வவுனியா – தவசிக்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு காரணமாகவே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் பன்றிகளைக் கொல்லவே இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாடு ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, 25 வயதான குறித்த இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் மனிதக் கழிவுகளால் இயக்கப்பட்டும் முதல் பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிரிஸ்டோல் நகரைச் சேர்ந்த ஜெனிக்கோ (Geneco) என்ற நிறுவனம் 40 பயணிகள் செல்லக்கூடிய மனித கழிவுகளால் இயங்க கூடிய முதல் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பேருந்துகளில் இருந்து வெளிவரும் புகைகள் டிசல் மற்றும் பெட்ரோல் வாகனத்தை விட மிகவும் சிறிது என்றும் மனித கழிவுகளால் வரும் வாயுவை வைத்து இயங்ககூடிய இந்த பேருந்து 186 மைல்கள் வரும் செல்லக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெனிக்கோ நிறுவனத்தின் மேலாளர் முகமது சாதிக் (Mohammed Saddiq) கூறுகையில், மாசற்ற இந்த பேருந்து பிரித்தானியாவில் தூய்மையான காற்றை பரவச் செய்யும் என கூறியுள்ளார்.
மேலும் 5 மனிதர்களால் ஒரு வருடத்திற்கு உருவாக்கப்படும் கழிவை வைத்து இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம் திகதி முதல் பாத் (Bath) பகுதியிலிருந்து பிரிஸ்டோல் (Bristol) விமான நிலையம் வரை இந்த பேருந்து செல்லும் என சாதிக் தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டில் பிணவறையில் இருந்த மூதாட்டி ஒருவர் 11 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் எழுந்து தேநீர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலாந்தை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் (91) என்ற மூதாட்டி சுவாசிக்காமல் இருந்ததால், அவரது உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெனினா இறந்துவிட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஊழியர்கள் பிணவறையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் 11 மணி நேரத்திற்கு பிறகு, மற்றொரு உடலை வைப்பதற்காக ஊழியர்கள் பிணவறைக்கு வந்தபோது ஜெனினா பிணவறையில் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களைப் பார்த்ததும் அமர்ந்திருந்த ஜெனினா, குடிப்பதற்கு தனக்கு சூடாக தேநீர் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவர்கள் ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஈரோடு அருகே விவசாயி ஒருவரது எருமை வெள்ளை நிறத்தில் கன்றுக்குட்டியை ஈன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பூசாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (65). விவசாயியான இவர், 20 எருமைகளும் 4 பசு மாடுகளும் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் வளர்த்த எருமை ஒன்று, நேற்று ஈன்ற கன்று பசு மாட்டுக் கன்றுபோல் வெண்மையாக பிறந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேற்படி நிகழ்வு 12.11.2014 அன்றுகாலை 9.00 மணியளவில் பாடசாலை பிரதானமண்டபத்தில் அதிபர் திரு.வஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் பிரதம விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி.தர்மகுலசிங்கம் அம்மா அவர்களும், வீ.பரஞ்சோதி (நூலக ஆலோசனை வழிகாட்டல் மற்றும் ஆசிரியநிலைய முகாமையாளர் வவுனியா தெற்கு) அவர்களும் கௌரவ விருந்தினராக தமிழ் அறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி.வசந்திகுலராசா (வலயப் பிரதிநிதி வவுனியா தெற்கு) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் தேசியவாசிப்பு மாதத்தின் 10வது ஆண்டு நினைவு போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.
சூப்பர் ஸ்டார் என்று தான் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், அவர் எப்போதும் கையை மேலே தூக்கி கொண்டு கடவுளை காண்பித்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
இந்நிலையில் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற விளக்கத்தை கொடுத்தார். தற்போது கோவாவில் நடக்கவிருக்கும் திரைப்படவிழாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு விமான நிலையத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று கேட்ட கேள்விக்கு அரசியல் வேண்டாம், வேண்டாவே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய பாஸ்கர், அட்டி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடிக்கிறார்.
சுந்தர்.சி.பாபு இசையமைக்கும் இப்படத்திற்கு வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார். இ-5 என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜெயகிருஷ்ணன் மற்றும் இமாஜினரி மிஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தை பற்றி இயக்குனர் விஜய பாஸ்கர் கூறும்போது, முற்றிலும் நகைச்சுவையை மையமாக கொண்டு அனைத்து தரப்பினர்களையும் கவரும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்வியல் யதார்த்ததை மிகவும் சுவாரஸ்யமாக கூறும் வகையில் ஜனரஞ்சகமாக எடுத்திருக்கிறோம். இதில் மா.கா.பா.ஆனந்த் கானா பாடகராக நடிக்கிறார்.
தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள அட்டி படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியன் உருவாக்கி வருகிறார்.
கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆரம்பம். இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
இப்படம் ரிலீசாகி அதிக வசூல் குவித்தது. இதனால் இந்திப் பட தயாரிப்பாளர்கள் பலர் இப்படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது இப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தமிழில் ஆரம்பம் என்று வெளிவந்த இப்படம் இந்தியில் பிளேயர் கில்லாடி என்னும் பெயரில் வெளியாகிறது.
இப்படத்தின் டப்பிங் உரிமையை சினி கார்ன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் படத்தை வெளியிடவுள்ளனர்.
நடிகர் சங்கம் பிரச்சனை தற்போது மிகவும் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று சரத்குமார் அவர்கள் விஷால் தேவையில்லாமல் சங்கத்தை பற்றி அவதூராக பேசி வந்தால், அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விடுவோம் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக விஷால் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேற சொன்னால் நான் வெளியேற தயாராக உள்ளேன். ஆனால், அதற்கு முன் நான் அவதூராக பேசியதை அவர்கள் நிருபிக்க வேண்டும்.
மேலும் நடிகர்களை நாய் என்று ராதாரவி கூறினார். அவர் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. இந்த செய்தியை கேட்டதில் இருந்து ஒரு நடிகனாக நான் மிகவும் வருத்தமடைகிறேன் என்று கூறியுள்ளார்.
ரஷ்யா ரகசியமான முறையில் விண்கலன் போன்ற மர்ம எந்திரத்தை விண்ணில் செலுத்தியது அம்பலமாகியுள்ளது.
கடந்த மே மாதம் இந்த இயந்திரம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது அது விண்ணில் பறப்பதை சில நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. தெற்கு பசிபிக் கடலின் மீது பறந்த போது இது கண்டறியப்பட்டது.
தொடக்கத்தில் இது விண்ணில் சுற்றி வரும் விண்கலன்களை கண்காணிக்கவும், விண்வெளியில் உடைந்து மிதக்கும் விண்கலன் இடிபாடுகளை அகற்றவும் உதவும் என கருதப்பட்டது.
தற்போது அது எதிரி நாட்டு விண்கலன்களை அழிப்பதற்காக அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விண்கலன் போன்ற மர்ம எந்திரத்துக்கு 2014–28 இ என பெயரிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்கமுடியாத அரசனாக முதலிடத்தில் திகழும் பேஸ்புக் ஆனது, மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்துவருவது தெரிந்ததே.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Facebook Groups எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் குழுக்களுக்கிடையில் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல், குடும்பத்துடன் எப்போதும் தொடர்பில் இருத்தல், வேலை ஒன்றில் இணைந்து செயற்படுதல், மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும்.
இந்த அப்பிளிக்கேஷனை iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க வீரர் ஹஷிம் முகமது அம்லா, விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அம்லா (102 ஓட்டங்கள்), தனது 17வது சதத்தை எடுத்தார்.
இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 17வது சதத்தை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் இதுவரை 98 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார்.
இதற்கு முன்பு கோலி தனது 17வது சதத்தை 112வது இன்னிங்ஸில் தான் எடுத்தார். தற்போது அம்லா, அவரை முந்தியுள்ளார்.
ஏ பி டிவில்லியர்ஸ் (156), கங்குலி (170), சயீட் அன்வர் (177) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
மேலும் ஹஷிம் அம்லா குறைந்த இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங்கள் என்ற சாதனையை நெருங்கி வருகிறார்.
விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங்களை எடுத்து ஒருநாள் போட்டி சாதனையை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
ஆனால், விவ் ரிச்சர்ட்ஸ் 126 போட்டிகளில் 5000 ஓட்டங்களை எடுக்க விராட் கோலியோ 120 போட்டிகளில் 5,000 ஓட்டங்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹஷிம் ஆம்லா 98 இன்னிங்ஸ்களில் (அதாவது 101 போட்டிகளில்) 4,910 ஓட்டங்களில் இருக்கிறார்.
கோலி, ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிக்க இன்னும் 90 ஓட்டங்களே உள்ள நிலையில் அதிவேக 5,000 ஓட்டங்கள் எடுத்த சாதனைக்குரியவராக விரைவில் அம்லா ஆகிவிடுவார் என்று தெரிகிறது.
இந்தியாவில் சிறுமி ஒருவருக்கு வாயில் இருந்து 200 பற்கள் எடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் குர்கோன் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வாய் வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாய் வீங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு பல்லில் கட்டி ஏற்பட்டு பல் திசுக்கள் இயல்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்பு 2 மணி நேரம் செய்யப்பட்ட இந்த சிகிச்சையில் 202 பற்கள் நீக்கப்பட்டுள்ளது.
இவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர் அஜய் கூறுகையில், இது அதிர்ச்சி தருவதாகவும், சிகிச்சை எளிதாக தெரிந்தாலும், சிறு தவறு ஏற்பட்டாலும் தசை முறிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார். தற்போது சிறுமி நல்ல நிலைமைக்கு திரும்பி உணவுகளை உட்கொள்கிறார்.