இணைந்த குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து அபாய எச்சரிக்கை விடப்பட்ட பூனாகல தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த 39 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் எதிரொலி விளையாட்டு மைதானத்துக்கான பொருட்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக கையளிக்கப்பட்டது.

22.11.2014 அன்று எச்சரிக்கை விடப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டு கீழ்ப்புற லுணுகல தோட்ட பிரிவைச் சேர்ந்த 58 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம், பிள்ளையார் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் வர்த்தக சங்கத்தினர் மற்றும் இணைந்த குழுவினரால் நேரடியாக கையளிக்கப்பட்டது.

1 (50) 1 (51) 1 (52) 1 (54) 1 (57) 1 (63) 1 (66) 1 (70) 1 (86) 1 (91) 1 (92)

21

வவுனியாவில் மின்னல் தாக்கத்தில் உடைமைகளை இழந்த மாணவனுக்கு உதவி!!

வவுனியா, பொன்னாவரசன் குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில், வீட்டு உடமைகளை முழுமையாக இழந்து கற்றலுக்கு எந்தவிதமான வசதிகளுமின்றி வாழ்ந்த மாணவனுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா பாடசாலையொன்றில் தரம் 7ல் கல்விகற்கும் எஸ்.கஜன் என்ற குறித்த மாணவனுக்கு வவுனியா தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த உதவிகளை வழங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் குறித்த சிறுவனின் வீட்டின் மீது மின்னல் தாக்கியதால் வீடு முழுமையாக எரிந்தது. யுத்தத்தினால் பெற்றோரை இழந்த குறித்த சிறுவன் தனது அம்மம்மாவின் தயவிலேயே வசித்து வருகின்றான். சம்பவ தினத்தன்று வேலை நிமித்தம் அம்மம்மா வெளியில் சென்றமையால் சிறுவன் அயல் வீட்டில் தங்கியுள்ளான். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனர்த்தம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிறுவனின் நிலை கண்டு தமிழ் விருட்சம் சமூக ஆவர்வலர் அமைப்பிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அம் மாணவனுக்கான உடைகள், உலர் உணவுப்பொருட்கள், பாடசாலை புத்தகப்பை மற்றும் பாடசாலை கொப்பிகள் என்பன வழங்கப்பட்டன.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பானது, சிற்றி வர்த்தக நிலைய உரிமையாளர் ஆ.சபாநாதன் உதவியுடன் உடுபுடவைகளையும், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் புத்தகப் பையினை வர்த்தகர் ந.சுந்தரதாசனின் உதவியுடனும் கற்றல் உபகரணங்களை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பைச் சேர்ந்த செ.சந்திரகுமாரின் உதவியுடனும் சேகரித்து இன்று கையளித்தது.

இந்நிகழ்வில், வர்த்தகர் ஆ.சபாநாதன், வர்த்தகர் ந.சுந்தரதாசன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், கோ.ரூபகாந் மற்றும் சமூக ஆர்வலர் சர்மிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
DSCN2574v

v1

v2

v3

கபடிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!!

sl

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

நான்காவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தாய்லாந்தின் பூகெட்டில் (Phuket) இடம்பெற்று வருகின்றன.

இதில் இலங்கை ஆண்களுக்கான கபடி அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

வவுனியாவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

hang

வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் தூக்கிட்டு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த இளைஞன் வீட்டின் தாவரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த உடை போடுவதற்கான கொடிக் கயிற்றினால் தூக்கிட்டு மரணமடைந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மொரிஸ் டிசாந்த் (30) என்பவராவார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாயார் விடிந்ததும் வெளியில் வந்து பார்த்த போதே மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது.

வெளிநாடு ஒன்றில் வசிக்கும் குறித்த இளைஞனின் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடே தூக்கிட காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

காதலில் ஜெயிப்பது எப்படி?

lOVE

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள்..

மனமறிந்து சொல்லுங்கள்..

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்..

எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்..

காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை வளவளவென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை விழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களை நேசிப்பவர்கள்..

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, ‘அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பின் அவசியம்!!

hair

கோடைகாலத்தில் அதிகபடியாக வறண்டு பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல் மழைக்காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இருக்கும். அதுமட்டுமின்றி, ஈரப்பதத்துடன் எண்ணெய் பசை இருந்தால், கூந்தலிருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

ஆகவே மழைகாலத்தில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு, கூந்தலை அன்றாடம் முறையாக பராமரித்து வரவேண்டும். இப்போது எளிய முறையில் கூந்தல் பராமரிப்பு வழிமுறைகளை பார்க்கலாம்…

ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாவிட்டால் மழை காலத்தில் அதிகபடியாக ஈரப்பசையினால் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே வாரத்திற்கு மூன்று முறை ஷம்பு போட்டு அலசினால், கூந்தலில் தூசுபடிவதை தவிர்க்கலாம். அப்படி பயன்படுத்தும் ஷம்பு, மழை காலத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் ஷம்புவை பயன்படுத்தக்கூடாது.

ஏனெனில் இவை இன்னும் கூந்தலில் எண்ணெய் பசை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்கும். எனவே இயல்பாகவே எண்ணெய் பசை கொண்டவர்கள், மென்மையான ஷம்புவை பயன்படுத்த வேண்டும். அதிலும் ஷம்புவிற்கு பதிலாக நெல்லிகாய், சீகைக்காயை போன்றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது.

மேலும் கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

அல்லது இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது அப்பிள் விதை வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது.

மழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைனின், ஹேர் கலரிங் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது கூந்தலில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த செயல்களை தவிர்ப்பது நல்லது.

விராத் கோலிக்காக காத்திருக்கும் அவுஸ்திரேலிய ரசிகர்கள்!!

Kholi

இந்தியா அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல தயாராகும் நிலையில், கோலியை அவுஸ்திரேலிய ஊடகங்களும், ரசிகர்களும் குறி வைக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ம் திகதி காப்பாவில் நடக்கிறது. காயம் காரணமாக அணித்தலைவர் டோனி முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.

இதனால் முதல் போட்டியில் கோலி அணித்தலைவராக விளையாடவுள்ளார். அதே சமயம் கோலியை அவுஸ்திரேலிய ரசிகர்களும், ஊடங்களும் குறி வைக்க தயாராக உள்ளன.

இதற்கு முன்பு சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய ரசிகர்களால் கேலிக்கு உள்ளான கோலி, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது நடுவிரலை காட்டினார்.

அவுஸ்திரேலிய ரசிகர்களின் கிண்டல், கேலி பற்றி அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஒருவர் கூறுகையில், காப்பா ஆடுகளம் வெளிநாட்டு வீரர்கள் விளையாட மோசமான ஆடுகளம்.

அங்கு கூடும் ரசிகர்கள் மோசமானவர்கள். கண்டிப்பாக சிட்னியில் கோலி செய்த செய்கையை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவருக்கு சிக்கல் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதே போல், டெஸ்ட் தோல்விகளை பற்றி இந்திய அணி கவலைப்படாது. அவர்கள் எண்ணம் எல்லாம் உலகக்கிண்ணம் பற்றி தான் உள்ளது.

ஒரு வேளை அதையும் தாண்டி அந்த அணி சிறப்பாக செயல்பட்டால் அணித்தலைவருடைய காதலி மகிழ்ச்சி அடைவார். இது தான் நடக்கும் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று விமர்சனப்படுத்தியுள்ளது.

வருகின்ற 4ம் திகதி காப்பா டெஸ்ட் போட்டியில் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது.

மோடி அழைத்தால் அவருடன் வாழத் தயார் : யசோதா!!

Modi

பிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா இல்லையா என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டார்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகுதான், அவர் திருமணம் ஆனவர் என்று தெரிய வந்தது.

இருவருக்கும் 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு 20 வயது கூட ஆகவில்லை. ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார்.

யசோதாபென், ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். 62 வயதான அவர், குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஐஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.

அவருக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யசோதாபென்னிடம் நேற்று ஒரு தனியார் ஊடக நிறுவனம் ஒன்று பேட்டி கண்டது. அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர் என்னை அழைத்து செல்ல வந்தால், அவருடன் செல்லத்தயார் என்று கூறினார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்கு!!

budget

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் க.சிவலிங்கம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகளை உள்ளடக்கி இப் பாதீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இதனை மக்கள் பார்வைக்காக கூமாங்குளம் நூலகம் மற்றும் ஓமந்தையில் அமைந்துள்ள பிரதேசசபையின் உப அலுவலகம் மற்றும் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே வரவு செலவுத்திட்டத்தை மக்கள் பார்வையிட்டு ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் 7 நாட்களுக்குள் தமக்கு அறிவிக்குமாறும் கோரியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் சங்கக்கார!!

kumar

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்கார சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் வீரராக வலம் வரும் சங்கக்கார அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்கார ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரே இலங்கை மண்ணில் சங்கக்காரா சந்திக்கும் இறுதிப் போட்டியாக அமையும்.

வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணப் போட்டிகளின் போதே நான் 2015ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன் என சங்கக்கார அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

va

வவுனியா செட்டிகுளம் தள வைத்தியசாலையில் வைத்தியர் காவலாளியை தாக்கியதை கண்டித்து வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

செட்டிகுளம் தள வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரான கஜான் தம்பிக்க என்பவர் நேற்று இரவு கடமையில் இருந்த காவலாளியை அழைத்து நோயாளர் காவு வண்டியை தள்ளுமாறு பணித்திருந்ததாகவும் அதேவேளை மற்றுமொரு காவலாளியையும் அழைக்குமாறு வைத்தியர் தெரிவித்தபோது காவலாளி அவர் வாயில் கடமையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமுற்ற வைத்தியர் காவலாளி வைத்திருந்த மின் விளக்கை பறித்து காவலாளியின் தலையில் தாக்கியதாகவும் இதன் காரணமாக காவலாளிக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன் சிற்றூழியர்களின் சீருடைகளையும் நீர்த்தொட்டியொன்றில் போட்டுள்ளதால் தமக்கு கடமையை செய்ய சீருடை இல்லாதுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பந்தப்பட்ட வைத்தியர் கடந்த தடவை தாதியர் ஒருவரை தாக்கியதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தயிர் மதுபோதையில் உள்ளமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் வைத்தியசாலையின் தாதியர்கள், மருத்துவ மாதுக்கள், சிற்றூழியர்கள் வைத்தியசாலையின் முன்னால் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில் வைத்தியரை இடமாற்றம் செய்யவெண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததுடன் அதிகாரிகளுக்கும் இச்சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு!!

Ele

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன : முடிவிற்கு வந்தது நீண்டநாள் சர்ச்சை!!

maithripala-sirisena

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால்

01.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாகவும்,

02. அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும்,

03. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும்,

04. 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும்” குறிப்பிட்டார்.

-அததெரன-